Related Posts with Thumbnails


பதிவெழுதும் நோக்கத்தோடு பிறக்கும் குழந்தைகளை அழிக்க வேண்டும் என்பது பதிவுக்காரன்பட்டி நாட்டாமையின் உத்தரவு. அந்த வகையில் பதிவுக்காரன் பட்டியில் பதிவெழுதும் நோக்கத்தோட பிறக்குது ஒரு குழந்தை. அதுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்பார்க்கிறார் பரவைப்பாட்டி. அதுக்கு தனது ஐந்தறைப்பெட்டியிலிருந்து கள்ளிப்பாலை எடுத்து குழந்தைக்கு கொடுக்க முயல. உடனே குழந்தை என்னை ஏன் கொல்லுறா? பாட்டி என்னைக்கூடைல வச்சு கடல்லையோ ஏரிலயோ அனுப்பு என்று குழந்தை தனது உளறல்களைக்கொட்டுது. உடனே பாட்டி குழந்தையைத்தூக்கிட்டு பதிவுக்காரன் பட்டிய விட்டு ஓடிப்போகிறார்.


அப்புறம் பால்குடிக்குழந்தையாக இருக்கிற குழந்தை நாட்டில நடக்கிற போலிச்சாமி, அரசியல் கொடுமைகள், விளையாட்டில் பந்தைக்கடித்தல் போன்ற பல அநியாயங்களைப்பார்த்து உடனே பாட்டியிடம் வந்து நான் எப்ப இந்த அநியாயத்தைப்பற்றி எல்லாம் எழுதி பெரிய பதிவராகிறது என்று கேட்கிறது. அதுக்கு இன்னும் வயசிருக்கு நீ போய் பேசாம டைப் பண்ணுடா என்று பாட்டி சொல்லுறார். அந்தப்பையனும் போய் டைப்பண்ணத்தொடங்கிறான்.
என்னடா சம்பந்தமில்லாம ஒரு படம் என்று பார்க்கிறீங்களா? அட காலச்சக்கரம் சுழலுதுங்க. ஆம் நம்ம பதிவுஹீரோ பதிவு எழுத ஆரம்பிக்கிறார் அப்பபோகுது இந்தப்பாட்டு "பச்சை, மஞ்சள், நீல டீசேட் போட்ட பதிவன் நான் பதிவுலகைக்கலக்க வந்த மொக்கைப்பதிவர்நான்...."அதுக்குப்பிறகு சிந்தனைச்சிறகினிலே சிறகடிச்சுப்பறக்கவிரும்பும் நம்ம பதிவு ஹீரோவுக்கு புல்லட் போட்ட துப்பாக்கியால சுட்டா வாறதுமாதிரி பெயரிலிகளிடமிருந்து பின்னூட்டங்கள் மற்றும் மறை வாக்குகள் வர ஆரம்பிக்குது. அது ஹீரோக்கு ஆரம்பத்தில வருத்தமளித்தாலும் எத்தனை தடவை சுட்டாலும் எரிந்தும் எரியாம நிக்கணும் என்று களத்தில் இறங்குகிறார் நம்ம ஹீரோ. இப்படி பல சமூக சீர்கேடுகளைப்பற்றிய பதிவுகளை போட்டுத்தள்ளி பதிவுலகில் பரபரப்பான பெரிய பதிவராகிரார். ஆனா தனது பதிவுகளைப்பார்த்து அவரின் எமுத்துக்களில் மயங்கி அவரைக்காதலிக்கிறார் ஒரு பெண்பதிவர். அந்தக்காதலால் தனது மனமகழ்ச்சியில் திழைக்கும் ஹீரோ காதலியை இன்ரோல் செய்யவேண்டிய தேவையில்லாததால் களிப்பில் சிறகடித்துப்பறக்கிறார்


