Related Posts with Thumbnails

செஞ்சுரி

இது எனது 100வது பதிவு. ஆரம்பத்தில் சுபாங்கன் அண்ணாவின் பதிவுகளில் தொடங்கிஅவரின் வலைப்பூ மூலம் பலரின் வலைப்பூக்களையும் வாசிக்கத்தொடங்கி நான் ஏன் எனக்கென்று ஒரு வலைப்பூ தொடங்கக்கூடாதென்று ஒருவாறு சுபாங்கன் அண்ணாவின் வழிகாட்டலுடன் பதிவுலகில் பிரவேசித்தவன் நான். அதன் பின்னர் மீ த பர்ஸ்ட் கன்கொன், வந்தியண்ணா, லோசன் அண்ணா, கெளபாய் மது அண்ணா, கீர்த்தி அக்கா பாலா அண்ணா, வரோ அண்ணா, கமல் அண்ணா, புல்லட் அண்ணா, சதீஸ் அண்ணாஈ வானம்பாடிகள் சார் ,ஆதிரை அண்ணா, உட்பட்ட பலர் (பெயர் குறிப்பிட மறந்தவர்கள் மன்னிக்கவும் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டால் பதிவு ரொம்ப நீண்டுவிடும்.) பின்னூட்டங்களில் எனக்கு அளித்த ஊக்கமும், தன்னம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

மேலும் போட்டோ கமண்ட் என்பது நான் மிகவும் விரும்பி வெளியிடும் பதிவு. பதிவுலகில் காலடியெடுத்து வைத்து சில பதிவுகள் இட்ட பிறகு என்ன பதிவு இடுவது என்று குழம்பி யோசித்து எனது குரு(:P) சுபாங்கன் அண்ணாவிடம் கேட்டபோது வலைமனை என்ற வலைப்பூவின் சுட்டியைத்தந்து இப்படி ஏதாவது ட்ரை பண்ணுடா என்றார். இப்படி ஆரம்பித்ததுதான் போட்டோ கமண்ட்ஸ். எனவே இதுவரை ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.

36 - கும்மிக்கு சிங்களம் என்ன?
நேற்று மூஞ்சிப்புத்தகத்தில் கண்ட ஒரு போட்டோ கமண்ட்நோட்டை (NOTE) கன்கொன், ஆதிரை அண்ணா சுபா அண்ணா உட்பட சில பதிவுலக நண்பர்கள் சிலருக்கு PM அனுப்பியிருந்தேன். அதன்பின்னர் அது ஒரு வலைப்பதிவிலிருந்து பிரதி பண்ணப்பட்ட நோட் எனக்கு கூறி மூஞ்சிப்புத்தகத்தில் கும்மியை இனிதே ஆரம்பித்து வைத்தார் மீத பர்ஸ்ட் கன்கொன் மன்னிக்கவும் கிரிஷ்.(தனது பெயரை கன்கொன் என்பதிலிருந்து கிரிஷ் என மாற்றிப் போட்டால் வெளிநாட்டுக்கண்டோஸ் தருவதாக உறுதியளித்திருக்கிறார்). அதன்பின்னர் களத்தில் ஆதிரை அண்ணாவும் குதிக்க கும்மி களைகட்டியது.

இங்கு கும்மி ஓருபுறம் களை கட்டி ஒரு 7 PrivateMsgகளைக்கடந்திருக்கும், 
 "நான் நடந்தால் அதிரடி என் பேச்சு சரவெடி...."
என் தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. 
 ஹலோ
மறுமுனையில் சுபா அண்ணா புல்டோசரின் டயருக்குப்பின்னால் இருந்து- என்னடா நடக்குது பேஸ்புக்கில?
ஒண்டுமில்ல சும்மா கும்மிறம் ஏன்?
டேய் படுபாவி, கீஈஈஈஈக்..... கீஈஈஈஈக் (கெட்டவார்த்தை) என்று காதில் ரத்தம் வரும் அளவுக்குத்திட்டிவிட்டு இங்கிலீஸ்ல கும்முங்கடா மொபைல்ல தமிழ் வராதில்ல என்றுவிட்டு போஃனை கட் பண்ணினார்..:p

8.30க்கு ஆரம்பித்த கும்மி தற்போது 12 மணியை அண்மிக்கிறது. பொறுத்துப் பொறுத்து பொங்கியெழுந்த ஆதிரை அண்ணா..
தம்பிங்களா...........
உந்தளவு மெசேஜ்ஜும் என் மொபைலுக்கு வருகுதப்பா... போதுமப்பா.

