Related Posts with Thumbnails
மு.கு - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல முழுக்க முழுக்க மொக்கையாகவே எழுதப்பட்டது
 
ஊர்வலம் முடிந்து விழா மண்டபத்தை அனைவரும் அடைகிறார்கள். செம்மொழி மாநாட்டுக்கு பதிவுத்தாத்தா, கலைஞர் லோசன் , கனத்ததம்பி, உல்டா அரசு, வண்ணத்திரை இயக்குனர் வந்திராஜா, பேராசிரியர் சதீஸ் உட்பட பலர் கூடியிருக்கின்றனர்.

பேராசிரியர் சதீஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்ற ஆரம்பிக்கிறார்.
இங்கு கூடியிருக்கும் எமது தமிழ்ச்சிங்கம், கண்ணாடித்தாத்தா, கிறிக்கற் கில்லி, எதையும் தாங்கும் இதயம் தமிழ் தாத்தா லோசன் ஐயா அவர்களையும் மற்றைய கவைஞர்களையும் வருக வருக வருக என வரவேற்கிறோம்.


எமது செம்மொழி மாநாடானது அழிந்துகொண்டிருக்கும் தமிழை உரம் போட்டு வளர்த்து 150 வருடமானாலும் எங்கள் கலைஞர் ஐயா போல் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகவே முன்னெடுக்கப்படுகிறது. முதலாவதாக பேராசிரியர் கனத்த தம்பி கன்கொன் அவர்கள் உரையாற்றுவார்
 என்று கூறி சதீஸ் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட 7 நிமிடங்களைப் பூர்த்தி செய்து அமர்கிறார்.
முதல்வர் தமிழ் மொழியில் பதிவெழுதலில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும் இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முற்றுக அறிந்து உணர்ந்தவர். தமிழ்ப்பதிவுலகு பிரபஞ்சத்தின் தொன்மையான உலகம், மத, சமயச் சார்பற்ற ஒரே உலகு. இவ்வுலகில் தமிழ் மட்டும் பெருமைவாய்ந்தது. உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது.
 

இலக்கிய, கலாச்சார மரபுகளையும், இன்றைய கணினியுக சொல்லாட்சியையும் வளர்க்கும் ஒரே உலகம் பதிவுலகம் மட்டுமே. இத்தமிழ் பதிவுலகின் பெருமை உலக மக்களுக்குத்தெரிய வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் பதிவுலகின் பெருமைகளை அறியும் வகையில் உலக மொழிகளில் தமிழின் மாண்பை விளக்கும் ஒரு சிறப்பான புத்தகம் எழுதப்பட வேண்டும். அப்புத்தகம் எல்ல உலகமொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, உலக மக்களைச் சென்றடைய வேண்டும். இப்பணியை முதல்வர் ஐயா செய்ய வேண்டும்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற உலகப் பொது நோக்கினைக் கொண்ட ஒரே உலகு தமிழ்ப்பதிவுலகு. ஆதலால், இம்மொழியின் புகழை உலகம் முழுக்க கொண்டு செல்ல முதல்வர் ஐயா உடனடி நடவடிக்கை செய்ய வேண்டும்.
அடுத்து வண்ணத்திரை இயக்குனர் வந்திராஜா அவர்கள் தனது உரையை ஆற்ற வருகிறார்.

என் இனிய டமில் மக்களே, MY SWEET TAMIL PEOPLE. 
எம் பதிவர்களின் உள்ளங்களிலெல்லாம் கிறிக்கறி காக்கும் தலைவனாக, புள்ளிவிபரத்தலைவனாக, 
மொழி காக்கும் தலைவனாக, 
தாய்க்கும் மேலாக, தந்தைக்கும் மேலாக சகோதரனுக்கும் மேலாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்த்தாத்தா 
டாக்டர் கலைஞர் ஐயா அவர்களே.. 
உங்களுக்கு உறுதுணையாக பக்கபலமாக தூணாக நின்று கொண்டிருக்கும் புன்னகை மன்னன் மொக்கை கன்கொன் அவர்களே, 
பதிவுலக பெருமக்களே, 
அனானிகளே வாழவைக்கும் தெய்வங்களாகிய பின்னூட்டவாதிகளே.. 
 என்று ஆரம்பித்து தனது பேருரையை முடித்துக்கொண்டு இருக்கையில் அமர்கிறார்.

