Related Posts with Thumbnails

எரிந்தும் எரியாமலும்-10

பதிவிட்டவர் Bavan Thursday, February 25, 2010 7 பின்னூட்டங்கள்
மின்சார சபையும் தொழிநுட்ப முன்னேற்றமும்
நாங்கள் புதிய வீட்டுக்கு மாறி ஒருமாதம்தான் ஆகிறது. ஆனால் மாறிய முதல் தினமே வீட்டுக்காரர் அந்த வீட்டில் அதுவரை கட்டாமல் இருந்த மின்சார பில்லை கட்டி பில்லைக்கூட எங்களிடம் தந்திருந்தார். எனவே நாங்கள் வீடு மாறிய அந்த தினமே மின்சார சேவை வீட்டுக்கு வழங்கப்பட்டது.


மீண்டும் நேற்றைய தினம் திடீரென கரண்ட் போகவே ஏதோ திருத்துகிறார்கள் என்று நாங்கள் நினைத்திருக்க, வீட்டுக்கதவைத் தட்டிய மினடசார சபை ஊழியர். எங்கள் வீட்டு முகவரியை சரி பார்த்துவிட்டு உங்கள் முகவரியில் மின்சார பில் கட்டவில்லை என்பதால் மின் இணைப்பை துண்டித்து விட்டோம் என்றார். நாங்கள் எவ்வளவோ கூறியும் கேட்காத அந்த மனிதர் வீட்டுகாரரை எமது எஞ்ஜினியருடன் வந்து கதைக்க சொல்லுங்கள் என்றார்.


மின் துண்டிப்பவர் ஒருவர், மின் இணைப்பு வழங்குபவர் என்று இருப்பது வேலைப்பகிர்வுதான், ஆனால் இந்த இரண்டு பேருக்கும் ஒரு தொடாடபாடல் வசதிகூட இல்லையா அதுவும் ஒருமாதத்துக்குப்பிறகு.


****************************************************************************************


சரித்திரத்தின் சாதனை
நேற்றைய தினம் கிறிக்கற் போட்டி பார்க்காதவர்கள் கூட பார்த்திருப்பார்கள், அப்படி ஒரு ஆட்டம், நிதானம், பொறுமை, அதேவேளை அதிரடி, என்ன ஒரு ஆட்டம். நேறடறைய ஆட்டத்தின் அந்த 200வது ஓட்டத்தைக்கடந்த கணம் இன்னமும் கண்முன்னால் நிற்கிறது.


அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளில் தனிமனிதன் ஒருவர் பெற்ற அதிகஓட்டம், ஒரு மனிதன் பெற்ற அதிக பவுண்டரி(25) எனப்பலசாதனைகளை தன்வசப்படுத்தினார் சச்சின். இன்னும் ஒரு பதினாறு வயது ஒரு இளைஞன் போல விளையாடும் சச்சின் இன்னும்பத்து வருடங்கள் விளையாடினால் முன்னூறு அடித்தாலும் அடிப்பார். சரித்திரவீரர் சச்சினுக்கு தலைவணங்குகிறேன்.****************************************************************************************


ஆங்கிலப்படம்
நேற்று முன்தினம் NATIONAL TREASURE BOOK OF SECRETS பார்த்தேன், ஏற்கனவே ஒரு முறை ஆரம்பம் மட்டும் பார்த்திருந்தேன், ஆனால் படத்தின் பெயரை மறந்து விட்டதால் கஷ்டப்பட்டு பெயரைக் கண்டு பிடி்த்துப்பார்த்தேன். என்ன ஒரு படம். தமிழ்ப்படங்கள் பக்கத்தில் நிற்க முடியாது.


தேசியபொக்கிஷங்களை தனக்குக் கிடைக்கும் தடயங்களை வைத்து அவற்றைக் கண்டுபிடித்து அது எதிரிகள் கையில் கிடைப்பதைத் தடுப்பதுதான் கதை.கச்சிதமாக படமாகடகியிருக்கிறார்கள். இடையிடையே புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகளும் வந்து போகின்றன.மொத்தத்தில் படம் கலக்கல்.


