Related Posts with Thumbnails
நடுச்சாமம் 6 மணி (அதிகாலை 9 மணிக்கு எழும்பும் எங்களுக்கு அது நடுச்சாமம் தானே..:p) நண்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு..


அந்தநேரம் அந்திநேரம் கண்பார்த்து........(ஹிஹி நம்ம ரிங்டோன்)


ஹலோ என்னடா சொல்லு....(தூக்கக்கலக்கத்துடன்)
டேய் வெளிக்கிட்டியா?
என்ன? எங்க??
டேய் காளிகோயில் தேர் வரலயா நீ?... ஓ... இதோ வெளிக்கிட்டன் நீ டக்கெண்டு வா..
சரிசரி... 6.30க்கு வருவன் ரெடியா இரு..
ok bye..


ஒருவாறு 7.15க்கு வந்தவன் என்னையும் ஏற்றிக்கொண்டு காளிகோயிலுக்குச்சென்றான். அங்கே கோயிலில் போய் பாக்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு செருப்பையும் ஒளித்துவைத்துவிட்டு கோயிலுக்குப் போகலாம் என்று கோயில் வீதியில் காலடி வைத்தால் கமகம என ஒரு வாசனை, என்னடான்னு பார்த்தா யாரோ மப்பும் மந்தாரமுமாக அடித்த வெயிலும் பட்டுத்தெறித்துக் கண்ணைக்குத்தும் அளவுக்கு மினுமினுப்பான சாறியுடன் ஒரு அம்மணி வந்து இறங்குகிறார். 
ஹச்சும்....
வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்த என் கவனத்தை அந்த சென்ட் வாசனை முக்கில் ஏறி, தாங்கமுடியாமல் தும்மிய நண்பனின் தும்மல் கலைத்தது.


அங்கு ஒரு சிங்கள இளைஞர் தண்ணீர்ப்பந்தலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து அழகூரில் பூத்தவளே.... என்று கர்ணகொடூரமாகப்பாடி பெண்களுக்கு நக்கலடித்துக்கொண்டிருந்தார்


அங்கே மூன்று தேர்கள் நிறுத்தப்பட்டிருந்தன, இன்னும் சாமி வெளியே வரவில்லை. சரி இருக்கிற கூட்டத்தைப்பார்த்தால் இப்போதைக்கு உள்ளே போக முடியாது. அன்னதான மண்டபப்பக்கம் சற்று காத்தோட்டமாக இருக்கவே அங்கே போய் உட்கார்ந்தோம்.(தேர் சுத்தின பிறகுதான் சாப்பாடு போடுவாங்க...:p)
என்னா கூட்டம் என்னா கூட்டம்...அவ்வ்


அங்கு இளம்வயதினர், என்போன்ற பச்சிளம்பாலகர்கள், நடுத்தர வயதினர் என பலரும் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. நகைக்கடை விளம்பரத்தில் வரும் சினேகா கூடப்போட்டிராத அளவுக்கு நகைகள் போட்டிருந்தனர், பளபளக்கும் ஆடைகள், அட இதுகூடப்பரவாயில்லை அவர்கள் யாரென்றுகூட கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு கலர்கலராகப் பல பெளடர்களை கொண்டு முகத்தை மூன்று இஞ்ச் பெரிதாக்கக்காட்டியிருந்தனர்.(ஹீஹீ மேக்கப்புங்க..) மனதுக்குள் பாடிக்கொண்டேன் ஒரு கூடை சன்லைட் ஒருகூடை மூன்லைட்..


அன்று முதன்முறையாக கடவுளிடம் பொதுநல நோக்கில் வேண்டுகோள் விடுத்தேன் கடவுளே மழைபெய்யணும் என்று, அப்பதானே மேக்கப் கலைஞ்சு யார்யார் வந்திருக்காங்கன்னு கண்டுபிடிக்கலாம்.ஆனால் கடவுளுக்கு என்மீது கோபமோ, அல்லது மழைபெய்தால் மேக்கப் போட்டவர்கள் எல்லாரும் மழையில் நனைந்து கலைந்த மேக்கப்புடன் கோயிலுக்குள் ஓடிவந்துவிட்டால் கடவுள் தன்நிலை என்னவாகும் என்று பயந்தாரோ தெரியல கடைசிவரை மழைபெய்யவில்லை.


