Related Posts with Thumbnails
யாரையாவது பன்னி என்று அல்லது நாயே என்று திட்டுயிருக்கிறீர்களா? அல்லது திட்டு வாங்கியிருக்கிறீர்களா? அப்படி திட்டு வாங்கியவர்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் திட்டியவர்கள் வயது போனவனே என்று அழைப்பதற்குப்பதில் அவ்வாறு அழைத்திருக்கிறார்கள். என்னடா இவன் கதைக்கிறான் என்று விளங்கவில்லையா? அதாவது நான் கூறவந்த விடயம் என்னவென்றால் நான் இப்போதெல்லாம் விலங்குகளின் பெயரைச்சொல்லி என்னை யாராவது திட்டினால் அவர்களுக்கு நன்றி சொல்கின்றேன். என்னைப்பார்த்து அவர்கள் ரொம்ப நல்லவன் என்று சொல்லும்போது நானெப்படி பேசாமலிருப்பது. இந்த பதிவை எழுதத்தூண்டியது நான் அண்மையில் படித்த வைரமுத்துவின் கவிதைதான்.

மனிதனாக இருக்கும் நாங்கள் குரங்கு வந்தால் வெடி போடுகின்றோம், நாய் வந்தால் "அடிக்..." என்று கலைக்கின்றோம், மாட்டை"போ.. போ.." என விரட்டுகின்றோம். அட இதிலென்ன ஆச்சரியம் இதுதான் இன்று முதியவர்களின் நிலையும் பெற்றவள் நம் அம்மா, நாம் வளர்ந்ததும் அவள் சும்மா என்றுதானே இருக்கின்றது நம் இளைய நாகரிக சமுதாயம். அந்தக்கவிதையில் வைரமுத்து "மனிதா!! நீ விலங்கை வணங்கு குறிப்பாக குரங்கை கும்பிடு" என்று கூறியிருப்பார், அட நமது மூதாதையர்தானே குரங்கு.
இந்தப்படத்தைப்பாருங்கள் கடைசியில் கம்பீரமாக நடக்கும் நீங்கள் ஆரம்பத்தில் எப்படி இருந்தீர்கள் என்று. ஆனால் இப்போது உங்களுக்கும், உங்களுக்கும்(குரங்கு) கண்ணுக்குத்தெரிந்த வித்தியாசம் அந்த வால் மட்டும்தான்.
அந்தக்குரங்கு எவரிடமும் கையேந்தி நிற்பதில்லை, யாருக்கும் அடிமை வாழ்க்கை வாழ்வதில்லை, யாருக்கும் பயப்படுவதில்லை, எவரையும் நீ அந்த மதம், நான் இந்த மதம் என்று கூறி கழித்து வைப்பதில்லை, ஏன் மக்களை ஏமாற்றி போலிச்சாமி, போலி பொருட்கள், கலப்படம் என்று எதுவும் செய்வதில்லை. ஏன் தனது சகாவைப்பார்த்து பொறாமைகூடப்பட்டதில்லை. அதற்கு பசித்தால் உண்ணத்தெரியும், நித்திரை செய்யும், மனிதரைப்போல் பணம் சேர்த்து வைத்துவிட்டு நித்திரை கொள்ளமுடியாமல் தவிக்காது. அதற்கு பதவி, பட்டம், பணம் என்றால் என்ன என்றே தெரியாது. 

இன்று சுதந்திரம் சுதந்திரம் என்றும், நாங்கள் வல்லரசு என்றும் சொல்லிக்கொள்ளும் நாடுகளுக்கு உண்மையில் சுதந்திரம் உண்டா? இந்த விலங்குகளுக்கு உண்டு, ஆனால் வானமே அவற்றுக்கு கூரை, மண் அல்லது புல் தரையே அவற்றின் நிலம், இலைகுழைகளே அவற்றின் உணவு. 

