Related Posts with Thumbnails
தற்போது IPL போட்டிகளில் புதிதாக இரு அணிகள் வாங்ப்பட்டது அனைவரும் அறிந்ததே இந்த வகையில் எமது பதிவர்களும் அந்த அணிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளனர். அடுத்தமுறை ஏலத்தில் இவர்களும் பங்குபற்றுவர்.


எமது அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர். அதிரடி ஆட்டக்காரர் எப்படிப்பட்ட பந்துகளையும் பயமின்றி அடித்து ஆடுபவர். பின்னூட்ட பந்துகளை அநாயாசமாக வெளுத்து வாங்குபவர். அண்மையில் ருவிட்டருடன் ஆட்ட நிர்ணய சர்ச்சையில் சிக்கிய இவர் குற்றம் நிரூபிக்கப்படாததையடுத்து இப்போது பல ஆனந்தா சுவாமிகளால் பதிவணிக்குள் திரும்பியிருக்கிறார். ஆனால் தான் போர்மை இழந்து தவிப்பதாக அறிவித்திருந்த போதிலும், தற்போது சில நாட்களுக்கு முன்னர் இவர் ஆடிய ஆட்டம் இவர் போர்முக்குத்திரும்பியதைக்குறிப்பதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான் அரசியலுக்கு வரவிருப்பதாகவும் ஆனால் கிறிக்கற்டையும் தொடர்வேன் என்றும் அண்மையில் இவர் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இவரும் எமது அணியின் ஆரம்பத்துடுப்பாட்டத் துடுப்பாட்ட வீரர். பல செஞ்சரிகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரர். ஆனால் தற்போது விஷேட பயிற்சிக்காக லண்டனுக்கு சென்றிருக்கிறார். இவரை அனைவரும் ஹாட் பிளேயர் என அழைப்பார்கள். தனது வேகமான துடுப்பாட்டத்துக்கு காரணம் சூப் அருந்துவதுதான் என்று அடிக்கடி கூறும் இவருக்கு சிவப்பு சட்டை என்றால் ராசியாம். தனது இரகசியங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் உளறி அடிக்கடி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வார்.


இவரின் துடுப்பாட்டத்தைக்கண்ட STB(Srilanks Tamil Blogger) தற்போது வளர்ந்துவரும் அதிரடிதுடுப்பாட்ட வீரர் பட்டம் கொடுத்து கெளரவித்தது குறிப்பிடத்தக்கது. அணிக்கு ஒரு பக்கம் விக்கட்டுகள் சாய்கின்றபோதிலும் தனது அதிரடி மூலம் அணியை தூக்கி நீறுத்தக்கூடியவர். ஆனால் இவர் அடிக்கடி டயர்டாகுவது இவரின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என இவரின் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.


புளொக்கர்ஸ் அணித்தலைவர், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். மஹேல ஜயவர்தன போன்ற கிளாஸ் பிளேயர்.(:p) அணி விக்கட் சரிவுகளை எதிர்கொள்ளும் போது தனிமனிதனாக நின்று போராடுபவர். இவரை அனைவரும் மினி ஸ்கோர் போர்ட் என்று அழைப்பார்கள் காரணம் போட்டி நடைபெறும் போது ரன்னில் ஏதாவது குழறுபடி நடந்தால் உடனடியாக முதலாவது பந்திலிருந்து விஜயகாந் பாணியில் ஸ்கோர்களை அள்ளிவீசுவார்.


கடவுள் பக்தி அதிகம் நிரம்பிய இவர், எமது அணியின் மிடில் ஓடர் பாட்ஸ்மன். ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வதற்கு முன்னர் சாமி கும்பிட்டு தேங்காய் உடைத்து நேரத்தை வீணாக்குவதால் STB அதிகாரிகளால் தண்டிக்கப்படுபவர், வீரர்களுக்கு ஐஸ் கிறீம் வாங்கிக்கொடுப்பவர். கிறிக்கற் தனது பார்ட்டைம் வேலைதான் டாக்டராகுவதே (போட்டுத்தள்ளுவதே)எனது குறிக்கோள் என்று தற்போது படிக்கச் சென்றுவிட்டார்.


