Related Posts with Thumbnails
திட்டமிட்டபடியே அந்தநாளும் வந்தது, காலை 7மணி மந்தி ச்சா.. வந்தி அமைச்சரின் வீட்டில் கோபி, சுபாங்கன், பவன், புல்லட் ஆகியோரும் இதற்காகவே யாழ்ப்பாணத்திலிருந்து சிறகடித்துப்பறந்து வந்த பாலா அண்ணா ஆகிய ஆறு பேரும் இணைந்து, போட்ட பிளான்படியே கொட்டாஞ்சேனை பஸ்தரிப்பிலிருந்து 155 பஸ்சில் ஏறி புறப்பட்டனர்.அனைவரையும் தன்மடியில் வைத்துக்கொண்ட கோபி அண்ணா தான் ஒரு டிக்கெட்தான் எடுப்பேன் என்று சண்டைபிடிக்க கோபியைப்பார்த்து இவர் டெரரான ஆள் என்று நினைத்த டிக்கெட் கலெக்டர் ஏன் வம்பு என்று ஒரு டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு செல்ல தான் ஏதோ சாதித்தது போல தனக்கே உரிய சிரிப்புடன் இருந்தார்.சரி கடுப்பாக்காம இவங்க எல்லாரும் எங்கதான் போகிறார்கள் என நீங்க கேட்பது புரிகிறது. நேற்று பவன் தனது மாங்காய் களடிவெடுத்து மாட்டிய சம்பவத்தை இந்தப்பதிவில் கூறியதைக்கேட்ட வந்தி அமைச்சர் "கள்ள மாங்காய் ஆயப்போய் முள்ளுக்கம்பி கிழித்தாலும் நாங்க மாட்டியதில்லை" என்று வீரபாண்டியக்கட்டபொம்மன் ஸ்டையிலில் வசனம்பேசி, வழக்கம் போல சொந்தசெலவில் சூனியம் வைத்துக்கொண்டார், அட இவர் பேசிய வீரவசனத்தைப்பார்த்த உண்மையென்று நம்பிய நம்ம பதிவர்கள் எங்களுக்கு எப்படியும் நீங்கள் எங்களுக்கு "மாட்டுப்படாமல் கள்ளமாங்காய் ஆய்வது எப்படி" என்றுசொல்லி.... இல்லை இல்லை செய்து காட்டவேண்டும் எனக்கூறி அடம்பிடித்ததால் போடப்பட்ட திட்டம்தான் இது.


சரி அதற்கு இவர்கள் ஏன் பஸ்சில் எங்கே போகிறார்கள், அட வேற எங்கே நம்ம லோசன் அண்ணா வீட்டுக்குத்தான், அவர் வீட்டில் நிற்கும் மாமரத்தில் தான் மாங்காய் ஆட்டயப்போடும் பாடம் இடம்பெறப்போகிறது.


ஒருவாறு 9.30 மணிக்கு வெள்ளவத்தை பஸ்த்தரிப்பிடத்தை அடைந்தவர்கள், ஒருவாறு லோசன் அண்ணாவின் வீட்டை அடைந்தார்கள். எதையும் PLAN பண்ணிப்பண்ணணும் என்ற வடிவேலுக்கவிஞரின் தத்துவத்துக்கு அமைய பிளான் பண்ண ஆரம்பித்தனர். அண்மையில் ஆட்டையப்போட்ட அனுபவமுள்ள பவன் "கல்லெறிந்து மாங்காய்களைப்பறிப்போம் என்று தனது கருத்தைக்கூற" இல்லை இல்லை அதன்பின் நீ மாட்டுப்டாய்தானே அதனால் அந்த IDEA சரிவராது என்று சுபாங்கன் அண்ணா உடனடியாக மறுப்புக்கூறினார், நல்லூர்க்கந்தா உனக்கு கோபியின் கணக்கில தேங்காய் உடைக்கிறன் மாங்காய் பறிக்க IDEA குடு என்று பாலா அண்ணா சாமிகும்பிடத்தொடங்க, ஆ... IDEA வந்திட்டுது என்று கோபிஅண்ணா சத்தம்போட உடனே எல்லோரும் ஆவலுடன் கோபியைப் பார்க்க "எல்லோரும் என்னைத்தூக்குங்கள் நான் பறிக்கிறேன் என்றார், உடனே கடுப்பான புல்லட் அண்ணா, யாமிருக்க பயமேன் என்று கூறிவிட்டு மரம் எங்கே நான் பறித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு லோசன் அண்ணா வீட்டு மதிலில் ஏறியவர் எதையோ பார்த்து பயந்து தொபுக்கடீர் என்று கீழே விழுந்தார், உடனே வைத்தியர் பாலா அண்ணா தனக்குத்தெரிந்த ஏதோ வைத்தியமெல்லாம் செய்து அவரை எழுப்பி என்ன நடந்தது என்று கேட்க, குதிரை..குதிரை... என்று பிதற்றினார், என்னடா என்று உள்ளே மெதுவாக எட்டிப்பார்த்த சுபாங்கன் அண்ணா அங்கே குதிரை சைசில் ஒரு நாய் இருப்பதைக்கண்டு அங்கே குதிரை சைசில் ஒரு நாய் இருக்கிறது என்று சொல்னார்


