Related Posts with Thumbnails

அன்றுதான் அவளை முதலில் பார்த்தேன், என் நண்பனுடன்தான் வந்தாள். பார்த்ததுமே எவ்வளவு அழகாக இருந்தாள் தெரியுமா. ஒரு விரல்தான் அவள்மீது பட்டது. அப்பப்பா என்ன ஒரு புன்னகை, கோடி விண்மீன்கள் கொட்டியது போல இருந்தது. என்னால் இன்னும் அந்த நாளை மறக்க முடியவில்லை.


அவளைப்பற்றி இன்னும் கூறிமுடிக்கவில்லை. அன்று ஒருநாள் அவளை என் கைகளால் தூக்கிக்கொண்டு நடந்து வருகிறேன். கால்கள் லேசாகத்தடக்க என் கையிலிருந்து விடுபட்ட அவள் காலணிகள் கழன்றுவிழ கீழே விழுந்துவிட்டாள். ஐயோ நான் பயந்துவிட்டேன், அவள் ஒன்றுமே நடக்காதது போல சிரித்தபடி மீண்டும் என்கைகளுக்குள் ஏறிக்கொண்டாள். இப்படி எத்தனையோ தடவைகள் விழுந்திருப்போம் ஆனால் அவள் ஒருநாளும் அழுததில்லை, என்னுடன் கோபித்ததும் இல்லை.


தினமும் என்னுடன்தான் வருவாள்.என்னுடன் விடாமல் கதைபேசுவாள், சைகை மொழியிலும் உரையாடுவாள், வகுப்பில் நானிருக்கும் போது கூட மெளன மொழியில் குசுகுசுப்பாள். அவளுடன் வாழ்ந்த நாட்கள் அது ஒரு பொற்காலம். மூன்று வருடங்கள் என்னை தனக்குள் கட்டிப்போட்டவள் அவள். என்ன தேவையென்றாலும் உடனே எனக்காக அனைத்தையும் செய்து முடிக்கும் கெட்டிக்காரி. அவளுக்கு ஓய்வே இருந்ததில்லை, எனக்கும்தான்.


அவள் நான் யாருடன் கதைத்தாலும் கண்டுபிடித்து விடுவாள், சிலவேளைகளில் கோபிப்பாள், யாருடனும் கதைக்கக்கூட விடமாட்டாள். கடைக்கு கூட்டிக்கொண்டு போய் அவள் விரும்பியதை வாங்கிக்கொடுத்தால்தான் அவள் கோபம் அடங்கும். இதெல்லாம் ஒரு அன்பில்தானே செய்கிறாள்.


திடீரென்று ஒருநாள் என்ன நடந்ததோ தெரியவில்லை. என்னுடன் பேசமறுத்தாள், ஏன் கண்களைக்கூடத்திறக்கவில்லை. ஐயோ பதறிப்போனேன் நான், உடனடியாக வைத்தியரிடம் சென்றேன், அவரும் பரிசோதித்து விட்டு உடனே அட்மிட் செய்யுங்கள் என்றார். அவள் உயிர் பிழைத்தால் போதுமென்று உடனடியாக அட்மிட் செய்தேன். ஒரு வாரம், பத்துநாள், ஒரு மாதம்.. ஆம் அவளுக்கு குணமானது.வைத்தியருக்கு நன்றி சொல்லி அழைத்து வந்தேன் அவளை. ஆனால் அவள் அதன் பின்னர் ஒரு ஆண்டுமட்டுமே என்னுடன் வாழ்ந்தாள். அதன் பின் இறந்துவிட்டாள். இன்றுடன் அவள் என்னிடம் வந்து நான்கு ஆண்டுகளாகிறது.


எத்தனை நாட்கள், மணித்தியாலங்கள் என்னை உங்களுடன் கதைக்க வைத்திருப்பாள், என் அழகிய சொனி எரிக்சன் K310i.மூன்றாண்டுகள் என்னுடன் என்னைவிட்டுப்பிரியாமல் வாழ்ந்த அவள் இன்று உயிருடன் இல்லை அவளை மறக்க முடியுமா.....ஹீஹீ

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. lol....

  தலைப்பைப் பார்த்ததும் நினைச்சன்...
  உனக்கு தைரியமில்லடா நீ உண்மையா வாழ்ந்ததுகள சொல்றதுக்கு..... :P

  ஹி ஹி....

  #பின்னூட்டத்தில் வந்து ஆப்படிப்போர் சங்கம்....

 1. This comment has been removed by the author.
 1. naan koja nerathula una thapa ninaichutan...2nd para vasikum vachicha piragu than ada nama paiyal 4na pathi eluthuran endu kandu pidichan.......lolzzzzzz..........

  super da.......superv.........
  nalla katpanai valam.........
  keep it up.....
  bt avaluku vidivu kalam vanthu iruku lolzzzzzzzz

 1. Very Interesting...Super....

 1. Ramesh Says:

  2வது பந்தி வாசிக்கும்போதே ஊகித்துவிட்டன் ஹிஹிஹி
  ஆனாலும் நல்லா இருக்கு

 1. கோபி சொன்னது போலவே தலைப்ப பாத்துமே எனக்கு தெரியும் இது பீலான்னு ... .