அடுத்து முதுநிதி மது அவர்கள் தனது உரையை ஆற்றுவதற்காக மேடைக்கு வருகிறார்

பதிவுக்கு blog என்று பேர், இந்த பதிவு இன்பப் பதிவெங்கள் கலைஞருக்கு நேர், என்பதற்கேற்ப இன்றும் இனிய ஒரு உலகாக பதிவுலகம் விளங்குகிறது. உலகம் முழுவதும் 6கோடி ப்ளாக்குகள் இருந்தாலும் வாரத்துக்கு 3000 ப்ளாக்குகள் செயலிழந்து வருகின்றன. ஆனால் எம் உயிருக்கு நிகரான நமது பதிவுலகு வளர்ச்சியடைந்தே செல்கிறது. அதற்கு யார் காரணம்? நமது கலைஞர் ஐயாதான். கிறிக்கற் பதிவோ புட்பால் பதிவோ தொழிநுட்பப்பதிவோ ஏன் மொக்கைப்பதிவோ அனைத்துத்துறைகளிலும் இவர் தலைசிறந்து விளங்குகிறார்.


மைக்கிரோசெப்ட், ஆப்பிள் நிறுவனங்களில் தமிழர்கள்தான் பணிபுரிந்தார்கள் ஆனால் அவர்கள்கூட பதிவெழுதவில்லை. எங்கள் ஐயா எழுதினார். ஆனால் எங்கள் தமிழை வளர்க்க அனைவரும் பதிவெழுத வேண்டும். அனானி வருவார் என்று பயப்படக்கூடாது.

அடுத்து கவியரங்கம் ஆரம்பமாகிறது. கவிஞர் தாடிவைக்காத வாலி ஆதிரை, கவிதாயினி கீர்த்தி, மற்றும் உல்டாஅரசு பப்புமுத்து ஆகியோர் கவியரங்கத்தை வழங்க தயாராகிறார்கள். 

முதலில் உல்டாஅரசு பப்புமுத்து அவர்கள் தனது செம்மொழிக் கவியை வழங்க மேடைக்கு வருகிறார்.

மேற்குத்தொடர்ச்சி மலை மேகங்களே நீங்கள் அங்கிருந்தே பின்னூட்டுங்கள்
இங்கே பின்னூட்ட பதிவர்கள் இருக்கிறார்கள்
ஏ அனானியே உன் பின்னுட்டங்களைக் காணோம் என்று எங்கேயும் முறையிடாதே
எல்லாம் இப்பதிவுக்குக் கீழே கூடிவிட்டன
இது கனவா நனவா
இது பந்தலுக்குள் பதிவுலகமா
ஒரே பதிவின் கீழ் பதிவுலகா
ஓடோடி வந்த உள்ளூர்ப் பதிவர்களே
உலகப்பதிவர்களே
சிறு சிறு மொக்கைகள் கொண்டு உங்கள் திருமனதை சிரிக்கவைக்கிறேன்
நகைச்சுவைக்கவிகொண்டு உங்கள் திரைமுன்னே நகைக்க வைத்தேன்
நாமெல்லாம் ஒருவர்க்கு நன்றி சொல்ல வேண்டும்
யாருக்கு
யாருக்கு
எங்கே வோட்டுப்பட்டை கிளிக்கப்படுவதை திரட்டிகள் கேட்கட்டும்
கலைஞருக்காக ஒருமுறை வோட்டுப்போடுங்கள்
விளையாட்டு விமர்சகரே
எங்கள் மூத்த பதிவரே
செம்மொழித்தங்கமே(:P)
எங்கள் செல்லச்சிங்கமே..
அடுத்து கவிதாயினி கீர்த்தி அவர்கள் தனது கவிதையை வழங்குகிறார்
மேசை விளிம்பில் 
வைக்கப்பட்டிருக்கும் 
மெல்லிய கண்ணாடிக் 
குவளையைப் போல உள்ளது 
பதிவு
விபரீதமான ஒரு தருணத்தை 
எதிர்நோக்கிக் காத்திருக்கிறது 
திரவம் 
எங்கு போனாலும் நகர்ந்து 
தமிழில் உட்கார்ந்து கொள்கிறது 
பதிவு 
அவசரத்தில் எறியப்படும் 
வாழ்த்துக்களையும் 
நழுவி விழும் பின்னூட்டங்களையும் 
அறியப்படாதுபோகும் அனானிகளையும் 
எதிர்நோக்கி 
தமிழ் வளர்த்தலை வேண்டியபடி 
ஆனால் 
என்றுமே 
காலியாய் இருப்பதில்லை மேசை
உன் உமிழ் நீருக்குள் வாழும் கலைஞரின் தமிழ் நீர் போல


இறுதியாக கவியரங்கத்தை தலைமைவகித்த தாடியில்லாக்கவி ஆதிரை அவர்களின் தனது கவியை இறுதியாக வழங்க வருகிறார்.
பதிவுக்கு மொக்கையென்று பேர்!
அடடா!
இந்த ஒரு வாசகம்-
இணையற்ற பெருவாசகம்; இது-
இங்குள பதிவர்கட்கெல்லாம்
இன்னுமொரு திருவாசகம்!