பக்கத்திலே இருக்கிறவன்... GF ஓ என்று கேட்கிறான்.
Feel பண்ண வையாதீங்கப்பா 
என்று கவலையாகச்சொல்ல நாம் எமது ஆய்வுக்குழுவை ஆதிரை அண்ணாவின் அலுவலகத்துக்கு அனுப்பினோம். அங்கே அலுவலகத்திலே ஆதிரை அண்ணா எழுந்து அலுவலகத்துக்கு வெளியே வந்து எதிரில் இருந்த ஒரு கடையில் கடைக்காரரை கெஞ்சிக்கூத்தாடி இரு தடிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் அலுவலகம் திரும்பினார். அதன் பிறகு பார்த்தால் திடிரேன அந்தத்தடிகளை ஒன்றோடு ஒன்று தட்டி மேலும் கீழும் குனிந்து நிமிர்ந்து காலைக் கையைத்தூக்கி ஆடத்தொடங்கினார். எதிரில் அவரின் சிங்கள நண்பர் அமர்ந்து மண்டையைப்பிய்த்துக்கொண்டிருந்தார். 

என்னடா இது என்று எமது ஆய்வுக்குழுவும் மண்டையைப்பிய்த்துக் கொண்டிருக்க ஆதிரை அண்ணாவின் மொபைலுக்கு வந்த செய்திகளைப்பார்த்து GIRL FRIENDடா? என்று கேட்ட நண்பருக்கு இல்லை அது கும்மி என்று விளங்கப்படுத்த ஆதிரைஅண்ணாக்கு கும்மிக்கு சிங்களம் தெரியாததால் அவர் ஆடி செயன்முறை விளக்கம் கொடுத்தாக ஆய்வுக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு 29 மசேஜ்களை கும்மி கடந்த நிலையில் 30வது வெற்றி மசேஜை சுபாங்கன் அண்ணா மனமுடைந்து போய் காலை 8.30 மணியிலிருந்து என்ன நடக்குதென்றே தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருப்பதாக ஆதங்கத்தை தெரிவிக்க இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி கன்கொன் சீச்சீ கிரிஷ் தான் ஒபாமாவுடன் கதைத்து இதற்கு சிறந்த தீர்வைப் பெற்றுத்தருகிறேன் என்று மீண்டும் கும்மியை ஆரம்பிக்க முயல..
சொல்லிப்போட்டேன்...
வீட்ட போக வெளிக்கிட்டு விட்டேன்.
என்ன எதுவாக இருந்தாலும் Gmail ஐப் பாவிக்கவும்.
பஸ் கொண்டக்டர் அந்தக் கேள்வியைக் கேட்டால், நான் தற்கொலைதான் பண்னனும் 

என்ற ஆதிரை அண்ணாவின் 36வது PMமுடன் ஆதிரை அண்ணாவின் உயிருக்கு உத்தரவாதமளிக்கும் நோக்கில் கும்மி சடாரென நிறுத்தப்பட்டது.

பி.கு - யாராவது கும்மிக்கு சிங்களம் என்ன என்று தெரிந்தால் சொல்லிட்டுப்போங்க? ஆதிரை அண்ணா அடிக்கடி ஆடிக்காட்டமுடியாதில்ல..


நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. நூறுக்கு முதலில் வந்தது நான் தான். வாழ்த்துக்கள் என்னையும் உங்களுக்கு பின்நூடியவர் வரிசையில் சேர்த்ததுக்கு நன்றி. உங்கள் போட்டோ கொமன்ட் பார்த்து தான் நான் போட்டோ கொமன்ட் போட தொடங்கினான். வாழ்த்துக்கள்.