ஆனால் சூரியன் மழைபெய்து மேக்கப் கலையும் கொடுமையை சற்று தாமதமாக வேறுவிதமாகச் செய்தாலும் கச்சிதமாக செய்தார். நான் கோயிலுக்கு போகும் போது பார்த்த யாரையும் திரும்பி வரும்போது காணவில்லை, அடித்த வெயிலில் மூன்று இஞ்ச் மெலிந்த முகத்துடன் பலர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர் ஹீஹீ மேக்கப் கலைஞ்சிடிச்சுப்பா.


திரும்பிவரும்போது அதே சிங்கள இளைஞர் பாடிக்கொண்டிருந்தார் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. ஹி ஹி......

  அதுசரி, நீங்களும் கொஞ்சம் மொத்தமாப் போய் மெல்லிசாத் திரும்பி வந்தியளாம்?

  பச்சிளம் பாலகன் பச்சிளம் பாலகன் எண்டு சொல்லிச் சொல்லி மேக் அப் போட்ட அன்ரிமாருக்குப் பின்னால திரியிறாய் என? :P

 1. Bavan Says:

  // கன்கொன் || Kangon said...
  ஹி ஹி......

  அதுசரி, நீங்களும் கொஞ்சம் மொத்தமாப் போய் மெல்லிசாத் திரும்பி வந்தியளாம்?//

  என்னாதுது? இது வதந்தி.. பொய்... நான்.. ஹிஹி மொத்தமா?? ஐயோ ஐயோ... உரே காமடிதான் எங்களோட..:p

  //பச்சிளம் பாலகன் பச்சிளம் பாலகன் எண்டு சொல்லிச் சொல்லி மேக் அப் போட்ட அன்ரிமாருக்குப் பின்னால திரியிறாய் என? :P//

  யோவ்... என்னகொடுமை கோபி அண்ணே இது... அவ்வ்வ்வ்... மக்களே.... இது எதிர்க்கட்சியின் சூழ்ச்சி நம்பாதீர்கள்..:p

 1. Subankan Says:

  அருமையான உரைநடை பவன்.

  //நடுச்சாமம் 6 மணி (அதிகாலை 9 மணிக்கு எழும்பும் எங்களுக்கு அது நடுச்சாமம் தானே..:p)//

  இதிலிருந்து கதையின் நாயகன் இரவில் தாமதமாகத் தூங்குபவர் என்பதை அழகாக்க் காட்டியிருக்கிறீர்கள்.

  //அங்கே கோயிலில் போய் பாக்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு செருப்பையும் ஒளித்துவைத்துவிட்டு கோயிலுக்குப் போகலாம் என்று கோயில் வீதியில் காலடி வைத்தால்//

  பார்க்கிங்கில் என்ன வண்டியை வைத்தீர்கள் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளீர்கள். கதையின் டிவிஸ்டுக்கு மிகவும் உதவுகிறது இது

  //வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்த என் கவனத்தை அந்த சென்ட் வாசனை முக்கில் ஏறி, தாங்கமுடியாமல் தும்மிய நண்பனின் தும்மல் கலைத்தது.
  //

  இதன்மூலம் பெண்களை வாயைப்பிளந்து பார்ப்பவர் ஹீரோ என்பதையும், அவரது நண்பனின் தும்மலின் சத்தத்தையும் தொட்டிருக்கிறீர்கள். வந்திறங்கிய பெண்ணின் வனப்பை கூறிய இடத்தில் சிறிது மயங்கித்தான்விட்டேன்.

  //அங்கு ஒரு சிங்கள இளைஞர் தண்ணீர்ப்பந்தலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து அழகூரில் பூத்தவளே....//

  அட, அட, அட. ஒரு சிங்கள இளைஞர் தமிழ்ப்பாடல் பாடும் காட்சியைவிட வேறு எவ்வாறு அழகாக தமிழின் சிறப்பை எடுத்தியம்புவது?

  //அன்னதான மண்டபப்பக்கம் சற்று காத்தோட்டமாக இருக்கவே அங்கே போய் உட்கார்ந்தோம்//

  இந்த வரிகள் காரியத்தில் கண்ணாக இருக்கும் உங்கள் அக்கறைக்கு எடுத்துக்காட்டு

  // நகைக்கடை விளம்பரத்தில் வரும் சினேகா கூடப்போட்டிராத அளவுக்கு நகைகள் போட்டிருந்தனர்//

  உங்கள் உவமிப்பு எனக்குப் பிரமிப்பைத் தருகிறது

  //முகத்தை மூன்று இஞ்ச் பெரிதாக்கக்காட்டியிருந்தனர்//

  பார்வையாலேயே அழவிடும் பாங்கு. தமிழ் சினிமாவின் நாயகர்களுக்குப்பிறகு இப்படி ஒருவனை இப்போதுதான் காண்கிறேன்.