இந்தத்-
திருவாசகத்தை அருளிய
தீந்தமிழ்க் கவிஞன்...

பெருமாளைப் பாடிய-
நாயன்மாரில் ஒருவனல்ல;
பதிவுலகில் பாடிய-
பதிவர்களில் ஒருவன்!

யாத்த பதிவுகள்
யாவையும்...

பந்து
பந்தாய் யாத்ததால்-இவன்
மற்றொரு
ப்ரட் லீயின் பந்துப்பரிமாற்றமே!

ஆனால் ஒன்று;
இவனால்...
பதிவு அவுட்டாகவில்லை;
பவுன்சர் போகவில்லை;

இவனால்...
பந்து சுவிங் ஆகிறது;
சுவிங் சிக்ஸ் ஆகிறது; -அப்
பந்தின்-
சுவிங்கில்-
கண்மூடித்தனமாக
முகக்காப்பு முட்டி விழுகிறது!

இவன்
விளையாட்டை விமர்சிக்க-
யாழில் உதித்த
புதுப்புயல்; இவன்-
நோவப் பிறந்தவரல்ல விளையபட்டென்று
கூவப் பிறந்த பூங்குயில்!
 கடைசியாக சுபாங்கன் அவர்கள் நன்றியுரை வழங்க மேடைக்கு வருகிறார்.
 தகவலுக்கு நன்றி

அண்ணனுக்காக...(:P)

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:54 AM | 27 பின்னூட்டங்கள்
vijay-wallpaper
நடிப்போ அக்டிங்கோ
தெரியாத விஜய் பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?


சந்திரசேகரன் பெத்த
அண்ணே! தமிழ்மகனே!
அழகாய் டான்ஸ் ஆட
இடுப்புல்வலி பொறுத்தவனே!


கில்லிவிஜய் பிறப்பான்னு
கனவிலயும் நீ நினைச்சதில்ல
விளையாட்டாய் நடிச்ச ஒண்ணு
கில்லிவிஜய் ஆயிருச்சு


கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
காமடி பண்ணும்போது
எப்பிடியெப்பிடி சிரிச்சிருப்பேன்?


கத்தி நடிப்பவனோ
சூப்பர் ஸ்டாராகப் பிறந்தவனோ?
தரணி படத்தில் நடிக்க வந்த
காமடி ஹீரோ இவந்தானோ?


இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
காமடிப்படத்தையும் ரசிச்சு நடிச்ச ஒன்ன
நெனச்சா அழுகவரும்


கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
குனிஞ்சு நிமிந்து ஆடுவியே
குத்தாட்டம் போடுவியே

மண்டையில கிர்ர்ரெங்கும் 
கால்விரல்கள் கதிகலங்கும்
உன்னைப்போல் ஆடப்போயி
கால் சுழுக்கி நிக்குதுங்ணா

கைவிரலை மடிச்சு முறுக்கி
நரம்ப பொடைக்க வச்சு
எள்ளும் கொள்ளும் ஒண்ணா
வெடிக்கவைக்கும் உன்னழகு 


பாத்தாலே பயம் வருமே
பச்சைத்தண்ணி பத்திக்குமே
அம்மி போல் நீ அடிச்சா
அடுத்ததெரு போய் விழுவான்


பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிச்சாலும்
பாதத்தாலே அடிச்சாலும்
உன் மனதில் நெய்வடியும்
அன்பில் தேனொழுகும்

பி.கு - வைரமுத்து ஐயா ப்பிளீஸ் மன்னிக்கவும்
நீங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் -2010க்கான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக எமது வாக்கெடுப்பில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. முடிவுகளை அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.

இந்த வாக்கெடுப்பு நிகழ்வை நடாத்தி முடிக்க பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு பதிவர்கள் பல்வேறு வகையான உதவிகளைச் செய்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இது பதிவுலகில் நாங்கள் முன்னெடுத்த ஒரு சிறு முயற்சி. வெற்றியடைந்திருக்கிறோம். நாங்கள் வி்ட்ட நிறைகளை விட குறைகள், பிழைகள் இருப்பின் கட்டாயம் சுட்டிக்காட்டுங்கள் அடுத்தமுறை கட்டாயம் திருத்திக்கொள்வோம். 

