Related Posts with Thumbnails

குரங்கு குல்லா தூக்கிய கதை, வைரமுத்து ஸ்டைலில் உடலை முறுக்கி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு படியுங்கள். வைரமுத்து ஐயா மன்னிக்கவேண்டும்..;)


கானல் வெக்கையாய் கடுப்புடன் மக்களை 
கருவாடாக்கிக் கொண்டிருக்கும் 
கார்மேகம் எட்டியும் பார்க்காத 
கடுங்கோடை விளையும் செந்தணல் பூமி அது

கடுங்கோடை பரிசளித்த கார்மேக மேனி
கார்மேக மேனியிலே வியர்வைத்தண்ணி
தன் குலம் விளங்க குல்லாய்களை கூடையிலே விற்றுவந்தான்
கருவாச்சி பெற்றெடத்த குமரேசப்பாண்டி

குமரேசன் விற்றுவிட்டான் குல்லாய்கள் கோடி
களைப்புடன் கடந்து வந்தான் ஊரின் தெருக்கோடி
ஆயாசம் அதிகரிக்க வந்தான் ஆலடிக்கு
அசதியிலே கருவிழியை அடைத்தான் விழிமூடி

கட்டாந்தரையில் கிடந்த இவன் 
கனவுலகில் சஞ்சரிக்க
சிட்டாய்க் கவிகள் வந்து குலம் விளக்கும் குல்லாவை
குபீரெனக் கவர்ந்து சென்று ஆலூரில் சிறை வைத்தது 

கனவுலகில் நமீதா மச்சாள் டாட்டா காட்டி ஓடிவிட
சுந்தரமாய் உடல்முறித்து களைப்பெடுத்து கட்டியெறிந்து
காத்திரமாய் விட்டான் ஒரு 
கடுமையான கொட்டாவி

பூவுக்குள் புகம்பம் போல் 
காட்டுக்குள் கலவரம் போல்
கரிசல் காட்டில் விழுந்த விரிசல் போல்
கண்ணைக்கட்டியது குமரேசன் கூடை
 
போதிமரத்து புத்தன் சொன்ன நீதியறியாக்குரங்கு
போட்டிருந்த தொப்பியின் காசோ பல மடங்கு
கருமேனிக்குமரேசனின் கந்தக முளை 
தீட்டியது பலதிட்டம் குரல் அடங்கும் வேளை

கருவாச்சி பெற்ற கட்டிளம் காளை 
தீட்டிய திட்டம் நிறைவேற்றும் வேளை
குலம் காத்தான் குமரேசன் தன்தொப்பி இழந்து
பலம்பெற்றான் குமரேசன் பலதொப்பி பெற்று

கவிகள்தாம் இவன் கூடை கவர்ச்சியுடன் நோக்க
செவிகள் கேளாதவன் போல் எடுத்தான் வெறிஓட்டம்
ஓட்டத்தை நிறுத்தாமல் கூட்டத்தை அடைந்தான்
குல்லாவை விற்றுவிட்டு வீட்டைப் போய்ச்சேர்ந்தான்.

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. தம்பி டேய்...

  பவன்...
  என்னடா நடந்தது?

 1. கலக்கல் பவன்....

  நகைச்சுவை என்பதையும் தாண்டி உரைநடை, மொழி நன்றாக இருக்கிறது....

  வர வர தமிழில் கலக்க ஆரம்பித்திருக்கிறாய், கவிதைகள் எல்லாம் எழுதுகிறாய்...

  வாழ்த்துக்கள்...

  தொடர்ந்து கலக்கு....

 1. பவன்ஜி கலக்கல்ஜி!!!!!

  உங்களுக்கு கவிதை நல்லாவே வருதுஜி!!! உரைநடையில் சும்மா கலக்குறிங்கஜி!!!

  கவிதையில்ஜி நமீதாவை கொண்டுவந்தமைஜி நீங்கள்ஜி ஒரு மசாலா கவிஜர்ஜி என்று காட்டவாஜி??

  பவன் உண்மையில் கவிதை கலக்கல்! வைரமுத்து இப்படி கூட எழுதி இருக்கலாமே என்று யோசிக்க கூடும்

 1. Unknown Says:

  அலோ அவரு கெடக்காரு..
  உங்க பாணியே சூப்பருங்கோ ..

 1. பின்னுறீங்க பவன்...

 1. வைரமுத்துவை விட நல்லாருக்கு...

