Related Posts with Thumbnails

செம்பதிவர் மாநாடு 2010

பதிவிட்டவர் Bavan Tuesday, June 29, 2010 34 பின்னூட்டங்கள்
மு.கு - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல முழுக்க முழுக்க மொக்கையாகவே எழுதப்பட்டது
 
ஊர்வலம் முடிந்து விழா மண்டபத்தை அனைவரும் அடைகிறார்கள். செம்மொழி மாநாட்டுக்கு பதிவுத்தாத்தா, கலைஞர் லோசன் , கனத்ததம்பி, உல்டா அரசு, வண்ணத்திரை இயக்குனர் வந்திராஜா, பேராசிரியர் சதீஸ் உட்பட பலர் கூடியிருக்கின்றனர்.

பேராசிரியர் சதீஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்ற ஆரம்பிக்கிறார்.
இங்கு கூடியிருக்கும் எமது தமிழ்ச்சிங்கம், கண்ணாடித்தாத்தா, கிறிக்கற் கில்லி, எதையும் தாங்கும் இதயம் தமிழ் தாத்தா லோசன் ஐயா அவர்களையும் மற்றைய கவைஞர்களையும் வருக வருக வருக என வரவேற்கிறோம்.


எமது செம்மொழி மாநாடானது அழிந்துகொண்டிருக்கும் தமிழை உரம் போட்டு வளர்த்து 150 வருடமானாலும் எங்கள் கலைஞர் ஐயா போல் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகவே முன்னெடுக்கப்படுகிறது. முதலாவதாக பேராசிரியர் கனத்த தம்பி கன்கொன் அவர்கள் உரையாற்றுவார்
 என்று கூறி சதீஸ் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட 7 நிமிடங்களைப் பூர்த்தி செய்து அமர்கிறார்.
முதல்வர் தமிழ் மொழியில் பதிவெழுதலில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும் இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முற்றுக அறிந்து உணர்ந்தவர். தமிழ்ப்பதிவுலகு பிரபஞ்சத்தின் தொன்மையான உலகம், மத, சமயச் சார்பற்ற ஒரே உலகு. இவ்வுலகில் தமிழ் மட்டும் பெருமைவாய்ந்தது. உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது.
 

இலக்கிய, கலாச்சார மரபுகளையும், இன்றைய கணினியுக சொல்லாட்சியையும் வளர்க்கும் ஒரே உலகம் பதிவுலகம் மட்டுமே. இத்தமிழ் பதிவுலகின் பெருமை உலக மக்களுக்குத்தெரிய வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் பதிவுலகின் பெருமைகளை அறியும் வகையில் உலக மொழிகளில் தமிழின் மாண்பை விளக்கும் ஒரு சிறப்பான புத்தகம் எழுதப்பட வேண்டும். அப்புத்தகம் எல்ல உலகமொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, உலக மக்களைச் சென்றடைய வேண்டும். இப்பணியை முதல்வர் ஐயா செய்ய வேண்டும்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற உலகப் பொது நோக்கினைக் கொண்ட ஒரே உலகு தமிழ்ப்பதிவுலகு. ஆதலால், இம்மொழியின் புகழை உலகம் முழுக்க கொண்டு செல்ல முதல்வர் ஐயா உடனடி நடவடிக்கை செய்ய வேண்டும்.
அடுத்து வண்ணத்திரை இயக்குனர் வந்திராஜா அவர்கள் தனது உரையை ஆற்ற வருகிறார்.

என் இனிய டமில் மக்களே, MY SWEET TAMIL PEOPLE. 
எம் பதிவர்களின் உள்ளங்களிலெல்லாம் கிறிக்கறி காக்கும் தலைவனாக, புள்ளிவிபரத்தலைவனாக, 
மொழி காக்கும் தலைவனாக, 
தாய்க்கும் மேலாக, தந்தைக்கும் மேலாக சகோதரனுக்கும் மேலாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்த்தாத்தா 
டாக்டர் கலைஞர் ஐயா அவர்களே.. 
உங்களுக்கு உறுதுணையாக பக்கபலமாக தூணாக நின்று கொண்டிருக்கும் புன்னகை மன்னன் மொக்கை கன்கொன் அவர்களே, 
பதிவுலக பெருமக்களே, 
அனானிகளே வாழவைக்கும் தெய்வங்களாகிய பின்னூட்டவாதிகளே.. 
 என்று ஆரம்பித்து தனது பேருரையை முடித்துக்கொண்டு இருக்கையில் அமர்கிறார்.