அடுத்து ZOO என்ற பெயரில்அவற்றை அடைத்து வைத்திருக்கிறீர்கள், சுதந்திரம் சுதந்திரம் என்று வாய்கிழியப்பேசிவிட்டு அவற்றுக்கு மட்டும் ஏன் சுதந்திரம் இல்லை. ஒரு உண்மை தெரியுமா உங்களுக்கு? நீங்கள் வசிப்பது யாரின் இடம் தெரியுமா? அந்த விலங்கு மகான்களின் இடம்தான். அவர்களின் இடத்தை அழித்துத்தானே வீடு அமைத்தீர்கள்? அவற்றின் இடத்தில் புகுந்து கொண்டு நீங்கள் அவர்களையே துரத்துகிறீர்கள், அடிமைப்படுத்துகிறீர்கள்.அந்த விலங்குகள் உங்கள் பெயரில் வழக்குப்போட்டால் என்ன செய்வீர்கள்? (உங்களைவிட அவர்களுக்குத்தான் உரிமை அதிகம்) எனவே விலங்குகளை பற்றிய கீழ்த்தரமான எண்ணத்தைக்கைவிடுங்கள், உங்களுக்கு இருக்க இடம் கொடுத்த தெய்வங்கள் அவை

இனியாவது சிந்திதத்து செயற்படுங்கள் எருமை என்று யாரையும் திட்டும் முன் யோசியுங்கள் அவன் நான்தான் உன் மூதாதையன் உன் வீட்டைக்காலி பண்ணு என்று சொல்லிவிடப்போகிறான்.

வைரமுத்துவின் விலங்கு கவிதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

மக்களின் தெரிவு
இலங்கையின் ஆறாவது ஜனாதிபதி தேர்தல் கடந்த நடைபெற்றது. அதில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் 6,015,934 வாக்குகள்  பெற்று வெற்றியீட்டியுள்ளார். மீண்டும் வளமான ஒரு எதிர்காலத்தை நோக்கிய பயணம் ஆரம்பமாகியுள்ளது.*****************************************************************************************************


பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா


19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. வெற்றியின் விளிம்பில் வந்து போட்டியைக் கோட்டைவிடும் பாகிஸ்தான் சர்வதேச(Senior team) மாதிரி இல்லாமல் இந்த அணி சாதிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.


*****************************************************************************************************
அரசியலுக்கு வரும் சினேகா?
சினேகா தனது அரசியல் பிரவேசம் பற்றி இன்னும் 10 ஆண்டுகளில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளாராம். தவிர வைஜயந்தி ஐபிஎஸ்' படம் ரீமேக்காக `பவானி' என்ற பெயரில் மீண்டும் தயாராகிறதாம், அதில் விஜயசாந்தி வேடத்தில் சினேகா நடிக்கிறாராம்.
தகவல்http://www.viduppu.com/*****************************************************************************************************


நானும் நட்சத்திரம்


யாழ்தேவி திரட்டி இந்தவார நட்சத்திரமாக என்னைத்தெரிவு செய்துள்ளது. பதிவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் யாழ்தேவி நண்பர்களுக்கும், எனது பதிவுகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.*****************************************************************************************************


கடவுள் இல்லை -பாலா


 
 


ஜோ தமது விரல்களால் லேசர் கதிர்களைப்பரப்பி ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். 5 நிமிடங்களில் ஆராய்ச்சியை முடித்து ரிப்போட் கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்தத்தடையத்தையும் காணவில்லை. ஆம் இப்போது இலங்கைப்பக்கம் லேசர் கதிர்கள் வருகிறது. அதோ லேசர் கதிர் கண்டுபிடித்து விட்டது. இலங்கைத்தீவு இருந்த பகுதி கடலால் முழுமையாக மூடப்பட்டு விட்டது. ஆனால் கடலுக்குள் புதையுண்டு கிடக்கும் இலங்கை என்ற தீவை தெட்டத்தெளிவாகப்படம் படித்துக்காட்டியது லேசர் இயந்திரம்."இன்னும் ZOOM பண்ணு" இயந்திரத்துக்கு கட்டளையிட்டான். அங்கு ஒரு குவியலே கிடந்தது. எதைப்பற்றிய ஆராய்ச்சி அது. முன்னொருகாலத்தில் செல்போன் என்று ஒன்று இருந்ததாம். அதைதேடித்தான் இவனின்ஆராய்ச்சி நடைபெறுகிறது. உடனே கையிலுள்ள ஒரு இயத்திரத்தை எடுக்கிறான், லேசர் கருவி தான் பிடித்த படங்களை அந்தக்கருவிக்கு அனுப்புகிறது. உடனடியாக அந்தக்கருவி அந்தப்படத்தில் உள்ள பொருள் பற்றி அக்குவேறு ஆணிவேறாக ரிப்போட் தயாரிக்கிறது. 


