Related Posts with Thumbnails
நாம் எத்தனையோ விளையாடுக்கள் சின்ன வயதிலிருந்து விளையாடியிருப்போம். ஆனால் இலங்கையைப்பொறுத்தவரையில் சின்னவயதிலேயே இலங்கையின் உலகக்கிண்ண வெற்றியைப்பார்த்து வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அநேகமான கிறிக்கற் பைத்தியங்கள் போல நானும் ஒரு கிறிக்கற் பைத்தியம். கிறிக்கற்தான் எனது ஆரம்பகாலம் முதல் இன்று வரையிலான விளையாட்டு.


நான் கொழும்பில்தான் கிறிக்கற்ரை விளையாட ஆரம்பித்தேன், எனது பிட்ச் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இரு சுவர்களுக்கிடையே ஒரு 7, 7.5 அடி இருக்கும். விளையாடுபவ்களின் எண்ணிக்கை - 1 (நான் மட்டும்தான்).


பந்தை சுவருக்கு எறிவதும் அது திரும்பி வருவதற்குள்எறிந்த கை சீக்கிரமாக BATஐ பிடிக்க வேண்டும், பிடித்த மாத்திரத்தில் பந்து வந்துவிடும் அதை அடிக்க வேண்டும். என்ன ஒரு கலை அதுவும் பயிற்சியில் நேரம் செல்லச்செல்ல பந்து எறியும் வேகம், நாம் அடிக்கும் வேகம் ஆகியன அதிகரித்துக்கொண்டே போகும். முதல்நாள் பார்த்த போட்டியின் ஸ்கோர் அடிக்க வேண்டிய ஓவர் பந்து வீச்சாளர் பெயர் என்பவற்றையும் மனது கணக்குப்போட்டுக்கொண்டிருக்கும்.


இப்படி ஒரு நாள் மாலை கடைசிப்பந்துக்கு ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, மின்னொளியில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடித்த அடியில் அது ஆறு ஓட்டமா இல்லையா எண்டது வேறு கதை நான் ஒரே ஓட்டம் மேல்மாடிக்கு. ஆம் அடித்த அடியில் எதிரே உள்ள சுவரில் பட்ட பந்து நியூட்டனின் மூன்றாம் விதியுடன் திரும்ப வந்து என் தலைக்கு மே லே ஒளிர்ந்து கொண்டிருந்த டியூப் லைட்டைத் தாக்கியது. எனக்கு ஏதோ பூமாரிப்பொழிந்தது போல இருந்தது.ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பயத்தில் அடியேன் எஸ்கேப். இங்கு எல்லாருக்கும் போல எனக்கும் விதிதான் விளையாடியது. (நியூட்டனின் 3ஆம் விதி..ஹிஹி)


அன்றுமுதல் இடம் மாற்றப்பட்டது. அடுத்த பிட்ச் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு அடி அகலம், உண்மையான் பிட்களின் அளவில் கால்வாசி அளவு வரும், இது வழக்கமாக பந்து வீச்சுப்பயிற்சிக்கு நான் பயன்படுத்தும் இடம், நியூட்டனின் சியால் இங்கு BATTINGகும் மாற்றப்பட்டது. இங்கும் விதி விளையாடியது (நியூட்டனல்ல) அது கொழும்பில் மின்வெட்டுக்காலம். எனவே எரிந்த சிமிலியை கழுவி எனது சிக்ஸ் எல்லையில் இருந்த ஒரு மேசையில் காயவைத்திருந்தார்கள். ஆனால் அன்று ஜயசூரிய நிலைத்து நின்று ஆடும் ஆட்டம். எனவே அதிகமாக சிக்ஸர்கள் அடிக்கவேண்டும் அப்படி அடித்து ஒரு அரைச்சதமும் போட்டாச்சு, அடுத்து அடித்த அடியில் "கிளிங் கொழுங் கிங்" என்று ஒரு சத்தம். என்னடா சத்தம்? ஏதோ உடைந்து விட்டது என்று மட்டும் தெரிந்தது. ஓடிப்போய்ப்பார்த்தால் கழுவிவைத்த சிமிலி சுக்குநூறாகக்கிடந்தது.