இதெல்லாம் சரிவராது நான் சொல்வதைக் கேளுங்கள் என்று கூறிய சுபாங்கன் அண்ணா, உடனடியாக FAN ஒரு வேண்டும் காற்றலையில் மாங்காய் பறிப்போம் என்று தனது மொக்கை IDEAவைக்கூற, FANக்கு எங்கடாப்பா போறது இதுவும் சரிவராது என்று அதுவும் கைவிடப்பட்டது. சரி அடுத்து கோபி அண்ணா பின்னவீனத்துவக்கவி ஆதிரை அண்ணாவுக்கு அழைப்பெடுத்து IDEA கேட்க, தான் தற்போது ஜெயம் படம் பார்த்துக்கொண்டிருப்பதாக்கூறிவிட்டு படக் எனக்கூறி அழைப்பை துண்டித்துவிட்டார், தனது கற்பூர மூளையைப்பாவித்த வந்தியண்ணாஅவர் சொன்ன பதிலில் ஒரு IDEA இருக்கிறது, அதாவது கயிற்றில் கட்டி மாமரத்தினூடாக ஒருவரை உள்ளே இறக்குவோம் என்று சொல்லி மீண்டும் சொந்தசெலவில் சூனியம் வைத்துக்கொண்டார், உள்ளே வந்தியண்ணாவைத்தான் இறக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.தனது பெட்டியிலிருந்து கயிற்றை எடுத்த சுபா அண்ணா, புல்லட் அண்ணாமாரின் முயற்சியில் கயிற்றில் கட்டி இறக்கப்பட்ட வந்தியண்ணா மாங்காய்களைப்பறித்துப்போட வீச அவற்றைக் சிறப்பாக கட்ச் பிடித்த புல்லட், சுபாங்கன் மற்றும் பவன் ஆகியோர் (கோபிதான் கயிற்றை பிடித்திருந்தவர்) சுபா அண்ணாவின் பெட்டியில் சேர்த்து வைத்தனர். சிறிது நேரத்தில் பெட்டியின் ஐந்து அறைகளும் நிரம்பிவிட்டது.


 ஆனால் வந்தியண்ணா தொடர்ச்சியாக மாங்காய்களைப்பறித்துப்போட அதை பத்திரப்படுத்தி வைக்க இடமின்றி புல்லட் அண்ணா, சுபா அண்ணா பவன் ஆகியோர் சாப்பிட ஆரம்பிக்க கடுப்பான கோபியண்ணா கையில் பிடித்திருந்த கயிற்றை விட்டுவிட்டு மாங்காயைப்பறிக்க ஓட கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த வந்தியண்ணா லோசன் அண்ணா வீட்டில் துணிதுவைக்க வைத்திருந்த நீலத்தண்ணீரில் விழுந்துவிட்டு எழுப்பி வந்த வந்தியண்ணா நீலமே உருவாகி நிற்க அதைப்பார்த்த புல்லட் அண்ணா நீலம்..நீலம்.. என்று கத்திக்கொண்டு அவரைத்துரத்த மது என்னைக்காப்பாத்து என்று வந்தியண்ணா கெளபாய் மது அண்ணாவின் வீட்டை நோக்கி ஓட, மாங்காய் பெட்டியுடன் ஓடிய சுபா அண்ணாவை கோபி துரத்திக்கொண்டு ஓட, எல்லோஐம் ஓடுவதைப்பார்த்த பவனும் தன்பங்குக்கு ஒரு திசையில் ஓட மாங்காய்ப்பாடம் ஓட்டத்தில் முடிந்தது.


