Related Posts with Thumbnails
மறதி - குட்டிக்கதை
ஒரு 65 வயது மூதாட்டிக்கு அனைத்து புதிய தொழிநுட்பங்களையும் பயன்படுத்தி வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்து குழந்தை ஒன்றைப்பிறக்கச்செய்தனர். சிலநாட்களில் அவரும் தனது குழந்தையுடன் வீடு திரும்பினார்.


அவரின் குழந்தையை பார்க்க சில விருந்தாளிகள் வந்திருந்தனர். உடன அவர்களை வரவேற்று உபசரித்தார், சிறிது நேரத்தில்விருந்தாளிகள் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
"இல்லை, தேனீர் இருந்திவிட்டுப்பார்க்கலாம் என்று அனைவருக்கும் தேனீர் கொடுத்தார். தேனீர் குடித்து முடித்த பின்னர் மீண்டும் விருந்தாளிகள் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
இல்லை சிற்றுண்டி உண்ணுங்கள் பிறகு பார்க்கலாம், என்றார். சரியென சிற்றுண்டி உண்டுவிட்டு கொஞ்ச நேரத்தில் அவர்கள் மீண்டும் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
மீண்டும் மூதாட்டியும் இல்லை கொஞ்சம் கொறுங்கள் பார்க்கலாம் என்றார்.


ஏன் உங்கள் குழந்தையை நாங்கள் பார்க்கக்கூடாதா? அதன் வளர்ச்சி அவ்வளவு முக்கியமா? நாங்கள் பார்த்தால் அது வளராதா? என்று சற்று கோபத்துடன் கேட்க, இல்லை குழந்தையை நீங்கள் பார்க்க வேண்டுமானால் அது அழவேண்டும் என்றார்.


உங்களை மாதிரியே விருந்தாளிகளும் குழப்பத்துடன் பார்க்க..


குழந்தையை எங்கேயோ வைத்துவிட்டேன், அது அழுதால்தான் கண்டு பிடிக்கலாம் என்றார்.


*********************************************

IPLலும் இலங்கை வீரர்களும்


3வது IPL போட்டிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரை போட்டிகள் மிகுந்த விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நான் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு ஆதரவளித்து வருகிறேன். ஆனால் இலங்கை வீரர்கள் பிரகாசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் இலங்கையின் சகலதுறை வீரர் அஞ்சலோ மத்தியுஸ், பந்துவீச்சாளர்கள் மலிங்க மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் அபாரமாக பந்து வீசி வருகின்றனர்.


நேற்றைய சென்னையுடனான போட்டியின் வெற்றிக்கு முதல் மூன்று ஓவர்களிலேயே மூன்று விக்கட்டுகளைச்சாய்த்து சமிந்தவாஸ் டெக்கன் சார்ஜசின் வெற்றிக்கு வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.


தவிர முரளிதரனும் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் இலங்கை அணியில் மத்தியூசைத் தவிர மற்ற ஒருவரும் அண்மைய போட்டிகளில் இலங்கை சார்பில் பங்குபற்றாமை குறிப்பிடத்தக்கது. இனியாவது இலங்கை கிறிக்கற் இவர்கள் பக்கம் பார்வையைத் திருப்புமா? பார்க்கலாம்.*********************************************விண்ணைத்தாண்டி வருவாயாமூன்று முறை பார்த்துவிட்டேன். A.R.ரஹ்மானை எப்பிடிப்பாராட்டுறதோ தெரியவில்லை. அப்பப்பா என்ன ஒரு இசை, படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு சின்னச்சின்ன விடயங்களையும் ஆராய்ந்து இசையமைத்திருக்கிறார்கள்.

உண்மையில் இதை தியட்டரில் DTSசுடன் பார்க்காதவர்கள் வாழ்க்கையின் பாதியை இழந்துவிட்டார்கள் என்றுதான் செல்லுவேன். அதுதவிர பக்கா காதல் கதை. படமாக்கப்பட்ட விதம், சலிப்புத்தட்டாத கதையோட்டம், அடிக்கடி பேசப்படும் ஆங்கில வார்த்தை என அனைத்தும் அற்புதம். இடைவேளை விடாமல் படத்தை போட்டிருக்கலாம். அடுத்தகெளதம் மேனன் படத்துக்கு நான் முதல் SHOWக்கு போவதென்று முடிவுபண்ணிவிட்டேன்

சிம்புவைக்கு அடுத்து எனக்கு படத்தில் பிடித்த கதாபாத்திரம் காக்க காக்க காமராமேன் என்று சிம்புவுன் கூடவே வரும் கணேஷ். தலைவர் சிரிக்காம சாதாரணமா கதைச்சாலே சிரிப்புத்தான் வருகிறது. அதுவும் அவர் "உஸ்ஸ்...." என்று விடும் பெருமூச்சைப்பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலி வந்ததுதான் மிச்சம்.