இவர் மலையகம் தந்த மைந்தன்(:p). இவர் தூரத்தில் இருப்பதால் அணிக் கூட்டங்களுக்கு வரும் போது நூடில்சையே இவரது பிரதான உணவாகக் கொண்டுள்ளார். அதனால் இவரை அனைவரும் யோவ் நூடுல்ஸ் என்று செல்லமாக அழைப்பார்கள். இவர் தான் தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ள மங்குஸ் BATஐ வைத்து எதிரணியை வெட்டிசாய்க்க தயாராக உள்ளதாக அறிக்கை விட்டுள்ளார்.


இவர் சிறந்த பந்துவீச்சாளர். ஆனால் தனது பந்து எறி போலொ என்று அடிக்கடி சந்தேகப்படுபவர். அதனாலே UMPIREடம் ப்ப்பிளீஸ்... நோபால் பிடிச்சுறாதீங்க நோபால் பிடிச்சுறாதீங்க என்று அடம் பிடிப்பவர். பெண்கள் என்றால் இவருக்கு ஆகாது, எனவே IPL போன்ற T20 போட்டிகளில் ஆண்களுக்கு சொந்தமான அணியில் மட்டுமே ஆடுவேன் என்று சபதமெடுத்துள்ளவரை புல்லட் வேகப்பந்து வீச்சாளர் என்று அழைப்பர்.


இவர் எமது அணியின் சிறந்த களத்தடுப்பாளர். மைதானத்தின் மின்கம்பத்துக்கு அருகில் செல்லும் பந்தைக்கூட பறந்து பறந்து பிடிக்கக்கூடியவர். அண்மையில் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது பந்தைப்பிடிக்கப்பாய்ந்தவர் கடலுக்குள் விழுந்து சுறாவைப்பிடித்து வந்ததாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவருக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சினை 7மணிக்குமேல் இவரால் விளையாட முடியாது(கண்ணில ஒரு பிரச்சனையும் இல்ல) ஏழுமணியானாலே என்னமோ போல ஆகிடுறார்.


இவர் தனக்கென ஒரு சொந்த பாணியை உருவாக்கி விளையாடி வருபவர். பஸ்சில் போகும் போது பார்க்கும் பலவிடயங்களைக்கூறி சிரிக்கவைத்து எதிரணி வீரர்களை ஆட்டமிழக்க வைப்பதில் வல்லவர். இதுதவிர கண்ணைக்குத்தும் கலர் ஆடைகளை அணிவதன் மூலம் எதிரணி வீரர்கள் பந்தை எதிர்கொள்வதைக் கட்டுப்படுத்தும் உத்தியைக்கண்டுபிடித்திருப்பவர். இதனால் STB இவரை மதுயிசம் என்ற புத்தகத்தை எழுதுமாறு கேட்டுக்கொண்டமைக்கிணங்க தற்போது புத்தகத்தை எழுதிவருவதால் போட்டிகளில் இவரைக்காண முடியவில்லை.


இவரும் அணியின் மூத்த வீரர், இவர் எப்படி அடிக்கப்போகிறார் என்று யாராலும் ஊகிக்க முடியாத நேரத்தில் ஒன்றுமே புரியாமல் அடித்தாடக்கூடியவர். தற்போது மதுயிசம் மது போட்டிளில் விளையாடாத காரணத்தால் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ஆதிரையஜசம் எனப்பெயரிட்டுள்ளார். கடந்தமுறை இலகுவாக ரன் அவுட்டான இவர் தான் போட்டிருந்த டீ-சேட்டில் யானைப்படம் போடப்பட்டிருந்ததால் ஓடமுடியாமல் போனது என ஆதிரையிசப்பதிலை வெளியிட்டுள்ளார்.


இவர் எமது அணியில் சிறந்த ஆல்ரவுண்டர். ஆனால் தனது பெட்டியில் சரக்கு வைத்திருந்து டுபாய் விமான நிலையத்தில் பிடிபட்டவர். ஆனால் அவர் அதைப்பாவிக்கவில்லை எனத் தெரிந்தது மீண்டும் அணிக்குள் இடம்பெற்றிருக்கிறார். இவர் பந்து வீசும் போது எதிரணி சிக்ஸ் அடித்தாலோ, சிங்கிள் எடுத்தாலோ I JUST... CAN'T BELIEVE THIS என்று கூறுபவர். அதற்கான காரணம் அவர் விண்ணைத்தாண்டி வருவாயோ போபியாவால் பாதிக்கப்பட்டிருப்பதுதான் என்று மருத்துவ அறிக்கைகள் முலம் தெரியவந்திருக்கிறது. இந்த போபியாவின் விளைவாக தற்போது பீமர் பந்துகளை வீசிவிட்டு மன்னிப்பாயா மன்னிப்பாயா என்று BATSMANனிடம் கேட்கிறாராம்.