******


நான் கொழும்பில் படிக்கும் போது விடுமுறைக்க திருமலைக்கு வருவது வழக்கம். அப்போது ஒரு சமயம் எனது மச்சானும் திருமலைக்கு வந்திருந்தார். அங்கு பரந்து விரிந்த இடம் இருக்கும். கிறிக்கற், புட்பால் என எல்லாம் விளையாடலாம். அப்படித்தான் ஒரு நாள் கிறிக்கற் அது இது என்று விளையாடிக்களைத்து, புதிய விளையாட்டுத் தேடிய நேரம், மச்சான் சொன்னான் டேய் கிணறு கிண்டி விளையாடலாம் என்றான். சரியென்று ஓர் இடத்தில் கிண்டத் தொடங்கினோம். ஆனால் அந்த இடத்தில் வெயிலில் இருந்து கிணறு கிண்டியதைப் பார்த்து போய் நிழல்ல இருந்து விளையாடுங்கடா என்று அதட்டல் கேட்டது. சரியென, இடத்தை மாற்றி வீட்டுக்கருகில் ஒரு இடத்தில் கிண்டத்தொடங்கினோம்.


ஆனால் அங்கு கிண்டுவது கடினமாக இருந்ததால். கிண்டுவதற்கு ஆயுதம் தேட, கண்ணில் ஒரு அலவாங்கு பட்டது. அதை எடுத்து ஒரு குத்துதடதான் குத்தினேன். மெதுமெதுவாக தண்ணி வர ஆரம்பித்தது. ஆஹா... ஆஹா.. ஊற்று வருகிறது, ஊற்று வருகிறது. என்று கத்தியபடி இருவரும். பெரியவர்களிடம் எதையோ சாதித்தது போல ஓட, ஓடி வந்து பார்த்தவர்கள் தண்ணி பைப் உடைந்துதான் தண்ணீர் வருகிறது எண்ட விடயம் அதுக்குப்பிறகுதான் எங்கள் கூர்மையான புத்திக்கு எட்டியது. இப்படி எங்களின் தீராத விளையாட்டுக்கள் ஏராளம்.

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. //ஆஹா.. ஊற்று வருகிறது, ஊற்று வருகிறது. //

  நீயுமா?
  எங்கள் வீட்டிலும் இது நடந்ததாம்.
  அக்கா நீர்க் குழாயை உடைத்துவிட்டு தண்ணீர் வர புதுமை புதுமை என்று கத்தியதாம்.

  அதுசரி,
  அடப்படுபாவி மக்கா...
  சனத் ஜெயசூரியா தன்ர கிறிக்கற் அனுபவத்தச் சொல்ற மாதிரி என்னா பில்ட் அப். (பில்ட் அப் இற்கு தமிழ் கண்டுபிடிக்கோணும்)


  //உலகக்கிண்ண வெற்றியைப்பார்த்து வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அநேகமான கிறிக்கற் பைத்தியங்கள் போல //
  தலைவா... உண்மையைச் சொன்னால் நானந்த வெற்றியைப் பார்க்கவே இல்லை.
  ஆனால் எப்படியோ கிறிக்கற் மீது ஒரு காதல்.

  நடக்கட்டும் நடக்கட்டும்...

  அனுபவங்களை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறாய்...
  வாழ்த்துக்கள்..

