Related Posts with Thumbnails
போலி போலி போலி எங்கும் போலி எதிலும் போலி, எங்கே கொண்டு போய்த் தலையை முட்டிக் கொள்வது. நேற்றிரவு 8.30 சன் செய்தி ஏற்படுத்திய பரபரப்பு அனைவருக்கும் தெரிந்திருக்கும். யாருமே பெரிதும் எதிர்பார்க்காத சாமியார் ஒருத்தர் மாட்டுப்பட்டார். நித்தியமும் ஆனந்தமாக இருக்க வேண்டும், கதவைத்திறவுங்கள் காற்று வரட்டும் என்றவருக்கு கதவைத்திறந்தால் ஊடகங்களின் கமராவும் வரும் என்று தெரியவில்லைப்போலும்.


இப்படி இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களை யார் கண்டுபிடிப்பது? கண்டுபிடித்தால் அதுக்குப்பிறகு மக்கள் இப்படியானவர்களை நம்பாமல் இருப்பார்களா? 


கட்டாயம் இல்லை, இன்று கதவைத்திற காற்று வரட்டும் என்பான், இன்னொருத்தன் நான்தான் அவதாரம் என்று சொல்லுவான், இன்னொருத்தன் மஜிக் பண்ணுவான். மக்கள் அதை நம்புகிறார்கள், காசை வாரி இறைப்பார்கள். அவன் ஏன் கதவைத்திறக்கச் சொல்லுறான் உங்களிடமிருந்து அப்பதானே கொள்ளையடிக்கலாம். இவர்களை மக்கள் நம்பக்காரணம் ஒன்றே ஒன்று இவர்களின் பேச்சு, "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். ஆனந்தம் என்பான், வாழ்க்கைத் தத்துவம் என்பான், அன்பு செலுத்துங்கள் என்பான் இதைத்தானே பத்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலும் சொல்லியிருக்கிறார்கள்.


புத்தர், யுசு, நபிகள் இப்படியும் மகான்கள் இருந்தர்கள். ஆனால் இவர்கள் மாளிகைகள் கட்டவில்லை,மாலைபோடும் நிகழ்வு நடத்தவில்லை, ஏன் தாங்கள் அவதாரம் என்றோ கூறவோ மஜிக்கோ ஒன்றுமே செய்யவில்லை. மக்களோடு வாழ்ந்தார்கள். இறைவனை மட்டும் வணங்கினார்கள்.


அவர்களின் வழியில் வருகிறேன், நான் சாமி என்று கூறுபவர்களை நம்பி பணத்தை வாரியிறைக்கும் சமூகம் எப்போது திருந்தப்போகிறது. இப்படி எத்தனையோ பதிவுகள் வந்துவிட்டன. ஆனால் போலிகளை நம்பி ஏமாறும் கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. போலிச்சாமிகளை சனம் போகத்தானே செய்யுது. அரசாங்கம் இருக்குத்தானே போலீஸ் இருக்குத்தானே அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை சொல்லிக்குற்றமில்லை, அவர்கள் போலிகளைக் கைது பண்ணவோ ஏன் விசாரணைகூட செய்யமுடியாத படி மேலிடத்து அதிகாரிகள் போலீசின் கைகளை கட்டிப்போடுகிறார்கள், அப்படி அதிகாரம் கிடைத்தாலும் ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டால் மதக்கலவரம் வந்துவிடும் என்ற பயம்.


இவற்றுக் கெல்லாம் ஒரே தீர்வுதான் இருக்கிறது. மக்கள் திருந்தணும் அல்லது போலிகள் திருந்தணும். போலிச்சாமிகள் திருந்துவது சாத்தியமல்ல, மக்களே தயவு செய்து இனி பிள்ளையார் முருகன் என்று கோயிலில் இருக்கிற சாமிகளை கும்பிடுங்கள். மனிதனை வணங்குவதென்றால் தாய் தந்தையை வணங்குங்கள். கண்ட கண்ட கேவலங்களை அல்ல...