மீண்டும் எமக்க ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..:)

அப்ரிடி – பஞ்ச்

பதிவிட்டவர் Bavan | நேரம் 2:10 PM | 19 பின்னூட்டங்கள்

படையப்பா  அஜித் சிங்கம்  பூபதி சுறாfirst last

காதுக்கும் காற்சட்டைப் பொக்கற்றுக்கும் கனக்சன் கொடுத்து உடலுக்கும் டீ-சேட்க்கும் நடுவால் ஊடுருவி காதுக்குள் ஸ்டீரியோ ஹெட்செட்டில் "ஒரு தேவதை பார்க்கும் நேரமிது" என்ற பாட்டு ஆரம்பிக்க அதற்கு ஏற்றாற்போல எதிரே அவள் வெள்ளைச்சுடிதாரில் வந்துகொண்டிருந்தாள்.
இதயமே....... ஓ…..
இவளிடம்...... ஓ…..
உருகுதே....... ஓ…..
யுவனின் இசையில் ரூப்குமாரின் உச்சஸ்தாயி என் மனதை புரட்டிப்போட அப்படியே அவளது உருவம் கண்களினுடாக உள்ளேவந்து அப்படியே ஓடிக்கொண்டிருக்கும் குருதி மயிர்த்துழைக்குளாயிடம் லிப்ட் கேட்டு கணப்பொழுதில் ஓடிப்போய் இதயத்துக்குள் ஒளிந்துகொள்கிறது.
பார்க்காதே.... ஓ…..
என்றாலும்.... ஓ…..
கேட்காதே..... ஓ…..
சிட்டுவேசனுக்கு ஏற்றாற் போல் இந்த வரிகளும் ஒலிக்க அவளும் என்னைப்பார்க்க சரியாக இருந்தது. என்னை நோக்கியே வந்துகொண்டிருக்கிறாள். என் கைகளில் உள்ள விரல்கள் கூட என்னசெய்வதென்று தெரியாமல் அடிக்கடி முட்டிமோதிக் குசுகுசுத்துக்கொண்டது.
காதல் என்றால்..... ஓ…..
பொல்லாதது.....
புரிகின்றது....... ஓ...
 ரூப்குமார் வடமொழி கலந்த தமிழில் எனக்கு காதல் பொல்லாதது என்று அறிவுறுத்திக்கொண்டிருந்தார். அவள் இன்னும் 10 விநாடிகளில் என்னை அண்மித்துவிடுவாள். என்னசெய்யப்போகிறேன். நான் உட்கார்ந்திருந்த பைக்கிலிருந்து எழுந்து இரண்டு அடி முன்னே வைக்க அவள் என்னைக்கடந்து சென்று முன்னர் நான் உட்கார்ந்திருந்த பைக்கில் பைக் சொந்தக்காரனுன் ஏறிப்போக சரியாக இருந்தது.
வட போச்சே...
அலைபேசியில் தற்போது வடிவேலு சிணுங்கினார், எடுத்துப்பார்த்தால் நண்பனின் SMS.
My lover said smoking is bad,
I stopped smoking!

My lover said drinking is bad,
I stopped drinking!

My lover said frinship is bad,
I stopped my....

LOVE!
Namakku 1000 figure madiyum machi ,
Aana unna matri oru friend? mhmm
Machi oru tea sollen?..:P

SMSஐப் படித்து சிரித்துவிட்டு SMSஐப் பார்த்துக்கொண்டிருந்த போது காதிலிருந்து கழன்று விழுந்த ஹெட்செட்டை மீள எடுத்துக் காதில் மாட்ட சங்கர் மகாதேவன் 

காட்டுச்சிறுக்கி 
காட்டுச்சிறுக்கி 
யார் காட்டுச்சிறுக்கி இவ 
மழை கொடுப்பாளோ 
இடி இடிப்பாளோ 
மாயமாய் போவாளோ
என்று பாட எதிரே இன்னொரு மஞ்சள் சுடிதார் வர மீண்டும் தயாரானேன் பின்னால் பைக் ஒன்றும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு...

