Related Posts with Thumbnails
தமிழுக்காக போராடுகிறோம் என்ற பெயரில் பாடசாலையில் சிறுபிள்ளைகள் ஆசிரியரிடம் முறையிடுவது போல குற்றச்சாட்டுகளைச் சுமத்திவரும் புத்திசாலிகளின்(:P) எதிர்காலத்திட்டங்கள்

1

 2

 3

 4

 5

 6

10

 7

 8

 9

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. Am I the first?

 1. Unknown Says:

  போராட்டங்களை, போராடுபவர்களை கொச்சைபடுத்த வேண்டாம்..

 1. `ஹி...`ஹி... பதிவை ரசித்தேன். சிந்திக்ககூடிய பதிவாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் பவன்

 1. ராசா. அந்த மாம்பழக் கண்டிசன கொஞ்சம் தளர்த்தப்படாதா:))

 1. Ramesh Says:

  ஹிஹிஹி எங்கெல்லாம் அடிக்குது பாருங்க...ஹாஹாஹா
  அட போட்டுத்தாக்குடா பவன்.....அவ்வ்வ்

 1. சூப்பர் பவன்
  இலங்கையில் இருப்பவர்களின் தேவைகள் என்ன எனத் தெரியாமல் சிறு பிள்ளைத்தனமான போராட்டங்களில் ஈடுபடுபவர்களை என்னவென்று சொல்வது.
  மத்திய அரசில் அமைச்சர்களாக இருக்கின்றார்கள் திமுகவினர் . திருமா கூட காங்கிரஸ் கூட்டில்தான் இருக்கிறார். ஏதேனும் அழுத்தங்களின் மூலம் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தலாம். அரசியல் தீர்வை வலியுறுத்தலாம். அதை விடுத்து அதிகம் பேருக்குத் தெரிந்த சினிமாவை வம்புக்கிழுப்பதன் மூலம் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

 1. Anonymous Says:

  கோமாளித்தனங்களை சிந்திக்வைத்துள்ளீர்கள்.
  -BC

 1. Anonymous Says:

  கே.ஆர்.பி.செந்தில் Says:
  July 3, 2010 11:36 AM

  போராட்டங்களை, போராடுபவர்களை கொச்சைபடுத்த வேண்டாம்..

  போராடுபவர்கள் நெஞ்சில் உண்மையிலேயே நேர்மை உண்டா?
  தங்களை தக்கவைக்க காட்டும் பம்மாத்து!!!

 1. தர்ஷன்,
  http://twitter.com/gkarthy1/status/17636094923
  http://twitter.com/gkarthy1/status/17636182483
  http://twitter.com/gkarthy1/status/17636299649
  http://twitter.com/gkarthy1/status/17636386406

 1. Anonymous Says:

  தர்சன்- என்னை பொறுத்தவரை சரத் பொன்சேகா ஒரு அரசியல் ஞானி...
  ஏன் தெரியுமா?
  இந்தியா அரசியல் வாதிகள் கோமாளிகள் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக !!!!

  தமிழ் நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களையும், அரசியல் கலப்பற்ற தமிழ் உணர்வாளர்கள் தவிர மற்றவர் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் !!!

 1. இல்லை பவன் .தங்களின் இந்த மாதிரியான கருத்துக்கள் வருத்தம் அழிக்கின்றன. தங்களின் மனதை தொட்டு சொல்லுங்கள் ஒரு நாளில் எத்தனை நிமிடம் அட வன்னியில் சனம் இப்படி கொல்லப்பட்டுவிட்டதே என்று வருத்தப்படுகிறீர்கள்.இழப்புகளை அனுபவித்தவர்கள் அட இவனாவது எங்களை இப்படியாவது நினைத்து கொண்டிடுக்கிறானே என எண்ணி அறுதல் அறுதல் அடைவார்கள் என்பதை மறக்கவேண்டாம். அது அவர்களிற்கு பிழைப்பாக இருக்கட்டும். தங்களை அரசியலில் வளர்த்துகொள்வதாக இருக்கட்டும். ஏதோ அந்தக் கருத்துகளை தெரிவிக்கும் போதாவது அவர்கள் எம்மை நினைக்கிறார்கள் என ஆறுதல் படுவோம். அதைவிடுத்து விவேக் ஓபராய் உடன் படம் எடுப்பதாலோ அல்லது நித்தமும் கிரிக்கெட் இல் இருந்துகொண்டோ அல்லது இத்தனை கொல்லப்பட்ட முல்லைதீவு கடற்கரையில் நின்று nice beach ,nice காற்று என facebook இல் கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டு அட இலங்கை வளர வேண்டும் இப்ப தான் வசதியாக இருக்கிறம் என்றெல்லாம் வருகின்ற கருத்துக்களை விட எமக்காக ஏதோ ஒரு விதத்தில் கதைப்பவர்களை நக்கல் அடிக்காதீர்கள். please

 1. கலக்கல் பவன்....