தமிழில் வழக்கமான காதல், கத்தரிக்காய் என்று படக்கதைகளை அதைச்சுற்றிச் சுற்றி எடுக்காமல் சற்று வித்தியாசமான இவ்வாறான படங்களையும் எடுத்தால் நல்லாயிருக்கும்.


****************************************************************************************
கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அண்ணாவுக்கு அஞ்சலி

இலங்கையின் கலையுலகை தூக்கி நிறுத்திய கலைஞர்
  ஸ்ரீதர் அண்ணாவின் இழப்பு இலங்கை கலையுலகால் ஈடு செய்யமுடியாதது. தனக்குள் இசை, நடிப்பு போன்ற பல கலைகளை கொண்ட கலைஞர். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

*************************************************************************
அஜித்=மனிதன்

அஜித் கலைரின் விழாவில் பேசிய பேச்சுக்குப்பிறகு ஜகுவார்தங்கம் அஜித் மீது பாய்ந்ததும், அஜித் இனி நடிக்கமுடியாது என்று செய்திகள் பரவியதும், அனைவரும் அறிந்ததே. இதற்கிடையில் அஜித் தமிழனா என்று கேட்டிருக்கிறார்களாம். இனி தான் இந்த விடயத்தில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை, மீண்டும் மீண்டும்கதைத்தால்தானே விடயம் பூதாகாரமாகும் எனவே தான் இது பற்றிக் கதைக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் அஜித். மீண்டும் தலைவணங்குகிறேன் அஜித் வாழ்க.

*************************************************************************

NO COMMENTS

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. ஒரு மாதத்துக்குப் பிறகா?
  என்ன கொடுமை இருக்கிறம் இது?

  சச்சின்=சாதனைகள்...
  வேறொன்றும் தேவையில்லை...

  புல்லட் அண்ணாக்கு போட்டியாக இன்னொரு பீற்றர் கிளம்பிறார்...

  ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

  அஜித்=மனிதன்...

  No comments= Yup... :)

 1. Unknown Says:

  முழு மேட்ச் பார்க்க முடியவில்லையென்றாலும் 200வது ரன் மட்டும் பார்த்தேன்..

  National Treasuresன் முதல் பாகமும் பார் பவன். அது இன்னமும் நன்றாக இருக்கும்..

  என்ன, கதையில் பல லாஜிக் ஓட்டை. இதே கதையை தமிழில் எடுத்தால் உட்கார்ந்து கிழி கிழி என்று கிழிப்போம். அதுவே அமெரிக்காக்காரன் எடுத்தால் ஆஹா ஓஹோ என்போம். அந்த லாஜிக் ஓட்டைகளையெல்லாம் விடுத்துப் பார்த்தால் நல்ல விறுவிறுப்பான திரைக்கதை.

 1. பவன் மின்வெட்டு இல்லாமல் திருமலை இல்லை... நாசமாபோன இப்படியான ஊழியர்கள் இல்லாமலும் திருமலை இல்லை என்ற நிலை வந்து விட்டது போலும்..........

  சச்சின் 200 ஓட்டத்தை கடக்க வில்லையே எப்படி கடந்ததை பார்த்தீர்கள்....:p

  அஜித் என்றுமே தலைவன்தான் எனக்கு... ஆனால் இப்போது பலருக்கு தலைவர் ஆகியிருக்கிறார்..


  வாழ்த்துக்கள் பவன்...........

  //கோபி அண்ணாவின் சுர்க்கமான பின்னுட்டதுக்கு காரணம் எனக்கு தெரியுமே!!!!//

 1. இலங்கையில் இப்படி மின் வெட்டெல்லாம் வரும், அதை தப்பாக நினைக்க கூடாது, காரணம் நாமிருப்பது இலங்கையில்...

