Related Posts with Thumbnails
ஜோ தமது விரல்களால் லேசர் கதிர்களைப்பரப்பி ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். 5 நிமிடங்களில் ஆராய்ச்சியை முடித்து ரிப்போட் கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்தத்தடையத்தையும் காணவில்லை. ஆம் இப்போது இலங்கைப்பக்கம் லேசர் கதிர்கள் வருகிறது. அதோ லேசர் கதிர் கண்டுபிடித்து விட்டது. இலங்கைத்தீவு இருந்த பகுதி கடலால் முழுமையாக மூடப்பட்டு விட்டது. ஆனால் கடலுக்குள் புதையுண்டு கிடக்கும் இலங்கை என்ற தீவை தெட்டத்தெளிவாகப்படம் படித்துக்காட்டியது லேசர் இயந்திரம்."இன்னும் ZOOM பண்ணு" இயந்திரத்துக்கு கட்டளையிட்டான். அங்கு ஒரு குவியலே கிடந்தது. எதைப்பற்றிய ஆராய்ச்சி அது. முன்னொருகாலத்தில் செல்போன் என்று ஒன்று இருந்ததாம். அதைதேடித்தான் இவனின்ஆராய்ச்சி நடைபெறுகிறது. உடனே கையிலுள்ள ஒரு இயத்திரத்தை எடுக்கிறான், லேசர் கருவி தான் பிடித்த படங்களை அந்தக்கருவிக்கு அனுப்புகிறது. உடனடியாக அந்தக்கருவி அந்தப்படத்தில் உள்ள பொருள் பற்றி அக்குவேறு ஆணிவேறாக ரிப்போட் தயாரிக்கிறது. 


ரிப்போட் விபரங்கள்

 • மொத்த கையடக்கத்தொலைபேசிகள்- 1800547856
 • அதில் SIM அட்டை உள்ளவை- 1800547512
 • SIM அட்டை வகைகளின் எண்ணிக்கை-1300

இதில் காணப்பட்ட வசதிகள்
 1. SMS- SHORT MESSAGE SERVICE
 2. MMS-MULTIMEDIA MESSAGE SERVICE
 3. BLUETOOTH
 4. INFRA RATE
 5. GPRS-  GENERAL PACKET RADIO SERVICE.
 6. WIFI-WIRELESS FIDELITY
என்று அனைத்து கையக்கத்தொலைபேசிகளுக்குமான தகவல்களை தனித்தனியே வெளியிடுகிறது. உடனடியாக அந்த ரிப்போட்டை அனுப்பிவிட்டு அதில் ஒருதொலைபேசியை தெரிவு செய்கிறான் ஜோ. அதில் காணப்பட்ட பல விடயங்கள் அவனை வியக்க வைக்கிறது. அந்த தொலைபேசியின் INBOXல் 3000 SMS கள் காணப்படுகின்றது. அப்படியே GALLERY செல்கிறான், அங்கே வடிவேலு ஆடும் "நாக்கமுக்கா..நாக்கமுக்கா" வீடியோப்பாடல் இருக்கிறது. அதைப்பார்க்க ஆரம்பித்தவனுக்கு சிரிப்புச்சிரிப்பாக வந்தது,(அவன் சிரித்து 15ஆண்டுகளாகிறது).அவனுக்க இதையெல்லாம் பார்த்தபிறகு பழைய காலத்துக்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசை வருகிறது. தனக்கு 13 நிமிடங்கள் லீவு கிடைத்திருப்பதால் உடனடியாக பழைய காலத்திற்கு செல்ல ஆரம்பித்தான். 28 விநாடிகளில் 2010ஆம் ஆண்டை அடைந்தவன் முதலில் சென்று இறங்கிய இடம் ஒரு பஸ் தரிப்பிடம். அங்கு ஒரு இளைஞர் கூட்டம் ஒவ்வொருவரின் கைகளிலும் கையடக்கத்தொலைபேசி. பஸ்தரிப்பிடத்தில் நிற்கும் ஒரு நவநாகரிக பெண்ணிற்கு முன் நின்று ஏதோ ஸ்டைலாகக் கதைப்பதாக வழிந்து கொண்டிருந்தனர்.


அவனுக்கு முதலில் இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று புரியவில்லை. இவனுக்கு உடனடியாக அதைப்புரிந்து கொண்ட அவனது தலைப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கணணி, "அவர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் கைத்தொலைபேசி எனும் கருவியை அந்தப்பெண்ணிற்கு காட்டி தங்கள் பெருமைகளை வெளிக்காட்டுகின்றனர்" என்று அவனுக்கு விளக்கியது.