இறுதியாக இவர்......... இவரைப்பற்றி நானே சொன்னா நல்லாவா இருக்கும்..ஹிஹிநீங்கள் போட்டுத்தாக்கியது

 1. நான் தான் முதலாவது..... :))))

 1. அதென்னது ஏதாவது கும்மியெண்டா நான் தான் முதலாவதா மாட்டுப் படுறது?
  அவ்வ்வ்வ்வ்...


  //அண்மையில் ருவிட்டருடன் ஆட்ட நிர்ணய சர்ச்சையில் சிக்கிய இவர் குற்றம் நிரூபிக்கப்படாததையடுத்து இப்போது பல ஆனந்தா சுவாமிகளால் பதிவணிக்குள் திரும்பியிருக்கிறார். //

  அவ்வ்வ்வ்...
  ஆனால் அணிக்கு மீண்டும் திரும்பிய பின்னர் நிதானமாக ஆடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனவே? :P  //தான் அரசியலுக்கு வரவிருப்பதாகவும் ஆனால் கிறிக்கற்டையும் தொடர்வேன் என்றும் அண்மையில் இவர் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.//

  அடப்பாவிகளா...
  யாரும் போட்டுத்தள்ளப் போறாங்கள் என்னை....
  அவ்வ்வ்வ்வ்வ்...  //ஆனால் தற்போது விஷேட பயிற்சிக்காக லண்டனுக்கு சென்றிருக்கிறார். //

  அணிக்கு சொல்லாமல் மைக்கல் கிளார்க் போல கள்ளமா ஓடினவர் தானே?


  //தனது இரகசியங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் உளறி அடிக்கடி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வார். //

  அண்ணை ரொம்ப நல்லவர்...
  பச்ச மண்ணு...  // தற்போது வளர்ந்துவரும் அதிரடிதுடுப்பாட்ட வீரர் பட்டம் கொடுத்து கெளரவித்தது குறிப்பிடத்தக்கது. //

  ICL இல இருந்து மன்னிப்புக் கொடுத்த சேர்த்த ஆள் இவர்... :P
  மனுசன் நல்லாத்தான் விளையாடுது...  // ஆனால் இவர் அடிக்கடி டயர்டாகுவது //

  கோவா பார்ப்பதை நிறுத்துமாறு ஆலோசனை வழங்குகிறேன்... :D


  // மஹேல ஜயவர்தன போன்ற கிளாஸ் பிளேயர்.(:p) //

  யோவ்...
  லோஷன் அண்ணா மது அருந்துவதில்லை...
  கிளாஸில குடிக்கிறவர் எண்டு அப்பட்டமா பொய் சொல்லாத...
  பிச்சுப் புடுவன் பிச்சு... :P  //விஜயகாந் பாணியில் ஸ்கோர்களை அள்ளிவீசுவார்.//

  அடேய்...
  உனக்கு நக்கல் கூடிப் போச்சு...
  லோஷன் அண்ணா அவ்வளவு மொத்தமாவா இருக்கிறார்? ;)  //டாக்டராகுவதே (போட்டுத்தள்ளுவதே)எனது குறிக்கோள் //

  :D :D :D :D :D


  //புதிதாக அறிமுகமாகியுள்ள மங்குஸ் BATஐ வைத்து எதிரணியை வெட்டிசாய்க்க தயாராக உள்ளதாக //

  விளங்கிப் போக...
  என்னா கொலைவெறி....  //தனது பந்து எறி போலொ என்று அடிக்கடி சந்தேகப்படுபவர்.//

  தவறான தகவல்...
  எறி பந்தாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்...
  தனது பந்துவீசு்சை எறிபந்தாகக் கருதுமாறு நடுவரிடம் கெஞ்சுபவர்...  //இவருக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சினை 7மணிக்குமேல் இவரால் விளையாட முடியாது//

  ஹி ஹி...
  கிறிக்கற் விளையாட முடியாது என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்...
  திருத்தவும்... :P ;)  //பீமர் பந்துகளை வீசிவிட்டு மன்னிப்பாயா மன்னிப்பாயா என்று BATSMANனிடம் கேட்கிறாராம். //

  ஹா ஹா....