  //கடவுளிடம் பொதுநல நோக்கில் வேண்டுகோள் விடுத்தேன் கடவுளே மழைபெய்யணும் என்று//

  மழை வேண்டி கடவுளை நினைப்பதை நினைத்தால் புல்லரிக்கிறது எனக்கு

  // நான் கோயிலுக்கு போகும் போது பார்த்த யாரையும் திரும்பி வரும்போது காணவில்லை, அடித்த வெயிலில் மூன்று இஞ்ச் மெலிந்த முகத்துடன் பலர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர் //

  மீண்டும் அந்த அவதானிப்புத்திறன் வெளிப்படுகிறது.

  இவை எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டுவதாக இடப்பட்ட வேபிள்கள்

  //ஃபிகர், அனுபவம், கதை, காமடிகள், கோயில், சிங்களம், தேர், பாட்டு, மொக்கை//

  வாசகனுக்கு சிரமத்தைக் கொடுக்காமல் முழுக் கதையின் சாராம்சத்தையும் லேபிள்களில் காட்டியிருக்கும் உங்கள் திறனை எண்ணி எண்ணி வியக்கிறேன்.

  வாழ்க வளர்க

 1. ROFL @ Suba Anna's comment.....

 1. பவன்!
  சந்தேகம் ஒன்று!

  நீங்கள் கோவிலுக்கு செருப்புத் திருடத்தான் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன... உண்மையா? :P

 1. Bavan Says:

  கன்கொன் அண்ணா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  சுபா அண்ணா,
  //அருமையான உரைநடை பவன்.//

  என்னாதுதுதுது?

  //இதிலிருந்து கதையின் நாயகன் இரவில் தாமதமாகத் தூங்குபவர் என்பதை அழகாக்க் காட்டியிருக்கிறீர்கள்.//

  ஆங்ங்....

  //பார்க்கிங்கில் என்ன வண்டியை வைத்தீர்கள் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளீர்கள். கதையின் டிவிஸ்டுக்கு மிகவும் உதவுகிறது இது//

  வேணாம்.....

  //இதன்மூலம் பெண்களை வாயைப்பிளந்து பார்ப்பவர் ஹீரோ என்பதையும், அவரது நண்பனின் தும்மலின் சத்தத்தையும் தொட்டிருக்கிறீர்கள். வந்திறங்கிய பெண்ணின் வனப்பை கூறிய இடத்தில் சிறிது மயங்கித்தான்விட்டேன்.//

  வேணாம்.......

  //அட, அட, அட. ஒரு சிங்கள இளைஞர் தமிழ்ப்பாடல் பாடும் காட்சியைவிட வேறு எவ்வாறு அழகாக தமிழின் சிறப்பை எடுத்தியம்புவது?//

  வலிக்குது.....

  //உங்கள் உவமிப்பு எனக்குப் பிரமிப்பைத் தருகிறது//

  அழுதிருவேன்...

  //பார்வையாலேயே அழவிடும் பாங்கு. தமிழ் சினிமாவின் நாயகர்களுக்குப்பிறகு இப்படி ஒருவனை இப்போதுதான் காண்கிறேன்.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

  //இவை எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டுவதாக இடப்பட்ட வேபிள்கள் வாசகனுக்கு சிரமத்தைக் கொடுக்காமல் முழுக் கதையின் சாராம்சத்தையும் லேபிள்களில் காட்டியிருக்கும் உங்கள் திறனை எண்ணி எண்ணி வியக்கிறேன்.

  வாழ்க வளர்க//

  அவ்வ்வ்.... என்னா வில்லத்தனம்.... கொலைவெறிப்பின்னூட்டம் போட்டமைக்கு மிக்க நன்றி... பின்னூட்டத்துக்கூட உக்காந்து யோசிப்பீங்களோ....

  நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்....;)

  ஜாக்கிருத.... என்னச்சொன்னன்...அவ்வ்வ்

 1. Subankan Says:

  // கன்கொன் || Kangon said...
  பவன்!
  சந்தேகம் ஒன்று!

  நீங்கள் கோவிலுக்கு செருப்புத் திருடத்தான் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன... உண்மையா? :P
  //

  கதையை சரியாகப் படிக்காமல் பின்னூட்டிக்கொண்டிருக்கும் உங்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது எனக்கு.