ஆனால் சிறீலங்கா பங்குச்சந்தையில் வேலைசெய்யும் பெண்ணின் அப்பாவால் வருகிறது பிரச்சினை. வெட்டியா சீரியஸ் என்ற பெயரில மொக்கைரைட்டிங் செய்யும் உன்னை நம்பி எப்பிடிப் பெண்தருவது ஒரு வருடம் டைம் தாரன் அதுக்குள்ள என்னைவிட ஒரு பதிவு கூடப்போடு நான் என் பெண்ணை உனக்குத்தாறன் என்று கட்டளை விதிக்கிறார். பசி உறக்கம் இல்லாமல் தனது பதிவு எழுதும் வேலையைத்தொடர்கிறார் நம்மஹீரோ. அவர் இட்லிவடையைக்கூடக்கண்ணில் பார்க்காமல் பதிவுகளை எழுதுகிறார். இவரின் முயற்சியைப்பார்த்து ஆடிப்போன இவரின் காதலியில் அப்பா இவரின் காதலுக்கு பச்சைக்கொடிகாட்ட வானம்பாடிகளாக டூயட் பாட வேண்டிய நேரத்திலதான் வருது ஒரு அதிர்ச்சி. 


அவருக்கு ஒரு மிரட்டல் பின்னூட்டம் வருது. "இனி பதிவு என்ற பெயரில ஏதாவது எழுதின மவனே சங்குதான் உனக்கு" என்று. அந்தப்பின்னூட்டம் போட்டவனைக்கண்டு பிடிச்சிட்டுத்தான் எனக்குக் கல்யாணம் என்று சபதமெடுத்து உடனே பல சக பதிவர்களின் உதவியுடன் அந்தப்பின்னூட்டம் போட்டது யார் என்று கண்டுபிடிக்க கடும் முயற்சியில் இறங்கிறார் நம்ம ஹீரோ. எத்தனையோ IP Tracerகளையும் பயன்படுத்திப்பார்க்கும் நம்ம ஹீரோவால் கண்டு பிடிக்கமுடியவில்லை. கடைசியில் ஒரு தொழிநுட்பப்பதிவரின் உதவியுடன் அந்த IP இருக்கும் ஏரியாவைக் கண்டு பிடிக்கிறார் ஹீரோ. அது நம்ம ஹீரோவின் வீட்டுக்கணணியின் IP தான். உடனே கடுப்பான ஹீரோ யாருக்கும் தெரியாமல் யார் கணணினைப்பாவிக்கிறார்கள் எனப்பார்க்க ஒரு கமெரா பூட்டிவிட்டு ஒரு மொக்கைப்பதிவையும் எழுதிவிட்டுப்போகிறார். அடுத்தநாள் அங்கு வந்து கமெராவில் பதிவான வீடியோவைப்பார்த்தவருக்கு அதிர்ச்சி. அந்த அனானிப்பின்னூட்டம், மறைவாக்குப்போட்டது எல்லாம் அவரின் பாட்டிதான்.


கடமையா உறவா என்று ஹீரோவுக்கு குழப்பம் வருகிறது. பாட்டி கடமைதான் உனக்கு முக்கியம் உன்னை ஒரு பிரபல பதிவராக்கத்தான் நான் அப்படிச்செய்தேன் என்று ருவிட்டரில் ஹீரோவுக்குச்சொல்ல, ஹீரோ அடுத்த பதிவு எழுதுகிறார், "மாட்டிய பெயரிலி பின்னூட்டக்காரி" என்ற தலைப்பில்.


மு.கு - இது முழுக்க முழுக்க மொக்கை மொக்கை மொக்கை மட்டுமே.

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. நடக்கட்டும் நடக்கட்டும்...

  //அவரைக்காதலிக்கிறார் ஒரு பெண்பதிவர். //

  இங்கு ஏதோ உள்குத்து இருப்பதாக உணர்கிறேன்.
  அன்பார்ந்தவர்களே எனக்கு உண்மையைச் சொல்லிவிடுங்கள்... என்ன நடக்குது இந்த உலகத்தில?


  //உன்னை ஒரு பிரபல பதிவராக்கத்தான் நான் அப்படிச்செய்தேன் என்று ருவிட்டரில் ஹீரோவுக்குச்சொல்ல, //

  lol....


  பதிவு கும்முவதற்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதால் அன்பர்களை அழைக்கிறேன்....

  வாருங்கள்...