அடுத்து முதுநிதி மது அவர்கள் தனது உரையை ஆற்றுவதற்காக மேடைக்கு வருகிறார்

பதிவுக்கு blog என்று பேர், இந்த பதிவு இன்பப் பதிவெங்கள் கலைஞருக்கு நேர், என்பதற்கேற்ப இன்றும் இனிய ஒரு உலகாக பதிவுலகம் விளங்குகிறது. உலகம் முழுவதும் 6கோடி ப்ளாக்குகள் இருந்தாலும் வாரத்துக்கு 3000 ப்ளாக்குகள் செயலிழந்து வருகின்றன. ஆனால் எம் உயிருக்கு நிகரான நமது பதிவுலகு வளர்ச்சியடைந்தே செல்கிறது. அதற்கு யார் காரணம்? நமது கலைஞர் ஐயாதான். கிறிக்கற் பதிவோ புட்பால் பதிவோ தொழிநுட்பப்பதிவோ ஏன் மொக்கைப்பதிவோ அனைத்துத்துறைகளிலும் இவர் தலைசிறந்து விளங்குகிறார்.


மைக்கிரோசெப்ட், ஆப்பிள் நிறுவனங்களில் தமிழர்கள்தான் பணிபுரிந்தார்கள் ஆனால் அவர்கள்கூட பதிவெழுதவில்லை. எங்கள் ஐயா எழுதினார். ஆனால் எங்கள் தமிழை வளர்க்க அனைவரும் பதிவெழுத வேண்டும். அனானி வருவார் என்று பயப்படக்கூடாது.

அடுத்து கவியரங்கம் ஆரம்பமாகிறது. கவிஞர் தாடிவைக்காத வாலி ஆதிரை, கவிதாயினி கீர்த்தி, மற்றும் உல்டாஅரசு பப்புமுத்து ஆகியோர் கவியரங்கத்தை வழங்க தயாராகிறார்கள். 

முதலில் உல்டாஅரசு பப்புமுத்து அவர்கள் தனது செம்மொழிக் கவியை வழங்க மேடைக்கு வருகிறார்.

மேற்குத்தொடர்ச்சி மலை மேகங்களே நீங்கள் அங்கிருந்தே பின்னூட்டுங்கள்
இங்கே பின்னூட்ட பதிவர்கள் இருக்கிறார்கள்
ஏ அனானியே உன் பின்னுட்டங்களைக் காணோம் என்று எங்கேயும் முறையிடாதே
எல்லாம் இப்பதிவுக்குக் கீழே கூடிவிட்டன
இது கனவா நனவா
இது பந்தலுக்குள் பதிவுலகமா
ஒரே பதிவின் கீழ் பதிவுலகா
ஓடோடி வந்த உள்ளூர்ப் பதிவர்களே
உலகப்பதிவர்களே
சிறு சிறு மொக்கைகள் கொண்டு உங்கள் திருமனதை சிரிக்கவைக்கிறேன்
நகைச்சுவைக்கவிகொண்டு உங்கள் திரைமுன்னே நகைக்க வைத்தேன்
நாமெல்லாம் ஒருவர்க்கு நன்றி சொல்ல வேண்டும்
யாருக்கு
யாருக்கு
எங்கே வோட்டுப்பட்டை கிளிக்கப்படுவதை திரட்டிகள் கேட்கட்டும்
கலைஞருக்காக ஒருமுறை வோட்டுப்போடுங்கள்
விளையாட்டு விமர்சகரே
எங்கள் மூத்த பதிவரே
செம்மொழித்தங்கமே(:P)
எங்கள் செல்லச்சிங்கமே..
அடுத்து கவிதாயினி கீர்த்தி அவர்கள் தனது கவிதையை வழங்குகிறார்
மேசை விளிம்பில் 
வைக்கப்பட்டிருக்கும் 
மெல்லிய கண்ணாடிக் 
குவளையைப் போல உள்ளது 
பதிவு
விபரீதமான ஒரு தருணத்தை 
எதிர்நோக்கிக் காத்திருக்கிறது 
திரவம் 
எங்கு போனாலும் நகர்ந்து 
தமிழில் உட்கார்ந்து கொள்கிறது 
பதிவு 
அவசரத்தில் எறியப்படும் 
வாழ்த்துக்களையும் 
நழுவி விழும் பின்னூட்டங்களையும் 
அறியப்படாதுபோகும் அனானிகளையும் 
எதிர்நோக்கி 
தமிழ் வளர்த்தலை வேண்டியபடி 
ஆனால் 
என்றுமே 
காலியாய் இருப்பதில்லை மேசை
உன் உமிழ் நீருக்குள் வாழும் கலைஞரின் தமிழ் நீர் போல