 1. Subankan Says:

  சதத்திற்கு வாழ்த்துகள் பவன்.

  இனி பேஸ்புக்கில கும்முறவங்களை நிப்பாட்டவும் ஏதாச்சும் பண்ணணும். ஸ்ஷபா என்னா வில்லத்தனம்

 1. அன்புத் தம்பி பவனுக்கு நூறடித்தமைக்கு வாழ்த்துக்கள். உங்கள் சதத்திற்க்கு கங்கோன் என்ற மன்னிக்கவும் கிரிஷ் என்ற யானையின் உறுதுணையும் ஒரு காரணம் அடிக்கடி பதிவு எழுது என உங்களை ஊக்கப்படுத்துபவர் அவர்தான் என தகவல்,

  அது சரி நீ ஏன் அனைவரையும் அண்ணா என்கின்றாய்? நாம் எல்லோரும் உன்னைவிட வயதில் குறைந்தவர்கள் ஹிஹிஹி.

  நன்றிகள் ( ஏன் எனக் கண்டுபிடிக்கவும்).

 1. அக்கூர், சுதுவா மாதிரி ஏதாவது இனிமையா (கண்டுபிடிச்சு) வைங்க . இல்லன்னா என் பேர டேமேஜ் பண்ணிருவாங்க. :-)

 1. Bavan Says:

  சதீஷ் அண்ணா,

  // நூறுக்கு முதலில் வந்தது நான் தான். வாழ்த்துக்கள் என்னையும் உங்களுக்கு பின்நூடியவர் வரிசையில் சேர்த்ததுக்கு நன்றி. உங்கள் போட்டோ கொமன்ட் பார்த்து தான் நான் போட்டோ கொமன்ட் போட தொடங்கினான். வாழ்த்துக்கள்.//

  ஓஹோ... நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...:)))

  ***

  சுபா அண்ணா,

  //இனி பேஸ்புக்கில கும்முறவங்களை நிப்பாட்டவும் ஏதாச்சும் பண்ணணும்//

  ஹாஹாஹா... பேசாமல் உங்கள் மொபைல் சஸ்கிரைப்பை பேஸ்புக்கிலிருந்து தூக்கிவிடவும்..:P

  ஓஹோ... நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...:)))

 1. Bavan Says:

  வந்தியண்ணா,

  //அன்புத் தம்பி பவனுக்கு நூறடித்தமைக்கு வாழ்த்துக்கள்.//

  நன்றி அண்ணா

  //உங்கள் சதத்திற்க்கு கங்கோன் என்ற மன்னிக்கவும் கிரிஷ் என்ற யானையின் உறுதுணையும் ஒரு காரணம் அடிக்கடி பதிவு எழுது என உங்களை ஊக்கப்படுத்துபவர் அவர்தான் என தகவல்,//

  ஆமாம் ஆமாம், நீங்களும் கிரிஷ் கூறி எனது சொக்லேட்டை ஆட்டையைப் போட முயற்சிப்பதை கண்டிக்கிறேன்

  //அது சரி நீ ஏன் அனைவரையும் அண்ணா என்கின்றாய்? நாம் எல்லோரும் உன்னைவிட வயதில் குறைந்தவர்கள் ஹிஹிஹி.//

  சுறா படம் பார்த்தே பயப்படாத எனக்கு இது பெரும் அதிர்ச்சியை வழங்கவில்லை..:P:P:P

  //நன்றிகள் ( ஏன் எனக் கண்டுபிடிக்கவும்)//

  தங்களுக்கும் அந்த PM அனுப்பியிருந்தேன் அதைப்பற்றிக் குறிப்பிடாததற்காகவா?