  // இவரைப்பற்றி நானே சொன்னா நல்லாவா இருக்கும்..//

  அடிங்கொய்யால....

  கலக்கல் பவன்....
  வாழ்த்துக்கள்....

 1. Subankan Says:

  ஓ, கிரிக்கெட் பற்றிய பதிவா? ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டு விடைபெற்கிறேன் :)

 1. // Subankan said...
  ஓ, கிரிக்கெட் பற்றிய பதிவா? ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டு விடைபெற்கிறேன் :) //

  பதிவ வாசியுங்கப்பா.... ;)

 1. Subankan Says:

  // கன்கொன் || Kangon said...
  // Subankan said...
  ஓ, கிரிக்கெட் பற்றிய பதிவா? ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டு விடைபெற்கிறேன் :) //

  பதிவ வாசியுங்கப்பா.... ;)
  //

  அட, பதிவுபற்றி கூற மறந்துவிட்டேன். தகவலுக்கு நன்றி பவன் ;)

 1. Ramesh Says:

  அவ்வ்வ்வ்....... கலக்கல்

 1. தம்பி திருகோணமலைக்கு அரிவாளுடன் வரவா? தெரியுமில்ல எனக்கு ஆரம்ப துடுப்பாட்டம் கொடுக்காட்டி என்னுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன்.


  அப்புறம் நான் போய் தீபிகா அக்காவுடன் (கிரிக்கட்தான்) ராயல் சலஞ்சர்ஸ்சில் விளையாடிடுவேன்.

  ஆமா நம்ம டீமுக்கு சப்போர்ட்டா வரபோற நடிகை யாரு?

  பிரியங்கா சோப்ரா, அசின், பாவனா, இலியானா, தமன்னா இவங்களில் யாரையாவது தெரிவு செய்யலாமென சிபாரிசு செய்கிறேன், மேலும் நடிகர்கள் யாரும் தேவையில்லை

 1. // ஆமா நம்ம டீமுக்கு சப்போர்ட்டா வரபோற நடிகை யாரு? //

  கேரளா என்பதால் ஒரு நடிகையின் பெயர் வெளியே வந்திருக்கிறது...

  தகவலுக்கு இந்த ருவீற்றை நாடவும்...

  http://twitter.com/eyepeeyell/status/11129167363

 1. @ கன்கொன் ||

  ஐயோ அந்த நடிகையா நான் வரலீங்க. இந்த விளையாட்டுக்கு.

  எனக்கு கிரிக்கட் விளையாட தெரியாது சாமியோவ்

 1. Superb Post...Nice One

 1. சூப்பர் !!!!!

 1. ஒவ்வொருவீரரையும் ஒவ்வொரு நடிகை ஸ்பொன்சர் செய்யப்போவதாகவும் வெளிநாட்டு வீரரை வாங்க நடிகைகளுக்குள் கடுமையான போட்டி எனவும் குறிப்பாக ஐஸ்வர்யா ராய், அசின், தமன்னா இடையே கடுமையான போட்டி எனவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அணியின் தலைவர் திருமணமாகியபடியால் அவரை வாங்க எந்த நடிகையும் தயாரில்லை என்பதால் அவரே காசு கொடுத்து தன்னை விற்கமுனைவதாக ஜெயமான வானொலிச் செய்தி கூறுகின்றது.

  விரைவில் வெளிநாட்டுவீரராக மாறும் சதீசை வாங்க அனுஷ்கா விரும்புவதாகவும் ஆனாலும் சதீஸின் மாமனும் போட்டியில் இருப்பதால் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் உள்ளகத் தகவல்.

  கோபியை வாங்க குண்டு நடிகை ஷ்ர்மிலிக்கும் ஷகிலாக்கும் கடும் போட்டி. ஆதிரையை ஏலத்தில் எடுக்கும் நடிகை நீலனிற ஆடைதான் அணிக்குத் தேவையென ஒற்றைக்காலில் நிற்கின்றார்.


  மலேசியாவில் இருக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவர் புல்லட்டை ஏலத்தில் எடுப்பதுடன் கோபிக்கும் தன்னுடைய அனுசரணையை தருவதாக உறுதியளித்துள்ளார்.