 1. வழக்கம் போல கலக்கல், கிட்ட தட்ட இதே மாதிரி ஒரு பதிவை தமிழ் படத்தை வைத்து எழுத இருந்தேன், நீங்கள் எழுதி விட்டீர்கள்

 1. nalla mokkai . rasikka vaikirathu . vaalththukkal mokkaiyaa alla unmaiyaa

 1. அதிரடி..,

 1. பவன் செம கலக்கல்..அதுசரி அனா..?? புரியல??? கோபிதானே காதலில் விழுந்தது இது யாரு?? புதுக்கதை!!!

 1. இந்த பயபுள்ள அட்டகாசம் தாங்கலயே:)). சூப்பர் பவன்.

 1. Subankan Says:

  கோபி, வாடா இதுக்கு மேலயும் பேசாம இருந்தா இந்த உலகம் எங்களப்பாத்துச் சிரிக்காது? கல்லெடுத்து அடிக்காது? கா....

 1. Bavan Says:

  கன்கொன் அண்ணா,

  //இங்கு ஏதோ உள்குத்து இருப்பதாக உணர்கிறேன்.//

  அந்தப் பதிவர் கன்கோன் இல்லை என்று சொல்லும்படி கேட்டுக்கொண்டார்

  //பதிவு கும்முவதற்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதால் அன்பர்களை அழைக்கிறேன்....//

  அடப்பாவி..

  நன்றி தல வருகைக்கும் கருத்துக்கும்


  ******

  யோ அண்ணா,

  //வழக்கம் போல கலக்கல், கிட்ட தட்ட இதே மாதிரி ஒரு பதிவை தமிழ் படத்தை வைத்து எழுத இருந்தேன், நீங்கள் எழுதி விட்டீர்கள்//

  அடடா நான் முந்திட்டனோ..
  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ******

  Madurai Saravanan,

  //nalla mokkai . rasikka vaikirathu . vaalththukkal mokkaiyaa alla unmaiyaa//

  நன்றி சரவணன் வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Bavan Says:

  SUREஷ்

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் சுரேஷ்..;)

  ******

  பாலா அண்ணா,

  //பவன் செம கலக்கல்..அதுசரி அனா..?? புரியல??? கோபிதானே காதலில் விழுந்தது இது யாரு?? புதுக்கதை!!//

  திரும்பவும் சொல்லுறன் அந்தப் பதிவர் கன்கோன் இல்லை என்று சொல்லும்படி கேட்டுக்கொண்டார்..:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்


  ******

  வானம்பாடிகள்,

  //இந்த பயபுள்ள அட்டகாசம் தாங்கலயே:)). சூப்பர் பவன்.//

  ஹீஹீ... நன்றி வானம்பாடி சார் வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ******

  சுபா அண்ணா,

  //கோபி, வாடா இதுக்கு மேலயும் பேசாம இருந்தா இந்த உலகம் எங்களப்பாத்துச் சிரிக்காது? கல்லெடுத்து அடிக்காது? கா....//

  ஏன் என்ன பண்ணப்போறீங்க #பயம்

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்ட...;)

 1. அது சரி இங்க என்ன நடந்தது.?

 1. Bavan Says:

  இலங்கன்,

  //அது சரி இங்க என்ன நடந்தது.?//

  என்னாதுது என்ன நடந்ததா? இந்தக்குசும்புதானே வேணாங்கிறது..lol

  நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)

 1. பவன் வித்தியாசமான பதிவு... ஆனால் நீங்கள் உங்களை பற்றி அதிகம் வெளிப்படையாக சொன்ன பதிவு இது போலும்ம்...........

  பிந்தி கிடைத்த தகவல் கூட உங்கள் காதலை உறுதி செய்கின்றன பவன்...

  வாழ்த்துக்கள் பவன் உங்கள் பதிவுக்கும்,,கா... கா...க்கும் .

 1. Bavan Says:

  அனுதினன்,

  //பிந்தி கிடைத்த தகவல் கூட உங்கள் காதலை உறுதி செய்கின்றன பவன்...//

  என்னாதுது?? நாசமாப்போக.. இருக்கு உனக்கு ஆப்பு சீக்கிரமே..

  மற்றது என்னிடம் காக்கா எல்லாம் இல்லை..:p

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

 1. கலக்கல்

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்