Related Posts with Thumbnails
we miss you murali
ஒரு மனிதனுக்குவாழ்க்கையில் சோதனை வரலாம் ஆனா சோதனையே வாழ்க்கையா அமைந்துவிட்டால்? நாம் ஒரு விடயத்தைச் செய்கிறோம், அது பிழைத்துவிடுகிறது அல்லது பிறரால் அது பிழை எனக்கருதப்படுகிறது. அதற்காக நாம் செய்வது பிழை என்று ஆகிவிடுமா? அதுதான் முரளிதரன் என்ற மாமனிதனுக்கும் நடந்தது. அவர் இன்று ஒரு சிறந்த வீரர் என்பதோடு மட்டுமல்லாது சிறந்த மனிதராக திகழ்கிறார். நேற்றைக்கு வந்த பந்துவீச்சாளர்களெல்லாம் ஒரு போட்டியில் 4 ஓவர் பந்து வீசி 2விக்கெற் எடுத்தாலே ஏதோ தாங்கள் பெரிய பந்துவீச்சாளர் என்று பெருமையில் துடுப்பாட்ட வீரருடன் வாய்த்தர்க்கங்களில் ஈடுபடுவதும், ஒழுங்கமின்றி நடந்து கொள்வதும் அனைவரும் அறிந்ததே.


அதிக விடயம் தெரிந்தவன் அமைதியாகத்தான் இருப்பான் என்பார்கள் அதற்கு சிறந்த உதாரணம் முரளிதரன். இதுவரை சர்வதேச கிறிக்கற் போட்டிகளில் மாத்திரம் 61928 பந்துகளை சுழற்றி வீசி 1320 விக்கற்டுகளையும் சாய்த்திருக்கும் சிங்கத்துக்கு ஓய்வு என்பது தேவையான ஒன்றுதான். ஆனால் இலங்கை அணி என்றால் முரளி விளையாடுகிறார் என்றால் எதிரணிக்கு பீதி போகும் எமக்கும் இலங்கை கட்டாயம் வெல்லும் என்று ஒரு நம்பிக்கை பிறக்கும். 


முரளி பந்தை எறியவில்லை என்பதற்கான ஆதாரம் காட்டும் வீடியோ - ஒரு நினைவுக்காக

we miss you muraliசின்னத் தொழிலாளி
மாலைவேளைகளில் நண்பர்களுடன் கடற்கரைக்கு காற்று வாங்கச்செல்வது எனது நாளாந்தக்கடமைகளில் ஒன்று. அன்றும் அப்படித்தான் நானும் இன்னொரு நண்பனும் மற்ற நண்பர்கள் வரமுதலே கடற்கரைக்கு சென்றுவிட்டோம். ஒரு சிறுவன் கடலை விற்றுக்கொண்டு வந்தான். ஒரு 6 அல்லது 7 வயதுதான் இருக்கும். பாடசாலைச் சீருடை அரைக்காற்சட்டை அணித்திருந்தான். பாடசாலையில் படிப்பவன்தான் என்று முடிவு பண்ணிவிட்டோம். கடற்கரையில் நமக்கும் பொழுது போகாததால் அவனிடம் விசாரித்தோம்.
நாம் - எந்த ஸ்கூல்
சிறுவன் - சென்சேவியர்
நாம் - எத்தனையாம் வகுப்பு?
சி- 3ம் வகுப்பு
நா - வீடு எங்கே? அப்பா அம்மா?
சி - அப்பாவுக்கு சுகமில்லை, அம்மா வீடடில்.
நா - சகோதரர்கள்?
சி - 2 அண்ணா
பிறகு அவனிடம் கடலை வாங்கிவி்ட்டு காசைக்கொடுக்க அவன் போய்விட்டான். அதன் பிறகுதான் கவனித்தோம் கடலை விற்றுக்கொண்டிருந்தவர்களில் பலர் பாடசாலைச்சீருடைக் (நீல)காற்சட்டைதான் அணிந்திருந்தர்கள்.

இப்படி இன்னும் எத்தனை சிறுவர்கள் குடும்பப்பிரச்சினைக்காக இப்படி பாடசாலை முடிந்ததும் அப்படி ஒரு வேளைக்கஞ்சிக்காக உழைக்கிறார்கள். இவ்வாறான சிறுவர்கள் கூடுதலாக 9வது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிடுவதும் நான் கண்கூடாக்கண்ட உண்மை. 


EXAM
80 நிமிடம், தனி அறை, உங்களுடன் சேர்த்து 8 தேர்வாளர்கள், ஒரு காவலாளி, உங்களுக்கு மேசை,கதிரை வழங்கப்பட்டிருக்கிறது. மேசையில் ஒரு வினாத்தாள், தாளைப்பார்க்கிறீர்கள் வெறுமையாக இருக்கிறது. கேள்வியைக்கண்டுபிடித்து விடையளிக்க வேண்டும் என்ன செய்வீர்கள்? அதுதான் இந்தப்படம் - EXAM.லொக்கேசன் மாற்றம் இல்லை, பாட்டு இல்லை,பஞ்ச் டயலாக் இல்லை,ரொமான்டிக் சீன் இல்லை பத்தடி உயரத்தில் பறந்து அடிக்கும் அக்சன் சீன் இல்லை ஆனால் ஒன்று மட்டும் இருக்கிறது. விறுவிறுப்பு. கட்டாயம் அனைவருமே பார்க்கவேண்டிய படம். உங்கள்முளைக்குத்தீனி போடும் சிறந்த படம். படம் முடிவடையும் போது நீங்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று நினைத்த அத்தனையும் தவிடுபொடியாகியிருக்கும். கட்டாயம் அனைவரும் ஒருமுறை பார்த்துத்தான் பாருங்களேன். படம் டவுன்லோடிங் லிங்கைப்பெற இங்கே சொடுக்குங்கள்.


