Related Posts with Thumbnails


முதலில் எங்கள் வகுப்பறையின் அமைவிடம் பற்றி கூற வேண்டும். எங்கள் வகுப்பறைக்குள் ஒரு சிறு அறை இருக்கிறது, அதக்குள் பழைய புத்தக குவியல்கள் காணப்படும், அதுமட்டும் அன்றி எமது பாடசாலைக்கு அருகில் திருமணமண்டபம் ஒன்று உண்டு. அது எமது வகுப்பறையில் இருந்து பார்த்தால் மிகவும் அருகில் தெரியும்.எமது ஆசிரியர்கள் paper correction இற்காக செல்வது வழக்கம், அன்றும் அப்படித்தான் சில நாட்களாகவே பாடங்கள் இடம்பெறாத தைரியத்தில் நாமும் வழமையான நடவடிக்கைகளை தொடங்கினோம். அன்று இடைவேளை வரை ஆங்கில புத்தகத்தை துடுப்பாக பாவித்து கிரிக்கெட் விளையாடிவிட்டு சற்று ஓய்வாக இருந்த வேளை.

அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அன்று திருமணம் போலும் மேளசத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தது, அடடா சொல்ல மறந்து விட்டேன், அங்கு திருமணம் நடக்கும் போது நாங்கள் site அடிப்பது வழக்கம். அன்றும் அப்படிதான் ஒரு ஆசிரியரும் வரவில்லை என்ற வதந்தியை நம்பி நாமும் சற்று கவனயீனமாக இருந்து விட்டோம்.

எம் கவனம் அனைத்தும் திருமணத்தில் இருந்த வேளை, அவர் paper correction முடிந்து வரவில்லை என்று அவரின் வீட்டில் நாங்கள் வைத்திருந்த ஒற்றன் கூட கூறி இருந்தான்.. ஆனால் அவர் எப்படி அங்கு வந்தார். (ACC ஆசிரியர்) ,அவர் வந்து ஐந்தாறு நிமிடங்கள் ஆகியிருக்கும் போலும் அவர் வந்ததை நாம் கவனிக்கவில்லை. சரி அடுத்த கட்டம் என்ன அடி விழப்போகிறது என்று அடி வாங்க தயாரானோம், ஆனால் அனைவரையும் மேசையின் மேலே முழங்காலில் நிக்க சொன்னார்.

அவர் அப்படி சொன்னதக்கு பதிலாக அடித்திருக்கலாம், எமது வகுப்பறையை தாண்டிதான் அனைவரும் நூலகத்துக்கு செல்லவேண்டும், அரை காற்சட்டை போட்ட மாணவர்கள் தொடங்கி ஆசிரியர்கள் வரை அனைவரும் பார்த்து விட்டுதான் செல்வார்கள், ச்சா.. ச்சா.. என்ன அவமானம்!!!

முன்று பாடவேளை 2 மணிநேரம் முழங்காலில் நின்றோம்.அன்று பாடம் நடாத்தப்படவில்லை, பதிலாக அந்த ஆசிரியரின் திட்டுக்கள் இடைஇடையே சில பொன்மொழிகளுடன்..

அவரின் பாடவேளை முடிந்து அவர் சென்றதும் ஒருவரை ஒருவர் பார்த்து why blood? same blood. என்று கூறி விட்டு ஜென்னலை நோக்கி விரைந்தோம்பரீட்சை நேரங்களில் படிப்பதை விட்டுவிட்டு கவிதை புத்தகங்களை புரட்டியபோது நான் படித்த வைரமுத்துவின் கவிதையை மாற்றி எழுதியிருக்கிறேன், வைரமுத்து மன்னிக்கும் மனிதர் என்ற நம்பிக்கையில் ..............
பரீட்சை எழுதிப்பார் ,
உன்னை சுற்றி இருள் வட்டம் தோன்றும்

உன் மூளை குழம்பும்
பேப்பரில் உள்ள எழுத்து விளங்காது

உனக்கும் கண்ணீர் வரும்
படித்தவை எல்லாமே மறந்து போகும்

படித்தவன் தெய்வம் ஆவான்
நீ விடை எழுத நினைத்தாலும் பேனை எழுதாது

கண்களில் தூக்கம் சொக்கும்
பரீட்சை எழுதிப்பார்!!