  //கோயிலில் போய் பாக்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு செருப்பையும் ஒளித்துவைத்துவிட்டு//

  இந்த வரிகள் செருப்புத் திருடனுக்கான சாட்டை அடி என்பதை உணரவில்லையா நீங்கள்?

 1. Bavan Says:

  /// கன்கொன் || Kangon said...
  பவன்!
  சந்தேகம் ஒன்று!

  நீங்கள் கோவிலுக்கு செருப்புத் திருடத்தான் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன... உண்மையா? :P///

  யோவ் நான் காலில் அணிந்து கொண்டு போன பாட்டா கூட இல்லாம வீட்ட வந்திருக்கிறன்... நீங்க செருப்புத்திடப்போறன் எண்டுறீங்களே...

 1. Bavan Says:

  @கன்கொன்,

  ///////கதையை சரியாகப் படிக்காமல் பின்னூட்டிக்கொண்டிருக்கும் உங்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது எனக்கு.

  //கோயிலில் போய் பாக்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு செருப்பையும் ஒளித்துவைத்துவிட்டு//

  இந்த வரிகள் செருப்புத் திருடனுக்கான சாட்டை அடி என்பதை உணரவில்லையா நீங்கள்?//////


  ரிப்பீட்டுடுடுடு...

 1. //கதையை சரியாகப் படிக்காமல் பின்னூட்டிக்கொண்டிருக்கும் உங்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது எனக்கு.//

  ஆனால் அண்ணல் பேஸ்புக்கில் தான் செருப்புத் திருடத்தான் செல்கிறவர் என்பதை ஒத்துக் கொண்டுள்ளாரே? :P

  http://img514.imageshack.us/img514/129/sp32248.jpg

  எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி இவர் செருப்பைக் கழற்றுவது போல் கழற்றிவைத்துவிட்டு மற்றவர்களின் செருப்புக்களை திருடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...

 1. Subankan Says:

  மன்னிக்கவும் கங்கோன், இந்தக் கதையைப் படித்ததும் நான் ஒரு உன்மத்த நிலைக்குச் சென்றுவிட்டேன்(நன்றி - சாரு). என்னால் கதையின் நாயகனைத்தாண்டி, எழுத்தாளனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி சிந்திக்க முடியவில்லை

 1. LMAO..............

 1. அன்று முதன்முறையாக கடவுளிடம் பொதுநல நோக்கில் வேண்டுகோள் விடுத்தேன் கடவுளே மழைபெய்யணும் என்று, அப்பதானே மேக்கப் கலைஞ்சு யார்யார் வந்திருக்காங்கன்னு கண்டுபிடிக்கலாம்.//

  ஆங்....முடியலை.....
  ‘’ஏற்கனவே நண்பர் ஒருவர் விமர்சன மழையை அனுப்பி இருந்ததால் நான் விமர்சத்திலிருந்து நழுவி விடுகிறேன்.


  ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளரின் அற்புதமான உரை நடையும், தான் சொல்ல வந்த விடயத்தினை நேர்த்தியாகச் சொல்லிச் செல்வதோடு பல தரப்பட்ட ரசனையுடைய வாசகர்களைக் கவரும் விதத்தில் கதையினைக் கலக்கல் பம்பல் கலந்து நகர்த்திச் செல்வதுவும் உங்களின் எழுத்தாற்றலின் நுட்பங்களைக் காட்டி நிற்கிறது.
  அடித்த வெயிலில் அடிக்காத மழை இவை இரண்டும் கற்பனை வளத்திற்கேற்றாற்போலச் சாரல் தூவி நனைத்துச் சென்றுள்ளது என்று கூறலாம்.

 1. என்ன பாஸ் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க… புல்லரிக்குது…

 1. Ramesh Says:

  மெலிஞ்சு போயிட்டான் பவன் வித்தியாசமாக இருக்கு பவன் தொடருங்கள்

 1. Unknown Says:

  நட்பும் தோழமையும் தவிர்த்து, வேறென்ன வேண்டும் வாழ்வில் நல்ல பதிவு நண்பா தோழமையுடன் mullaimukaam.blogspot.com

 1. பாருடா நான் ஊருல இல்லை எண்டா மழை கூடவா ஊருல இருக்காது!!! ஒரு வேளை நான் நல்லவனா???

  நான் இந்த முறை தேரில் மிஸ்ஸிங்!!!

  பவன் எப்பவும் 5 inch த்டிப்புலதான் மேக்கப் போடுவாங்க இந்த தடவ விலைவாசி கூடி 2 inch குறஞ்சுட்டு போல!!!

