Related Posts with Thumbnails

கொழும்பில் நான் தரம் 9ல் படித்துக்கொண்டிருந்த நேரம் அன்றும் வழமைபோல நான் முதலாவதாக பாடசாலைக்குச் சென்றுவிட்டேன், அன்று என்னமோ தெரியவில்லை வழக்கமாக நேரத்துக்கு வருபவர்களையும் காணவில்லை. பாடசாலை தொடங்க சில நிமிடங்களுக்கு முன் அனைவரும் வந்து சேர்ந்தனர். அப்பாடா வந்துவிட்டார்கள் என்று சந்தோசப்பட்டால் அவர்கள் இப்படியொரு இடிச்செய்தியுடன் வருவார்களென்று எதிர்பார்க்கவில்லை.


"எமது பாடசாலையின் நீளக்காற்சட்டை போட்ட அனைவருக்கும் இன்று பாடசாலைவிட்டதும் அடிவிழ இருக்கிறது, சுற்றுவட்டாரப்பாடசாலை மாணவர்களால் தாக்கப்பட இருக்கிறோம்" இதுதான் அந்தச்செய்தி 9ம் ஆண்டில் நீ எங்கே நீளக்காற்சட்டை போட்டாய் என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் தரம் 9லிருந்து நாம் விரும்பினால் நீளக்காற்சட்டை அணிய அனுமதிக்கப்பட்டிருந்தோம்,தரம் 10இலிருந்துதான் கட்டாயமாக அணிய வேண்டும். நானும் பெரியமனிதன் என்று காட்டும் எண்ணத்தில் நீளக்காற்சட்டைதான் அணிவேன். 


அன்று பாடசாலையில் ஒரே பரபரப்பு இடைவேளைநேரம் எமது பாடசாலைப் பெரிய தல (பொதுவாக பாடசாலைகளில் GANG LEADER ஒவ்வொரு தரங்களிலும் இருப்பார், அதில் A/Lல் இருப்பவர்தான் பெரியதல) தலைமையில் சிறிய தலைகளுக்கு கூட்டம், கூட்டத்தில் கூறப்பட்டவை..................


எங்கள் பாடசாலை நீளக்காற்சட்டை போட்ட அனைவருக்கும் அடிப்பதாக செய்தி கிடைத்துள்ளது நாம் கவனமாக இருக்க வேண்டும், முடிந்தளவு ஆயுதங்களை கைப்பற்றுங்கள் (மூங்கில் தடி, உருட்டுக்கட்டை), 


இன்று யார்யாருக்கு ஹொக்கி, கிரிக்கெட் பயிற்சி இருக்கு என்று பார்த்து ஹொக்கி ஸ்டிக், பட் போன்றவற்றை எடுத்து வாருங்கள்.


பாடசாலை விட்டு யாரும் தனியே வீடு செல்லக்கூடாது


அத்துடன் கூட்டம் முடிந்தது, நாங்கள் எப்படியோ சில தடிகள், கட்டைகளைப் பொறுக்கி வைத்திருந்தோம், பாடசாலை முடிவடையும் நேரம் நெருங்கியது, ஒரு போருக்குப்புறப்படுவது போல் தயாராக(பயத்துடன்) இருந்தோம். 


பாடசாலை முடிந்து வரிசையில் செல்ல ஆயத்தமான போது பார்த்தால் பாடசாலை வாயிலில் பல ஆசிரியர்கள், எப்படியோ அவர்களுக்கும் விடயம் தெரியவந்திருந்தது. கட்டையை கையில் கொண்டு போக முடியாது என்று தெரிந்தது, அங்கே பார்த்தால் குடைக்குள் தடியை வைத்து எங்கள் தல குறூப் தடிகளை வெளியே கொண்டு போனது, ஹிம்ம்... பெரியவர்கள் பெரியவர்கள்தான்.நாங்களும் வெளியே வந்துவிட்டோம், எம் தலயின் கட்டளைப்படி வெளியே காத்திருந்தோம், அனைவரும் வந்ததும் புறப்பட்டோம் எம் பாடசாலையிலிருந்து பஸ் தரிப்பு நிலையத்துக்கு கொஞ்சத்தூரம் நடக்க வேண்டும், சிலர் வேகமாக நடக்க சிலர் மெதுவாக நடக்க தல குறூப்பை தவறவிட்டுவிட்டோம்..