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. எவ்வளவுக்கெவ்வளவு இவர்கள் பிழையானவர்களோ அதேயளவு மக்களும் குற்றவாளிகள், பிழையானவர்கள் தான்...

  இவர்கள் பிழை செய்வதை அறிந்தும் அறியாமல் இருக்கும் மக்களுக்கு இனியாவது உறைக்கிறதா பார்ப்போம்.

  எனக்கு இந்தச் சம்பவம் பெரிய ஆச்சரியத்தைத் தரவில்லை.
  இது உங்கெல்லாம் வழமையென்று நான் அறிவேன்.

  இனி யாராவது கொம்மா பகவான், கொக்கா பகவான் ஆத்தா பகவான் என்று கிளம்பி வரட்டும் பார்த்துக் கொள்கிறேன்...

 1. ////இவற்றுக் கெல்லாம் ஒரே தீர்வுதான் இருக்கிறது. மக்கள் திருந்தணும் அல்லது போலிகள் திருந்தணும். போலிச்சாமிகள் திருந்துவது சாத்தியமல்ல, மக்களே தயவு செய்து இனி பிள்ளையார் முருகன் என்று கோயிலில் இருக்கிற சாமிகளை கும்பிடுங்கள். மனிதனை வணங்குவதென்றால் தாய் தந்தையை வணங்குங்கள். கண்ட கண்ட கேவலங்களை அல்ல.////

  சாட்டையடி பவன்.

 1. //இவற்றுக் கெல்லாம் ஒரே தீர்வுதான் இருக்கிறது. மக்கள் திருந்தணும் அல்லது போலிகள் திருந்தணும். போலிச்சாமிகள் திருந்துவது சாத்தியமல்ல, மக்களே தயவு செய்து இனி பிள்ளையார் முருகன் என்று கோயிலில் இருக்கிற சாமிகளை கும்பிடுங்கள். மனிதனை வணங்குவதென்றால் தாய் தந்தையை வணங்குங்கள். கண்ட கண்ட கேவலங்களை அல்ல.//

  ரிப்பீட்டேய்!

 1. Good job SUN TV..

  Will SUN TV

  Identify psudo politicians?

  Identify People doing food adulteration?

  Identify People telecast wrong news.

  Identify people killing innocent people for their family problem.

  SUN TV is not ready to create awareness to reduce global warming.

  No one is dare to ask this...
  All people are affected by above points...

  SUN TV bombarding with sex related programs...

 1. ஐயா சாமின்னு சொல்லுவதெல்லாம் ஒன்றும் இல்லை உலகத்தில.

  சும்ம நீங்களும் முருகனை போய் கும்பிடுங்க அவன் அண்ணன் விநாயகனை போய் கும்பிடுங்கன்னு சொல்லாதீங்க.

  சாமியே இல்லை.

  பூமி சூரிய மண்டலத்தில இருக்கு. அதை சுற்றி கோடிக்கணக்கான நட்சித்திரங்கள் இருக்கு.

  இரண்டு நாட்களுக்கு முன்னால் கூட ஒரு சூரியனை கண்டு பிடித்திருக்கிறார்கள் நமது விஞ்ஞானிகள்.

  அதனால் நம்மால ஆயிரக்கனக்கான வருஷமாக நம்ம்முன்னோர்கள் சாமி சாமி என்கிற சித்தாந்தத்தை கூறி வந்தார்கள். அது கடந்த 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டில அறிவியலின் வளர்ச்சி அபிரிமிதமாக இருந்த காரணத்தால் எல்லா விஷயத்தையும் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்.

  பூமி எப்படி தோன்றியது அதைச் சுற்றி என்ன என்ன கொள்கள் எல்லாம் இருக்கிறது. மனிதன் எப்படி தோன்றினான் அவன் எப்படி பரிணாம வளர்ச்சி பெற்றான் என்பதை பற்றி எல்லாம் அதைத்தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே.