  வரோவுக்கு விஜயின் ஆதரவு நடிகைகள் போட்டி போடுவதால் அவர் ஏலத்தில் விலைபோகாமல் சும்மாவே ஆடிவதுடன் போட்டியின் முக்கிய அனுசரணையாளராக சுறா படம் இருக்கவேண்டும் என கூறியுள்ளார்.

  அணியின் கடைசிவீரரையும் அவரின் அண்ணனையும் ஏலத்தில் எடுக்க எவரும் முன்வராததால் பவன் உள்நாட்டு நடிகைகளின் ஆதரவை நாடியுள்ளார்.

  யோகாவின் மங்கூசைப் பார்த்து நடிகைகளுக்குப் பதிலாக அவரை ஏல்த்தில் எடுக்க நெப்போலியனும் ராஜ்கிரணுமும் போட்டியிடுகின்றார்கள்.

 1. // அவரே காசு கொடுத்து தன்னை விற்கமுனைவதாக ஜெயமான வானொலிச் செய்தி கூறுகின்றது. //

  அங்க அப்பிடிச் சொல்ல மாட்டாங்களே? :P


  //விரைவில் வெளிநாட்டுவீரராக மாறும் சதீசை வாங்க அனுஷ்கா விரும்புவதாகவும் ஆனாலும் சதீஸின் மாமனும் போட்டியில் இருப்பதால் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் உள்ளகத் தகவல்//

  சதீஷின் அங்கிளும் என்று வரவேண்டும்.
  ஆமாம் இருவரையும் விட்டுவிட்டு இலங்கையின் ஷேன் வோணை வாங்க விரும்புவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன...  //கோபியை வாங்க குண்டு நடிகை ஷ்ர்மிலிக்கும் ஷகிலாக்கும் கடும் போட்டி. //

  நான் ஐ.பி.எல் இலிருந்து ஓய்வு....
  அவ்வ்வ்வ்வ்வ்வ்....  //ஆதிரையை ஏலத்தில் எடுக்கும் நடிகை நீலனிற ஆடைதான் அணிக்குத் தேவையென ஒற்றைக்காலில் நிற்கின்றார். //

  அவர் நீலநிறம் என்று சொன்னதை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு நீலப்பட நடிகையை வைத்து ஆதிரை (அண்ணா) ஐ வாங்கிவிட்டதாக கடைசிநேரத் தகவல்கள் தெரிவிக்கின்றன...


  //மலேசியாவில் இருக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவர் புல்லட்டை ஏலத்தில் எடுப்பதுடன் //

  ஆ ஆ ஆ...
  நடக்கட்டும் நடக்கடடும்...
  அணிக்கு பரதேசி பன்னாடை என்று பெயர் வைத்திருப்பதாகவும் அறிந்தோம்....  // கோபிக்கும் தன்னுடைய அனுசரணையை தருவதாக உறுதியளித்துள்ளார். //

  என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னானானாது?
  கோபி ஏற்கனவே ஓய்வு....  //போட்டியின் முக்கிய அனுசரணையாளராக சுறா படம் இருக்கவேண்டும் என கூறியுள்ளார். //

  போட்டிக்கு சுறா அனுசரனையா சுறாவுக்கு போட்டி அனுசரனையா?
  விளங்கப்படுத்தவும்...  //அணியின் கடைசிவீரரையும் அவரின் அண்ணனையும் ஏலத்தில் எடுக்க எவரும் முன்வராததால் பவன் உள்நாட்டு நடிகைகளின் ஆதரவை நாடியுள்ளார்.//

  இது இது இது....
  இது நல்லா இருக்கு....  // யோகாவின் மங்கூசைப் பார்த்து நடிகைகளுக்குப் பதிலாக அவரை ஏல்த்தில் எடுக்க நெப்போலியனும் ராஜ்கிரணுமும் போட்டியிடுகின்றார்கள்.//

  இதுபற்றி மகிழ்ச்சி தெரிவித்த யோ வொய்ஸ் யோகா தான் ஏற்கனவே கோவா படத்தைப் பார்த்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் கூறினார்....


  என்னா கொலைவெறி....
  அவ்வ்வ்வ்வ்வ்...