இறுதியாக கவியரங்கத்தை தலைமைவகித்த தாடியில்லாக்கவி ஆதிரை அவர்களின் தனது கவியை இறுதியாக வழங்க வருகிறார்.
பதிவுக்கு மொக்கையென்று பேர்!
அடடா!
இந்த ஒரு வாசகம்-
இணையற்ற பெருவாசகம்; இது-
இங்குள பதிவர்கட்கெல்லாம்
இன்னுமொரு திருவாசகம்!


இந்தத்-
திருவாசகத்தை அருளிய
தீந்தமிழ்க் கவிஞன்...

பெருமாளைப் பாடிய-
நாயன்மாரில் ஒருவனல்ல;
பதிவுலகில் பாடிய-
பதிவர்களில் ஒருவன்!

யாத்த பதிவுகள்
யாவையும்...

பந்து
பந்தாய் யாத்ததால்-இவன்
மற்றொரு
ப்ரட் லீயின் பந்துப்பரிமாற்றமே!

ஆனால் ஒன்று;
இவனால்...
பதிவு அவுட்டாகவில்லை;
பவுன்சர் போகவில்லை;

இவனால்...
பந்து சுவிங் ஆகிறது;
சுவிங் சிக்ஸ் ஆகிறது; -அப்
பந்தின்-
சுவிங்கில்-
கண்மூடித்தனமாக
முகக்காப்பு முட்டி விழுகிறது!

இவன்
விளையாட்டை விமர்சிக்க-
யாழில் உதித்த
புதுப்புயல்; இவன்-
நோவப் பிறந்தவரல்ல விளையபட்டென்று
கூவப் பிறந்த பூங்குயில்!
 கடைசியாக சுபாங்கன் அவர்கள் நன்றியுரை வழங்க மேடைக்கு வருகிறார்.
 தகவலுக்கு நன்றி

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. ஓ! மக்களே...
  நானா முதலாவது?

 1. // இது யார் மனதையும் புண்படுத்த அல்ல முழுக்க முழுக்க மொக்கையாகவே எழுதப்பட்டது //

  சரி...
  பாப்பம்...


  // பதிவுத்தாத்தா, கலைஞர் லோசன் , கனத்ததம்பி, உல்டா அரசு, வண்ணத்திரை இயக்குனர் வந்திராஜா, பேராசிரியர் சதீஸ் //

  சரி...
  நல்ல பசங்க தான்...


  // எதையும் தாங்கும் இதயம் தமிழ் தாத்தா லோசன் ஐயா //

  அடப்பாவி...
  அந்தாள் பாவமய்யா...
  அந்தாள் தாங்குதெண்டதும் எதையும் தாங்கும் இதயம் எண்டு சொல்லி அவனவன உசுப்பேத்தி விடுற மாதிரிக் கிடக்கு....