இன்னும் எத்தனை தடவையும் படத்தைப்பார்க்க நான் தயார், யாராவது போகிறீர்களா? போனா சொல்லுங்க அடியேனும் வருகிறேன்.*********************************************
சாமியார் சிரிப்பு சாமியார்


அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய வீடியோவையடுத்து ஆசாமி நித்தியானந்தா தலைமறைவாகி இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அண்மையில் அவரின் சீடர்களால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் ஆசாமி நித்தியின் வலதுகை பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு "I CAN'T SPECULATE ANYTHING" என்று கூறிக்கொண்டிருந்தார். பிறகு ஏன் அவர்கள் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தினார்களோ. 45 நிமிட நேரம்தான் மாநாடு என்று கூறியவர்கள், மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை தெரிவித்துக்கொண்டிருந்தமையும், வீடியோ போடுகிறேன் என்று கூறி 5 நிமிடங்களை வீணடித்து கடைசிவரை வீடியோ போடாமல் விட்டும் அவர்கள் தாங்கள் நல்லவர்கள் என காட்டிக்கொள்ள முயற்சியெடுத்தததும் 45 நிமிடம் முடிய ஆள விடுங்கடா சாமி என்று எஸ்கேப் ஆகியதும் சிரிப்பை வரவழைத்தது.


இதுதான் இப்படியென்றால் நேற்று ஆசாமி நித்தியானந்தா தான் ரஞ்சிதாவுடன் வெளியான வீடியோவில் பாலியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்தாராம். ஐயோ இது உலக நடிப்புடா சாமி...

*********************************************
NO COMMENTSநீங்கள் போட்டுத்தாக்கியது

 1. 65 வயது...
  அவ்வ்வ்வ்...
  இப்பிடித்தான் அந்தந்த அந்தந்த விசயங்களச் செய்யோணும் எண்டு சொல்றது...

  IPL இல் எம்மவர்கள் கலக்குவது மகிழ்ச்சியே. அதுவும் வாஸ் நன்றாக விளையாடுவதும், முரளி நன்றாக விளையாடுவதும் எனக்கு தனிப்பட்ட ரீதியில் மிக்க மகிழ்ச்சி.
  இரு மாபெரும் வீரர்கள் form இல்லாமல் ஓய்வு பெறக்கூடாது என்றும், உச்சத்தில் இருக்கும்போது ஓய்வு பெறவேண்டும் என்றும் விரும்புகிறேன்.
  அன்ஜலோ கலக்குகிறார். ஆனால் படுபாவிகள் நேற்று ஆட்ட நாயகன் விருதைக் கொடுக்காமல் தங்கள் குணத்தைக் காட்டிவிட்டார்கள்.

  //உண்மையில் இதை தியட்டரில் DTSசுடன் பார்க்காதவர்கள் வாழ்க்கையின் பாதியை இழந்துவிட்டார்கள் என்றுதான் செல்லுவேன். //

  சும்மா போப்பா...
  படம் நல்லாயிருக்கு... அது உண்மை. ஆனா இதெல்லாம் நிறையவே அதிகம்.
  வேண்டுமானால் நல்ல படமொன்றைத் தவறவிட்டுவிட்டீர்கள் என்று சொல்லுங்கோ...

  சாமியார்...
  Please speak the truths and facts...
  Don't speculate anything... :)
  ஒரே சிரிப்புப் போங்கள்...


  குழந்தை அழகா இருக்கு...
  உங்கட மகனா/மகளா? :D

 1. :)).

 1. குழந்தை அழகா இருக்கு...

 1. // குழந்தை அழகா இருக்கு... //

  பதிவு நல்லா இல்ல... :D :D :D

 1. கோபி என்னில் என்ன கோபம்?
  (copy & paste இற்கு நக்கலா?)

 1. // கோபி என்னில் என்ன கோபம்?
  (copy & paste இற்கு நக்கலா?) //

  ஆகா... சும்மா ஒரு நகைச்சுவைக்குத்தான்... :)

 1. குழந்தையை எங்கேயோ வைத்துவிட்டேன், அது அழுதால்தான் கண்டு பிடிக்கலாம் என்றார்.//

  திருப்பம் அருமை...

  விளங்காமல் பார்த்தாலும், ஒரு தடவை பார்த்த சுவாரசியம் மறுதடவை பார்த்தால்... இல்லாமல் போய்விடும்... ஓசில டிக்கெட் கிடைச்சு சில படங்களுக்கு போய் நான் துன்ப பட்டது... 'அப்பிடி என்ன இந்த படத்தில இருக்கு' ஏன்டா நினைப்பு வந்திடும்.