ரிப்போட் விபரங்கள்

  • மொத்த கையடக்கத்தொலைபேசிகள்- 1800547856
  • அதில் SIM அட்டை உள்ளவை- 1800547512
  • SIM அட்டை வகைகளின் எண்ணிக்கை-1300

இதில் காணப்பட்ட வசதிகள்
  1. SMS- SHORT MESSAGE SERVICE
  2. MMS-MULTIMEDIA MESSAGE SERVICE
  3. BLUETOOTH
  4. INFRA RATE
  5. GPRS-  GENERAL PACKET RADIO SERVICE.
  6. WIFI-WIRELESS FIDELITY
என்று அனைத்து கையக்கத்தொலைபேசிகளுக்குமான தகவல்களை தனித்தனியே வெளியிடுகிறது. உடனடியாக அந்த ரிப்போட்டை அனுப்பிவிட்டு அதில் ஒருதொலைபேசியை தெரிவு செய்கிறான் ஜோ. அதில் காணப்பட்ட பல விடயங்கள் அவனை வியக்க வைக்கிறது. அந்த தொலைபேசியின் INBOXல் 3000 SMS கள் காணப்படுகின்றது. அப்படியே GALLERY செல்கிறான், அங்கே வடிவேலு ஆடும் "நாக்கமுக்கா..நாக்கமுக்கா" வீடியோப்பாடல் இருக்கிறது. அதைப்பார்க்க ஆரம்பித்தவனுக்கு சிரிப்புச்சிரிப்பாக வந்தது,(அவன் சிரித்து 15ஆண்டுகளாகிறது).அவனுக்க இதையெல்லாம் பார்த்தபிறகு பழைய காலத்துக்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசை வருகிறது. தனக்கு 13 நிமிடங்கள் லீவு கிடைத்திருப்பதால் உடனடியாக பழைய காலத்திற்கு செல்ல ஆரம்பித்தான். 28 விநாடிகளில் 2010ஆம் ஆண்டை அடைந்தவன் முதலில் சென்று இறங்கிய இடம் ஒரு பஸ் தரிப்பிடம். அங்கு ஒரு இளைஞர் கூட்டம் ஒவ்வொருவரின் கைகளிலும் கையடக்கத்தொலைபேசி. பஸ்தரிப்பிடத்தில் நிற்கும் ஒரு நவநாகரிக பெண்ணிற்கு முன் நின்று ஏதோ ஸ்டைலாகக் கதைப்பதாக வழிந்து கொண்டிருந்தனர்.


அவனுக்கு முதலில் இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று புரியவில்லை. இவனுக்கு உடனடியாக அதைப்புரிந்து கொண்ட அவனது தலைப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கணணி, "அவர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் கைத்தொலைபேசி எனும் கருவியை அந்தப்பெண்ணிற்கு காட்டி தங்கள் பெருமைகளை வெளிக்காட்டுகின்றனர்" என்று அவனுக்கு விளக்கியது.


அடடா இப்படியும் மனிதர்களா? என்று நினைத்துக்கொண்டு அடுத்த கட்டமாக ஒரு பாடசாலையை அடைந்தான். அங்கு ஒரு வகுப்பறையில் ஆசிரியர் இருக்கவில்லை, சில மாணவர்கள், தமது கைத்தொலைபேசியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஆசிரியர் வந்ததும், உடனடியாக அதை மறைத்துவைத்தனர். இவனுக்கு மீண்டும் குழப்பம், அதை அறிந்து கொண்ட இயந்திரம் மீண்டும் அதைப்பற்றி அவனுக்கு விளக்கியது. "அவர்கள் தொலைபேசியில் இணையம் எனப்படும் ஒரு விடயத்தில் ஏதோ ஒரு websiteல் comment அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர், பாடசாலையில் கைத்தொலைபேசி பாவிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் திருட்டுத்தனமாக கைத்தொலைபேசி பாவிக்கின்றனர். அதுதான் ஆசிரியர் வந்ததும் ஒளித்து வைத்தனர்" என்றது.