  // முதலாவதாக பேராசிரியர் கனத்த தம்பி கன்கொன் அவர்கள் உரையாற்றுவார் //

  அம்மா இதப் பாத்தா பெருமைப்படுவா...
  ஏதோ பெற்ற மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் எண்டுவினம்?
  அது...


  // மத, சமயச் சார்பற்ற ஒரே உலகு. //

  நம்பிறன்... ;)


  // என் இனிய டமில் மக்களே, MY SWEET TAMIL PEOPLE. //

  :D
  மாமா அதிக பீற்றர் உடம்புக்கு ஆகாது....


  // பதிவுக்கு blog என்று பேர், இந்த பதிவு இன்பப் பதிவெங்கள் கலைஞருக்கு நேர், //

  'இன்பம்' எண்டாலே அவர் தான் என? :P

 1. நல்லா இருக்குங்க உங்கள் கிண்டல்.

 1. // இங்கே பின்னூட்ட பதிவர்கள் இருக்கிறார்கள் //

  என்னையா கூப்பிடுறீங்கள்? ;)


  // செம்மொழித்தங்கமே(:P) //

  இதில் நாக்கை நீட்டக் காரணம்?
  ஏதாவது உள்குத்து?  // உன் உமிழ் நீருக்குள் வாழும் கவைஞரின் தமிழ் நீர் //

  ஆங்...
  முடியல...


  // தாடியில்லாக்கவி ஆதிரை //

  அவர் இன்னும் வயசுக்கு வரவில்லை என மறைமுகமாக குற்றிக் காட்டுவதை கடுமையாகக் கண்டிக்கிறேன்.
  எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும். ;)


  // தகவலுக்கு நன்றி //

  ஹி ஹி ஹி ஹி ஹி....

 1. பதிவை விட கவிதைகள் கலக்கல்.
  மதுவின் உரையில் மதுயிசம் காணவில்லை. மதிவிற்க்குப் பதிலாக யாரோ ஒரு போலி மது உரையாற்றிவிட்டார் போல் தெரிகின்றது.
  ஆதிரையிசமும் மிஸ்சிங் (பீட்டர் விட்டால் தான் நான் தமிழன்)
  அவனவனே வரலாறுகளை தாறுமாறாக எழுதும் பொது இந்த மொக்கையில் தவறில்லை.

  நன்றாக வாய்விட்டுச் சிரித்தேன்.

 1. // ஆதிரையிசமும் மிஸ்சிங் //

  குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் வந்தியண்ணாவைக் கணடிக்கிறேன்................

 1. ///இவன்
  விளையாட்டை விமர்சிக்க-
  யாழில் உதித்த
  புதுப்புயல்; இவன்-
  நோவப் பிறந்தவ//

  பிரதெசவாதம் கதைக்கின்றீர்கள் பவன்

  ___
  இப்படிக்கு அனானி 3679

 1. செம்பதிவர் மாநாட்டை பதிவுலக அரசியலில் இருந்து பிரித்துப்பார்க்க விரும்புகின்றோம்.

 1. கலைஞர் லோஷன் என்று சொன்னதுல ஏதோ உள்குத்து இருக்கிறது போலத் தெரியுதே? ;-)

  இனிய மாலைப்பொழுதில் சிரிக்க வைத்த பதிவு!

 1. `ஹி `ஹி...நல்ல மொக்கை பதிவு...

  //செம்மொழி மாநாட்டுக்கு பதிவுத்தாத்தா, கலைஞர் லோசன் , கனத்ததம்பி//

  கனத்ததம்பிக்கு என்ன கனத்து இருக்கு பின்னூட்டத்தில் தெளிவுபடுத்தவும் ஒருமாதிரியாக லோஷன் அண்ணாவை தாத்தாஆக்கியாச்சு.. அடுத்தது யாரு...

 1. funny, as usual

 1. Riyas Says:

  //இது யார் மனதையும் புண்படுத்த அல்ல முழுக்க முழுக்க மொக்கையாகவே எழுதப்பட்டது//

  சொல்லித்தான் தெரியனுமா.. ஹி..ஹி..