பஸ்த்தரிப்பு நிலையமிருக்கும் அந்த வீதியை அண்மித்தோம் பெரிதாக ஒரு வித்தியாசமுமில்லாமல் இருந்தது, ஒரு பிரச்சினையும் இல்லைப்போல என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன், மறுகணம் எமது பாடசாலைபடபெயரைக்கூறி நாய்களே என்றபடி ஒரு கூட்டம் பஸ்சிலிருந்து இறங்கியது, ஒருநொடியில் எமது வீரமெல்லாம் எங்கு போனதோ தெரியவில்லை, ஒவ்வொருவர் ஒவ்வொரு திசையில் ஓடத்தொடங்கினோம் திரைப்படங்களில் வரும் காட்சி போல வீதியில் நின்று வேடிக்கை பார்த்தோருக்கு இருந்திருக்கும், என்ன கொடுமை அவசரத்தில் நான் மகளிர் பாடசாலைப்பக்கம் ஓடிவிடடடேன் ஒருவனுக்கு என்னில் என்ன கோபமோ தெரியவில்லை துரத்தித்துரத்தி அடித்தான். பெண்களுக்க முன்னால் அடிவாங்கி ஓடி....ச்சா... என்ன ஒரு அவமானம்.நான் ஓடிய ஓட்டத்தில் விழுந்த அடிகூடத்தெரியவில்லை, ஓடிப்போய் கம்பியின் மேலாகப்பாய்ந்து வந்த ஏதோ ஒரு பஸ்சில் ஏறிப்பார்த்தால் அது கொட்டாஞ்சேனைக்கு போகாது. உடனே அடுத்த பஸ் தரிப்பிடத்தில் இறங்கி பயத்துடன் காத்திருக்கிறேன் ஒரு பஸ் வந்தது "டேய்" என்று ஒரு குரல் மறுபடியுமா? என்று நினைத்த போது அது என் நண்பர்களின் குரல், அப்பாடா என்று பஸ்சில் ஏறினேன். எமது நண்பர் கூட்டம் எல்லாம் வந்துவிட்டதா என்று பார்த்தால் ஒருவனைக்காணவில்லை அடுத்த தரிப்பில் இறங்கலாம் என முடிவெடுத்து பார்த்தால் அவன் எங்களுக்காக அங்கே காத்திருந்தான், கன்னம் வீங்கியிருந்தது. 


அடுத்தநாள் எம் தல தலைமையில் மீள்தாக்குதல் இடம்பெற்று அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டது, சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது, போன்று பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. நாங்களும் யாரும் ஒருகிழமைக்கு பாடசாலைக்கு செல்லவில்லை.


சம்பவத்தின் பின்னணி: 
எமது தரத்தைச்சேர்ந்த மாணவன் ஒருவன் யாரோ வீதியில் சென்ற பெண்களுக்கு தொல்லை கொடுத்தபடி சென்ற அந்தப்பாடசாலை மாணவர்களை தன் கூட்டணியுடன் சென்று சரமாரியாகத்தாக்கியிருக்கிறான், அதனால் கோபமடைந்த அந்தக்கல்லூரி மாணவர்கள் இதைப்பாடசாலைப்பிரச்சினையாக்கி விட்டார்கள்.


என்னதான் இருந்தாலும் இச்சம்பவத்தை என்னால் மறக்க முடியாத ஓர் சுவடாகிவிட்டது,  

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. // சம்பவத்தின் பின்னணி:
  எமது தரத்தைச்சேர்ந்த மாணவன் ஒருவன் யாரோ வீதியில் சென்ற பெண்களுக்கு தொல்லை கொடுத்தபடி சென்ற அந்தப்பாடசாலை மாணவர்களை தன் கூட்டணியுடன் சென்று சரமாரியாகத்தாக்கியிருக்கிறான், அதனால் கோபமடைந்த அந்தக்கல்லூரி மாணவர்கள் இதைப்பாடசாலைப்பிரச்சினையாக்கி விட்டார்கள்.//