பாடசாலையை விட்டு வெளியே வந்தவன் கண்ட காட்சி, மூன்று சக்கர வாகனமொன்று வந்து நிற்கிறது. அந்த வாகனசாரதி வாகனத்திலிருந்து இறங்கியவர்களிடம் எனக்கு ஒரு HIRE இருக்கு நீங்க வேலை முடிஞ்சதும் எனக்க ஒரு miss call அடியுங்க நான் திரும்பவும் வந்து பிக்கப் பண்ணிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். "அடடா கையடக்க தொலைபேசி இவ்வளவு popularரா இருந்திருக்கே" என்று மனதுக்குள் நினைத்தவனுக்கு இயந்திரம் இன்னும் 2 நிமிடங்கள் எஞ்சியிருக்கிறது என்று ஞாபகப்படுத்தியது. உடனடியாக அடுத்த 28 விநாடிகளில் அவனின் உலகிற்கு திரும்பியவன், அவன் பார்த்த விடயங்களை தனது blogல் "2009ஆம் ஆண்டில் கையடக்கத்தொலைபேசி என்று ஒன்று இருந்ததா?" என்ற தலைப்பில் பதிவு செய்து வெளியிட்டு விட்டு அடுத்தகட்ட வேலைக்குக்கிளம்பினான்.அன்றுதான் அவளை முதலில் பார்த்தேன், என் நண்பனுடன்தான் வந்தாள். பார்த்ததுமே எவ்வளவு அழகாக இருந்தாள் தெரியுமா. ஒரு விரல்தான் அவள்மீது பட்டது. அப்பப்பா என்ன ஒரு புன்னகை, கோடி விண்மீன்கள் கொட்டியது போல இருந்தது. என்னால் இன்னும் அந்த நாளை மறக்க முடியவில்லை.


அவளைப்பற்றி இன்னும் கூறிமுடிக்கவில்லை. அன்று ஒருநாள் அவளை என் கைகளால் தூக்கிக்கொண்டு நடந்து வருகிறேன். கால்கள் லேசாகத்தடக்க என் கையிலிருந்து விடுபட்ட அவள் காலணிகள் கழன்றுவிழ கீழே விழுந்துவிட்டாள். ஐயோ நான் பயந்துவிட்டேன், அவள் ஒன்றுமே நடக்காதது போல சிரித்தபடி மீண்டும் என்கைகளுக்குள் ஏறிக்கொண்டாள். இப்படி எத்தனையோ தடவைகள் விழுந்திருப்போம் ஆனால் அவள் ஒருநாளும் அழுததில்லை, என்னுடன் கோபித்ததும் இல்லை.


தினமும் என்னுடன்தான் வருவாள்.என்னுடன் விடாமல் கதைபேசுவாள், சைகை மொழியிலும் உரையாடுவாள், வகுப்பில் நானிருக்கும் போது கூட மெளன மொழியில் குசுகுசுப்பாள். அவளுடன் வாழ்ந்த நாட்கள் அது ஒரு பொற்காலம். மூன்று வருடங்கள் என்னை தனக்குள் கட்டிப்போட்டவள் அவள். என்ன தேவையென்றாலும் உடனே எனக்காக அனைத்தையும் செய்து முடிக்கும் கெட்டிக்காரி. அவளுக்கு ஓய்வே இருந்ததில்லை, எனக்கும்தான்.


அவள் நான் யாருடன் கதைத்தாலும் கண்டுபிடித்து விடுவாள், சிலவேளைகளில் கோபிப்பாள், யாருடனும் கதைக்கக்கூட விடமாட்டாள். கடைக்கு கூட்டிக்கொண்டு போய் அவள் விரும்பியதை வாங்கிக்கொடுத்தால்தான் அவள் கோபம் அடங்கும். இதெல்லாம் ஒரு அன்பில்தானே செய்கிறாள்.