பின்குறிப்பு - இது முழுக்க முழுக்க மொக்கைக்காக எழுதப்பட்டது

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. Unknown Says:

  //போட்ட பிளான்படியே கொட்டாஞ்சேனை பஸ்தரிப்பிலிருந்து 155 பஸ்சில் ஏறி புறப்பட்டனர்.//

  தம்பி.... கோபி கிருலப்பனையில் இருப்பவன்.... அவனுக்கென்ன வலியா கொட்டாஞ்சேனைக்குப் போய் திரும்ப இங்க வர?


  //அனைவரையும் தன்மடியில் வைத்துக்கொண்ட கோபி //

  என்ன்ன்ன்ன்ன்ன்ன்னானானானானானதுதுதுதுது?


  //தான் ஒரு டிக்கெட்தான் எடுப்பேன் என்று சண்டைபிடிக்க கோபியைப்பார்த்து இவர் டெரரான ஆள் என்று நினைத்த டிக்கெட் கலெக்டர் ஏன் வம்பு என்று ஒரு டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு செல்ல //

  நம்பக்கூடிய விசயமா இது?
  தனியப் போகேக்கயே அவனவன் ஒண்டரை ரிக்கெற் கேக்கிறான், இதுக்குள்ள புல்லட் அண்ணா போன்ற ஜிம் பொடிகளையும், பவன், சுபா அண்ணா போன்ற பயற்றங்காய்களையும், வந்தியண்ணா போன்ற சிங்கப்பூர் காரர்களையும், பாலா அண்ணா போன்ற ஸ்கூட்டிக்குப் பின்னால் போய் கடிவாங்கியவர்களையும் வைத்துக்கொண்டு ஒரு ரிக்கெற் இல்ல ஒரு பஸ் முழுக்க ரிக்கெற் எடுக்கோணும்....
  இது செல்லாது செல்லாது....


  //ஏதோ சாதித்தது போல தனக்கே உரிய சிரிப்புடன் இருந்தார்.//

  நன்றிப்பா.... ;)


  //"கள்ள மாங்காய் ஆயப்போய் முள்ளுக்கம்பி கிழித்தாலும் நாங்க மாட்டியதில்லை" என்று வீரபாண்டியக்கட்டபொம்மன் ஸ்டையிலில் வசனம்பேசி, //

  வீரபாண்டிய கட்டப்பொம்மன் எங்க மாங்காய் களவெடுக்கிறதப் பற்றி வசனம் பேசினார்? அதுவும், உப்பிடிக் கேவலமான வசனம் எப்ப பேசினார்?  //இவர் பேசிய வீரவசனத்தைப்பார்த்த உண்மையென்று நம்பிய நம்ம பதிவர்கள் //

  நாங்கள் எங்க நம்பினம்?
  வந்தியண்ணர மாட்டிவிடத்தான் இந்தத்திட்டம். நீ திருகோணமலையில இருந்து வாறதுக்குப் பிந்தினபடியா முழுத்திட்டமும் உனக்கு விளங்கேல...


  //அட வேற எங்கே நம்ம லோசன் அண்ணா வீட்டுக்குத்தான்//

  வீட்டுக்கா அல்லது மாமரத்தடிக்கா?
  அதுசரி, எந்த ஊரில தொடர்மாடிக்குள்ள மாமரம் வளருது?
  திருகோணமலையில அப்பிடியோ?


  //நல்லூர்க்கந்தா உனக்கு கோபியின் கணக்கில தேங்காய் உடைக்கிறன் மாங்காய் பறிக்க IDEA குடு என்று பாலா அண்ணா சாமிகும்பிடத்தொடங்க//

  படுபாவி பாலா அண்ணா....
  நானே சிங்கிள் 'ரீ' கு வழியில்லாமத் திரியிறன், இதுக்குள்ள தேங்காய் உடைக்கிறதா?
  வேண்டுதல் கான்சல்....


  //கோபியைப் பார்க்க "எல்லோரும் என்னைத்தூக்குங்கள் நான் பறிக்கிறேன் என்றார்//

  ஹி ஹி....
  நல்ல திட்டம் தான்....