  வெளியில் இருந்ததால் முன்னரே பின்னூட்ட முடியவில்லை.

  முட்டாள்தனமான கோரிக்கைகளையும், கட்டளைகளையும் கொண்டுசென்று அதன்மூலம் ஏதோ இலங்கையில் இருக்கின்ற தமிழர்களுக்காகத்தான் அந்த கோரிக்கைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற கருத்து ஏற்படுத்தப்படுகிறது.
  உண்மையில் இப்படியான புறக்கணிப்புகள், தடைகளை இலங்கையில் வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை.

  நகைச்சுவையையும் தாண்டி பதிவின் ஆழத்தை நிறையவே இரசித்தேன்.
  வாழ்த்துக்கள் பவன்.

 1. பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை Says:

  // அதைவிடுத்து விவேக் ஓபராய் உடன் படம் எடுப்பதாலோ //

  விவேக் ஓபராய் இலங்கைக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரே சென்று விசாரித்ததோடு ஒரு பாடசாலையை முழுமையாக புனர்நிர்மாணம் செய்ய எல்லா உதவிகளையும் செய்வதாகச் சொல்லியிருக்கிறாரே?
  அது ஏன் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை?
  எல்லா விடயங்களையும் மறைமுகமாகப் பார்ப்பதால் தான் தமிழ் மக்கள் இவ்வளவு அழிவுகளுக்கும், பின்னடைவுகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.

 1. Subankan Says:

  ச்சே, ஒரு மைனஸ் ஓட்டுக்கூட இல்லையா? ஷேம் ஷேம், பவன் ஷேம் :p

 1. பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை Says:

  @ கார்த்திகேயன்,

  நாங்கள் இலங்கையில் பாதிக்கப்படுபவர்களே சொல்கிறோமே எமக்காக இதைச் செய்யாதீர்கள் என்று?
  பிறகேன் எங்கள் பெயரால் இந்தத் திணிப்புகள்?

  யுத்தத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் முதலில் அதிலிருந்து வெளியில் வரவேண்டும், அதை எதிர்ப்புகள் மூலமோ, புறக்கணிப்புகள் மூலமோ செய்துவிட முடியாது.

  உதவிகளை யாருமே மறுக்கவில்லை, ஆனால் களநிலவரங்களை அறிந்து செயற்படின் மாத்திரமே நன்மையில் முடிவடையும்.

 1. goma Says:

  அருமை

 1. Subankan Says:

  // வானம்பாடிகள் said...
  ராசா. அந்த மாம்பழக் கண்டிசன கொஞ்சம் தளர்த்தப்படாதா:))
  //

  முடியாது, வேண்டுமானால் மாஷா குடித்து மாம்பழ தாகத்தைத் தீர்த்துக்கங்க

 1. Anonymous Says:

  ilangai kanneer thuli shape il iruppadhaal yaarum azha koodadhu.i mean kanneer vittu azha koodathu
  . inemale asin pudavai ,asin salwar , kareena salvar,enru fashion pinpattra koodathu idhu ungalur pengalukku ,hrithik roshamadhiri coat poda body buil panna koodathu ,surya cutting style ,salman 6 pack ,ellam ninga use panna koodathu.muttal makkale mudhali kagathidam senru otrumayai patri padiyunga.pinnar nakkal adikkalam

 1. Bavan Says:

  கன்கொன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  கே.ஆர்.பி.செந்தில்,

  போராட்டம் என்ற பெயரில் தமது அரசியலை பலப்படுத்துபவர்களை போராட்டக்காரர்கள் என்று கூறுவது நகைப்பைத்தருகிறது..:)

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  வதீஸ் அண்ணா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  வானம்பாடிகள் சார்,

  ம்ஹிம்.. சுபா அண்ணா கூறியது போல மாசா மாம்பழம்தான்..:P

  நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  றமேஸ் அண்ணா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  தர்ஷன்,

  அவர்கள் செய்வதை போராட்டம் என்பதை விட அரசியல் தந்திரோபாயம் எனலாம்..ஹிஹி

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  Karthikeyan,

  ருவிற்றரிலேயே தங்களுக்குப் பதிலளித்திருந்தேன்..:)

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. thamilan Says:

  ஆமா இதால நீ என்னத்த அடைந்தாய் என்னத்த இழந்தாய்.
  தேவைக்கு முன்னால் உண்மை பொய் இல்லை உணர்வை விமர்சனம் பண்ணாதே. உன் உரிமைக்கு நீ என்ன பண்ணினே அத முதல்ல சொல்லு

 1. கலக்கல் பவன்....

  வெளியில் இருந்ததால் முன்னரே பின்னூட்ட முடியவில்லை.