  டார்வின் பரிணாம கொள்கையையே நிறைய வருடங்களாக யாருமே ஏற்றுக் கொள்ளப் படவில்லையே. அப்படி இருக்கையில் பல ஆயிர வருஷமா நம் முன்னோர்கள் சொல்லி கொண்டிருந்த அந்த சாமி என்கிற விஷயத்தை எப்படி மறப்பார்கள் போலி என்று நினைப்பார்கள்.

  சாமி என்கிற விஷயம் இன்னும் இரண்டு மற்றும் மூன்றாயிரம் வருஷங்கள் ஆகும் பெரும்பாலானோர் மறுப்பதற்கும் அது மறப்பதற்கும்.

  முவாயிரம் வருடங்கள் கழித்து நம்முடைய சந்ததிகள் வரலாற்றை புரட்டி படிக்கும் போது நம் முன்னோர்கள் இப்படியெல்லாம் கடவுள் நம்ம்பிக்கைக் கொண்டு மத வேறுபாடு கொண்டு ஒருத்தனை அடிமை படுத்திக் கொண்டும் ஒரு சமூகம் மற்ற சமூகத்தை ஆட்டி படைத்து கொண்டும் இருந்திருக்கின்றன என்பதையெல்லாம் படித்து சிரிப்பார்கள்.

  அதனால் நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்காவது உண்மையான போலித்தனமில்லாத ஆன்மிகம் என்ற போர்வையில் வளர்க்காமல் நல்ல சிந்தனையுள்ள குழந்தைகளாக வளர்க்க மற்றும் வளர என் வாழ்த்துக்களை கூறி எனக்கு இப்படி ஒரு பதிவைப் போட்டு அதற்கு இப்படி ஒரு பின்னூட்டத்தை எழுதவைத்த தங்களுக்கு மற்றும் ஒரு முறை நன்றி கூறிக் கொள்கிறேன்.

 1. மக்களோ , சாமியாரோ திருந்த வேண்டியது அவசியமில்லை., ஒரு வேலை நான் சொல்வது சரியில்லை எனில், இந்த விசயத்தில் நாம் என்ன செய்தோம் (கற்றோம்) என்று பார்போம்.!

  கும்பகோணம் பள்ளிகூட தீ விபத்து.,

  ஸ்ரீரங்கம் திருமண மண்டபம் விபத்து.,

  சுனாமி போன்ற விபத்துகளில் நாம்.,

  மாணவிகள் பஸ்ஸில் எரித்த வழக்கு.,

  பிரேமானந்தா.,

  கோயம்புத்தூர் மத கலவரங்கள் \விநாயக ஊர்வல கலவரங்கள்.,

  காசு கொடுத்தால் உடனடி கற்பக தரிசனம்.,

  இன்னும் பல.,

  தயவு செய்து திருந்திவிடாதீர்கள் ., லஜ்ஜை இல்லாமல் வாழ்வது நமது பிறப்புரிமை !

 1. Unknown Says:

  ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே தண்டனைக்கு உரியவர்கள்
  அதுமட்டும் இல்லாமல் இந்த சாமியார் பற்றி இதுவரை நான் அறியேன் பருவா இல்லை பயல் ப்ரிபல்யம் ஆகிட்டு போறான்.
  நடிகையை பற்றி கதைக்க முடியாது பெரும்பாலானோர் இந்த கேஸ் தான்

 1. Senthil Says:

  செக்ஸ் வச்சா போலி சாமியாரா?
  போடாங்க...
  Ha Ha Ha

 1. சரியான நேரத்தில் அம்பலப்படுத்தப் பட்டிருக்கிறார் இதை சரியான முறையில் பயன்படுத்தி அரசு சகல ஆசிரமங்களையும் கண்காணிக்கும் நடைமுறை ஒன்றை கொண்டு வந்தால் நலம்.