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..:)))

 1. வாழ்த்து்கள் பவன்:)

 1. Bavan Says:

  கும்மி,

  //அக்கூர், சுதுவா மாதிரி ஏதாவது இனிமையா (கண்டுபிடிச்சு) வைங்க . இல்லன்னா என் பேர டேமேஜ் பண்ணிருவாங்க. :-)//

  ஹாஹா... கண்டுபிடிச்சா உங்களிடம் முதலாவதா சொல்லுறம்..உங்களுக்கு ஓகேன்னா உலகத்துக்கு அறிவிச்சிருவோம் ஓகே..:p

 1. //தங்களுக்கும் அந்த PM அனுப்பியிருந்தேன் அதைப்பற்றிக் குறிப்பிடாததற்காகவா?//

  ஹிஹிஹி கற்பூர முளை

 1. Anonymous Says:

  வாழ்த்துக்கள் பவன்.
  சதமடிச்சாச்சு அதுவும் என்ன ஒரு அதிரடியான சதம். தொடர்க பதிவிடுதலை உம்மைத் தொடர நாம் உள்ளோம்.

 1. வாழ்த்துக்கள் பவன்.

  கிரிஷ் என்ற பெயருக்குப் பின்னாலே ஒளிந்துள்ள மர்மத்தின் ஒப்புதல் வாக்குமூல மெசேஜ்ஜையும் போட்டிருக்கலாமே...

 1. Unknown Says:
  This comment has been removed by the author.
 1. Unknown Says:

  வாழ்த்துக்கள் பவன்......
  மேலும் உனது புதிய படைப்புக்களை எதிர்பார்த்திருக்கிறேன்.

 1. நூறுக்கு வாழ்த்துக்கள் பவன் .... ஒரு தப்பு சுபாங்கன் புல் டோசருக்கு பின்னாலயா இருந்தது அன்னிக்கு பென்னாம் பெரிய ஜெனரேட்டருக்கு பின்னால இருந்தது ... தொடர்ந்து கலக்குங்கள் !!!

 1. Subankan Says:

  யோவ் யாரையா என்னய வச்சுக் காமெடி பண்ணறது?

  ஆனா பவன் சொன்னது பிழைதான். புல்டோசருக்கு டயர் கிடையாது :P

 1. சதமடித்த பவனுக்கு வாழ்த்துக்கள்.. உங்கள் பதிவுகள் பல எனது பொழுதுகளை மகிழ்வடைய வைத்திருக்கின்றன.. தொடர்ந்தும் ரசிக்க எதிர்பார்க்கிறேன்..

  அடப் பாவிகளா.. பதிவு முடிந்து,குழுமம்,ட்விட்டர் முடிந்து இப்ப Facebook ஆ?
  ச்சப்ப்பா..

  பாவம்டா ஆதிரை.. அவன் பாட்டுக்கு சிவனே என்று எளிக்குன்ஜோடு பிசியாக இருந்தாலும் விட மாட்டீங்க போல..

  அதுசரி அப்போ நம் கங்கோனின் மாற்றத்துக்கும் பெயர் மாற்றத்துக்கும் 'அது' தான் காரணமா?
  ம்ம் நடக்கட்டும்..

 1. சதமடித்ததுக்கு வாழ்த்துக்கள் பவன்,

 1. தம்பி பவன்...

  சதத்திற்கு வாழ்த்துக்கள்...

  தொடர்ச்சியாக பதிவெழுதிக் கொண்டிருக்கிறாய், எதிர்காலத்திலும் தொடர்ந்து மேலும் சிறந்த பதிவுகளைத் தர வாழ்த்துக்கள், கோரிக்கை...

  என்னுடைய பெயரையும் குறிப்பிட்டதில் மகிழ்ச்சி...

  பேஸ்புக் கும்மல் பற்றி ஆதிரை அண்ணா அழுதது சொன்னதை பம்பலாகப் பதிவிட்டிருக்கிறாய், ஹி ஹி...

 1. மற்றையது என்னுடைய பெயர் மாற்றமென்ற வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். ;)

 1. Ramesh Says:

  வாழ்த்துக்கள் செஞ்சுரிக்குஃஃஃஃ சுப்பு அண்ணாவுக்கு தங்ஸ்்்்்

 1. பவன் உங்களின் 100 பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !!! தொடருங்கள்!!!!