 1. Bavan Says:

  ///அணியின் கடைசிவீரரையும் அவரின் அண்ணனையும் ஏலத்தில் எடுக்க எவரும் முன்வராததால் பவன் உள்நாட்டு நடிகைகளின் ஆதரவை நாடியுள்ளார்.///

  இந்த நிலை தற்போது மாறியுள்ளதாகவும் லண்டனிலிருக்கும் எமா வட்சன், மற்றும் இந்தியப் பிரபல நடிகை தமன்னா ஆகியோர் பவனை ஏலத்தில் எடுக்க முன்வந்திருப்பதாகவும், ஆனால் சரக்குப் பெட்டிப்பதிவரை எடுக்க முடியாதெனவும் லண்டன் டைம்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன...

 1. பவன் கலகிடிங்க போங்க!!!!

  //தான் அரசியலுக்கு வரவிருப்பதாகவும் ஆனால் கிறிக்கற்டையும் தொடர்வேன் என்றும் அண்மையில் இவர் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.//

  அப்ப அடுத்த சனத் எண்டு சொல்லுங்கோ!!!

  //தனது இரகசியங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் உளறி அடிக்கடி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வார்.//

  பார்த்து அணியின் ரகசியங்கள் முழுவதும் வெளியே!!!

  //இவர் அடிக்கடி டயர்டாகுவது இவரின் உடல் நலத்துக்கு.....//

  இதை குறித்த துடுப்பாட்ட வீரர் / பதிவர் கவனிக்கவும்...

  //இவரை அனைவரும் மினி ஸ்கோர் போர்ட் என்று அழைப்பார்கள் காரணம் போட்டி நடைபெறும் போது ரன்னில் ஏதாவது குழறுபடி நடந்தால் உடனடியாக முதலாவது பந்திலிருந்து விஜயகாந் பாணியில் ஸ்கோர்களை அள்ளிவீசுவார்.//

  இப்படி இருவர் இருந்தால் அலாப்பி பவனுக்கு வேலை இல்லையே!!!

  //இவர் தான் தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ள மங்குஸ் BATஐ வைத்து எதிரணியை வெட்டிசாய்க்க தயாராக உள்ளதாக அறிக்கை விட்டுள்ளார்.//

  தாக்குவார???


  //T20 போட்டிகளில் ஆண்களுக்கு சொந்தமான அணியில் மட்டுமே ஆடுவேன் என்று சபதமெடுத்துள்ளவரை புல்லட் வேகப்பந்து வீச்சாளர் என்று அழைப்பர்.//

  அண்ணா அப்ப நீங்க விளையாடவே மாட்டிங்க எண்டு சொல்லுங்க

  //அவர் விண்ணைத்தாண்டி வருவாயோ போபியாவால் பாதிக்கப்பட்டிருப்பதுதான் என்று மருத்துவ அறிக்கைகள் முலம் தெரியவந்திருக்கிறது. இந்த போபியாவின் விளைவாக தற்போது பீமர் பந்துகளை வீசிவிட்டு மன்னிப்பாயா மன்னிப்பாயா என்று BATSMANனிடம் கேட்கிறாராம்.//

  பார்த்து வீரரே BATSMAN டீ.ஆர் போபியாவால் பாதிக்க படாதவராக பார்த்து கொள்ளவும்

  //இறுதியாக இவர்......... இவரைப்பற்றி நானே சொன்னா நல்லாவா இருக்கும்..ஹிஹி//

  இவரை பத்தி சொன்னா எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரயுமே!!!!

  நீங்கள் போட்டிகளுக்கு தேவையான MANAGERஆக பங்குசந்தை அச்சு அண்ணாவை இணைக்காமைக்கு கண்டிப்பு

 1. //இவரின் துடுப்பாட்டத்தைக்கண்ட STB(Srilanks Tamil Blogger) தற்போது வளர்ந்துவரும் அதிரடிதுடுப்பாட்ட வீரர் பட்டம் கொடுத்து கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.//

  அட நல்லாத்தானே இருக்கு,.. பதவியுயர்வுக்கு நன்றி..

  //அணிக்கு ஒரு பக்கம் விக்கட்டுகள் சாய்கின்றபோதிலும் தனது அதிரடி மூலம் அணியை தூக்கி நீறுத்தக்கூடியவர். ஆனால் இவர் அடிக்கடி டயர்டாகுவது இவரின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என இவரின் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.//

  இந்தவிஷயம் உங்களுக்கு எப்பிடிடா தெரிஞ்சது..