  பவன் கலக்கல்..... தொடரவும்!!!!

 1. //நீங்கள் கோவிலுக்கு செருப்புத் திருடத்தான் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன... //

  கான்கொன் அண்ணா சொல்லுறது தப்பு!! இதை வன்மையாக கண்டிக்கிறேன்....

  பவன் ரொம்ப நல்லவர்.... அவர் கோவில் தவிர பீச் போன்ற பொது இடங்களில் விலை உயர்ந்த சாண்டில் மட்டுமே திருடுபவர்..!!

  பவன் எப்படி உன்ன காப்பாத்திட்டன் மச்சான்

 1. kippoo Says:

  ///////கடவுளே மழைபெய்யணும் என்று, அப்பதானே மேக்கப் கலைஞ்சு யார்யார் வந்திருக்காங்கன்னு கண்டுபிடிக்கலாம்/////

  மேக்கப் இல்லாத பெண்களைத்தான் பார்ப்பீர்களோ?

 1. பெண்கள் முக அலங்காரம் செய்வதைப் பற்றி பிற்போக்குரீதியாகக் கருத்துத் தெரிவித்த பவனைக் கண்டித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது....

 1. //கன்கொன் || Kangon said...
  பெண்கள் முக அலங்காரம் செய்வதைப் பற்றி பிற்போக்குரீதியாகக் கருத்துத் தெரிவித்த பவனைக் கண்டித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது..//

  அண்ணா தலைமை பொறுப்பு எதிர்கால மகளிர் அமைச்சரா??? உங்கள் பணி அங்கு எங்கு??? கூகிள் குழுமத்தில் முற்றாக அறிவிக்கவும்!!!! உங்கள் மேல வழக்கு தாக்கல் செய்ய போகிறார்கள்!!!

 1. தலைப்பு நன்றாக இருக்கிறது.

 1. Bavan Says:

  கன்கொன் அண்ணா, சுபா அண்ணா,

  ஐயா சாமி... நித்தியானந்தா.. அம்மா பகவானே..:p

  கும்முகும்முன்னு கும்மினதுக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..:p

  ***

  கமல் அண்ணே,

  நீங்க என்ன வச்சு காமடியா சொல்லத்தானே...:p

  ஹீஹீ நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  வரோ அண்ணா,

  ஹீஹீ... இண்டைக்கும் ஒரு இடத்துப் போகிறேன் முடிந்தால் இன்னொரு மேக்கப் பதிவு எழுதிறன்..:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  றமேஸ்அண்ணா,

  //மெலிஞ்சு போயிட்டான் பவன் வித்தியாசமாக இருக்கு பவன் தொடருங்கள்//

  சீச்சீ என்ட முகத்தில இருக்கிற பருவுக்கு மேக்கப் ஒண்டுதான் குறைச்சல் நீங்க வேற..

  என்னாது தொடரவா?? அவ்வ் தாய்குலத்திட்ட அடிவாங்க வைக்கிதெண்டு முடிவே பண்ணிட்டீங்களா..

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Bavan Says:

  JKR,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  அனுதினன்,

  //பவன் எப்படி உன்ன காப்பாத்திட்டன் மச்சான்//

  ரொம்ப நன்றி.. படுபாவி... அவ்வ்வ்

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)


  ***

  kippoo,

  //மேக்கப் இல்லாத பெண்களைத்தான் பார்ப்பீர்களோ?//

  சீச்சீ நானேன் பெண்களைப்பாக்கணும??
  அப்ப ஏன்டா பாத்தாய்ன்னு நீங்க கேக்கலாம்..

  ரோட்டுல வேசம் போட்டு யாராவது பாக்கிறதில்லையா அதுமாதிரித்தான்..:p

  நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)


  ***

  archchana,

  //தலைப்பு நன்றாக இருக்கிறது//

  அப்ப பதிவு சரியில்லையா??..:p

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Bavan Says:

  // கன்கொன் || Kangon said...
  பெண்கள் முக அலங்காரம் செய்வதைப் பற்றி பிற்போக்குரீதியாகக் கருத்துத் தெரிவித்த பவனைக் கண்டித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது//

  எப்படி ஆர்ப்பாட்டம் நல்லபடியா முடிஞ்சுதா??:p

  இதை கடுப்பைக்கிளப்பும் பெண்கள் பார்ட் "__" ஆகக்கருதினாலும் பதிவுகள் தொடரும்...:p

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்