  //ஏறியவர் எதையோ பார்த்து பயந்து தொபுக்கடீர் என்று கீழே விழுந்தார், உடனே வைத்தியர் பாலா அண்ணா தனக்குத்தெரிந்த ஏதோ வைத்தியமெல்லாம் செய்து அவரை எழுப்பி என்ன நடந்தது என்று கேட்க, குதிரை..குதிரை... என்று பிதற்றினார், என்னடா என்று உள்ளே மெதுவாக எட்டிப்பார்த்த சுபாங்கன் அண்ணா அங்கே குதிரை சைசில் ஒரு நாய் இருப்பதைக்கண்டு//

  ஹி ஹி....
  குதிரையா?
  நான் நினச்சன் யாரும் நீல நிற சுடிதாரோட நிண்டிச்சினமோ எண்டு...
  வைத்தியர் பாலாவா கொக்கா...
  கலக்கிவிட்டார்....


  //உடனடியாக FAN ஒரு வேண்டும் காற்றலையில் மாங்காய் பறிப்போம் என்று தனது மொக்கை IDEAவைக்கூற//

  உந்த மனுசன் எப்பயும் இப்பிடித்தான்....


  //அடுத்து கோபி அண்ணா பின்னவீனத்துவக்கவி ஆதிரை அண்ணாவுக்கு அழைப்பெடுத்து IDEA கேட்க, தான் தற்போது ஜெயம் படம் பார்த்துக்கொண்டிருப்பதாக்கூறிவிட்டு படக் எனக்கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்//

  அவரெப்ப உப்பிடி ஆனார்?
  எண்டாலும் கொஞ்சநளா புரியாத மாழியில ஏதோ எழுதிறார்....
  ஜெயம் படமா?
  ஆதிரை அண்ணா வந்து ஜெயம் படம் பார்த்ததற்கான விளக்கத்தை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்....


  //உள்ளே வந்தியண்ணாவைத்தான் இறக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.//

  சிங்கப்பூர் மாப்பிள்ளைக்கு வந்த சோதனையா இது?
  ஐயோ பாவம்.....


  //கோபிதான் கயிற்றை பிடித்திருந்தவர் //

  அது... முக்கிய ஆளே நான்தான் பாத்தியளோ?
  இதுக்குத்தான் வல்லவன் வாழ்வான் எண்டுறது....

  // வந்தியண்ணா நீலமே உருவாகி நிற்க அதைப்பார்த்த புல்லட் அண்ணா நீலம்..நீலம்.. //

  நீலம் நீலம்.... திரும்பவும் நீலமா....


  //மது என்னைக்காப்பாத்து என்று வந்தியண்ணா கெளபாய் மது அண்ணாவின் வீட்டை நோக்கி ஓட//

  அடேய்.... மது அண்ணா பிழையா நினச்சு 'வன்புணர்வு வன்புணர்வு' எண்டு கத்தி ஊரக்கூப்பிட்டு 'real men don't rape' எண்டு வசனமெல்லாம் கதைப்பார்...
  வேற ஆளிற்ற போகச்சொல்லு....


  //மாங்காய் பெட்டியுடன் ஓடிய சுபா அண்ணாவை கோபி துரத்திக்கொண்டு ஓட//

  ஓட வெள்ளவத்தையில் பூகம்பம், சுனாமி எல்லாம் வந்து தொலைக்க...


  //பின்குறிப்பு - இது முழுக்க முழுக்க மொக்கைக்காக எழுதப்பட்டது//

  ஓமோம் தம்பி...இப்பவே சொல்லிற்றன்... என்ர அடுத்த பதிவில ஆப்பு உனக்குத்தான்....