  முட்டாள்தனமான கோரிக்கைகளையும், கட்டளைகளையும் கொண்டுசென்று அதன்மூலம் ஏதோ இலங்கையில் இருக்கின்ற தமிழர்களுக்காகத்தான் அந்த கோரிக்கைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற கருத்து ஏற்படுத்தப்படுகிறது.
  உண்மையில் இப்படியான புறக்கணிப்புகள், தடைகளை இலங்கையில் வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை.

  நகைச்சுவையையும் தாண்டி பதிவின் ஆழத்தை நிறையவே இரசித்தேன்.
  வாழ்த்துக்கள் பவன்.

  கோமாளித்தனங்களை சிந்திக்வைத்துள்ளீர்கள்.

  போராடுபவர்கள் நெஞ்சில் உண்மையிலேயே நேர்மை உண்டா?
  தங்களை தக்கவைக்க காட்டும் பம்மாத்து!!!

  அவர்கள் செய்வதை போராட்டம் என்பதை விட அரசியல் தந்திரோபாயம் எனலாம்..ஹிஹி

 1. its really super.

  please visit

  www.ciniposters.com

 1. Bavan Says:

  archchana,

  //தங்களின் மனதை தொட்டு சொல்லுங்கள் ஒரு நாளில் எத்தனை நிமிடம் அட வன்னியில் சனம் இப்படி கொல்லப்பட்டுவிட்டதே//

  சனம் கொல்லப்பட்டது ஆனால் தங்களின் அரசியல் வளர்ச்சிக்காக இலங்கையை பகடைக்காயாக பயன்படுத்துவது சரியா?
  இலங்கைக்காக பாடுபடுகிறேன் என்று கூறி அசினையும், விவேக் ஓபராயையும் ஒதுக்கி வைத்தால் அது சரியா?

  உதவி செய்வதென்றால் அப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்லையே?


  //அவர்கள் எம்மை நினைக்கிறார்கள் என ஆறுதல் படுவோம்.//

  //எமக்காக ஏதோ ஒரு விதத்தில் கதைப்பவர்களை நக்கல் அடிக்காதீர்கள். please//

  அதுக்காக எம்மை வைத்து ஏமாற்றி ஒருத்தன் அரசியலில் முன்னேறிப்போவான் அதைப்பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா?

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)


  ***

  சுபா அண்ணா,

  grrrrr. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  goma,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. பவன் கலக்கல் பதிவு!!!

  சில யோசனைகளை இலங்கை அரசியல்வாதிகள் யோசிப்பது போல இருக்கிறது!:P

  பவன் அப்போ இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சப்போர்ட் பண்ணுவோர் னில்லை என்ன என்று சொல்லவே இல்லை

 1. வெளிநாட்டு இலங்கைத் தமிழனின் காசில் தமிழ்நாட்டில் கட்சிகள் நடத்தும் சீமான் போன்ற சில அரைவேக்காடுகள் செய்யும் கோமாளித் தனத்தை நன்றாக விளக்கியுள்ளர்கள். சீமான் போன்றவர்கள் வெற்றுக் கோசங்களை போடுவார்களே தவிர இலங்கையில் அல்லலுறும் மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கொடுக்க மாட்டார்கள். அட இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகளுக்காவது இவர்கள் என்ன செய்தார்கள். ஆனால் கோடிக்கணக்கில் இலங்கைத் தமிழனின் பணத்தைச் செலவழித்து மாநாடு நடாத்துவார்கள். இது தான் இவர்களின் அக்கறை......

 1. வெளிநாட்டு இலங்கைத் தமிழனின் காசில் தமிழ்நாட்டில் கட்சிகள் நடத்தும் சீமான் போன்ற சில அரைவேக்காடுகள் செய்யும் கோமாளித் தனத்தை நன்றாக விளக்கியுள்ளர்கள். சீமான் போன்றவர்கள் வெற்றுக் கோசங்களை போடுவார்களே தவிர இலங்கையில் அல்லலுறும் மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கொடுக்க மாட்டார்கள். அட இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகளுக்காவது இவர்கள் என்ன செய்தார்கள். ஆனால் கோடிக்கணக்கில் இலங்கைத் தமிழனின் பணத்தைச் செலவழித்து மாநாடு நடாத்துவார்கள். இது தான் இவர்களின் அக்கறை......

 1. வெளிநாட்டு இலங்கைத் தமிழனின் காசில் தமிழ்நாட்டில் கட்சிகள் நடத்தும் சீமான் போன்ற சில அரைவேக்காடுகள் செய்யும் கோமாளித் தனத்தை நன்றாக விளக்கியுள்ளர்கள். சீமான் போன்றவர்கள் வெற்றுக் கோசங்களை போடுவார்களே தவிர இலங்கையில் அல்லலுறும் மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கொடுக்க மாட்டார்கள். அட இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகளுக்காவது இவர்கள் என்ன செய்தார்கள். ஆனால் கோடிக்கணக்கில் இலங்கைத் தமிழனின் பணத்தைச் செலவழித்து மாநாடு நடாத்துவார்கள். இது தான் இவர்களின் அக்கறை......

