Related Posts with Thumbnails
பஸ் வண்டி யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தை சென்றடைந்தது. சுப்பன் பஸ்சிலிருந்து கீழே இறங்கினார். அவர் முகத்தில் ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியுடன் நின்றுகொண்டிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப்பிறகு சொந்த ஊருக்கு வருகிறார். அழைத்துப்போக வந்த நண்பனையும் காணவில்லை, ஆனால் இவரின் வித்தியாசமான தலைவெட்டைக்கண்டு (ஹெயார்ஸ்டைல்) கொண்ட இவரது நண்பன் பாலன் அடேய் சுப்பா என்று கத்தியபடி ஓடிவருகிறார்.

"மந்தையிலிருந்து இரண்டு வெவ்வேறு திசையில் பிரிந்து விட்டன அவை இரண்டும் சந்தித்தவேளையில்... நான் கேட்டத கொண்டு வந்தியா என்று சுப்பன் கேட்க, ஓ இயஸ் ரெடியா இருக்கு நீ வரவேண்டியதுதான் மிச்சம் என்றான். உடனே பாலன் கொண்டவந்த சைக்கிளில் ஏறிய சுப்பன் பாலனுக்கு டாட்டா காட்டிவிட்டு மாலை சந்திக்கலாம் என்று கூறிவிட்டு சைக்கிள் பயணத்தை தொடங்கினார். சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் திடீரென ரோட்டோரம் இருந்த கல்லில் காலைவைத்துக் கொண்டு கிளீன் சேவ் செய்யப்பட்ட தனது தாடையை வருடியபடி வானத்தையும் பூமியையும் பார்த்துக்கொண்டி பில்டப் காட்டிக் கொண்டிருக்க பாட்டுக் கேட்கிறது "ஞாபகம் வருதே...  ஞாபகம் வருதே..." பக்ரவுண்ட் மியூசிக் இல்ல சுப்பனின்வீட்டிலிருந்து "எங்கடா நிண்டு கனவு காணுற சீக்கிரம் வந்து சேரு" உடனே சுதாகரித்துக்கொண்ட சுப்பன் வீட்டுக்குக்கிளம்பினார்.

மாலை 4 மணி - றியோ றெஸ்டோறன்ட்

மாலை பாலனுடன் றியோவுக்கு சென்றவர் வழக்கம் போல பாலனின் எக்கவுண்டில் ஐஸ்கிறீம் ஓடர் செய்து விட்டுக் காத்திருக்க ஐஸ் கிறீம் வருவதற்குள் கமராவில் நண்பனுடன் படங்களை எடுத்துவிடலாம் என்று எண்ணியவேளையில் படமெடுக்க ஆளில்லாததால்முதலில் தனித்தனியே படமெடுத்துக் கொண்டவர்கள் சேர்ந்து படமெடுக்கவேண்டும் என்ன செய்வது என்று யோசிக்க, உடனே பாலனின் கண்கள் பிரகாசம் அடைகிறது, 


பாலன் "டேய்..
சுப்பன் "என்ன
பாலன் "டேய்....
சுப்பன் " ஐஸ்கிறீம குடிக்க விடுடா..

பாலன் "டேய் அந்த நீல சுடிதார்தான் நான் அண்டைக்கு சொன்னனே அது.. என்றார். 

உடனே சுப்பன் பிளான் போடத்தொடங்கினார், "ஆ... ஐடியா??..
பாலன் "என்ன என்ன??
நம்மள போட்டோ எடுக்கவும் ஆக்களில்ல, உனக்கும் நீலத்தோட கதைக்கப்பயம் அப்ப ரெண்டையும் கனக்ட் பண்ணிப்பாத்தா ஒரேவழிதான் இருக்கு, அவட்ட போட்டோ எடுக்கச்சொல்லிக்கேட்கிறதுதான்,

ஆனா அவளப்பாத்தா சிங்களம் மாதிரிக்கிடக்கு, எனக்கு சிங்களம் தெரியாதே...என பாலன் கூற...

ஹரி ஹரி மட சிங்கள தன்னவா(எனக்கு சிங்களம் தெரியும்) என்று சுப்பன் கூறிவிட்டு எழுந்து சென்று "அக்கே போட்டோ எக்க... போட்டோ எக்க... என்று விக்கி விக்கிக் கேட்க...."