  நானும் இணைந்து விட்டேன்

  #பின்னூட்டத்தில் வந்து ஆப்படிப்போர் சங்கம்..

 1. Subankan Says:

  ஆமாம் பவன், இரண்டாவது பந்தியில் பிடிகொடுத்துவிட்டீர்கள்

  :)

 1. பவன் உண்மையை சொல்ல்வதுக்கு இப்படியும் ஒரு வழி இருக்கு போல....

  நல்ல முயற்சி நண்பா!! ஆனால் நீ 2ம் பந்தியில் பிடிகொடுத்ததுதான் வருத்தமாக உள்ளது..

  வல்ல்துக்கள் நண்பா!!!

 1. Anonymous Says:

  Please remove the third boy's photo from your header.
  the symbol of நடுவிரல் காட்டுவது = FUCK YOU

 1. என்னா பில்டப்பு:))

 1. Jay Says:

  அடப் பாவி ஹி..ஹி.. இப்படி யொரு மொக்கையா இறுதியில..!

 1. Unknown Says:

  பிரியமுடன் வசந்தின் பதிவைப் படிப்பது போல இருந்தது..

  நல்ல பில்டப்பு.. நல்ல ஆப்பு..

  :)

 1. அவளுடன் உங்களுக்கு ரொம்பவும் ஈடுபாடு நீங் கள் அவளை ரொம்பவும்மிஸ். பண்ணுகிறீர்கள். ஒன்று போனால் இன்னொன்று வாங்கலாம் தானே. ஹீ ஹீ.ஹீ.........நன்றாய் இருக்கு.

 1. என்ர அவளும் போன வருசம் தான் ஓடிப்போனவள்.... (sony eriction w800 )

 1. Bavan Says:

  கனககோபி அண்ணே,

  //உனக்கு தைரியமில்லடா நீ உண்மையா வாழ்ந்ததுகள சொல்றதுக்கு..... :P//

  என்னாதுது? வாழ்ந்தனா?

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  chchana,

  //avaluku vidivu kalam vanthu iruku//

  ஹீஹீ
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  *****
  Sangkavi

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  றமேஸ்

  //2வது பந்தி வாசிக்கும்போதே ஊகித்துவிட்டன் ஹிஹிஹி
  ஆனாலும் நல்லா இருக்கு//

  நன்றி றமேஸ் வருகைக்கும் கருத்துக்கும் இனி எழுதுபவற்றை கடைசியில்தான் கண்டுபிடிப்பீங்க...lol

 1. Bavan Says:

  பாலா அண்ணே,

  //கோபி சொன்னது போலவே தலைப்ப பாத்துமே எனக்கு தெரியும் இது பீலான்னு//

  நமக்குத்தான் காதல், இழவு அப்பிடி, இப்படி ஒண்ணுமே இல்லையே, பிறகு எப்படி வரும்..ஹீஹி

  //நானும் இணைந்து விட்டேன்

  #பின்னூட்டத்தில் வந்து ஆப்படிப்போர் சங்கம்.//

  ரொம்ப முக்கியம், அடிக்கிற ஆப்பு காணாது எண்டு சங்கம் வேறயா? முடியல..அவ்வ்வ்

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  சுபா அண்ணா,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும், அடுத்தமுறை பிடிபடாமல் எழுத முயற்சிக்கிறேன்..ஹீஹீ

  *****

  அனுதினன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்,
  நீங்கெல்லாம் ரொம்ப அறிவாளிகளா இருக்கீங்க, ஈசியாக்கண்டு பிடிச்சுட்டீங்களே..lol

 1. Bavan Says:

  வானம்பாடிகள்

  //என்னா பில்டப்பு:))//

  ஹிஹீ... நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  மயூரேசன்,

  //அடப் பாவி ஹி..ஹி.. இப்படி யொரு மொக்கையா இறுதியில.//

  ஹீஹீ
  நன்றி அண்ணா, வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  முகிலன்,

  //பிரியமுடன் வசந்தின் பதிவைப் படிப்பது போல இருந்தது..//

  இல்லை.. இல்லை.. இது பவனின் பதிவு..:p

  //நல்ல பில்டப்பு.. நல்ல ஆப்பு..
  :)//

  நன்றி சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Bavan Says:

  நிலாமதி

  //அவளுடன் உங்களுக்கு ரொம்பவும் ஈடுபாடு நீங்கள் அவளை ரொம்பவும்மிஸ். பண்ணுகிறீர்கள்//

  ஆமாம், ஆமாம்..:p

  //ஒன்று போனால் இன்னொன்று வாங்கலாம் தானே. ஹீ ஹீ.ஹீ.........//

  என்னது? இன்னொன்றா நெவர், அப்பிடி சொல்ல மாட்டன்...lol

  //நன்றாய் இருக்கு//

  நன்றி நிலாமதி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  இலங்கன்,

  //என்ர அவளும் போன வருசம் தான் ஓடிப்போனவள்.... (sony eriction w800 )//

  ஹீஹீ... நிலாமதி கூறியது போல, கவலைப்படாதீங்க ஒன்று போனால் இன்னொன்று...lol

  நன்றி இலங்கன் வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. nice!!!!!!!!!!!!

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்