 1. வெளிநாட்டு இலங்கைத் தமிழனின் காசில் தமிழ்நாட்டில் கட்சிகள் நடத்தும் சீமான் போன்ற சில அரைவேக்காடுகள் செய்யும் கோமாளித் தனத்தை நன்றாக விளக்கியுள்ளர்கள். சீமான் போன்றவர்கள் வெற்றுக் கோசங்களை போடுவார்களே தவிர இலங்கையில் அல்லலுறும் மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கொடுக்க மாட்டார்கள். அட இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகளுக்காவது இவர்கள் என்ன செய்தார்கள். ஆனால் கோடிக்கணக்கில் இலங்கைத் தமிழனின் பணத்தைச் செலவழித்து மாநாடு நடாத்துவார்கள். இது தான் இவர்களின் அக்கறை......

 1. //உண்மையில் இப்படியான புறக்கணிப்புகள், தடைகளை இலங்கையில் வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை//

  கங்கோனுடைய இந்த கருத்துடன் நானும் உடன்படுகின்றேன்

 1. Anonymous Says:

  அதுதான் விளக்கமாக...About Me
  I'm a cool guy who Living the life like there is no tomorrow...
  நாளை என்கின்ற ஒரு நாளேஇல்லை என எதற்கும் கவலைப்படாத மனிதனாய் இருக்கும் மனிதனான உங்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

 1. Unknown Says:

  பவன், என்ன சொல்ல வர்றீங்க?

  இது எங்க நாட்டு பிரச்சனை நீங்க யார்டா இதில தலையிடன்னு கேக்கறீங்களா?

  இல்லை, நீங்க எதாவது செய்யணும்னா இலங்கைக்கு வந்து செய்யுங்க அங்க இருந்து செய்யாதீங்கன்னு சொல்றீங்களா??

  IFFA விழா இலங்கைக்கு வந்ததற்குப் பின்னால் இருந்த அரசியல் அனைவருக்கும் தெரியும். அந்த அரசியல் பிடிக்காததால் தமிழ்த் திரையுலகம் யாரும் அந்த விழாவுக்கு செல்லக்கூடாது எனவும், இலங்கைக்குப் படபிடிப்புக்குப் போகக்கூடாது எனவும் “தடை” போட்டது. இந்தத் தடை தவறு என்கிறீர்களா?

  அந்தத் தடையை மீறி சென்ற அசினுக்கு தகுந்த தண்டனையை நடிகர் சங்கமும் ஃபெஃப்சியும் வழங்கியுள்ளன. இது ஒரு சங்கம்/அமைப்பின் உறுப்பினர்மேல் அந்தச் சங்கம் எடுக்கும் நடவடிக்கை.

  இதற்கும் அரசியல் வளர்ப்பதற்கும் என்ன சம்மந்தம்?

  குஷ்புவின் பேட்டிக்கு எதிராக பா.ம.கவும் திருமாவும் திரண்டு எழுந்தது அரசியல் வளர்க்க. அதுபோல அசினுக்கு எதிராக அவர்கள் செய்தால் அதைத் திட்டுங்கள்.

  இன அழிப்பு செய்தவர்களுக்கு ஒரு அமைப்பு தார்மீக ரீதியில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வதாகத்தான் இந்தத் “தடை”யை என்னால் பார்க்க முடிகிறது.

  அசின், விவேக் ஓபராய் தவிர மற்றபடி நீங்கள் வேறு விசயம் எதையாவது பற்றி நீங்கள் இந்தப் பதிவை வெளியிட்டிருப்பீர்களானால் மேலே சொன்ன அத்தனைக் கருத்துக்களையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.

 1. சூப்பர் பவன்... கலக்கல்...

  இன்னும் சில திட்டங்கள் கைவசம் உள்ளது.

  1. இலங்கையில் கோக்கோ கோலா விற்பதால், இனி தமிழ் நாட்டில் கோக் விற்பது தடை செய்யப்படும்.

  2. அடுத்த டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள சச்சின் இலங்கை வந்தால், அவரது சாதனைகள் அனைத்தையும் நீக்க கலைஞர் தலைமையில் ஐ.சீ.சீக்கு தந்தியடிக்கும் போராட்டம்.

  3. முத்தையா முரளிதரனின் மனைவி கணவன் வீட்டுக்கு இலங்கை வந்தால், தமிழகத்திலிருந்து அவரது குடியுரிமை பறிக்கப்படும் (சிட்டிசன் முடிவு)

  இன்னும் இருக்கு

 1. // முத்தையா முரளிதரனின் மனைவி கணவன் வீட்டுக்கு இலங்கை வந்தால், தமிழகத்திலிருந்து அவரது குடியுரிமை பறிக்கப்படும் (சிட்டிசன் முடிவு) //

  அட...
  இது நல்லாருக்கே....