குரங்கு குல்லா தூக்கிய கதை, வைரமுத்து ஸ்டைலில் உடலை முறுக்கி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு படியுங்கள். வைரமுத்து ஐயா மன்னிக்கவேண்டும்..;)


கானல் வெக்கையாய் கடுப்புடன் மக்களை 
கருவாடாக்கிக் கொண்டிருக்கும் 
கார்மேகம் எட்டியும் பார்க்காத 
கடுங்கோடை விளையும் செந்தணல் பூமி அது

கடுங்கோடை பரிசளித்த கார்மேக மேனி
கார்மேக மேனியிலே வியர்வைத்தண்ணி
தன் குலம் விளங்க குல்லாய்களை கூடையிலே விற்றுவந்தான்
கருவாச்சி பெற்றெடத்த குமரேசப்பாண்டி

குமரேசன் விற்றுவிட்டான் குல்லாய்கள் கோடி
களைப்புடன் கடந்து வந்தான் ஊரின் தெருக்கோடி
ஆயாசம் அதிகரிக்க வந்தான் ஆலடிக்கு
அசதியிலே கருவிழியை அடைத்தான் விழிமூடி

கட்டாந்தரையில் கிடந்த இவன் 
கனவுலகில் சஞ்சரிக்க
சிட்டாய்க் கவிகள் வந்து குலம் விளக்கும் குல்லாவை
குபீரெனக் கவர்ந்து சென்று ஆலூரில் சிறை வைத்தது 

கனவுலகில் நமீதா மச்சாள் டாட்டா காட்டி ஓடிவிட
சுந்தரமாய் உடல்முறித்து களைப்பெடுத்து கட்டியெறிந்து
காத்திரமாய் விட்டான் ஒரு 
கடுமையான கொட்டாவி

பூவுக்குள் புகம்பம் போல் 
காட்டுக்குள் கலவரம் போல்
கரிசல் காட்டில் விழுந்த விரிசல் போல்
கண்ணைக்கட்டியது குமரேசன் கூடை
 
போதிமரத்து புத்தன் சொன்ன நீதியறியாக்குரங்கு
போட்டிருந்த தொப்பியின் காசோ பல மடங்கு
கருமேனிக்குமரேசனின் கந்தக முளை 
தீட்டியது பலதிட்டம் குரல் அடங்கும் வேளை

கருவாச்சி பெற்ற கட்டிளம் காளை 
தீட்டிய திட்டம் நிறைவேற்றும் வேளை
குலம் காத்தான் குமரேசன் தன்தொப்பி இழந்து
பலம்பெற்றான் குமரேசன் பலதொப்பி பெற்று

கவிகள்தாம் இவன் கூடை கவர்ச்சியுடன் நோக்க
செவிகள் கேளாதவன் போல் எடுத்தான் வெறிஓட்டம்
ஓட்டத்தை நிறுத்தாமல் கூட்டத்தை அடைந்தான்
குல்லாவை விற்றுவிட்டு வீட்டைப் போய்ச்சேர்ந்தான்.
கிறிக்கற். பல விசித்திரமான விடயங்களை உள்ளடக்கியது. கிறிக்கற் அதன் நுணுக்கங்களை அலசி ஆராய்ந்து அவற்றை உரிய கணத்தில் கக்க கிறிக்கற் ஆய்வாளர்களாலேயே முடியும்.அந்தவகையில் கிறிக்கற் பார்க்கும் போது வர்ணனை என்பது என்னுடன் சேர்த்துப்பலரால் விரும்பிக்கேட்கப்படும் விடயம். கிறிக்கற் பார்க்கும் போது ருவிற்றரையும் பாவிப்பவர்களுக்கு அதன் சுவாரஸ்யமும், கலகலப்பும் அதன் நுணுக்கங்களும் வெகுவாகக் கவரக்கூடிய வகையில் இருக்கும்.

சிலவேளை சில கிறிக்கற் போட்டிகளைப்பார்த்தால் நித்திரை வரும். அவ்வளவு மோசமாக ஆடுவார்கள். ஆனால் அந்த நேரத்தில் நேர்முக வர்ணனை மற்றும் போட்டியைப்பார்த்தபடி சிலர் செய்யும் கமண்டுகள் அந்தப்போட்டியின் சுவாரஸ்யத்தைக் கூட்டி என்னமா யோசிக்கிறாங்கப்பா? என்று சிந்திக்க வைக்கும்.