 1. Unknown Says:

  கதையை ரசித்தேன்

  பாவம் பாட்டி


  வாஸ் ,மத்தியூஸ் கலக்கல் சூப்பரு

 1. பவன் கதை கலக்கல்........

  நான் ஜபில் போட்டிகளுக்கு ரசிகன் மட்டுமே! ஆதரவாளன் இல்லை..... போட்டிகளில் சுவாரசியதுக்கு பஞ்சமில்லை என்பது உண்மை....

  வி.தா.வ பார்த்துவிட்டு பலரும் பாழாகி போய்விட்டார்கள். நான் தெலுங்கில் கூட 2 தடவை ...... படம் சிலரின் நிஜத்தை சொல்லி இருக்கிறது


  நித்யானந்தா இப்போதைக்கு பெரிய காம டியனாக வர முயற்சிக்கிறார்.... அவ்வளவுதான்

 1. ///உண்மையில் இதை தியட்டரில் DTSசுடன் பார்க்காதவர்கள் வாழ்க்கையின் பாதியை இழந்துவிட்டார்கள் என்றுதான் செல்லுவேன்////

  same blood

  //////அனுதினன் said...
  பவன் கதை கலக்கல்........

  நான் ஜபில் போட்டிகளுக்கு ரசிகன் மட்டுமே! ஆதரவாளன் இல்லை..... போட்டிகளில் சுவாரசியதுக்கு பஞ்சமில்லை என்பது உண்மை.../////

  ரிப்பீட்டுகிறேன்

 1. Subankan Says:

  :))

 1. :D :D :D

 1. Bavan Says:

  கன்கொன் அண்ணா,

  //இப்பிடித்தான் அந்தந்த அந்தந்த விசயங்களச் செய்யோணும் எண்டு சொல்றது...//

  எந்தெந்த எந்தெந்த??

  //அன்ஜலோ கலக்குகிறார். ஆனால் படுபாவிகள் நேற்று ஆட்ட நாயகன் விருதைக் கொடுக்காமல் தங்கள் குணத்தைக் காட்டிவிட்டார்கள்.//

  ம்ம்.. அவனுகள்ட குணம் அதுதான்..

  //படம் நல்லாயிருக்கு... அது உண்மை. ஆனா இதெல்லாம் நிறையவே அதிகம்.//

  யோவ்..feel the pain..:p

  //ஒரே சிரிப்புப் போங்கள்...//

  ஹாஹாஹா..

  //உங்கட மகனா/மகளா? :D//

  அடிங் கொய்யால.. படுபாவி மக்களே மக்களே.. நான் 3 வயதே ஆன பச்சிளம் பாலகள் போட்டிருக்கும் படம் எனது நண்பர்களுடையது(same age)

  நன்றி தலிவா வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ***

  வானம்பாடிகள்,

  :))))))))

  ***

  archchana,

  //குழந்தை அழகா இருக்கு...//

  ஹாஹா என் பிரண்டுதான் நல்லவேளை நான் என்ட படத்தை போடல..:p

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ***

  வரோ அண்ணா,

  //திருப்பம் அருமை...//

  ஹிஹி ஆங்கிலத்தில் வந்த கதை மொழிபெர்ப்பு செய்தது, கதை எழுதினவருக்கு பாராட்டு போய்ச்சேரட்டும்..;)

  //விளங்காமல் பார்த்தாலும், ஒரு தடவை பார்த்த சுவாரசியம் மறுதடவை பார்த்தால்... இல்லாமல் போய்விடும்... ஓசில டிக்கெட் கிடைச்சு சில படங்களுக்கு போய் நான் துன்ப பட்டது... 'அப்பிடி என்ன இந்த படத்தில இருக்கு' ஏன்டா நினைப்பு வந்திடும்.//

  எனக்கு வி.தா.வ fever வந்திட்டு எண்டு நினைக்கிறன் ..ஹிஹி

  நன்றி அண்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)


  ***

 1. Bavan Says:

  A.சிவசங்கர்

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  அனுதினன்

  //நித்யானந்தா இப்போதைக்கு பெரிய காம டியனாக வர முயற்சிக்கிறார்.... அவ்வளவுதான்//

  ஹாஹா நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)


  ***

  யோ அண்ணா,

  //same blood//

  அதே.. அதே...

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)


  ***

  சுபா அண்ணா

  :))))))))))))))

  ***

  // கன்கொன் || Kangon said...
  :D :D :D//

  அடிங் கொய்யால...:p

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்