  இநத விசயம் எங்கட ஆக்களுக்கு எப்பிடித் தெரியாமப் போனது?

 1. இங்கு சீமானுக்கு வரிந்து கட்டி கொண்டிருக்கும் சொல்ல விரும்புவது.

  சீமானின் தம்பி பட நாயகி புஜா ஒரு சிங்கள பெண், அந்த படம் இலங்கையிலும் படமாக்கப்பட்டது...

  அந்த காலத்தில் சீமானுக்கு எங்கு போயிருந்ததாம் இப்போது உள்ள தமிழுணர்வு

 1. //
  அந்த காலத்தில் சீமானுக்கு எங்கு போயிருந்ததாம் இப்போது உள்ள தமிழுணர்வு //

  என்னது இலங்கையில 30 வருசமாப் பிரச்சினை நடக்குதா?
  30 வருசமா தமிழ் மக்கள் கஷ்ரப்படுறாங்களா?

  அடடா...
  எனக்கு இது தெரியாமப் போச்சே.
  நான் IIFA நடக்க கொஞ்ச நாளைக்கு முதல் தான் பிரச்சினை தொடங்கினதெண்டு நினைச்சன்.

 1. Bavan Says:

  thamilan

  பண்ணுகிறோம் பண்ணுகிறோம் என்று விளம்பரம் காட்டிவிட்டு ஒன்றுமே செய்யாமலிருக்கும் பெரியவர்களை விட நான் ஒன்றும் தாழ்ந்து போய்விடவில்லை..

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  Faaique Najeeb,

  எல்லாப்பின்னூட்டத்தையும் கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க..ஹிஹி

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  ciniposter

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  அனு,

  என்னாது? அரசியல் மாதிரியா? ஐ ஆம் எஸ்கேப்..

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  பார்த்திபன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. இலங்கை வந்த இந்தி நடிகருடன் இணைந்து நடித்த சூரியாவுக்கு ஒரு நீதி ஏனையவர்களுக்கு இன்னுமொரு நீதியா?
  எதிர்ப்பு/தடைஎன்றால் எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் மெளனமாக இருக்கும் சீமானின் சாக்கடை/பொய் தமிழ் உணர்வு/அரசியல் இதிலிருந்து தெரிகிறதல்லவா

 1. வை.கோபாலசாமி (வைகோ) Says:

  ஐயோ என் டவுசர்.
  இவனைப் புறக்கணிக்கவும்.

  தமிழ் வாழ்க.

 1. Bavan Says:

  முகிலன்,

  //இது எங்க நாட்டு பிரச்சனை நீங்க யார்டா இதில தலையிடன்னு கேக்கறீங்களா?//

  எங்கட பேர வச்சு ஏன் அரசியல் பண்ணுறீங்கன்னு கேக்கிறன்

  //இந்தத் தடை தவறு என்கிறீர்களா?//

  என்ன கொடுமை இது.. இந்தத்தடை ஏதோ சேரக்கூடாதவனோட அந்தப்பொடியன் கெட்டவன் அவனோட சேராத என்று சின்னப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரியல்லவா இருக்கு.. அவங்கதான் காமடி பண்ணுறாங்க என்றால் நீங்களுமா..:P

  //இதற்கும் அரசியல் வளர்ப்பதற்கும் என்ன சம்மந்தம்?//

  காந்தி செத்துட்டாரா??
  அந்த அரசியல்கள் உலகத்துக்கே தெரியும்..


  //குஷ்புவின் பேட்டிக்கு எதிராக பா.ம.கவும் திருமாவும் திரண்டு எழுந்தது அரசியல் வளர்க்க. அதுபோல அசினுக்கு எதிராக அவர்கள் செய்தால் அதைத் திட்டுங்கள்.//

  மன்னிக்கவும் அசினுக்கு எதிரான தடைக்காகப் போடப்பட்ட பதிவல்ல, இலங்கை மக்களை வைத்து அரசியல் செய்யும் புத்திசாலிகளுக்காக பேர்டப்பட்ட பதிவு..:)

  //அசின், விவேக் ஓபராய் தவிர மற்றபடி நீங்கள் வேறு விசயம் எதையாவது பற்றி நீங்கள் இந்தப் பதிவை வெளியிட்டிருப்பீர்களானால் மேலே சொன்ன அத்தனைக் கருத்துக்களையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.//

  இந்தியாவின் அரசியலுக்கு இலங்கைத் தமிழர் என்ற பெயரை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்றுதான் இந்தப்பதிவு..:)

  நன்றி முகிலன் வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. @முகிலன்...

  போராட வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை... யதார்த்தமாக அப் போராட்டத்தால் எழுந்த பணன் / தாக்கம் என்ன என்று சற்று சிந்தித்து போராடுங்கள்...