  ஆனா ஒண்டு மட்டும் வடிவா விளங்கிட்டுது. இந்தப்பதிவுக்கு ஆட்களை எடுக்கும் போது “கோவை பிரதர்ஸ்” ல வடிவேலும் சத்தியராஜ்ஜூம் ஆட்களை சேர்த்த மாதிரி தான் பவன் சேர்த்தாராம்…

 1. Bavan Says:

  கன்கொன்,

  //அதென்னது ஏதாவது கும்மியெண்டா நான் தான் முதலாவதா மாட்டுப் படுறது?//

  முதலாவதா பின்னூட்டமிடும்போது.. முதலாவதா கும்மக்கூடாதா??..:p

  //யோவ்...
  லோஷன் அண்ணா மது அருந்துவதில்லை...
  கிளாஸில குடிக்கிறவர் எண்டு அப்பட்டமா பொய் சொல்லாத...
  பிச்சுப் புடுவன் பிச்சு... :P //

  யோவ் அது இங்கிலீஸ் உங்களுக்கு புரியாது...:P:P:P

  //அடேய்...
  உனக்கு நக்கல் கூடிப் போச்சு...
  லோஷன் அண்ணா அவ்வளவு மொத்தமாவா இருக்கிறார்? ;) //

  ஹீஹீ... இல்லையா பின்ன.. உங்களுக்கு எல்லாரும் மெலிவுமாதிரித்தான் தெரியும்...:P

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

 1. Bavan Says:

  சுபா அண்ணா,

  அடிங் கொய்யால.... யோவ் இங்க தகவலுமில்ல கிற்க்கற்ருமில்ல..

  ஐயோ கடவுளே இந்தாள் அலப்பறை தாங்கமுடியலஈஅவ்வ்வ்

  உலகத்தில இவ்வளவு பதிவிருந்தும் நானேன் இவரை இந்தப்பதிவில சேர்த்தன்...அவ்வ்வ்

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  றமேஸ் அண்ணா,

  நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  யோ அண்ணா,

  //தம்பி திருகோணமலைக்கு அரிவாளுடன் வரவா? தெரியுமில்ல எனக்கு ஆரம்ப துடுப்பாட்டம் கொடுக்காட்டி என்னுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன்.
  //

  சீச்சீ.. உங்கட மங்கூசோட வந்தாப்போதும்.. கன்கொனைத் தூக்கிட்டு உங்களை ஓப்பினிங் இறக்கிறம்..:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

 1. //கன்கொனைத் தூக்கிட்டு உங்களை ஓப்பினிங் இறக்கிறம்..:p //

  அடிங்கொய்யால....
  பின்னூட்டம் போட்டே கொண்டிருவன் உங்கள் எல்லாரையும்....

 1. Bavan Says:

  வதீஸ்,

  ஹீஹீ நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  செந்தழல் ரவி,

  ஹீஹீ நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  வந்தி அண்ணா,

  ஹீஹீ நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  அனுதினன்,

  //நீங்கள் போட்டிகளுக்கு தேவையான MANAGERஆக பங்குசந்தை அச்சு அண்ணாவை இணைக்காமைக்கு கண்டிப்பு//

  அவர் முதுகு வலி காரணமாக லண்டனில் சிகிற்சைக்காகப் போக இருப்பதால்... IPL 4 இல் விளையாடுவாராம்..:p

  ***

  வரோ அண்ணா,

  //ஆனா ஒண்டு மட்டும் வடிவா விளங்கிட்டுது. இந்தப்பதிவுக்கு ஆட்களை எடுக்கும் போது “கோவை பிரதர்ஸ்” ல வடிவேலும் சத்தியராஜ்ஜூம் ஆட்களை சேர்த்த மாதிரி தான் பவன் சேர்த்தாராம்…//

  ஹீஹீ நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

 1. Bavan Says:

  // கன்கொன் || Kangon said...
  //கன்கொனைத் தூக்கிட்டு உங்களை ஓப்பினிங் இறக்கிறம்..:p //

  அடிங்கொய்யால....
  பின்னூட்டம் போட்டே கொண்டிருவன் உங்கள் எல்லாரையும்....//

  பின்னூட்டம் என்பது டூஸ்ரா, ஸ்லோ ball மாதிரி.. ஆனா மங்குஸ்னா அதிரடி துடுப்பாட்டம்ல..:)

  so யோ அண்ணாக்குத்தான் chance,,:p (வாளால யார் வெட்டுப்படுறது... அவ்வ்)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்