 1. Subankan Says:

  அடேய், அடேய் அடங்குடா

  //அனைவரையும் தன்மடியில் வைத்துக்கொண்ட கோபி //

  ஆமாமா, ரொம்ப கன்பரபிளா இருந்தது

  //ஏதோ சாதித்தது போல தனக்கே உரிய சிரிப்புடன் இருந்தார்.//

  அவனுக்கு கூடவே பிறந்தது, என்னிக்கும் போகாது

  //கோபியைப் பார்க்க "எல்லோரும் என்னைத்தூக்குங்கள் நான் பறிக்கிறேன் என்றார்//

  நடக்கிற காரியமா ஏதாவது சொல்லுப்பா

  //ஏறியவர் எதையோ பார்த்து பயந்து தொபுக்கடீர் என்று கீழே விழுந்தார், உடனே வைத்தியர் பாலா அண்ணா தனக்குத்தெரிந்த ஏதோ வைத்தியமெல்லாம் செய்து அவரை எழுப்பி என்ன நடந்தது என்று கேட்க, குதிரை..குதிரை... என்று பிதற்றினார், என்னடா என்று உள்ளே மெதுவாக எட்டிப்பார்த்த சுபாங்கன் அண்ணா அங்கே குதிரை சைசில் ஒரு நாய் இருப்பதைக்கண்டு//

  குதிரைக்குப் பயமா? அவர் பல காட்டெருமைகளையே கண்டவராச்சே

  //உள்ளே வந்தியண்ணாவைத்தான் இறக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.//

  பிளைட்டில பறக்கிறமாதிரி போயிருப்பாரே

  // வந்தியண்ணா நீலமே உருவாகி நிற்க அதைப்பார்த்த புல்லட் அண்ணா நீலம்..நீலம்.. //

  நீலமாஆஆஆ

  //மது என்னைக்காப்பாத்து என்று வந்தியண்ணா கெளபாய் மது அண்ணாவின் வீட்டை நோக்கி ஓட//

  ஓட அவர் நாலு பதிவை வச்சு விளங்கப்படுத்தியிருப்பாரே

  //பின்குறிப்பு - இது முழுக்க முழுக்க மொக்கைக்காக எழுதப்பட்டது//


  அப்படியா? அப்பச்சரி

 1. பழிவாங்கலா...

  ##யாழ்ப்பாணத்திலிருந்து சிறகடித்துப்பறந்து வந்த பாலா அண்ணா ##

  நான் எங்க வந்தன் நான்தான் யாழ்ப்பாணதை சுத்திக்கொண்டல்லோ இருந்தன்..

  ##"கள்ள மாங்காய் ஆயப்போய் முள்ளுக்கம்பி கிழித்தாலும் நாங்க மாட்டியதில்லை" ##

  எனகெல்லாம் முள்ளுக்கம்ப்பி ஒரு கயிறு மாதிரி ஒரு நாளும் கிளிச்சதே இல்ல..

  ##அட இவர் பேசிய வீரவசனத்தைப்பார்த்த உண்மையென்று நம்பிய நம்ம பதிவர்கள்##
  என்ன பவன் உணமையென்று நம்பிய.. என்றால் வந்தியண்ணா சொன்னது பொய்யா அவர்தான் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஆச்சே

  ##நம்ம லோசன் அண்ணா வீட்டுக்குத்தான்##

  கொழும்பிலயே... உங்க மாமரம் வற நிக்குதோ.. என்ன கதை உது உங்க ஒண்ணு ரெண்ணு புல்லு நிண்டாலே பெரிய விசயம்...

  ##கோபியின் கணக்கில தேங்காய் உடைக்கிறன் மாங்காய் பறிக்க IDEA குடு##

  இது நல்லா இருக்கு..மாங்காய் தேங்காய்ன்னு...

  ##"எல்லோரும் என்னைத்தூக்குங்கள் நான் பறிக்கிறேன் என்றார்,##

  கோபிக்கு ஒரு நாளும் இப்பிடி ஒரு மொக்கை ஐடியா வந்திருக்காது இது சரிவராது ..

  ##உடனடியாக FAN ஒரு வேண்டும் காற்றலையில் மாங்காய் பறிப்போம் ##

  காற்றலையில் மல்லிகைப்பூ வேணுமுன்னா பறிக்கலாம்...சுபாங்கனும் இப்பிடி ஒரு ஐடியா குடுக்காது பவனுகு தான் இப்புடி ஐடியாக்கள் வரும் அதுதான் மாட்டுப்பட்டுது..