  "ஐஃபா விழா போராட்டம் வெற்றி , இலங்கைக்கு கோடிக்கணக்கில் இழப்பு என்றெல்லாம் போராட்டக்குளுக்களும் அவற்றின் ஆதரவாளர்களும் ஆர்ப்பரித்தாலும் இந்த ஐஃபா போராட்டத்தின் நிதர்சனமான உண்மை என்ன தெரியுமா? இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்தான். இலங்கைக்கு ஐஃபா விழா மூலம் கோடிக்கணக்கில் நஷ்டமென்றால் அதை ஈடுகட்ட இன்று ஏற்பட்டிருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் ஏற்ப்பட்ட பாதிப்பு நாட்டு மக்களுக்குத்தான், குறிப்பாக முகாம்களில் இருந்து மீளக்குடியமர்த்தப்பட்டு காற்றிலும் வெய்யிலிலும் சிறு குடில்களில் அன்றாட வாழ்வுக்காக தினம்தினம் போராடும் மக்களுக்கும், சொந்த இடங்களுக்கு செல்ல இயலாமல் இன்னமும் வறுமையின் பிடியில் வாடுபவர்களுக்கும் , ஏழை மக்களுக்கும்தான். கோதுமைமாவின் விலை 10 ரூபயாலும் , சீனியின் விலை 15 ரூபாயாலும், 400 க பால்மாவின் விலை 19 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதனால் ஏழை மக்களின் ஒன்று அல்லது இரண்டு நேர உணவான பாணின் விலை இறாத்தலுக்கு 6 ரூபாவால் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  ஐஃபா எதிர்ப்பு போராட்டம் மூலம் இலங்கைக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்ப்படுத்தியது போராட்ட குழுவினருக்கு கிடைத்த வெற்றிதான், பார்க்கப்போனால் இலங்கை அரசுக்கு அது மரியாதை குறைவை மட்டும்தான் ஏற்ப்படுத்தியது , சர்வதேச ரீதியில் எந்ததாக்கத்தையும் இந்த போராட்டம் ஏற்ப்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை, இறுதியில் விலைவாசி ஏற்றம் என்னும் பெயரில் மக்களின் வயிற்றில் அடிவிழுந்துள்ளது என்பதுதான் யதார்த்தமான உண்மை..."

  சினிமா மற்றும் விழாக்களை தடை செய்வதால் மட்டும் இங்குள்ள அவதியுறும் மக்கள் சுபீட்சமடைவார்கள் என்று எண்ணுவதோ / போராடுவதா உங்களுக்கே காமடியாக இல்லையா..?

 1. This comment has been removed by the author.
 1. Think Why Not சரியான சொன்னீர்கள் புரிகின்றவர்களுக்கு புரியவில்லையோ அல்லது புரிந்தும் புரியாததுபோல நடிக்கின்றார்களோ தெரியவில்லை. முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களை வைத்து அரசியல் செய்வதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நிறுத்தவேண்டும். இங்குள்ள தமிழர்கள் குறிப்பாக சடபகுதியில் மீள்குடியேறிவரும் தமிழர்கள் தங்களுடைய நாளாந்த வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகின்றார்கள் என்று பலருக்கு தெரியாது. பாவம் அந்த மக்கள் இனியாவது
  அவர்களை/இலங்கை தமிழரை நிம்மதியாக இருக்க விடுங்கோ என்பதுதான் என்னுடைய கோரிக்கையாக இருக்கிறது. நீங்கள் சாக்கடை அரசியல் நடத்துவதற்கு நாங்கள்தனா கிடைத்தோம்......

 1. Bavan Says:

  வதீஸ் அண்ணா,

  கேட்டா அரசியல்ல இதெல்லாம் சகஜம் எண்டுவாங்க..ஹிஹி

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  யோ அண்ணா,

  ஹாஹா.. விட்டா இந்தப்பதிவுக்கு பார்ட்டு - 2 போட்டுருவீங்க போல இருக்கே..:P

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  வை.கோபாலசாமி (வைகோ)

  //ஐயோ என் டவுசர்.
  இவனைப் புறக்கணிக்கவும்.

  தமிழ் வாழ்க.///

  ஆங்...
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)


  ***

  Think Why Not,

  //சினிமா மற்றும் விழாக்களை தடை செய்வதால் மட்டும் இங்குள்ள அவதியுறும் மக்கள் சுபீட்சமடைவார்கள் என்று எண்ணுவதோ / போராடுவதா உங்களுக்கே காமடியாக இல்லையா..?//

  இதைத்தான் நானும் சொல்கிறேன் சொன்னால் அசினுக்காக வரிந்து கட்டுகிறேன் என்கிறார்கள்.. என்ன கொடுமை இது..

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. /*... இதைத்தான் நானும் சொல்கிறேன் சொன்னால் அசினுக்காக வரிந்து கட்டுகிறேன் என்கிறார்கள்.. என்ன கொடுமை இது.
  ..*/

  அதுக்கென்ன அடுத்து அசின காமடி பண்ணி ஒரு பதிவ போட்டிருங்க.. போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறிங்க என்று புகழுவாங்க...