அடடா இப்படியும் மனிதர்களா? என்று நினைத்துக்கொண்டு அடுத்த கட்டமாக ஒரு பாடசாலையை அடைந்தான். அங்கு ஒரு வகுப்பறையில் ஆசிரியர் இருக்கவில்லை, சில மாணவர்கள், தமது கைத்தொலைபேசியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஆசிரியர் வந்ததும், உடனடியாக அதை மறைத்துவைத்தனர். இவனுக்கு மீண்டும் குழப்பம், அதை அறிந்து கொண்ட இயந்திரம் மீண்டும் அதைப்பற்றி அவனுக்கு விளக்கியது. "அவர்கள் தொலைபேசியில் இணையம் எனப்படும் ஒரு விடயத்தில் ஏதோ ஒரு websiteல் comment அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர், பாடசாலையில் கைத்தொலைபேசி பாவிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் திருட்டுத்தனமாக கைத்தொலைபேசி பாவிக்கின்றனர். அதுதான் ஆசிரியர் வந்ததும் ஒளித்து வைத்தனர்" என்றது.


பாடசாலையை விட்டு வெளியே வந்தவன் கண்ட காட்சி, மூன்று சக்கர வாகனமொன்று வந்து நிற்கிறது. அந்த வாகனசாரதி வாகனத்திலிருந்து இறங்கியவர்களிடம் எனக்கு ஒரு HIRE இருக்கு நீங்க வேலை முடிஞ்சதும் எனக்க ஒரு miss call அடியுங்க நான் திரும்பவும் வந்து பிக்கப் பண்ணிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். "அடடா கையடக்க தொலைபேசி இவ்வளவு popularரா இருந்திருக்கே" என்று மனதுக்குள் நினைத்தவனுக்கு இயந்திரம் இன்னும் 2 நிமிடங்கள் எஞ்சியிருக்கிறது என்று ஞாபகப்படுத்தியது. உடனடியாக அடுத்த 28 விநாடிகளில் அவனின் உலகிற்கு திரும்பியவன், அவன் பார்த்த விடயங்களை தனது blogல் "2009ஆம் ஆண்டில் கையடக்கத்தொலைபேசி என்று ஒன்று இருந்ததா?" என்ற தலைப்பில் பதிவு செய்து வெளியிட்டு விட்டு அடுத்தகட்ட வேலைக்குக்கிளம்பினான்.


நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. ஆளாளுக்கு அசத்துறாய்ங்கப்பா. :))

 1. Anonymous Says:

  suuuuper............

  -Nathan

 1. Unknown Says:

  சூப்பர் புனைவு..

  ஆக 2070ல் கையடக்கத் தொலைபேசி இருக்குமோ இல்லையோ ப்ளாக் இருக்கும்னு சொல்றீங்க.. ஹி ஹி ஹி

 1. Subankan Says:

  ம், நடக்கட்டும், நடக்கட்டும்

 1. Maayavan Says:

  நல்ல பதிவு
  வாழ்த்துக்கள்....!!!!!

  "28 நிமிடத்தில்" என்பதை
  "28 விநாடிகளில்" என்று மாற்றி விடுங்கள்...

 1. தலைவா....

  இப்ப தான் தேர்தல் கடமை முடிச்சு வந்து பாத்தன்....

  கலக்கல் பவன்...

  சும்மா பிச்சு உதறுறீங்கள்....கலக்கல்....

  நட்சத்திர வாரத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கிறீர்கள்....

 1. chance ஏ இல்லை, நச்சு புளியிறீங்க, இயக்குனர் சங்கர் பார்த்தால் ரோபோ பார்ட் இரண்டு ரெடியாகிடும், அட உண்மையாதாங்க சொல்றேன் நம்புங்க

 1. Bavan Says:

  வானம்பாடிகள்,

  நன்றி, வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  Nathan,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  முகிலன்,

  //ஆக 2070ல் கையடக்கத் தொலைபேசி இருக்குமோ இல்லையோ ப்ளாக் இருக்கும்னு சொல்றீங்க.. ஹி ஹி ஹி//

  lol.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  சுபா அண்ணா,

  நன்றி வருகைக்கம் கருத்துக்கும்...;)