 1. Subankan Says:

  //சின்னவயதிலேயே இலங்கையின் உலகக்கிண்ண வெற்றியைப்பார்த்து வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ//

  பொய் பொய். உலக்ககிண்ண வெற்றி பெற்ற சமயம் உனக்கு 6 வயசுடா. அப்ப நீ கிரிக்கெட் பாத்தனியா? வீட்டில இருக்கிற மற்றவயின்ட கிரிக்கெட் ஆர்வத்துக்கு இது சாத்தியமே இல்லையே :P

  மற்றதெல்லாம் உண்மை என இத்தால் உறுதிப்படுதுகிறேன் :)

 1. //பொய் பொய். உலக்ககிண்ண வெற்றி பெற்ற சமயம் உனக்கு 6 வயசுடா. அப்ப நீ கிரிக்கெட் பாத்தனியா?//

  அதத் தான் நானும் யோசிச்சன்...
  நான் சின்னப் பெடியன் எண்டபடியாத்தானே பாக்கேல...
  பிறகு யோசிச்சக் பிஞ்சிலயே பழுத்தவனா இருப்பானோ என்னவோ எண்டு.
  எனக்கு பவன விட ஒரு வயசு தானே குறைவு...

 1. //இப்படி எங்களின் தீராத விளையாட்டுக்கள் ஏராளம்.//

  தீராத விளையாட்டுப் பிள்ளை என்று சொல்கிறீர்கள்

 1. மச்சான் அப்ப எல்லாருக்கும் இப்படி கிரிக்கெட் விளையாடி அனுபவம் இருக்கா??? ஒரு வேளை நான் மட்டும்தான் எக்குதப்பா விளையாடிடனோ??/ எண்டு யோசிப்பான்... அப்ப இனி பரிசினை இல்ல...

  ஆனாலும் உலககிண்ணத்த பார்த்து வெறி வந்து எண்டது ஓவர்தான் ஆனாலும் உனக்குள்ள ஒரு வெறி இருக்கிறது உண்மைதான் மச்சான்

 1. ரசித்தேன்..
  நானும் வீட்டுக்குள்ளேயே இவ்வாறு கிரிக்கெட் பயிற்சி எடுத்து லைட்டுகள்,கண்ணாடிகள் அடிக்கடி உடைத்து வாங்கிக்கட்டியவன் தான்.. ;)
  அந்த நஷ்டத்தை ஈடுகட்ட இலங்கை அணிக்குள் நுழையலாம் என்று பார்த்தால் விதி விடவில்லையே..

 1. நானும் வீட்டுக்குள் கிரிக்கட் ஆடி வெற்றிகரமாக எங்கள் வீட்டு மின் மானியை அடித்து நொருக்கியிருக்கிறேன்.

  பின்னர் வீட்டார் இலங்கை மின்சார சபைக்கு தண்டப்பணம் கட்டி மீண்டும் மின்சாரத்தை கொண்டு வந்தார்கள்..

  ம்ம் அது ஒரு அழகிய காலம்..

 1. Bavan Says:

  கன்கொன் அண்ணா,
  //நீயுமா?//

  ஹாஹா கொழும்பில் மண்நிலத்தை பார்ப்பதே கஷ்டம், அதனால் தான் திருமலை வந்ததும் ஒரு உசாரில அலவாங்கால கிண்டினன்..ஹிஹி

  //சனத் ஜெயசூரியா தன்ர கிறிக்கற் அனுபவத்தச் சொல்ற மாதிரி என்னா பில்ட் அப். (பில்ட் அப் இற்கு தமிழ் கண்டுபிடிக்கோணும்)//

  ஹாஹா நம்மளால முடிஞ்சது...நான் பெரிய கிறிக்கட் வீரராகியிருந்தா இது பெரிய சரித்திரமாகியிருக்குமோ..:p

  //தலைவா... உண்மையைச் சொன்னால் நானந்த வெற்றியைப் பார்க்கவே இல்லை.//

  நானும் பார்த்ததாக ஞாபகம் இல்லை ஆனால் போட்டி பார்க்கும் போது எனது மாமாக்களுடன் இலங்கைக்காக சண்டை போட்டிருக்கிறேன்..;)

