Related Posts with Thumbnails

இலங்கையின் மூத்த பதிவர் வந்தியத்தேவன் என்ற மாமனிதரைப்பற்றி அறியாதவர்கள் யாருமில்லை. அந்தவகையில் அவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் இன்று காலை அவருடன் மெயிலில் அரட்டை அடிக்கும் பொன்னான வாய்ப்புக்கிடைத்தது. மிகவும் நகைச்சுவையுணர்வுடைய மனிதர் அவர். ஆனால் மிகுந்த அறிவாளி, சந்தேகங்களை தேங்காய் உடைப்பதுபோல் சல்லிசல்லியாக உடைத்துக் கூறக்கூடியவர்.

முதலில் பின்நவீனம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது என்று எப்படி அறிந்தாரோ தெரியவில்லை. அதைப்பற்றி சிறப்பான ஒரு விளக்கத்தை அளித்தார். அவரின் விளக்கத்தில் இருந்த தெளிவு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அதன் பின்னர் ஐந்தாம் வகுப்பில் தனக்கு ஏற்பட்ட சில இளநீர் குடித்த அனுபவங்களை சற்று பின்நவீன முறையில் குறிப்பிட்டு நான் அறிந்தும் அறியாத வகையில் பின்நவீனம் எனக்கு விளங்கியிருக்கிறதா என பரீட்சித்த முறையில் அவருக்கு நிகர் அவரே.

ஆனால் வந்தியண்ணாவுக்கு சின்ன வயதில் தான் தென்னக்குருத்தை வைத்து கிறிக்கற் ஆடியதாகக்குறிப்பிட்டவருக்கு இளநீரில் காணப்படும் மருத்துவ குணாம்சங்கள் மற்றும் சின்னச்சின்ன விடயங்களை வைத்து எப்படிப்பதிவெழுதுவது என்று வந்தியண்ணா கூறிய விடயங்கள் இன்னும் என்ன மனதில் பசுமரத்தாணிபோல பதிந்து கிடக்கின்றது.

அதன் பின்னர் கிறிக்கற் பற்றிய கதை அப்படியே சர்வதேச மட்டத்துக்கு திசை திரும்பியது. தற்போது கிறிக்கற் போட்டிகளுக்கு தயாரிக்கப்படும் தட்டையான ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டி மற்றும் பந்துவீச்சாளர்களைப் பாதிப்பது பற்றி கவலை வெளியிட்டவர். ஆனால் அடித்தாடுவதற்கும் ஏற்ற ஆடுகளங்கள் அவைதான் தற்போதைய இளம் சந்ததியினர் வேகமான அடித்தாடும் ஆட்டத்தையே விரும்புகின்றனர் என்ற கருத்தை இறுதியாகக் கூறி படங்களுடன் விளக்கிய முறையில் கிறிக்கறிலும் இவர் ஒரு மேதாவி என்பதை அறிந்து வியந்தேன்.

இவ்வாறான ஒரு சகலகலவல்லவனுடன் அரட்ரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்து விட்டு நேரத்தைப்பார்த்தேன் பகல் 1.30 அடக்கடவுளே 5 மணிநேரம் அரட்டையில் ஈடுபட்டிருக்கிறேனா? இப்படி ஒரு பதிவரை, சகலகலாவல்லவரை, விளையாட்டு, அனுபவம், சினிமா, போன்ற எல்லா விடயங்களையும் அதைவிட பதிவுலக விடயங்களை தனது விரல் நுனியில் வைத்திருந்த வந்தி அண்ணாவை என்ன சொல்லிப்பாராட்டினாலும் தகும்.இப்படியான ஒரு மனிதரின் நட்புக்கிடைக்க நான் கொடுத்து வைத்திரக்க வேண்டும். ஆனால் இன்னும் இவரை நேரில் சந்திக்காதது பெரும் குறையே...
 
எல்லாத்துக்கும் நன்றி வந்தியண்ணா...

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. எனது சீனியரைப் பற்றி இவ்வளவு புகழ்ந்து எழுதியமைக்கு மிக்க நன்றிகள்...

  அன்புடன், பொறுப்புடன்
  ஜுனியர்...

 1. கொஞ்சம் லேட்டா வாறன்.

 1. பவனின் அறிவை வளர்த்த வந்தியண்ணா வாழ்க..!!!