அந்த பெண் " இதுகளுக்கு இதே வேலயாப்போச்சு என்று சிரித்துக்கொண்டே இவர்களை சிங்களம் என்று நினைத்துக்கொண்டு திட்ட, உடனே பாலன் அடேய் இது தமிழடா என்று மகிழ்ச்சியில் கத்த, இவர்களை சிங்களம் என்று நினைத்துத் திட்டிய அக்காமார் முகத்தில் அசடு வழிய... உடனே கமராவைக் கொடுத்துவிட்டு ஓட முயன்ற பெண்ணிடம் உங்களபார்த்தா அசல் சிங்களம் மாதிரியே கிடக்கு அதுவும் யாழ்ப்பாணத்தில ஜீன்ஸ் போட்ட அழகான பெண்களை நான் பார்த்ததே இல்லை என்று பாலன் பில்டப்பை ஏத்த இவர்கள் முகத்தில் மொத்தத்தில் ஐஸ்கிறீமுக்குப் பதிலாக அசடு வழியத்தொடங்கியது.

அட இனியும் யார் இவங்கன்னு சொல்லணுமா என்ன?...

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. கலக்கல்டா தம்பி! கதையில் வரும் கதாப்பாத்திரங்களில் அசடி வழிந்தாலும் கதையில் அருமையான நகர்வு :)

  வாழ்த்துக்கள்

 1. ஐந்தரை விஷயத்தை ஏழேழு உலகத்துக்கும் படம்பிடித்து காட்டிய பவன் வாழ்க ... அவன் புகழ் ஓங்குக...

 1. இது அதா?

 1. // சுப்பன் பஸ்சிலிருந்து கீழே இறங்கினார். //

  ஓஓஓஓஓஓஓஓஓ!

  // வித்தியாசமான தலைவெட்டைக்கண்டு //

  அட... அவரா இவர்...


  // நண்பன் பாலன் //

  ஓகோ....


  // நான் கேட்டத கொண்டு வந்தியா //

  இதுக்குள்ள வந்தியண்ணாவ ஏன் இழுக்கிறாய்? :P :D


  // கிளீன் சேவ் செய்யப்பட்ட தனது தாடையை //

  தாடி முளைக்காத தனது தாடையை என்று வரவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள்... :P


  // பக்ரவுண்ட் மியூசிக் இல்ல சுப்பனின்வீட்டிலிருந்து //

  லோ பட்ஜெட் படம் போல?


  // மாலை 4 மணி - றியோ றெஸ்டோறன்ட் //

  அங்கயா? #அதிர்ச்சி


  // வழக்கம் போல பாலனின் எக்கவுண்டில் ஐஸ்கிறீம் ஓடர் செய்து //

  ஓ! அவரா இவரு.... அட அட அட அட...


  // பாலன் "டேய்....சுப்பன் " ஐஸ்கிறீம குடிக்க விடுடா.. //

  அடச்சீ... ஏதோ வருசத்துக்கொருக்கா குடிக்கிற மாதிரி...
  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அக்கா மார (எனக்கு அக்காமார்) கூட்டிற்று போய் வாங்கிக் குடுத்து ஒரு ஐஸ் கிறீம 5 மணித்தியாலமாக் குடிக்கிறவர் தானே இவர்?  // டேய் அந்த நீல சுடிதார்தான் நான் அண்டைக்கு சொன்னனே அது //

  நீநீநீநீநீநீநீநீலலலலலமாமாமாமா? @அதிர்ச்சி


  // அக்கே போட்டோ எக்க... போட்டோ எக்க... //

  இத எப்பிடிச் சொல்றது?
  ஆங்கிலத்தில கதைச்சா பீற்றர் விடுறது...
  அப்ப இது?
  இதுக்குப் பேர் மஹிந்த விடுறது என்று இன்று முதல் பெயரிடப்படுகிறது...  // அந்த பெண் " இதுகளுக்கு இதே வேலயாப்போச்சு //

  அக்கா காண்டாகீற்றா....


  // உடனே பாலன் அடேய் இது தமிழடா //

  அடுத்தாள் ரவுசர உருவ முதல் இந்தாளே உருவிக் குடுத்தீரும் போல கிடக்கு.... :(


  // அட இனியும் யார் இவங்கன்னு சொல்லணுமா என்ன?... //

  அதானே....
  வாழ்க வாழ்க....