  நல்லாயிருக்கு பவன் சிரித்தேன் ரசித்தேன்.

 1. Subankan Says:

  ஓ பதிவுலகமே
  ஏனிந்த பாகுபாடு?
  கொள்ளுப்பேத்திக்கே கொழுத்த மணிநேர வீணைக்கச்சேரி கொடுக்கும்போது இந்தத் தரங்கத்துக் காரனுக்கு ஒற்றை வார்த்தையா?
  வேதனை - அவமானம் - வெட்கம்

 1. Subankan Says:

  உலகத் தமிழ் செம்பதிவர் மாநாட்டுத் தட்டியில் Being a blogger என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை மென்மையாகக் கண்டிக்கிறேன்.

 1. பதிவு கலக்கல் பவன்!!! பதிவில் உங்கள் கவிதை அருமை!!! பச்சிளம் பாலகர்களை எல்லாம் தாத்தா என்று கூறியமை கண்டிக்கத்தக்கது!!!


  REPEAT
  //உலகத் தமிழ் செம்பதிவர் மாநாட்டுத் தட்டியில் Being a blogger என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை மென்மையாகக் கண்டிக்கிறேன்.//

 1. :))ரொம்ப நல்லாருக்கு பவன்.

 1. அடப்பாவி இங்கேயும் நான் தான் சிக்கினேனா?
  வயிறு வலிக்க சிரித்தேன்..

  உள் மறைத்து உரைக்கப்பட்டுள்ள அடிகளும் கிண்டல்களும் அபாரம்,. ;)

  கலக்கல் கவிதைகள்.
  பப்பு முத்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறார்.
  பத்மஸ்ரீ ஒன்றும் தூரமில்லை.

  பேராசிரியர் சதீஸின் உரை காணோம்.

  கனத்த தம்பி ஆங்கிலத்தில் பேசவில்லையோ?

  சுபாங்கன் அவர்களின் சுந்தரத்தமிழையும் கொஞ்சம் தந்திருக்கலாமே.

  LOSHAN
  http://arvloshan.com/

 1. // என் இனிய டமில் மக்களே, MY SWEET TAMIL PEOPLE. //

  :D
  மாமா அதிக பீற்றர் உடம்புக்கு ஆகாது....


  // பதிவுக்கு blog என்று பேர், இந்த பதிவு இன்பப் பதிவெங்கள் கலைஞருக்கு நேர், //

  'இன்பம்' எண்டாலே அவர் தான் என? :P


  ஹா ஹா.. கங்கோன் CLASSIC

 1. அவனவனே வரலாறுகளை தாறுமாறாக எழுதும் பொது இந்த மொக்கையில் தவறில்லை//

  ஆமாங்கோவ்.. :)  // ஆதிரையிசமும் மிஸ்சிங் //

  குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் ..//

  எந்தக் குடும்பம்? ;)  இப்படிக்கு அனானி 3679 //

  இது வேறையா?  கலைஞர் லோஷன் என்று சொன்னதுல ஏதோ உள்குத்து இருக்கிறது போலத் தெரியுதே? ;-)//

  ஏன்யா இப்பிடி?
  விட்டா எடுத்துக் குடுப்பீங்க போலிருக்கே..

  எவனெவன் டின் கட்டப் போறானோ?  கொள்ளுப்பேத்திக்கே கொழுத்த மணிநேர வீணைக்கச்சேரி கொடுக்கும்போது இந்தத் தரங்கத்துக் காரனுக்கு ஒற்றை வார்த்தையா?
  வேதனை - அவமானம் - வெட்கம்//

  அதானே.. ஐந்தறைப்பெட்டியுடன் வந்திருந்தால் அரை மணிநேரம் தந்திருப்பாரோ?

  பெட்டிக்கும் பேத்திக்கும் தான் இங்கே மதிப்பு

 1. //
  கலைஞர் லோஷன் என்று சொன்னதுல ஏதோ உள்குத்து இருக்கிறது போலத் தெரியுதே? ;-)//

  ஏன்யா இப்பிடி?
  விட்டா எடுத்துக் குடுப்பீங்க போலிருக்கே..