 1. அருமை பவன்
  நகைச்சுவையாக மட்டுமில்லாமல் வார்த்தைகளை நீங்கள் கோர்த்திருக்கும் விதமும் அழகு

 1. தொர கவிதையெல்லாம் எழுதுது. இப்பவே கவிதை எழுதுறதுக்கு Practice பண்ணுறீர்போல...

  நன்றாகயிருக்குறது...

 1. வைரமுத்து யாரையோ தேடுவதாக தகவல்

 1. Subankan Says:

  ரசித்தேன் :)

 1. STS Says:

  awesome :-)

 1. Bavan Says:

  கன்கொன்,
  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)

  ***

  அனுதினன்,

  நன்றிடா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  கே.ஆர்.பி.செந்தில்

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  பாலா அண்ணா,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)

  ***

  தமிழ்

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  தர்ஷன்,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  ***

  வதீஸ் அண்ணா,

  என்னாதுது? பிராக்டிசா? அவ்வ்வ்

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  யோ அண்ணா,

  நான் அவன் இல்லை...
  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  சுபா அண்ணா,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)

  ***

  கல்பனா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...:)

 1. Riyas Says:

  //பூவுக்குள் புகம்பம் போல்
  காட்டுக்குள் கலவரம் போல்
  கரிசல் காட்டில் விழுந்த விரிசல் போல்
  கண்ணைக்கட்டியது குமரேசன் கூடை//
  நல்லாயிருக்குங்க பவன்..

 1. யாரடா அங்கே கலைஞர் அவர்களுக்கு அடுத்த பாராட்டு விழா ரெடி பண்ணுங்க. வைரமுத்து வராவிட்டால் என்ன நம்ம பவன் இருக்கான்....போதுமா இல்லை இன்னும் சொல்லனுமா?

 1. ம்

 1. Bavan Says:

  Riyas,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...:)

  ***

  சதீஸ் அண்ணா,

  //போதுமா இல்லை இன்னும் சொல்லனுமா?//

  இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா...:P

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)

 1. வாழ்க எங்கள் திருமலை தந்த திருக்கவியே..
  கரு நிறக் கவிஞன் வைரமுத்துவைப் புற முதுகிட்டு ஓட வைத்தாய்..
  குரங்கின் தலையில் குல்லாய்..
  உன் தலைக்குள் எது தான் இல்லை?
  படம் போட்டுப் பகிடி விடுபவனே
  பதிவுலகில் நீ ஒரு முத்து..
  எங்கள் சொத்து வாழ்க.. :)

  யோவ் குரங்குகள் எல்லாம் தேடி வருதாம்.. ஓடி தப்புங்கைய்யா..

 1. Anonymous Says:

  பதிவுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

 1. Bavan Says:

  லோசன் அண்ணா,

  //வாழ்க எங்கள் திருமலை தந்த திருக்கவியே..
  கரு நிறக் கவிஞன் வைரமுத்துவைப் புற முதுகிட்டு ஓட வைத்தாய்..//

  என்னாதுது??? வைரமுத்து ஐயா அது நானில்லை...

  //படம் போட்டுப் பகிடி விடுபவனே
  பதிவுலகில் நீ ஒரு முத்து..
  எங்கள் சொத்து வாழ்க.. :)//

  ஹீஹீ என்ன அண்ணே திடீரெண்டு TR மாதிரி பேசுறீங்க..:P

  //யோவ் குரங்குகள் எல்லாம் தேடி வருதாம்.. ஓடி தப்புங்கைய்யா..//

  என்னது? சுந்தரக்கிளைகள் தாவி அந்தரத்தில் கவிகள் ஆயாசமின்றி அலைகடலெனத் துரத்தி வருகிறதா?..:P

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)

 1. என்பவன்,

  இது.. இதுதான் உங்களிட்ட எதிர்பார்த்து.. எதிர்பாக்கிறது.. போட்டுத் தாங்குங்கோ உங்கள் பதிவுகளை.. நிறையவே இரசித்தேன்..

 1. Bavan Says:

  மது அண்ணா,

  நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)

 1. goma Says:

  மறந்துட்டீங்களே
  எல்லா வரிகளையும் டபுள் எக்ஸ்போஸ்பண்ணனும் அதாங்க ரெண்டு ரெண்டுவாட்டி வாசிப்பாரே...

 1. goma Says:

  இது ஓகே

  தமிழை இதில் கொட்டாமல் ,உங்கள் மன ஓட்டத்துக்கு வடிகாலாக்குங்கள்...நீங்கள் எங்கேயோ போய் விடுவீர்கள்
  வாழ்த்துக்கள்.

 1. கவிதை நடை அருமை. கலக்கல்

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்