திடீரென்று ஒருநாள் என்ன நடந்ததோ தெரியவில்லை. என்னுடன் பேசமறுத்தாள், ஏன் கண்களைக்கூடத்திறக்கவில்லை. ஐயோ பதறிப்போனேன் நான், உடனடியாக வைத்தியரிடம் சென்றேன், அவரும் பரிசோதித்து விட்டு உடனே அட்மிட் செய்யுங்கள் என்றார். அவள் உயிர் பிழைத்தால் போதுமென்று உடனடியாக அட்மிட் செய்தேன். ஒரு வாரம், பத்துநாள், ஒரு மாதம்.. ஆம் அவளுக்கு குணமானது.வைத்தியருக்கு நன்றி சொல்லி அழைத்து வந்தேன் அவளை. ஆனால் அவள் அதன் பின்னர் ஒரு ஆண்டுமட்டுமே என்னுடன் வாழ்ந்தாள். அதன் பின் இறந்துவிட்டாள். இன்றுடன் அவள் என்னிடம் வந்து நான்கு ஆண்டுகளாகிறது.


எத்தனை நாட்கள், மணித்தியாலங்கள் என்னை உங்களுடன் கதைக்க வைத்திருப்பாள், என் அழகிய சொனி எரிக்சன் K310i.மூன்றாண்டுகள் என்னுடன் என்னைவிட்டுப்பிரியாமல் வாழ்ந்த அவள் இன்று உயிருடன் இல்லை அவளை மறக்க முடியுமா.....ஹீஹீ

நீங்கள் ரொம்ப நல்லவராக இருந்தால் உலகம் உங்களை விரும்புமா?
பின்வரும் விடயங்களை படித்துவிட்டு நீங்களே கூறுங்கள்


இருகுழந்தைகள் ஒன்று குழப்படியே செய்வதில்லை. மிக அமைதியாக இருக்கிறது. யாருடனும் விளையாடவில்லை. தானும் தன்பாடும் என்று இருக்கிறது. பசி என்று அழுவதோ இல்லை தாயை போட்டு ஏதேனும் விடயத்துக்காகப் பிச்சுப்பிடுங்குவதோஇல்லை.


மற்றைய குழந்தை. இது குழப்படி என்றால் அப்படி ஒரு குழப்படி, என்னை மழலை மொழியால் அழைக்கிறது. "அண்ணா இங்கே பாங்கோ", நானும் ஓடிச்சென்று என்ன என்று கேட்க எனது கையைப்பிடித்து வீட்டுக்கு வெளியே அழைத்துச்செல்கிறது. ஒரு இடத்தில் நின்று தனது காற்சட்டைப்பையை இழுத்துப்பிடிக்கச்சொல்கிறது. சரியென நானும் பிடிக்க உடனடியாக நிலத்திலிருந்து மண்ணை அள்ளி தனது காற்சட்டைப்பைக்குள் போடுகிறது.


இரண்டு ஆறு, ஏழு வயது நிரம்பிய பிள்ளைகள்.முதலாவது பிள்ளை மிக அமைதியான பிள்ளை. பாடசாலையிலும் சரி, வீட்டிலும் சரி ஆசிரியர் அல்லது அம்மா சொல்வதைத்தவிர வேறு எதையும் கேட்பதில்லை. வீட்டில் செய்யும் ஒவ்வொரு வேலைகளுக்கும் "அம்மா இதைச் செய்யவா? , அம்மா அதைச்செய்யவா?" என்று அனுமதி கேட்கிறது.


அடுத்த பிள்ளை, மிகவும் சுட்டித்தனமான பிள்ளை. பாடசாலையில் ஆசிரியருக்கே பல கதைகள் சொல்லும், வீட்டில் குளிரூட்டியில் வைத்திருக்கும் ஐஸ் கிறீமை அம்மா திட்டுவாரெனத் தெரிந்தும் லாவகமாக அதை அம்மாக்குத் தெரியாமல் எடுத்து உண்ணும், எனக்கும் தந்து.