தலையை பிய்த்து கொள்வாய்
கூரைகளில் விடையை தேடுவாய்

பரீட்சை எழுதும் போது மணித்தியாலங்கள் நிமிடமாகும் என்பாய்
ஒருவன்கூட கேள்விக்கு விடை எழுத மாட்டான்
ஆனால் அனைவருமே விடை எழுதியதாய் உணர்வாய்

உன் கைகளுக்கும் பேப்பருக்கும் இடையே ஒரு பனி போர் நடக்கும்
இந்த கேள்வி , பரீட்சை , டீச்சர் , superviser எல்லாரையும் உன் எதிரி என்பாய்

பரீட்சை எழுதிப்பார்!!
அன்று கல்வி திணைகளத்தில் இருந்து மேற்பர்வை செய்ய அதிகாரிகள் வர இருப்பதாக தகவல்

அந்த நாள் நாங்கள் கட்டாயம் பாடசாலைக்கு வர வேண்டும் என எம் ஆசிரியர்களின் கண்டிப்பான உத்தரவு. (அதுவும் நேரத்துக்கு) நானும் காலையில் 7மணிக்கெல்லாம் பாடசாலையை அடைந்து விட்டேன். என்றும் இல்லாதவாறு அன்று ஒரு பரபப்பு, காலை கூட்டம் முடிந்து பாடங்கள் ஆரம்பித்தது, என்ன ஆச்சரியம் வகுப்பாசிரியர் அன்று தனது இருக்கையில் அமரவே இல்லை. அவரிடம் ஒரு இயல்பற்ற தன்மை காணப்பட்டது. ஒரு பெண் ஆசிரியர்தான் கல்வி திணைக்களத்தில் இருந்து வந்திருந்தார். எங்களுடன் இயல்பாக கதைக்கும் அவர் அன்று பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தினர்.

இவர் தான்இப்படி என்றால் எமது வர்த்தக ஆசிரியை ஒருநாள் கூட நாம் அவரை ஒழுங்காக கற்பிக்க விட்டதில்லை(அவரை சற்று கோபப்படுதினால் போதும் அன்றைய பாடங்களுக்கு கோவிந்தா போட்டு விடலாம்), அவரும் ஒரு நாளும் தான் வைத்திருக்கும் புத்தகத்துக்கு மீறி எங்களுக்கு ஒரு விடயமும் அளித்ததில்லை. ஆனால் அன்று ஒரு நீண்ட தாளில் சில கிறுக்கல்களுடன் வந்திருந்தார். அன்று அவரின் குரலிலும் ஒரு நடுக்கம்.

பரிட்சை என்றால் நமக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் ஒரு நடுக்கம் தான் என்று எனக்கு அன்றுதான் புரிந்தது.

என்னதான் இருந்தாலும் ஆசான்கள் பரீட்சை நேரத்தில் எமக்கு புரிந்த உதவிகளுக்கு நாம் மிகவும் நன்றி கூற கடமைபட்டு இருக்கிறோம்.

ஆசிரியர்களின் தொடரை இத்துடன் முடித்துக்கொண்டு, அடுத்து பாடசாலை நாட்களில் நடந்த இனிய நினைவுகளின் சுவடியுடன் வருகிறேன்.
வர்த்தக பிரிவில் 60 மாணவர்கள். 3 வகுப்புகளாக பிரிக்கப்பட்டோம்.மீண்டும் சில புதுமைகள் எனக்காக காத்திருந்தன. சிறிய வகுப்பறைகள், பல்வேறு வித்தியாசமான சூழலை சேர்ந்த மாணவர்கள், ஏன் அவர்கள் பேசும் தமிழ் கூட எனக்கு வித்தியாசமாகத்தான் இருந்தது. முதல் நாள் வகுப்பு என்றால் கேட்க வேண்டுமா ? நீண்ட இடைவெளிக்கு பின்னர் சந்தித்துக்கொண்ட நண்பர்களின் கலகலப்பு,ஆரவாரம் மிகுந்து வகுப்பறை மிகவும் களேபரமாக காணப்பட்டது.

என்னை போல் இன்னும் சில புது முகங்கள் காணப்பட்டன. அப்பாடசாலை மாணவர்களால் சுற்றி வளைக்கபட்டேன். அடுக்கடுக்காய் பல கேள்வி கணைகளை அள்ளி வீசினார்கள். பதில் சொல்லி முடிப்பதக்குள் திடீரென மயான அமைதி, வேறென்ன வகுப்பாசிரியர் விஜயம்தான்.

எனது ஆசிரியர்கள் பற்றி நான் கூறியே ஆக வேண்டும்.