பலதடவை நாம் சப்போர்ட் பண்ணிய அணி தோற்றதும் பாடசாலையில் போய் பல நண்பர்களிடம் மொக்கை ஆகி சொல்லுவதற்கே விடயமின்றி அவமானப்பட்டு வீடு திரும்பியிருப்போம். ஆனால் ருவிற்றர் சிங்கம், கிறிக் இன்போவில் குடியிருக்கம் தெய்வம் என்றெல்லாம் எம்மால் புகழப்படும் கன்கொன் என்ற பிரபல ருவிற்றர்(14,781ருவிற்றுகள் இன்று அதிகாலை 1.23வரை) என்பவருக்கு இந்தப்பிரச்சினை இருந்திருக்காது. ஏனெனில் எந்தப்போட்டி நடந்தாலும் அந்த நேரத்தில் ருவிற்றரில் போட்டி பற்றி மொக்கை போடத்தவறமாட்டார். ஆனால் அதன் பிறகு அந்தப்போட்டியைப் பற்றி எங்கெங்கே போய் ஆய்வு செய்கிறாரோ தெரியவில்லை. ஆனால் கிறிக்கற் பற்றி எந்த விடயத்தைக் கேட்டாலும் 15 செக்கனில் விடயம் கைக்கு வரும். அந்தளவு வேகம்.

அவரின் இந்தத்திறமையை கிறிக் இன்போவும் நேற்றுக்கண்டு கொண்டிக்கிறது. வழக்கமாக நாம் கிறிக்கற் பற்றிய தகவல்களுக்கு நாம் கிறிக் இன்போவை நாடுவோம். ஆனால் நேற்று கிறிக் இன்போ இவரை நாடியிருக்கிறது. நேற்று சிம்பாபே எதிர் இலங்கை போட்டியில் கிறிக்கற் SUMMARY பகுதியில் இவரது ருவிட் வெளியாகியிருக்கிறது.

ஒருவரது திறமையை பாராட்ட வேண்டும். அதுதான் மனித இயல்பு அதுவும் ஒரு சக நண்பரின் பெயர்  Cricinfoவில் வரும் போது சும்மா இருக்க முடியுமா.

CRICINFOவில் வெளியான கன்கொனின் ருவிட்...
Actually Sri Lanka hate playing against Zimbabwe on 7th. They've lost in 7th Nov 1998, 7th April 2003 and today, 7th Jun 2010.

கிறிக் இன்போவில் வெளியானதைப்பார்க்க இங்கே கிளிக்குங்கள்.திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் வாக்கெடுப்பு தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.அனைவரும் தமது ஜனநாயக கடமைகளை செவ்வனே செய்து வருகிறார்கள். இதுவரை மூஞ்சிப்புத்தகம், ருவிட்டர், இணையமூலம் இவ்விடயத்தை அறிந்து பலர் தங்கள் பொன்னான வாக்குகளை குத்தி வருகிறார்கள். எனவே இதுவரை வாக்களிக்காதவர்கள் உடனடியாகச் சென்று http://tamilcinemavote.blogspot.com/2010/05/awards-2010.html இங்கே வாக்குகளை செலுத்துங்கள்.

கமலா சிம்புவா? அஞ்சலியா,த்ரிசாவா? முத்துக்குமாரா,தாமரையா? அங்காடித்தெருவா,விண்ணைத்தாண்டி வருவாயாவா? முடிவு உங்கள் கைகளில். உடனடியாகச்சென்று வாக்களியுங்கள்.


மு.கு - முழுக்க முழுக்க கற்பனையே யார்மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
நேற்றுப்பிரகாசித்த கிறிக்கற் வீரர்கள் இன்று அடித்துரத்தப்படும் அளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒருகாலத்தில் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கலாம். ஆனால் வயதும் உடலும் ஒத்தழைக்கவில்லையென்றால் ஒதுங்கிவிடவேண்டும். அப்படி ஒதுங்காவிட்டால் 2021இலும் இப்படித்தான் பதிவுகள் வரும்

2021 உலகம் மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் காலம். தற்போது T20போல T10 அறிமுகப்படுத்தப்படுகிறது. அப்போது சனத் ஜெயசூரியவை 2013ல் உலகக்கிண்ணத்தில் விளையாட அனுமதித்த நன்றிக்கடனை தீர்ப்பதற்காக சங்கக்காரவை அமைச்சர் சனத் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி அணியில் விளையாட அனுமதிக்கிறார்.
தற்போதைய(2021) அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ். இப்போது இலங்கை அணி சங்கக்கார என்ற கிழட்டு சிங்கத்தை அணியில் அனுமதித்ததால் போட்டிகளில் தோல்வியடைந்து வருகிறது. அப்போது வழக்கம்போல பதிவர்கள் சிலரின் பதிவுகள் எப்படி வரும் என்று ஒரு சின்னக்கற்பனை.

கன்கொன்
சங்கக்கார இப்போதெல்லாம் எதற்குமே பிரயோசனமில்லாமல் வெத்து வேட்டாக அணியிலிருப்பதால் பலருக்கு சங்கா மீது எரிச்சல்.
சங்காவை வைத்து நகைச்சுவை மொக்கை போட முயற்சிக்கிறார்கள்....