  சீரியசான பதிவல்லவா இது..அதுசரி பவன் அது என்ன லேபிளில் மரம் மொக்கை என என்று வகைப்படுத்தி இருக்கிறீர்கள்,,,

  பின நவீனத்துவமா...????

 1. என்னது ஐந்தாம் ஆண்டிலேயே இளநீர் குடித்தவரா? கவனிக்க வேண்டிய விடயம்தான். என் மாமனை பாராடி எழுதியதற்கு நன்றிகள்.

 1. Subankan Says:

  //இலங்கையின் மூத்த பதிவர் வந்தியத்தேவன் என்ற மாமனிதரைப்பற்றி//

  மாமாமனிதர். அப்படித்தானே?

  // சந்தேகங்களை தேங்காய் உடைப்பதுபோல் சல்லிசல்லியாக உடைத்துக் கூறக்கூடியவர்//

  தேங்காய்ச் சிரட்டையை உடைப்பது போலவா? #ஆச்சர்யம் #சந்தேகம்

  //சர்வதேச மட்டத்துக்கு திசை திரும்பியது//

  இங்கிலாந்து நோக்கியா?

  //இன்னும் என்ன மனதில் பசுமரத்தாணிபோல பதிந்து கிடக்கின்றது//

  அடப்பாவி.....

  // ஆனால் அடித்தாடுவதற்கும் ஏற்ற ஆடுகளங்கள் அவைதான் தற்போதைய இளம் சந்ததியினர் வேகமான அடித்தாடும் ஆட்டத்தையே விரும்புகின்றனர் //

  ரைட்டு

  //எல்லாத்துக்கும் நன்றி வந்தியண்ணா... //

  எல்லாத்துக்குமா? என்னென்ன?

 1. // மாமாமனிதர். அப்படித்தானே? //

  ஏன் என்னுடைய சீனியரை இவ்வாறு பொது இடத்தில் அவமானப்படுத்துகிறீர்கள்? :@

 1. பகிர்வுக்கு நன்றி! நீங்களும் நன்றாக விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள். உங்கள் நடையில் நரை தெரிகிறது. வாழ்த்துக்கள்

 1. Bavan Says:

  //Balavasakan said...

  என்ன லேபிளில் மரம் மொக்கை என என்று வகைப்படுத்தி இருக்கிறீர்கள்
  பின நவீனத்துவமா...????//

  அப்படியென்றால்... மரம் போன்ற அவரின் உறுதியைக் குறிக்கிறது..:p

  மொக்கை... இது more+கை அதாவது பலருக்கு கைகொடுத்து தூக்கிவிட்டவர் என்று பொருள்படும்..:p

 1. // more+கை //

  இரட்டை அர்த்தப் பின்னூட்டங்களைக் கண்டிக்கிறேன்...

 1. முதலில் பின்நவீனம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது என்று எப்படி அறிந்தாரோ தெரியவில்லை. அதைப்பற்றி சிறப்பான ஒரு விளக்கத்தை அளித்தார்//

  அது என்ன பினநவீனத்துவம் ...
  பவன் இன்னொரு உதவி வந்தியண்ணா அளித்த விளக்கத்தில் பாதி எனக்கு அளித்து என்னை யும் தெளிவாக்க முடியுமா ..

 1. Bavan Says:

  @பாலா அண்ணா,

  //அது என்ன பினநவீனத்துவம் ...
  பவன் இன்னொரு உதவி வந்தியண்ணா அளித்த விளக்கத்தில் பாதி எனக்கு அளித்து என்னை யும் தெளிவாக்க முடியுமா//

  உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?? என்னதான் நான் விளக்கினாலும் வந்தியண்ணாவின் விளக்கம் போல வருமா?

 1. // அது என்ன பினநவீனத்துவம் ...
  பவன் இன்னொரு உதவி வந்தியண்ணா அளித்த விளக்கத்தில் பாதி எனக்கு அளித்து என்னை யும் தெளிவாக்க முடியுமா .. //

  டண்டாணா டர்ணா....
  டண்டணக்கா டர்ணா....

 1. Subankan Says:

  // Balavasakan said...