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


  *****

  சுபா அண்ணா,

  //பொய் பொய். உலக்ககிண்ண வெற்றி பெற்ற சமயம் உனக்கு 6 வயசுடா. அப்ப நீ கிரிக்கெட் பாத்தனியா? வீட்டில இருக்கிற மற்றவயின்ட கிரிக்கெட் ஆர்வத்துக்கு இது சாத்தியமே இல்லையே :P//

  உண்மை உண்மை... உலகக்கிண்ண நேரத்தில் பெப்சி கார்ட் சேர்த்திருக்கிறேன், ஏன் ரிங் பாட்டிலில் கூட கிறிக்கட் படங்கள்தான் சுருக்கமாக சொன்னால் நானொரு கிறிக்கட் பைத்தியம் அண்ணா..யார் யார் விளையாடினார்கள் என்று தெரியாவிட்டாலும் கிறிக்கட் பார்த்திருக்கிறேன்:p

  //மற்றதெல்லாம் உண்மை என இத்தால் உறுதிப்படுதுகிறேன் :)//

  நன்றி.. நன்றி..;)

  நன்றி அண்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)


  *****

  தர்ஷன்,

  //தீராத விளையாட்டுப் பிள்ளை என்று சொல்கிறீர்கள்//

  LOL..நன்றி இண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Bavan Says:

  அனுதினன்,

  //மச்சான் அப்ப எல்லாருக்கும் இப்படி கிரிக்கெட் விளையாடி அனுபவம் இருக்கா??? ஒரு வேளை நான் மட்டும்தான் எக்குதப்பா விளையாடிடனோ??/ எண்டு யோசிப்பான்... அப்ப இனி பரிசினை இல்ல...//

  ஹாஹா... எல்லாரும் சச்சின் கூட விளையாடியிருப்பார்..:p

  //ஆனாலும் உலககிண்ணத்த பார்த்து வெறி வந்து எண்டது ஓவர்தான் ஆனாலும் உனக்குள்ள ஒரு வெறி இருக்கிறது உண்மைதான் மச்சான்//

  நன்றி தலைவா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  *****

  LOSHAN,

  //ரசித்தேன்..
  நானும் வீட்டுக்குள்ளேயே இவ்வாறு கிரிக்கெட் பயிற்சி எடுத்து லைட்டுகள்,கண்ணாடிகள் அடிக்கடி உடைத்து வாங்கிக்கட்டியவன் தான்.. ;)//

  அப்படியா???

  //அந்த நஷ்டத்தை ஈடுகட்ட இலங்கை அணிக்குள் நுழையலாம் என்று பார்த்தால் விதி விடவில்லையே..//

  ஹிஹி ஐயோ தாங்கமுடியலயே என்னால...:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்


  *****

  யோ அண்ணா,

  //நானும் வீட்டுக்குள் கிரிக்கட் ஆடி வெற்றிகரமாக எங்கள் வீட்டு மின் மானியை அடித்து நொருக்கியிருக்கிறேன்.//

  ஆஹா உங்கள் சிறப்பான ஆட்டத்தைப்பார்க்க கொடுத்து வைக்கவில்லையே..:p

  இந்தப்திவுமூலம் எல்லாரினதும் உள்வீட்டு ரகசியங்கள் வெளிவந்துட்டுது...:p  //பின்னர் வீட்டார் இலங்கை மின்சார சபைக்கு தண்டப்பணம் கட்டி மீண்டும் மின்சாரத்தை கொண்டு வந்தார்கள்.. //

  அப்ப உங்களுக்கு அடி விழலயா...

  //ம்ம் அது ஒரு அழகிய காலம்//

  அதே.. அதே..

  நானும் கிறிக்கட் விளையாடி சுருட்டுக்கடைக்காரியின் சுருட்டு வைத்திருந்த போத்தல் உடைந்து அவருக்கு இரத்தம் வந்து பிறகு சுருட்டுக்கடைக்காரியிடம் சமாதானம் பேசி பந்தைப் பெறுவதற்கும் போதும்போதுமென்றாகிவிட்டது.ஹிஹி

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்