இப்படித்தான் அண்மையில் பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்ட போது தெரியாத்தனமாக சங்காவுக்கு இற்கு ஓய்வு (rested) என்று சொல்லிவிட்டார்கள்...
அதை வைத்து நான் உட்பட பலர் நக்கலடிக்கிறார்கள் சங்கா என்ன செய்து கிழித்துவிட்டார் என்று ஓய்வு என்று.

ஆனால் நாங்கள் ஒரு மிகப்பெரும் உண்மையை மறந்திருக்கிறோம்.
அதற்கு முன்னர் சிறிய விளக்கமொன்றை சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நடந்து செல்கிறீர்கள். அங்கிருந்து உடனே திரும்பி உங்களால் நடந்து வந்தால் களைக்குமல்லவா?
ஆனால் அதுவே அங்கு கொஞ்சம் இளைப்பாறிவிட்டு திரும்பி நடந்து வந்தால் களைப்புத் தெரியாதல்லவா?
சரி,
அதையே இங்கு நோக்குங்கள்...
சங்கா தலைக்கவசம், கால் கவசங்கள், அது இது எண்டு எல்லாத்தயும் குனிஞ்சு நிமிர்ந்து கட்டிக்கொண்டு 2,3 கிலோகிராம் நிறையுள்ள துடுப்பையும் (bat) எடுத்துக் கொண்டு மூச்சிரைக்க மூச்சிரைக்க நடந்து போய் அங்க guard எல்லாம் எடுத்திற்று லெக்கில வாற போல ஓஃப் திசையில அடிக்கப்போய் உடனயே ஆட்டமிழந்து திரும்பி வரும் போது எவ்வளவு களைப்பா இருக்கும் தெரியுமா?
ஆகவே இலங்கை அணியில் அதிகம் களைப்படைந்த வீரர் சங்கா மட்டுமே.

என்னைப் பொறுத்தவரை இந்த ஓய்வு சங்காவிற்கு நிச்சயமாகத் தேவைப்பட்ட ஒன்று. ;)

லோசன் அண்ணா
குமார் சங்ககார
இலங்கை அணியினதும்,ரசிகர்களினதும் முன்னாள் ஹீரோ.. எதிரணிகளின் முன்னாள் வில்லன். இப்போது சொந்த அணியிலேயே வேண்டாத நபராக,வில்லனாக மாறி நிற்கிறார்.

இவர் நேற்றும் விளையாடியதால் கிட்டத்தட்ட இலங்கை அணி 10 வீரர்களுடனேயே விளையாடி இருந்தது.


நேற்று நான்கு பந்துகளில் ஒரு ஓட்டம் பெற்ற அவர், கீப்பிங் செய்து 70 உதிரிகளை வழங்கியிருந்தார்.


இத் தொடரில் ஒரு முறை தானும் சங்ககார 7 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை.

6 இன்னிங்க்சில் 15 ஓட்டங்கள். சராசரி 3.75.


சங்ககார வக்கீல் ஐயா பெற்ற ஓட்டங்களைப் பாருங்களேன்..

0 not out, 2 not out, 7, 4, 0 & 0.


Strike rate 31.66.


எப்படி இருந்தவர்.. எப்படி ஆகிவிட்டார்..

இயலாவிட்டால் இளைய வீரர்களுக்கு இடம் விட்டு ஒதுங்க வேண்டியது தானே.. ஒதுக்கவும் விடாமல் அமைச்சர் சனத் ஜெயசூர்யாவை வைத்து அராஜகம் செய்கிறார்.

மத்தியூஸ் பாவம்.. அவரின் தலைமையில் சங்ககார விளையாடியுள்ள 18 போட்டிகளில் பெற்றுள்ள ஓட்டங்கள் 280.சராசரி 17.50.


இதற்குள் நேற்றும் நம்ம சங்கா ஐய்யா அவர்கள் ஒரு பேட்டியில் "2023 உலகக் கிண்ணம் வரை நான் விளையாட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்" என்று அரிய கருத்து உதிர்த்துள்ளார்..

இரண்டு மூன்று வீரர்கள் மட்டும் திறமை காட்டும் ஒரு அணி இறுதிப் போட்டிக்கு செல்வதென்பது நியாயமாகாது..
இலங்கை அணியில் கப்புகெதர, என்ஜெலோ மத்தியூஸ்(அணித்தலைவர்),லசித் மாலிங்க, திஸர பெரேரா மட்டுமே தொடர்ச்சியாக சிறப்பாக செயற்பட்டு வந்தவர்கள்..