  ##தனது கற்பூர மூளையைப்பாவித்த வந்தியண்ணாஅவர் சொன்ன பதிலில் ஒரு IDEA இருக்கிறது, அதாவது கயிற்றில் கட்டி மாமரத்தினூடாக ஒருவரை உள்ளே இறக்குவோம்##

  மாமரத்தில தான் மாங்கா இருக்கும் அதென்ன மாமரத்தினூடாக உள்ளே இறக்குவது காகம் கொத்தி விழுந்து கிடக்கிறத பொறுக்கவோ...விளக்கம் வேணும்

  #கயிற்றில் கட்டி இறக்கப்பட்ட வந்தியண்ணா ##

  அதாவது நிலத்தில் இறக்கபட்டார் அப்படித்தானே

  ##மாங்காயைப்பறிக்க ஓட கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த வந்தியண்ணா லோசன் அண்ணா வீட்டில் துணிதுவைக்க வைத்திருந்த நீலத்தண்ணீரில் விழுந்துவிட்டு எழுப்பி வந்த வந்தியண்ணா நீலமே உருவாகி நிற்க##

  இறக்கப்பட்ட வந்தியண்ணா எப்போது தொங்கினார் ஏன் விழுந்தார்

  இவ்வளவும் காணும் மிச்சம் பேந்து பாப்பம்

 1. தம்பி எல்லாம் சரியாகத்தான் போகிறது,அந்த back கலர் தான் கண்ணாடி கேக்கும் போல.உமக்கு தான் முதல்ல மூக்கு கண்ணாடி!

 1. ந்ல்ல மொக்கை - மாங்கா களவாடறதுல தனி சுகம் இருக்கு

  நல்வாழ்த்துகள்

 1. மாங்காய் திருடுவதை விட திருடிய மாங்காயை குத்திச் சாப்பிடுவது இன்னும் இனிமையான அனுபவம்

 1. Unknown Says:

  // வந்தியத்தேவன் said...
  மாங்காய் திருடுவதை விட திருடிய மாங்காயை குத்திச் சாப்பிடுவது இன்னும் இனிமையான அனுபவம் //

  நான் அடிக்கடி சொல்லிவந்தது உண்மையாகீற்று...
  வந்தியண்ணா form ஐ இழந்து தடுமாறுகிறார்...
  இப்போதெல்லாம் வந்தியண்ணா சீரியஸாக பின்னூட்டுகிறார்....

 1. Bavan Says:

  /// கனககோபி said... தம்பி.... கோபி கிருலப்பனையில் இருப்பவன்.... அவனுக்கென்ன வலியா கொட்டாஞ்சேனைக்குப் போய் திரும்ப இங்க வர?///

  அண்ணே அதுதான் PLAN ok..:p

  /////அனைவரையும் தன்மடியில் வைத்துக்கொண்ட கோபி //

  என்ன்ன்ன்ன்ன்ன்ன்னானானானானானதுதுதுதுது?///

  இல்லையா பின்ன?

  ///நம்பக்கூடிய விசயமா இது?
  தனியப் போகேக்கயே அவனவன் ஒண்டரை ரிக்கெற் கேக்கிறான், இதுக்குள்ள புல்லட் அண்ணா போன்ற ஜிம் பொடிகளையும், பவன், சுபா அண்ணா போன்ற பயற்றங்காய்களையும், வந்தியண்ணா போன்ற சிங்கப்பூர் காரர்களையும், பாலா அண்ணா போன்ற ஸ்கூட்டிக்குப் பின்னால் போய் கடிவாங்கியவர்களையும் வைத்துக்கொண்டு ஒரு ரிக்கெற் இல்ல ஒரு பஸ் முழுக்க ரிக்கெற் எடுக்கோணும்....
  இது செல்லாது செல்லாது....///

  இதற்கு சுபாங்கன் அண்ணாவின் பதில் சாட்சி..(ஆமாமா, ரொம்ப கன்பரபிளா இருந்தது)

  ///வீரபாண்டிய கட்டப்பொம்மன் எங்க மாங்காய் களவெடுக்கிறதப் பற்றி வசனம் பேசினார்? அதுவும், உப்பிடிக் கேவலமான வசனம் எப்ப பேசினார்?//

  அது பழையகதை உங்களுக்கு தெரியாது.:p

  ///நாங்கள் எங்க நம்பினம்?
  வந்தியண்ணர மாட்டிவிடத்தான் இந்தத்திட்டம். நீ திருகோணமலையில இருந்து வாறதுக்குப் பிந்தினபடியா முழுத்திட்டமும் உனக்கு விளங்கேல///

  வந்தியண்ணாட மனத்திருப்திக்குத்தான் அப்படிச்சொன்னன், நீங்கவேற..