 1. Bavan Says:

  //அதுக்கென்ன அடுத்து அசின காமடி பண்ணி ஒரு பதிவ போட்டிருங்க.. போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறிங்க என்று புகழுவாங்க...//

  ஹாஹா நல்ல யோசனை ஆனா பிறகு நானும் அரசியவாதி ஆகிடுவன்..:P

 1. Anonymous Says:

  you think this is funny, er?

 1. இலங்கைக்கு UN மனிதை உரிமை கமிசன் வருதே, அதை காமெடி பண்ணி அடுத்த பதிவா.. hmm.. carry on..

 1. Bavan Says:

  Karthikeyan G,

  //இலங்கைக்கு UN மனிதை உரிமை கமிசன் வருதே, அதை காமெடி பண்ணி அடுத்த பதிவா.. hmm.. carry on..//

  இவ்வளவு விளக்கம் கொடுத்த பிறகும்(ருவிட்டரிலும்) நான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. தமிழகத்தில் இலங்கை குறித்தும்,ஈழம் குறித்தும் ஓரளவுக்கு கணிக்க இயலும்படியான கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன.அதே போல் இலங்கைக்குள்ளிருந்தும் உங்கள் மனநிலைகளை அறிந்து கொள்ளும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

  கண்ணீர் கூடத்தான் மாம்பழ வடிவில் இருக்கிறது.கண்ணீரும் விடக்கூடாதுன்னு ஒரு படமும் போட்டிருக்கலாம்.

  மேலும் ஒட்டுப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் கருத்துக்களுக்கும் இடம் கொடுங்கள்.நன்றி.

 1. Bavan Says:

  ராஜ நடராஜன்,

  //இலங்கைக்குள்ளிருந்தும் உங்கள் மனநிலைகளை அறிந்து கொள்ளும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.//

  இதன் விளைவுதான் இந்தப்பதிவு..:)

  //கண்ணீர் கூடத்தான் மாம்பழ வடிவில் இருக்கிறது.கண்ணீரும் விடக்கூடாதுன்னு ஒரு படமும் போட்டிருக்கலாம்.

  மேலும் ஒட்டுப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் கருத்துக்களுக்கும் இடம் கொடுங்கள்.நன்றி.//

  நிச்சயமாக, நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. வசந்த் Says:

  தமிழக உறவுகளுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் எங்களை வைத்து நடாத்திக்கொண்டிருக்கும் புண்ணாக்கு அரசியல்களால் நாங்கள் இன்னமும் அதிகமாகத்தான் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இங்கே Think Why Not இட்ட பின்னூட்டம் ஒருசோறு பதம். தயவுசெய்து பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல எங்களை வதைக்காதீர்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சவேண்டாம்.

 1. //சினிமா மற்றும் விழாக்களை தடை செய்வதால் மட்டும் இங்குள்ள அவதியுறும் மக்கள் சுபீட்சமடைவார்கள் என்று எண்ணுவதோ / போராடுவதா உங்களுக்கே காமடியாக இல்லையா..?//

  அது சரி செத்தவன் சாக இருப்பவர்களெல்லாம் சினிமாவையும் விழாக்களையும் கொண்டாடுவீர்களா....நல்லாக இருக்கு உங்கள் நியாயம் . நீங்கள் விழாவிற்கு போவதாலோ சினிமா பார்ப்பதாலோ எல்லோரும் சுபீட்சம் அடைந்து விடுவார்களா............
  எங்களை வைத்து வன்னிக்கு வெளியில் இருந்து நடத்தும் நாடகம் உங்களுக்கே காமடியாக இல்லை.
  விவேக் ஓபராய் பாடசாலை கட்ட நிதி கொடுக்கிறார . சுருக்கமாக சொன்னால் இருக்கும் கட்டிடங்கள் எல்லாம் இடித்தபின் அதை வைத்து பிச்சை எடுத்து நீங்கள் சுகமாக வாழ பார்க்கிறீர்கள்.
  சும்மா சும்மா மீல்குடியேட்டம் வன்னிமக்கள் படும் துயர் என வன்னிக்கு வெளியில் இருந்து கொண்டு எம் தமிழ் மக்கள் நடத்தும் நாடகம் தான் சகிக்க முடியவில்லை.
  ஒருவனை சாக அடித்துவிட்டு பின் அவனின் சவப்பெட்டியை தங்கத்தால் செய்து கொடுக்கும் விவேக் ஓபராய் வாழ்க என வாழ் பிடிக்கும் கூட்டம் நீங்களெல்லாம்.

 1. அதுக்காக எம்மை வைத்து ஏமாற்றி ஒருத்தன் அரசியலில் முன்னேறிப்போவான் அதைப்பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா?