வகுப்பாசிரியர்: மிகவும் சிறந்த மனிதர், அனால் அவர் கற்பிக்கும் போது அவரது இருக்கையை விட்டு எழுந்தால் அது பாலைவனத்தில் விழுந்த் மழைதுளி போல, ஆனால் அவரது கற்பித்தலை குறைகூற முடியாது, ஆங்கிலத்தில் மிகுந்த பற்று உடையவர்.கோபம் வந்தால் கூட ஆங்கிலத்தில்தான் திட்டுவார் என்றால் பாருங்களேன்
Accounts ஆசிரியர்: மிகவும் கண்டிப்பான மனிதர், இவர் வகுப்பில் உட்கார்ந்ததே கிடையாது. தன் பணியை சிறப்பாக புரிபவர், நாம் பாடத்தில் பிழை விட்டால் பொன் மொழிகளால் அர்ச்சிக்கவும் தயங்கமாட்டார்.

வணிக கல்வி ஆசிரியை: மிகுந்த அவசரக்காரர், எடுத்ததக்கெல்லாம் கோபப்படுவார் ஆனால் அவரின் கோபம் எமக்கு மிகுந்த சிரிப்பை ஊட்டும்.... வடிவேல் comedy ல் வரும் சிரிப்பு police மாதிரி இவரை சிரிப்பு ஆசிரியர் என்றும் அழைக்கலாம்.


இங்கு ஆசிரியர்கள் பற்றி நான் சொல்ல காரணம் அடுத்துவரும் எனது சுவடியில் இவர்கள் பற்றிய சில சுவாரசியமான சுவடுகளை உங்களுக்கு தரலாம் என எண்ணியுள்ளேன்.
-மீண்டும் வருவேன்-2006 ம் ஆண்டு பரீட்சை எழுதி முடிந்தவுடன் திருமலை பயணமானவன் நான். வழமை போல் விடுமுறைக்கு வந்திருக்கிறோம் மீண்டும் திரும்பிவிடலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் நடந்ததோ வேறு. பரீட்சை முடிவுகள் வர முன்னே இங்கு ஆரம்பித்த உயர்தர வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். கொழும்புக்கும் திருமலைக்கும் பல வித்தியாசங்களை உணர்தேன். அங்கு bus பயணம் இங்கு cycle பயணம்,மண் தரையுடன் கூடிய வகுப்புக்கள், தொடர்ச்சியாக வீசும் பலமான காற்று என பல.

இவ்வாறே சில காலங்கள் உருண்டோடின. ஒரு வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள் இதோ வருகிறது ...... அதோ வருகிறது ...... என்ற இழுத்தடிப்பு இன்றி ஒரு நாள் இரவு திடீரென பரீட்சை முடிவுகள் வெளியானது .

அன்று ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் உயர் தரத்தில் சேர்வதக்கான நேர்முக தேர்வு. நேர்முக தேர்வு முடிந்து புறப்படும் போது ஒரு ஆசிரியர் "தம்பி school வரும்போது முடியை வெட்டிட்டு வாங்கோ என்றார். "ஆஹா ஆரம்பிச்சுடானுங்கடா" என்று மனதில் நினைத்தபடி வீடு வந்தேன்.

பாடசாலை முதல் நாள்....
புதிய பாடசாலை, புதிய சூழல், புதிய மாணவர்கள் சற்று பயத்துடன் உள்ளே நுழைந்தேன். மிகவும் மகிழ்சியாக பல மாணவர் கூட்டம் கதை பேசியபடி நின்று இருந்தது. ஒரு 4அடி மனிதர் அனைவரையும் அதட்டியபடி வந்துகொண்டு இருந்தார் உடனே அனைத்து மாணவர்களும் "குள்ளன் வாராண்டா" என்று கூறியபடி அனைவரும் line ல் நின்றார்கள். அவர் அந்த பாடசாலையின் Deputy Principal என்று பின்பு அறிந்து கொண்டேன்.

காலை கூட்டம் நடைபெற்று முடிந்ததும் எங்களை main hall இக்கு வருமாறு கூறி இருந்தனர்.நாங்கள் hall இக்கு சென்றுகொண்டு இருக்கும் போது அதே ஆசிரியர் தம்பி jeans ஐ மேல போடுங்கோ(low hip) என்றார். (இன்று எனக்கு மட்டுமல்ல )


-இன்னும் வரும் -


Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்