 1. கருணையூரான் Says:

  மற்ற சாமிமாரே இதை ஒரு பாடமாக வைத்து கவனமாக செயற்படுங்கள்....lol

 1. Unknown Says:

  சாமியார் மேல கோபமில்லிங்க இதுக்கு பிறகும் வேற சாமியார தேடி போற இந்த கேவலம் கேட்ட மனிசன்களை நினைச்சா கோபம் கோபமா வருகுது

  அதுலயும் இந்த இளம் பொண்ணுங்க என்ன மொக்குகளோ தெரியாது (பொறாமைதான் நமக்கு மாட்டாம)

 1. Unknown Says:

  puthar,yesu,nabigal kalathil camera kandupitika patavillai.

 1. இடம் ஒண்டு வேக்கண்ட் ஆயிட்டு நானும் நீயும் ஒரு ஆச்சிரமத்தை திறப்பம் வாதம்பி.. பிறகு நீ ஏதாவது கணக்கு வழக்கு பிரச்சனையில கமராவைக்கொண்டந்து காச்சட்டைக்குள்ள வச்சிடாத..

 1. Bavan Says:

  கன்கொன் அண்ணா,

  //இனி யாராவது கொம்மா பகவான், கொக்கா பகவான் ஆத்தா பகவான் என்று கிளம்பி வரட்டும் பார்த்துக் கொள்கிறேன்...//

  ஹாஹா அடி பின்னிரமாட்டம்..:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ******

  யோ அண்ணா,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

  ******

  நாமக்கல் சிபி,

  நன்றி சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ******

  Balu,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Bavan Says:

  பிரதிபலிப்பான்,

  நீங்கள் சொல்வது சரியோ பிழையோ ஆனால் கடவுள் என்பது மக்களின் நம்பிக்கை, சாமியாரை கும்பிடுதல் என்பது அவர்களின் மூடநம்பிக்கை, நம்பிக்கையை விட மூடநம்பிக்கை கொடியது... நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ******

  வெள்ளிநிலா ஷர்புதீன்

  //தயவு செய்து திருந்திவிடாதீர்கள் ., லஜ்ஜை இல்லாமல் வாழ்வது நமது பிறப்புரிமை !//

  லஸ்ஜை என்பது என்ன விளங்கவில்லை...

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ******
  ஆகீல் முசம்மில்

  நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)

  ******
  Goretti Valeso

  நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)

 1. Bavan Says:

  தர்ஷன் ,

  //சரியான நேரத்தில் அம்பலப்படுத்தப் பட்டிருக்கிறார் இதை சரியான முறையில் பயன்படுத்தி அரசு சகல ஆசிரமங்களையும் கண்காணிக்கும் நடைமுறை ஒன்றை கொண்டு வந்தால் நலம்.//

  பார்க்கலாம் எக்கச்சக்க கேஜ் போட்டிருக்கிறார்களாம் நித்தி பிடிபட்டா வெளியே வாறது கஷ்டம்தான்...;)

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ******
  கருணையூரான்

  //மற்ற சாமிமாரே இதை ஒரு பாடமாக வைத்து கவனமாக செயற்படுங்கள்....lol//

  ஹீஹீ அதுதான் எல்லாரும் மாட்டீட்டாங்களே...

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ******

 1. Bavan Says:

  A.சிவசங்கர்

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ******

  pillaival

  //puthar,yesu,nabigal kalathil camera kandupitika patavillai//

  ஆனால் அது கலியுகமில்லை அந்தக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் பேராரச பிடித்தவர்களுமில்லை..

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ******

  புல்லட் அண்ணா,

  //இடம் ஒண்டு வேக்கண்ட் ஆயிட்டு நானும் நீயும் ஒரு ஆச்சிரமத்தை திறப்பம் வாதம்பி.. பிறகு நீ ஏதாவது கணக்கு வழக்கு பிரச்சனையில கமராவைக்கொண்டந்து காச்சட்டைக்குள்ள வச்சிடாத..//

  விளங்கீரும்.... பிறகு நில சல்வார் அது இதெண்டு மாட்டினீங்கெண்டா பதிவெழுதி பட்டையடிச்சிருவாங்கள்..:p

  ஆனா கஷ்டம் அண்ணே அந்தத்தெழிலில இப்ப செம போட்டி..:p

  நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்