இரண்டு பாடசாலை மாணவர்கள்முதலாமவன் நன்றாகப் படிக்கக்கூடியவன். மிகுந்த புத்திசாலி. வகுப்பில் புத்தகப்புழு, யாருடனும் பெரிதாக சண்டையோ, வகுப்புக்குள் விளையாடுவதோ இல்லை. மனதுக்குள் விளையாட ஆசையிருந்தாலும் ஆசிரியர்களிடம் தனக்கிருக்கும் நல்ல பெயர் கெட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக விளையாடுவதில்லை. ஆசிரியர் யார் வகுப்பில் விளையாடியது என்று கேட்டால் மாட்டிக்கூட விடுவான்.


இரண்டாமவன் ஓரளவு நன்றாகவே படிப்பான், ஆனால் அடிக்கடி வகுப்பு நேரத்தில் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று ஏதாவது வாங்கி வந்து வகுப்பிற்கே தானம் சென்து தானும் சாப்பிடுவான். வகுப்பில் ஆசிரியர் வராத நேரங்களில் அடிக்கடி வகுப்புக்குள் கிரிக்கெட் போட்டிகள் ஒழுங்கு செய்வான். அடிக்கடி ஆசிரியரிடம் அகப்பட்டாலும் தனது சகாக்களை ஒருநாளும் காட்டிக்கொடுக்கமாட்டான். பாடசாலை முடிந்ததும் அருகாமையில் உள்ள பெண்களை வீட்டுக்கு கொண்டு போய் பத்திரமாக சேர்த்துவிட்டுத்தான் வீடு செல்வான்


இரு குடும்பஸ்தர்கள்முதலாமவர் தனது கல்வி மூலம் உயர்ந்தவர். மிகுந்த அறிவாளி. தானுண்டு தன் குடும்பமுண்டு என்று இருப்பவர். எந்தக்காரியத்திலும் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கமாட்டார். வீதியில் ஒருவன் விபத்துக்குள்ளாகி கிடந்தாலும் எல்லாம் அவனின் விதி என்று கூறிவிட்டு தனக்கேன் வம்பு என்று நழுவி விடுவார்.(உதவி செய்ய ஆசையிருந்தும்)


இரண்டாமவர் ஓரளவுக்குகல்வி கற்றிருந்தாலும், யாராவது உதவி என்று கேட்டால் உடனடியாக எதையும் எதிர்பாராது செய்பவர்கள், யாருக்கு பிரச்சினை என்றாலும் தேடிப்போய் உதவுபவர். ஆனால் என்ன சற்று குடிப்பழக்கமுடையவர். 


மேலே குறிப்பிடப்பட்ட எட்டு நபர்களுக்குள் உங்களுக்கு மிகவும் பிடித்த நபர்கள் யார்யார்? நான்கு பிரிவிலும் முதலாமவரா? அல்லது இரண்டாமவரா? மிகுந்த படித்தவனாக இருந்தாலோ அல்லது நல்லவனாக இருந்தாலோ அனைவருக்கும் அவர்களைப் பிடிப்பதில்லை.


கூடுதலாக முதலாமவன் சமூகத்தில் உயர்ந்தவன் என்று பெயர் வாங்கியிருப்பான், ஆனால் அவர்களில் மனதுக்குள் செய்யவேண்டும் என நினைக்கும் பல காரியங்களை தன்னைப்பற்றி தப்பாக கருதிவிடுவார்களோ என்று அவர்கள் ஒரு காரியத்தையும் செய்வதில்லை. இப்படிப்போலி வாழ்க்கை வாழ்வதது சரியா? குழப்படிகள் செய்யாதவர்கள் அனைவரும் நல்லவர்களும் இல்லை, குழப்படிகள் செய்பவர்கள் அனைவரும் கெட்டவர்களும் இல்லை. 


எனவேதான் குழப்படிகளும் செய்ய வேண்டும், அளவோடு. சிறுவயதில் செய்யும் குழப்படிகள் எமக்கு எதிர்காலத்தில் சிறந்த நினைவுகள் மட்டுமல்ல, சிறந்த அனுபவங்களும் கூட. நாம் எம் மனம் சொன்னபடி வாழவேண்டுமே தவிர நல்ல பெயருக்காகவோ அல்லது பிறர் ஏதும் சொல்வார்கனோ எனப்பயந்து வாழ்ந்தால் எத்தனையோ விடயங்களை இழந்து விடுவீர்கள். 