ஆத்திரம், அன்பு
ஒரு மனிதர் தனது காரை திருத்திக்கொண்டிருந்தார். அவரது நான்கு வயது மகன் காரில் கல் ஒன்றினால் காரில் ஏதையோ வரைந்து கொண்டிருந்தான்.அதைக்கண்டு ஆத்திரமடைந்த அவர் மகனது கையைப்பிடித்து அடிஅடியென்று அடித்துவிட்டார். ஆனால் ஆத்திர மிகுதியால் கையில் திருத்தும் கருவி இருந்ததைக் கவனிக்கவில்லை.


மறுநாள் வைத்தியசாலையில் பையன் அருகில் கவலையுடன் அமர்ந்திருந்த அப்பாவிடம் "என் கைவிரல்கள் எப்ப வளரும்?" என்று கேட்டான்.


உடனே தான் செய்த செயலை எண்ணிக் கவலையும் ஆத்திரமும் அடைந்த அவர் தனது கார் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்துக்குச்சென்று காரை தன் ஆத்திர மிகுதியால் போட்டு அடிஅடியென அடித்தார். பிறகு சிறுவன் கிறுக்கிய இடத்தைப்பார்த்தார்.அங்கேஎன அச்சிறுவன் எழுதியிருந்தான்.ஆத்திரம் என்பது கொடிய அரக்கன் அதை, அன்பு என்பது இனிய அரக்கன், அன்பை வாரி வழங்கலாம், ஆனால் ஆத்திரத்தை அடியோடு அழிக்க வேண்டும்.


NO COMMENTS
பி.கு - இது தரம் 2 பயிற்சிப்புத்தகத்தில் காணப்பட்ட படம்

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. முரளி - ம்... :)))

  சின்னத் தொழிலாளி - என்ன செய்யவது...
  பல வேளைகளில் கவலைப்படுவது மாத்திரமே எம்மால் முடிகிறது.
  முற்றுமுழுதாக இல்லாமல் போக வேண்டும். :(

  பீற்றர் - ங்கொய்யால...

  ஆத்திரம் - அருமையான கதை...

  பயிற்சிப்புத்தகம் - அடப்பாவிகளா...
  புத்தகம் எழுதியது யார்?
  முன்பொருமுறை சுபா அண்ணாவும் இப்படியொன்றை பதிவிட்டிருந்தார்.
  நாங்கள் திருந்தோணும்.

  :)))

 1. Jana Says:

  I love my Dad..இதயம் கனக்கும் ஒரு உணர்வு.

 1. Thanks for Murlai's video. :)

 1. ஏன் நீ இப்படி?

  எல்லாவற்றையும் அந்த ஆத்திரம் கதை மறைத்து விட்டது.
  முன்பே பல தடவை இதே கதையை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் மனசை ஏதோ செய்கிறது..

  ஆனால் வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ளும் தத்துவம் இது. நிதானம்.

  அந்த சிறு தொழிலாளியும் :(

  முரளி.... மறக்க முடியாத ஒருவர்.

  Exam - பார்க்க வேண்டும்.

  புத்தகம்- யதார்த்தம்? இனி எல்லாம் இப்படித்த் தான்..

 1. where s ஜனநாயக குறியீடுகள்? கடமை மிஸ்ஸிங்

 1. ஆத்திரம் கதை அருமை! - குறும்படம் ஒன்றுக்கு ஏற்ற கதை!!!

 1. முரளி- நாங்கள் எல்லோரும் இழக்கப்போகும் ஒரு தமிழ் சிங்கம்

  அப்புறம் விஜய்- இது ரொம்ப ஓவர் தான்.

 1. :)

 1. :))

 1. முரளி எந்நாளும் மறக்கமுடியாது அவரை கிரிக்கெட்டிலிருந்து...!

  சின்னத்தொழிலாளிகள் பற்றி கவலைப்பட மட்டுமே என்னால் முடிகிறது!!!

  EXAM - பார்த்தவன் என்ற ரீதியில் சொல்லுகிறேன்!!! அருமையான படக்கதை!!! கிட்டதட்ட முகாமைத்துவத்தின் பல பிரிவுகள் பற்றி விளக்கி இருக்கிறார்கள்!!!

  பயிற்சி புத்தகம்- NO COMMENTS

  கதை - துக்கம் நெஞ்சை தொட்டது

 1. Bavan Says:

  கன்கொன்,

  நோ பீற்றர்.. அது உண்மையில் சூப்பர் படம் முடிந்தால் உங்களின் ஐந்தாண்டுத்திட்டத்தில் பார்த்து முடிக்கவும்..:P

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  Jana,

  ம்... SMSசில் வந்த ஒரு கதை, நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  வானம்பாடிகள் சார்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  லோசன் அண்ணா,

  நான் எப்படி?..:P

  ஆங்.. அப்ப அடுத்து டி.ஆர் போன்றவர்களையும் சிறுவன் என்று போடுவார்களா?..:P

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  என்.கே.அஷோக்பரன்,

  ஓ.. எனக்கு SMSசில் வந்தது அந்தக்கதை.:)

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  சதீஸ் அண்ணா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  நிரூஜா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  யோ அண்ணா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  அனு,

  ம்... நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.:)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்