  கலக்கல் பவன்....

 1. Subankan Says:

  :)

  கதை அருமை. உனக்கு நல்ல கற்பனை ஆற்றல் பவன், வாழ்த்துகள்!

 1. // Subankan said...
  :)

  கதை அருமை. உனக்கு நல்ல கற்பனை ஆற்றல் பவன், வாழ்த்துகள்! /

  என்ன சாமியோ...
  நீங்களே இப்பிடிச் சொல்லலாமோ?

 1. Bavan Says:

  கீர்த்தி அக்கா,

  //கலக்கல்டா தம்பி! கதையில் வரும் கதாப்பாத்திரங்களில் அசடி வழிந்தாலும் கதையில் அருமையான நகர்வு :)//

  நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ******

  வரோ அண்ணா,

  //ஐந்தரை விஷயத்தை ஏழேழு உலகத்துக்கும் படம்பிடித்து காட்டிய பவன் வாழ்க ... அவன் புகழ் ஓங்குக...//

  ஹீஹீ நன்றி நன்றி.... நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ******

  யோ அண்ணா,

  //இது அதா?//

  அதான் இது..:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)


  ******

  கன்கொன் அண்ணே,

  //இதுக்குள்ள வந்தியண்ணாவ ஏன் இழுக்கிறாய்? :P :D //

  யோவ்...ர்ர்ர்ர்ர்....

  //தாடி முளைக்காத தனது தாடையை என்று வரவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள்... :P //

  பிறகு பலரின் பச்சிளம்பாலகர் பட்டங்கள் பறி போயிரும் பரவால்லயா??

  //ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அக்கா மார (எனக்கு அக்காமார்) கூட்டிற்று போய் வாங்கிக் குடுத்து ஒரு ஐஸ் கிறீம 5 மணித்தியாலமாக் குடிக்கிறவர் தானே இவர்? //

  என்னாதுதுதுதுது?? #அதிர்ச்சி

  //ஆங்கிலத்தில கதைச்சா பீற்றர் விடுறது...
  அப்ப இது?
  இதுக்குப் பேர் மஹிந்த விடுறது என்று இன்று முதல் பெயரிடப்படுகிறது//

  விளங்கினமாதிரித்தான்

 1. Bavan Says:

  @கன்கொன் அண்ணா -நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ******

  சுபா அண்ணா,


  //கதை அருமை. உனக்கு நல்ல கற்பனை ஆற்றல் பவன், வாழ்த்துகள்!//

  என்னாதுதுது? கற்பனையா? இது உண்மைக்தை என்பதை கவனிக்கவும்..:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:p

 1. Ramesh Says:

  வுவுவுவுவு...பாலா ஹாஹாஹா சுபா ம்ம்ம நீங்க எல்லாம் அவர்களா...
  பவன் இது கதையல்ல நிஜம் தானே...
  ///நான் கேட்டத கொண்டு வந்தியா ///
  சுபா கிடைத்ததா????
  ///பாலன் "டேய்....சுப்பன் " ஐஸ்கிறீம குடிக்க விடுடா..////
  ///பாலன் "டேய் அந்த நீல///
  கிரீம் எப்படி???
  நீல.. சுடிதார்.. சொல்லவேயில்ல..
  ம்ம்ம் நடக்கட்டும்
  ஐஸ்கிரீம் அசடு ஹீஹீஹீ
  பவன் கலக்கல்

 1. :)

  வாழ்த்துகள்!

 1. பவன் கதை சூப்பர்....

  அந்த இருவரும் யார் என்று கண்டு பிடிக்கவே முடியவில்லையே!!!!!!!!!!


  ஆனாலும் பாவம் அவர்கள்....

 1. கதை நல்லாத்தான் இருக்கு பாவம் சுபாங்கன்.

 1. ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்... கதையோடு கதையா யாழப்பாணமும் கடிக்கப்பட்டு விட்டது ஜீன்ஸ் போட்ட மங்கையரால்...

  அண்ணன் சுப்பரின் பாதை திறந்ததின் பின் முதலாவது தரைவழிப்பயணமாம்...

 1. Unknown Says:

  ஒண்டு மட்டும் புரிஞ்சு போயிட்டுது
  யாரோ செமையா மாடிட்டங்க பவன் கிட்ட யாருன்னு வேற சொல்லனுமா

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்