  அதுதானே சும்மா யாரும் அடிப்பாங்களா
  நீங்கதான் வம்பு பண்ணி இருக்கீங்க

 1. Unknown Says:

  // சம்பவத்தின் பின்னணி:
  எமது தரத்தைச்சேர்ந்த மாணவன் ஒருவன் யாரோ வீதியில் சென்ற பெண்களுக்கு தொல்லை கொடுத்தபடி சென்ற அந்தப்பாடசாலை மாணவர்களை தன் கூட்டணியுடன் சென்று சரமாரியாகத்தாக்கியிருக்கிறான்//

  முதலில் இது பிழையான விடயம்.
  மாணவர்கள் திருந்த முயற்சிக்க வேண்டும்.
  உங்கள் உங்கள் வால்களை ஒட்ட மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பாடசாலை உடையில் பாடசாலையின் கெளரவத்தை பாதுகாக்கும் படி செயற்படவேண்டும்.

  //அதனால் கோபமடைந்த அந்தக்கல்லூரி மாணவர்கள் இதைப்பாடசாலைப்பிரச்சினையாக்கி விட்டார்கள்.//

  இது இரண்டாவது பிழை.
  ஒரு மாணவன் இன்னொரு பாடசாலை மாணவனுக்கு அடித்தால் அதை மாணவர்கள் தங்கள் கைகளில் பிரச்சினையை எடுப்பது என்பது அந்த பதின்மவயதில் கதாநாயகத்தன்மையாகத் தெரியும், ஆனால் இது பெரிய பிரச்சினைகளை ஏறபடுத்தலாம்.

  வன்முறைகளை பாடசாலைகளிலே மாணவர்கள் கற்றுக் கொள்வது பிழையானது. இந்தக் கல்வி வாழ்க்கை முழுதும் ஒருவனை வன்முறையாளன் ஆக்கும்.

  எனக்கு இந்த சம்பவம் பற்றி சிறிதளவே தெரியும்.
  எனவே சம்பவத்தை பதிவிட்ட பவனுக்கு நன்றிகள்...

  தொடர்ந்து கலக்குங்கள் பவன்.

 1. Unknown Says:

  அதுசரி...
  உந்தச் சம்பவத்தின்போது அதிபர் எங்கே?
  அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?

 1. Subankan Says:

  ஹா ஹா, ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். உனக்குத் தேவையடா

 1. Bavan Says:

  @ தர்ஷன்
  தப்ப தட்டிக்கேட்டதுக்கு பாடசாலைக்கே அடிக்கிறது சரியா?

 1. Bavan Says:

  ///கனககோபி said...
  அதுசரி...
  உந்தச் சம்பவத்தின்போது அதிபர் எங்கே?
  அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?///

  நாங்கெல்லாம் அடிவாங்கிட்டு வர நீங்க நாளைக்கு திருப்பி அடிக்கக்கூடாதென்று அட்வைஸ் பண்ணினார்...

 1. Bavan Says:

  ///அந்த பதின்மவயதில் கதாநாயகத்தன்மையாகத் தெரியும், ஆனால் இது பெரிய பிரச்சினைகளை ஏறபடுத்தலாம்.
  ///

  ஆம் அது உண்மைதான்,
  இந்தப்பிரச்சினையே அதற்கு எடுத்துக்காட்டு..

  பேப்பரில் செய்திவந்து பாடசாலை அவமானப்பட்டதுதான் மிச்சம்...

 1. Bavan Says:

  /// Subankan said...
  ஹா ஹா, ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். உனக்குத் தேவையடா///

  அவ்வ்வ்..
  நான் அடிவாங்கினது பெரியவிடயமில்ல லேடீஸ் collegeக்கு முன்னால அடிவாங்கினதுதான் ரொம்ப அவமானமாப்போச்சு

  பட் பரவால்ல
  ஹே..
  நானும் ரெளடி..
  நானும் ரெளடி...
  நானும் ரெளடி...

  அடிவாங்கியிருக்கமுல்ல..

 1. Sri Says:

  pona maanatthai blog-la vera pottu oorellam solluriya. very good.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்