ஆதிரை அண்ணா

இலங்கை கிரிக்கட் அணியிலும் தேசியப்பட்டியல் நியமனம் உள்ளதா என்று சிந்திக்க வைக்கின்றார் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினரின் நண்பர் கௌரவ குமார் சங்ககார அவர்கள். இவர் பல சாதனைகளுக்கு உரித்தான முன்னாள் கிரிக்கட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறகென்ன... கடந்த ஐபிஎல் T10 போட்டியில் 04 போட்டிகளில் விளையாடி இவர் மொத்தமாக பெற்றது 33 ஓட்டங்கள் மட்டுமே. நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கிண்ண T10 போட்டிகளில் 03 போட்டிகளில் 14 ஓட்டங்களைப் பெற்றும் அணியில் அசையாத நந்தியாய் இடம்பிடித்துள்ளார்.

கோர்ட் வாசலில் மக்கள் உங்கள் சேவைக்காக காத்திருக்கின்றனர். மைதானத்தை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்... இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளட்டும.
வந்தியத்தேவன் குரு
கிரிக்கெட்
ஐசிசியின் பத்துக்கு பத்து உலகக்கோப்பை இறுதிக்கட்டத்திற்க்கு வந்துவிட்டது. இன்றைய முதல் அரையிறுதியில் கிரிக்கெட் விமர்சகர்கள் பலரால் கேலி செய்யப்பட்ட அல்லது குறைத்துமதிப்பிடப்பட்ட சிம்பாபே அணி இலங்கையை மண் கவ்வச் செய்துவிட்டது. இந்தியாவுடனான போட்டியில் இலங்கை வீரர்கள் ஆக்கோரசமாக போராடி வென்றதற்கான பலனை இன்று அறுவடை செய்யமுடியவில்லை. முக்கியமான இந்தப்போட்டியிலும் அண்மைக்க்காலமாக சோபிக்காத நீதிமன்ற உறுப்பினர் கெளரவ குமார் சங்கக்காரவை ஏன் இணைத்தார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான விடயம். பெரும்பாலும் இலங்கை அணித் தெரிவில் அரசியல் தலையீடுகள் இருப்பதில்லை ஆனால் சங்ககாரவை மீண்டும் மீண்டும் சேர்க்கும் போது ஏதோ ஒரு இரகசியம் இருப்பதுபோல் தெரிகின்றது. சாதனை வீரன் சங்கா தற்போது பலராலும் காரசாரமாக சிலாகிக்கபடுவது கவலைக்குரியது. எப்படியிருந்த சங்கா இப்படியாகிவிட்டார்.
பவன்
 
ஆடிய ஆட்டமின்னும் அரைகூட முடியவில்லை
அதற்குள்ள என்னை ஏன் வீடுபோகச்சொல்லுறாங்க
அடித்த அடிகள் எல்லாம் பவுண்டரியில் தங்கிவிட
அதை எடுக்கப்போனவனோ வீடு வந்து சேரவில்லை

இரண்டாயிரம் ஆண்டு முதல் நாலுநாலாய் அடிக்கின்றேன்.
அப்பப்ப தொட்டுக்க FOOT WORKகில் சிக்ஸர்களும்
இப்பத்தான் கொஞ்சம் இயலாமல் இருக்கிறது
ஆனாலும் வக்கீலென்னை போவென்று சொல்வானேன்

எத்தனை பந்துகளை ஓட ஓடு அடித்திருப்பேன்
அத்தனை பாவமும்தான் என்னைச்சும்மா விட்டுடுமா
மூன்றாம் இடத்திலிருந்து மாறாம இருந்தவன் நான்
அதுக்கும் பின்னாடி என்னை எட்டில் தூக்கிப் போட்டுட்டியே

இரண்டாயிரம் ஆண்டு மட்டும் T10 இருந்திருந்தால்
சொல்லிச்சொல்லி அடித்திருப்பேன் பந்தை சொர்க்கத்துக்கு அடித்திருப்பேன்
இப்பமட்டும் சங்கா என்ன சப்பை என்றா நினைக்கிறீங்க
போர்ம் மட்டும் கிடைக்கட்டும் போட்டுத்தள்ளுறன் பாருங்கள்

சதீஸ் அண்ணா

  அனைத்துப்பதிவுகளிலும் சுபாங்கன் அண்ணாவின் பின்னூட்டம்

 தகவலுக்கு நன்றி
 
பதிவின் நீதி - வாழ்க்கை ஒரு வட்டம்..:P

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்