 1. Bavan Says:

  Maayavan

  //"28 நிமிடத்தில்" என்பதை
  "28 விநாடிகளில்" என்று மாற்றி விடுங்கள்...//

  அடடா, அங்கு பிழைவிட்டுட்டேனோ..
  மாத்திவிட்டேன்,

  நன்றி மாயவன் வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  கனககோபி

  //தலைவா....//

  தேர்தல் என்றவுடன தலைவா எண்டுறீங்க..:p

  //இப்ப தான் தேர்தல் கடமை முடிச்சு வந்து பாத்தன்//

  இலவச கிரிபத் வாங்கச்சென்றதா எல்லோ சொன்னாங்க..:p

  //கலக்கல் பவன்...
  சும்மா பிச்சு உதறுறீங்கள்....கலக்கல்....
  நட்சத்திர வாரத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கிறீர்கள்//

  நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கம்...;)

 1. Bavan Says:

  SARAVANA BALAAJI,

  //chance ஏ இல்லை, நச்சு புளியிறீங்க, இயக்குனர் சங்கர் பார்த்தால் ரோபோ பார்ட் இரண்டு ரெடியாகிடும், அட உண்மையாதாங்க சொல்றேன் நம்புங்க//

  அண்ணே சும்மா ஜோக்கடிக்காதீங்கண்ணே...lol

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

 1. ரசித்தேன் பவன் கலக்கல்... ஆனாலும் இலங்கையையே தாட்டுபோட்டீங்களே மன்னர் ஆடசிக்கு வந்த நேரம் என்ன அபசகுனமான பதிவு ன்னு மன்னர் யாரும் அடியாடகளை அனுப்பிடுவார் கவனம்...ஏன் இந்த கொலை வெறி அப்போ என புள்ள குட்டி எல்லாம் பாவமில்லையா...

 1. Ramesh Says:

  வாவ்... அட பார்றா மறுபடியும் பார்றா..
  ம்ம் கலக்கல் தொடருங்கள்

 1. Murli Says:

  சினிமா கதைமாதிரியே இருக்கு...ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறீர். நல்ல கற்பனை...

  ஒரே ஒரு நெருடல்.
  கடலுக்குள் இருந்த செல்போனில் தண்ணீர் படாமல் இருக்க முடியாது..அதிலுருந்து விசயம் எடுப்பதும் முடியதல்லவா....

 1. Unknown Says:

  //Murli Said,
  சினிமா கதைமாதிரியே இருக்கு...ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறீர். நல்ல கற்பனை...

  ஒரே ஒரு நெருடல்.
  கடலுக்குள் இருந்த செல்போனில் தண்ணீர் படாமல் இருக்க முடியாது..அதிலுருந்து விசயம் எடுப்பதும் முடியதல்லவா....
  //

  முர்ளி,

  புது முயற்சிய பாராட்டுங்கப்பா.. அத விட்டுட்டு லாஜிக் பாத்துட்டு.. :))))

 1. Bavan Says:

  பாலா அண்ணா,

  //ரசித்தேன் பவன் கலக்கல்... ஆனாலும் இலங்கையையே தாட்டுபோட்டீங்களே//

  அது எதிர்காலத்திலதானே தாளும்..:p

  //மன்னர் ஆடசிக்கு வந்த நேரம் என்ன அபசகுனமான பதிவு ன்னு மன்னர் யாரும் அடியாடகளை அனுப்பிடுவார் கவனம்...//

  மன்னர் நல்லவர் ஜனநாயகத்தின் பிறப்பிடம்..lol

  //ஏன் இந்த கொலை வெறி அப்போ என புள்ள குட்டி எல்லாம் பாவமில்லையா//

  ஹீஹீ உசிரோட இருந்தா பாப்பம் தாழுதா எண்டு, உண்மையிலயே தாண்டா நானொரு தீர்க்கதரிசி...:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  றமேஸ் அண்ணா,

  //வாவ்... அட பார்றா மறுபடியும் பார்றா..
  ம்ம் கலக்கல் தொடருங்கள்//

  நன்றி றமேஸ் அண்ணே, நிச்சயமாக...;)

  *****

  Murli
  //சினிமா கதைமாதிரியே இருக்கு...ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறீர். நல்ல கற்பனை//

  அப்பிடியா?? சும்மா சொல்லக்கூடாது..:p

  //ஒரே ஒரு நெருடல்.
  கடலுக்குள் இருந்த செல்போனில் தண்ணீர் படாமல் இருக்க முடியாது..அதிலுருந்து விசயம் எடுப்பதும் முடியதல்லவா..//

  அது 2070ஆம் ஆண்டு அண்ணே, செத்த பாம்பையும் பிழைக்க வைப்பம்..ஹீஹீ

  நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  முகிலன்,

  //புது முயற்சிய பாராட்டுங்கப்பா.. அத விட்டுட்டு லாஜிக் பாத்துட்டு.. :)))//

  ஆதரவுக்கு நன்றி சகோதரா...;)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்