 1. சதத்திற்கு வாழ்த்துக்கள்...

 1. Lojee Says:

  best of luck....keep it up..

 1. Hai Says:

  சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்.

 1. சதத்திற்கு வாழ்த்துக்கள் பவன்

 1. Bavan Says:

  வானம்பாடிகள்

  நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)

  ***

  Nirushan,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)

  ***

  ஆதிரை அண்ணா,

  //கிரிஷ் என்ற பெயருக்குப் பின்னாலே ஒளிந்துள்ள மர்மத்தின் ஒப்புதல் வாக்குமூல மெசேஜ்ஜையும் போட்டிருக்கலாமே//

  அது வந்து த கிரேட் கிறீஸ் எனக்கு வெளிநாட்டுக் கண்டோஸ் தருவதாகவும் அந்த விடயத்தை வெளியிட வேண்டாமென்றும் தெரிவித்தார்..:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)


  ***

  Vasuthevan,

  நன்றி வாசுதேவன் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)

 1. Bavan Says:

  பாலா அண்ணா,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)

  ***

  சுபா அண்ணா,

  //ஆனா பவன் சொன்னது பிழைதான். புல்டோசருக்கு டயர் கிடையாது :P//

  அடிங்... வட்டமா இருந்தா பவன் சிந்தனயவில அது டயர்தான்..:p

  ***

  லோசன் அண்ணா,

  //அடப் பாவிகளா.. பதிவு முடிந்து,குழுமம்,ட்விட்டர் முடிந்து இப்ப Facebook ஆ?
  ச்சப்ப்பா.. //

  ஹாஹா மன்னிக்கவும் உங்களையும் இணைச்சிரக்கோணும் ஜெஸ்டு மிஸ்சாயிட்டு..:p

  //அதுசரி அப்போ நம் கங்கோனின் மாற்றத்துக்கும் பெயர் மாற்றத்துக்கும் 'அது' தான் காரணமா?//

  அதே அதே...

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)

 1. Bavan Says:

  வரோ அண்ணா,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)

  ***

  கன்கொன்,

  //தம்பி பவன்...//

  நன்றி அங்கிள்..

  //தொடர்ச்சியாக பதிவெழுதிக் கொண்டிருக்கிறாய், எதிர்காலத்திலும் தொடர்ந்து மேலும் சிறந்த பதிவுகளைத் தர வாழ்த்துக்கள், கோரிக்கை...//

  நிச்சயம்

  //பேஸ்புக் கும்மல் பற்றி ஆதிரை அண்ணா அழுதது சொன்னதை பம்பலாகப் பதிவிட்டிருக்கிறாய், ஹி ஹி.//

  ஹீஹீ அங்கிள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)

  ***

  றமேஸ் அண்ணா,

  நன்றி மாமா..(:p) வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)

  ***

  அனுதினன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)

 1. Bavan Says:

  archchana,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..;)

  ***

  Lojee,


  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..;)

  ***

  அரைகிறுக்கன்

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..;)

  ***

  யோ அண்ணா,


  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..;)

 1. சதமடித்த பவனுக்கு வாழ்த்துக்கள்......

 1. Bavan Says:

  இலங்கன்,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கம் வாழ்த்துக்கும்...;)

 1. நண்பா வாழ்த்துக்கள் நூறடித்தமைக்கு!

  இன்னும் நிறைய எழுதுங்கோ. நிறைய எதிர்பார்க்கிறோம்.
  தங்கள் பதிவுகளில் என்ன மிகவும் கவர்ந்தது தமிழ்ப் படப் பாடலின் நவீன விளக்கவுரை. எப்பிடி இதெல்லாம்??


  தொடர்ந்தும் வீறு நடையாக வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.


  எல்லாப் பதிவுகளுமே நகைச்சுவை கலந்த சுவாரஸ்யங்கள் தான். தொடர்ந்தும் தொடருங்கோ.


  பி.கு: என்னுடைய லப்டொப் டிஸ்பிளே போயிட்டு. அதான் லேற்...

 1. பிந்திய வாழ்த்துக்கள்.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்