  அது என்ன பினநவீனத்துவம் ...
  பவன் இன்னொரு உதவி வந்தியண்ணா அளித்த விளக்கத்தில் பாதி எனக்கு அளித்து என்னை யும் தெளிவாக்க முடியுமா ..//

  ஏன் டாக்டரே, அனடமி படிக்கலயா?

 1. கங்கொன் என்ன பாட்டு... அறிவை வளர்க்கலாம் என்றால் நக்கலா..????

 1. ஏன் டாக்டரே, அனடமி படிக்கலயா?//

  எல்லாமே படம்பார்த்து படிச்சாத்தான் புரியும் என்டது இப்ப ஐஞ்சு நிமிசத்துக்கு முன்னாடிதான் புரிஞ்சுது இல்ல சுபாங்கன் நன்றி அருமையான விளக்கத்தை அந்த மினஞ்சல் மூலம் தந்ததற்கு...பின்நவீனத்துவம்....

 1. Anonymous Says:

  //எனது சீனியரைப் பற்றி இவ்வளவு புகழ்ந்து எழுதியமைக்கு மிக்க நன்றிகள்...
  //

  கன்கோனுக்கு சீனியர் என்றபடியால், வந்தியத்தேவருக்கு ஒரு எழுபது தேறுமா???

 1. Anonymous Says:

  //தேங்காய்ச் சிரட்டையை உடைப்பது போலவா?//

  சிரட்டை என்றாலே தேங்காயிலிருந்துதானே,,, இல்லை வேறேதும் உண்டா????

 1. Anonymous Says:

  // உங்கள் நடையில் நரை தெரிகிறது. //

  இது கூட பின்னவீனத்துவமா???

  தட்டை ஆடுகளங்களில் தான் பந்துகள் எகிறுகின்றன.

 1. ஆகா.. இதென்ன விவகாரமாக் கிடக்கே.. ;)
  ஒரு கும்மியின் விளைவாக இப்பதிவு உருவானதால் கும்மிப் பதிவு எனப் பெயர் பெறுவதாக.. ;)

  தம்பி பவன் நல்ல காலம் படம் போட்டு தட்டை,தென்ன மரம்,சிரட்டை என விளக்கம் தரல.. ;)
  லண்டன் போயும் இலங்கையில் கும்மிகளின் நாயகனாகத் திகழ்வதால் வந்தி ஒரு கும்மி நாயகன் ஆகிறார்..

  இப்போ வந்தி, சதீசுக்கும் எமக்கும் மாமா.. உமக்கும் கண்கோனுக்கும் குறு..
  இன்னும் யார் யாருக்கு யாரோ?

  //சின்னச்சின்ன விடயங்களை வைத்து எப்படிப்பதிவெழுதுவது //
  அவருக்கு எப்போதுமே சின்னச் சின்ன விடயங்கள் ரொம்பவே பிடிக்கும் என நேற்று முழுமையாக அறிந்திருப்பீர்களே.. ;)

 1. // அவருக்கு எப்போதுமே சின்னச் சின்ன விடயங்கள் ரொம்பவே பிடிக்கும் என நேற்று முழுமையாக அறிந்திருப்பீர்களே.. ;) //

  LMAO

 1. //தம்பி பவன் நல்ல காலம் படம் போட்டு தட்டை,தென்ன மரம்,சிரட்டை என விளக்கம் தரல.. ;) //

  ஹா ஹா....
  அவனே அந்தப் படத்தப் பாத்து இப்போ பெரிய சந்தோசமாம்...

 1. LOSHAN Said,

  //அவருக்கு எப்போதுமே சின்னச் சின்ன விடயங்கள் ரொம்பவே பிடிக்கும் என நேற்று முழுமையாக அறிந்திருப்பீர்களே.. ;)//

  என்னது எல்லாத்திலும் சின்ன விடயங்களா அவருக்கு பிடிக்கும். அவர் வீட்டில் குழப்பத்தை உண்டாக்குகிண்றீர்களே. இது நியாயமா?

 1. Bavan Says:

  கன்கொன்,
  சதீஸ் அண்ணா,
  பாலா அண்ணா,
  சுபா அண்ணா,
  மதுரை சரவணன்,


  அனைவரின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்...:)

  லோசன் அண்ணா,

  //இன்னும் யார் யாருக்கு யாரோ?//

  எனது குருவை நக்கலடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..:p

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்