********************************************************************************************************


எருமை தெரியுமா?
முன்பு ஒருநாள் தொலைக்காட்சியில் நடந்த "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் பேசிக்கொண்டிருந்தது காதில் கேட்டது அடடா என்ன ஒரு அருமையான விடயம் அது...ஒரு நாட்டுப்புற ஊருக்குச் சென்ற ஒருவர் மக்களைச் சில விடயங்கள் கேட்டார், 

அவர் -மனிதன் மாதிரி ரோபோ இருக்கு தெரியுமா?
மக்கள் -தெரியாது
அவர் -computerல கடிதம் அனுப்பலாம் தெரியுமா?
மக்கள் - தெரியாது
அவர் -பாங்கில லொக்கர் இருக்கு தெரியுமா?
மக்கள் - தெரியாது
அவர் - பெரிய பெரிய ரோட்டெல்லாம் இருக்கு தெரியுமா?
மக்கள் -தெரியாது
அவர் பொறுமையிழந்து எதிரே ஒரு எருமைக்கடா வர, அதைப்பார்த்துவிட்டு
எருமை தெரியுமா? எனக்கேட்க......

மக்கள் - ஓ... தெரியுமே.... எமனின் வாகனம் என்றனர்.

கண்ணுக்குத்தெரிபவற்றை தெரியாது..தெரியாது என்று கூறும் மக்கள் கண்ணுக்குத்தெரியாத எமனையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ன கொடுமை இது, இப்படித்தான் போலிச்சாமிகளையும் சனம் நம்புகிறது, என்று தீரும் இந்த மூடநம்பிக்கை...ஹிம்ம்
************************************************************************************
வைத்தியசாலைகள் வாழ்க

திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் நடந்தது இது, அங்கு BLOOD SUGER செக் பண்ணச் சென்ற எனது பாட்டிக்கு மிக அதிகமாக இருக்கிறது என்று கூறிவிட்டார்கள் (இதுக்கு அவர் வீட்டில் இனிப்பே சாப்பிடுவதில்லை). சரி அந்த வைத்தியசாலையிலுள்ள வைத்தியரிடம் மருந்து எடுக்கலாம் என்று பார்த்தால் வைத்தியர் வரவில்லை(நல்லகாலம்).


உடனே வெளியே எங்களுக்கு தெரிந்த ஒரு வைத்தியரிடம் ஒருவரிடம் சென்று நாங்கள் எடுத்த BLOOD SUGERக்கான ரிப்போட்டைக்காட்ட முற்பட்ட போது "எங்கே அந்த (வைத்தியசாலையின் பெயரைக்குறிப்பிட்டு) வைத்தியசாலையிலா எடுத்தீர்கள்?" அதை எனக்குக்காட்ட வேண்டாம் அது முற்றிலும் பிழையாகத்தான் இருக்கும், என்றுவிட்டு அவர் தான் செக் பண்ணியபோது NORMAL ஆக இருந்தது.


என்ன கொடுமை இது, அங்க தொட்டு இங்க தொட்டு வைத்தியசாலைவரை வந்துவிட்டது. வைத்திசாலையில் பிழையான ரிப்போட் வழங்கப்படுவது அறிந்து வைத்தியரை ஒரு நடவடிக்கை எடுக்க முற்படாதது கவலைக்குரிய விடயம்.(அந்த ரிப்போட்டைப் பார்க்காததைத்தவிர)
************************************************************************************
வாழ்த்துக்கள்

நேற்று முன்தினம் பிறந்தநாளைக்கொண்டாடிய யோ அண்ணாவுக்கும் இன்று பிறந்தநாளைக்கெண்டாடும் கடலேறி ஆதிரை அண்ணா மற்றும் பங்குச்சந்தை அச்சு அண்ணாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.தமிழ்மணம் போட்டியில் வெற்றி பெற்ற எமது பதிவர்கள் வந்தி அண்ணா, லோசன் அண்ணா மற்றும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிலும் சளைக்காது போட்டி போட்ட பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


************************************************************************************

திரிசாவுக்கு கல்யாணம்

இவருக்கு வரன் பார்க்கிறார்களாம் முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..ஹீஹீBavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்