  எவனெவன் டின் கட்டப் போறானோ?
  //

  அது சரி, நாங்கள் சும்மா பகிடிக்குக் கதைக்க, பிறகு இதைவச்சே பெருங்கதைகள் கட்டப்பட்டுவிடும்!

  என்ன செய்ய... உலகம் போற போக்கு அப்பிடி....

  ஆனாலும்... கலைஞர் லோஷன் எண்டதுல.... ;-)....

  இல்லை வேண்டாம் என்றியளா? சரி விட்டுடுவம்..!

 1. தம்பி அசோக்.. அச்சாப் பிள்ளை எல்லே.. ஐ ஆம் பாவம்..

 1. Subankan Says:

  //ஏன்யா இப்பிடி?
  விட்டா எடுத்துக் குடுப்பீங்க போலிருக்கே..

  எவனெவன் டின் கட்டப் போறானோ?
  //

  பயப்பிடாதைங்கோ, ஹர்ஷூ பதிவெழுத வர இன்னும் நாளாகும்

 1. அவன் பெயர் ஸ்டாலின் அல்ல. ஹர்ஷு ;)

 1. // அவன் பெயர் ஸ்டாலின் அல்ல. ஹர்ஷு ;) //

  Classic அண்ணா..... :D :D :D

 1. //
  அவன் பெயர் ஸ்டாலின் அல்ல. ஹர்ஷு ;)
  //

  நல்ல காலம் அவன் பெயர் அழகிரி அல்ல!

 1. இப்போதே செய்கிற குழப்படிகளைப் பார்த்தால் வருங்கால அழகிரி போல வருவான் என்றும் யோசிக்கிறேன். ;)

  பி.கு - இதுக்கு மேல வேணாமே.. ;) ப்ளீஸ்

 1. அடிக்கிற அடியில் தார தப்பட்டைகள் கிழிந்து தாறுமாறாகத் தொங்க வேண்டாமா??...ம்.... கிளப்புங்கள்

 1. Anonymous Says:

  அனானிப் பின்னூட்டம் வாங்காத பதிவெல்லாம் பதிவாகாது.

  ஆகவே, இந்தாங்கோ பாஸ் ஒன்று.

 1. Anonymous Says:

  பப்புமுத்து?

  எழுத்துப்பிழை இல்லையா?

 1. Anonymous Says:

  //அம்மா இதப் பாத்தா பெருமைப்படுவா...//

  ஈழத்தாய் ஜெயலலிதா???

 1. Anonymous Says:

  //உன் உமிழ் நீருக்குள் வாழும் கலைஞரின் தமிழ் நீர் போல//

  அபச்சாரம்... அபச்சாரம்...

 1. தகவலுக்கு நன்றி.. சுபாங்கன். ஹீ ஹீ

  :)

  இது ஏன் வந்தது என்று பிறகு கேட்டுக்கொள்கிறேன்.

 1. Bavan Says:

  கன்கொன்,
  DrPKandaswamyPhD,
  வந்தியண்ணா,
  ஆதிரை அண்ணா,
  என.கே.ஆஷோக்பரன்,
  வதீஸ் அண்ணா,
  யோ அண்ணா,
  Riyas,
  சுபா அண்ணா,
  அனுதினன்,
  வானம்பாடிகள் சார்,
  லோசன் அண்ணா,
  உலவு.காம்
  மது அண்ணா,

  மற்றும்

  அனானிகளுக்கும்

  வருகைக்கும் கருத்துக்கும் கும்மியமைக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..:)))

 1. கலக்கல் பவன்...நிறைய குத்துக்கள் இருக்கு போல....லோஷன் அண்ணா நாங்கெல்லாம் சைலன்சாய் தான் பேசுவோம்..காரணம் குருவி. எங்க பேச்சு மட்டும் தான் சைலன்ஸ்....அப்பு ராசா பவன் பேராசிரியர் என்று சொல்லிட்டாய் எந்த துறையில் என்று சொல்லலையே...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்