  ///வீட்டுக்கா அல்லது மாமரத்தடிக்கா?
  அதுசரி, எந்த ஊரில தொடர்மாடிக்குள்ள மாமரம் வளருது?
  திருகோணமலையில அப்பிடியோ?///

  அதுசரி கயித்த விட்டுட்டு சுபாங்கன் அண்ணாவ துரத்தினா போன இடம் ஞாபகம் இருக்கவா போகுது,

  அதுசரி மாங்காயோட வந்த சுபா அண்ணா ஏன் தொடர்மாடிக்குப்போனவர்?

  ///நல்ல திட்டம் தான்....///

  என்னாதுதுதுது?

  ///அது... முக்கிய ஆளே நான்தான் பாத்தியளோ?///

  அடிங்.. வந்தியண்ணாவ தொபுக்கடீரெண்டு விழவிட்டுட்டு ஓடினது யாரு?

  ///ஓமோம் தம்பி...இப்பவே சொல்லிற்றன்... என்ர அடுத்த பதிவில ஆப்பு உனக்குத்தான்....///

  என்னாது?
  இதுக்குமேலயும் ஆப்புத்தேவையா?

 1. Bavan Says:

  // Subankan said..
  பிளைட்டில பறக்கிறமாதிரி போயிருப்பாரே//

  ஹீஹீ...

  //ஓட அவர் நாலு பதிவை வச்சு விளங்கப்படுத்தியிருப்பாரே//

  வந்தியண்ணாக்குத்தான் தெரியும், கயித்தக்கட்டி இறங்கினதவிட இது பெரிய ரிஸ்க்கா?

 1. Bavan Says:

  ///எனகெல்லாம் முள்ளுக்கம்ப்பி ஒரு கயிறு மாதிரி ஒரு நாளும் கிளிச்சதே இல்ல..///

  அப்ப அடுத்த மாங்காய் மாஸ்டர் நீங்கதான்..:p

  ///கொழும்பிலயே... உங்க மாமரம் வற நிக்குதோ.. என்ன கதை உது உங்க ஒண்ணு ரெண்ணு புல்லு நிண்டாலே பெரிய விசயம்...///

  எனக்கு என்னஅண்ணே தெரியும் வந்தியண்ணதான் கூட்டிக்கொண்டு போனவர்...

  ///மாமரத்தில தான் மாங்கா இருக்கும் அதென்ன மாமரத்தினூடாக உள்ளே இறக்குவது காகம் கொத்தி விழுந்து கிடக்கிறத பொறுக்கவோ...விளக்கம் வேணும் ///

  மாமரத்தின் உச்சிக்கொப்பினூடாக...இப்ப விளங்குதா?

  ///இவ்வளவும் காணும் மிச்சம் பேந்து பாப்பம்///

  இன்னாதுது? அவ்வ்..

 1. Bavan Says:

  /// S.M.S.ரமேஷ் said...
  தம்பி எல்லாம் சரியாகத்தான் போகிறது,அந்த back கலர் தான் கண்ணாடி கேக்கும் போல.உமக்கு தான் முதல்ல மூக்கு கண்ணாடி///

  மாத்தத்தாண்ணே ட்ரை பண்ணுரன் சீக்கிரம் மாத்திருவன்..;)

 1. Bavan Says:

  /// cheena (சீனா) said...
  ந்ல்ல மொக்கை - மாங்கா களவாடறதுல தனி சுகம் இருக்கு

  நல்வாழ்த்துகள்///

  நன்றி..;)

 1. Bavan Says:

  /// வந்தியத்தேவன் said...
  மாங்காய் திருடுவதை விட திருடிய மாங்காயை குத்திச் சாப்பிடுவது இன்னும் இனிமையான அனுபவம்///

  நீங்கதானே வந்தி அண்ணா எனப்படும் வந்தியதேவன்..

  அவ்வ்...:P

 1. Bavan Says:

  //// கனககோபி said...
  வந்தியண்ணா form ஐ இழந்து தடுமாறுகிறார்...
  இப்போதெல்லாம் வந்தியண்ணா சீரியஸாக பின்னூட்டுகிறார்.////

  ஆமாம்..ஆமாம்..

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்