  சச்சின் நேற்று வெளிப்படுத்தியது அற்புதமான ஆட்டம், தற்போதைய இந்திய அணியில் எனக்கு பிடித்த ஒரே வீரர் சச்சின் தான், காரணம் நிறை குடம் தளம்பாது...

  ஸ்ரீதர் பிச்சையப்பாவுடையது எமக்கு பாரிய இழப்பு

  அஜித் நடிகர்களில் வெளிப்படையாக கதைப்பவர் என்பது நிருபணமாகியுள்ளது..

 1. ம்ம்! கலந்து கட்டி நல்ல பதிவு.. அப்ப வீட்ட கரண்ட் இல்லயோ இரவில? எங்க நகையள வச்சிருக்கிறளெண்டு பேஸ்புக்கில மசெஜ் ஒண்டு போடமுடியுமோ?

  இந்த பிசுங்கோன் தொல்லை தாங்க மடியல.. நிம்மதியா ஒரு இங்கிலிசு படம் பாக்க விடுறானா?

 1. Bavan Says:

  கன்கொன்,

  //புல்லட் அண்ணாக்கு போட்டியாக இன்னொரு பீற்றர் கிளம்பிறார்...//

  யோவ் என்ட பெயர் பவன் NOT பீட்டர்..:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ******

  முகிலன்,

  //National Treasuresன் முதல் பாகமும் பார் பவன். அது இன்னமும் நன்றாக இருக்கும்..//

  நேற்றுத்தான் பார்த்தேன் அண்ணே..;)

  //இதே கதையை தமிழில் எடுத்தால் உட்கார்ந்து கிழி கிழி என்று கிழிப்போம். அதுவே அமெரிக்காக்காரன் எடுத்தால் ஆஹா ஓஹோ என்போம்.//

  அதுசரி ஆனால் தமிழில் எடுத்தா காதலுக்கும் கத்தரிக்காய்க்கம்தானே முதலிடம் கொடுக்கிறார்கள்..

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ******

  அனுதினன்,

  //சச்சின் 200 ஓட்டத்தை கடக்க வில்லையே எப்படி கடந்ததை பார்த்தீர்கள்....:p//

  யோவ் சந்தோசத்தில ஏதோ எழுதிட்டன் வவிசியத்த சொன்னா அனுபவிக்கணும் ஆராயப்பிடாது..:p

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Bavan Says:

  யோ அண்ணா,

  //இலங்கையில் இப்படி மின் வெட்டெல்லாம் வரும், அதை தப்பாக நினைக்க கூடாது, காரணம் நாமிருப்பது இலங்கையில்//

  மின்வெட்டு என்றால் பரவாயில்ல அண்ணா, மின் கட்டணம் கட்டின பில் கையில இருக்குது கட்டேல எண்டு சொல்லி வெட்டிட்டு போறாானுகள் கேட்டா கடமையுணர்ச்சியாம் படுபாவிகள்

  நன்றி அண்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)


  ******

  புல்லட் அண்ணா,

  //ம்ம்! கலந்து கட்டி நல்ல பதிவு.. அப்ப வீட்ட கரண்ட் இல்லயோ இரவில? எங்க நகையள வச்சிருக்கிறளெண்டு பேஸ்புக்கில மசெஜ் ஒண்டு போடமுடியுமோ?//

  அடப்பாவிகளா.... என்னா பிளானிங் அதுவும் வீட்டு அட்ரஸ் கேட்டாலும் பரவாயில்ல நகை இருக்கிற இடத்தக் கேக்கிறீங்களே..அவ்வ்வ்

  //இந்த பிசுங்கோன் தொல்லை தாங்க மடியல.. நிம்மதியா ஒரு இங்கிலிசு படம் பாக்க விடுறானா?//

  ஹிஹி அந்தாள் தமிழ்ப்படம் கூடப்பாக்கிறேல..அதுதான் இப்பிடி..:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்