  #. எங்கே இருக்கிறீர்கள் பவன்........தமிழக அரசியல் ஒரு புறம் நடக்கிறது. இப்படி குரல் கொடுப்போர் ஒரு புறம் கொடுக்கிறார்கள். இதில் எங்களுக்காக குரல் கொடுத்து அரசியலில் முன்னேறிபோன ஒருவரை கூறுங்கள் பார்க்கலாம். ஏன் உலக அரசியலில் தமிழரையும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வைத்துதானே அரசியலில் முன்னேறுகிறார் அதனை பார்த்துகொண்டு தானே இருக்கிறீர்கள்.
  #. களியாட்ட நிகழ்வுகள் மூலம் நடந்தது எல்லாம் இல்லைஎன்று ஆகி விடுமா...........பொருளாதாரம் பற்றியும் விலைவாசி உயர்வு பற்றியும் கதைத்தவர்களே ..யுத்தத்திற்காக இவ்வளவு செலவழித்து ஒவ்வொரு தனிநபரையும் கடனாளியாக்கி விலைவாசி அப்படி உயர்ந்ததே அப்ப என்ன செய்தீர்கள்.

  # இத்தனைக்கும் மேலால் இதில் விவேக் ஒப்ரயிற்கும் அசினிற்கும் அதரவாக கருத்துக் கூறியவர்கள் எத்தனை பேர் யுத்தம் நடந்த இறுதிக் காலகட்டத்தில் வன்னியில் இருந்தீர்கள். உங்கள் மனதை தொட்டு நீங்கள் சொல்லுங்கள். முகாமில் உள்ளவர்களோடு விவேக் ஓபராய் கதைத்தால் அவர்கள் பட்ட கஷ்டம் எல்லாம் பறந்துவிட்டதா ...

  #.யுத்தம் நடந்த காலத்தில் தீக் குளித்து இறந்து போன முத்துக்குமாரும் இந்திய தமிழன் தானே. தீக்குளித்து இறந்ததால் ஒரு முன்னேற்றமும் இல்லை என தெரிந்தும் அவரை நாம் போற்ற வில்லையா... ஏன்...........முத்துக்குமாரும் என் favourite நடிகை அசின் ....இந்த மட்சில் இந்தியா சொதப்பி விட்டது. மோடி என்ன செய்கிறார் அதனை விட விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவிற்காக இப்பவும் பீல் பண்ணி கொண்டு இருந்திருக்கலாமே...............

  எனவே தான் சொல்கிறேன்
  எங்களுக்காக( போலியாகவோ உண்மையாகவோ )கண்ணீர்விடும், கதைக்கும் எங்களையும் ஒரு கணமாவது நினைக்கும் ஒவ்வொரு இந்திய தமிழன் இற்கும் மரியாதையை செய்வோம்.
  உணர்வுகளை மதிக்க கற்றுகொள்வோம். அவர்களை விட அறிவில் நீங்கள் சிறந்தவர்களாக இருந்தால் ஆலோசனை வழங்குங்கள். அதற்காக காமடி பண்ணாதீர்கள்.

 1. அதுக்காக எம்மை வைத்து ஏமாற்றி ஒருத்தன் அரசியலில் முன்னேறிப்போவான் அதைப்பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா?
  #. எங்கே இருக்கிறீர்கள் பவன்........தமிழக அரசியல் ஒரு புறம் நடக்கிறது. இப்படி குரல் கொடுப்போர் ஒரு புறம் கொடுக்கிறார்கள். இதில் எங்களுக்காக குரல் கொடுத்து அரசியலில் முன்னேறிபோன ஒருவரை கூறுங்கள் பார்க்கலாம். ஏன் உலக அரசியலில் தமிழரையும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வைத்துதானே அரசியலில் முன்னேறுகிறார் அதனை பார்த்துகொண்டு தானே இருக்கிறீர்கள்.
  #. களியாட்ட நிகழ்வுகள் மூலம் நடந்தது எல்லாம் இல்லைஎன்று ஆகி விடுமா...........பொருளாதாரம் பற்றியும் விலைவாசி உயர்வு பற்றியும் கதைத்தவர்களே ..யுத்தத்திற்காக இவ்வளவு செலவழித்து ஒவ்வொரு தனிநபரையும் கடனாளியாக்கி விலைவாசி அப்படி உயர்ந்ததே அப்ப என்ன செய்தீர்கள்.

  # இத்தனைக்கும் மேலால் இதில் விவேக் ஒப்ரயிற்கும் அசினிற்கும் அதரவாக கருத்துக் கூறியவர்கள் எத்தனை பேர் யுத்தம் நடந்த இறுதிக் காலகட்டத்தில் வன்னியில் இருந்தீர்கள். உங்கள் மனதை தொட்டு நீங்கள் சொல்லுங்கள். முகாமில் உள்ளவர்களோடு விவேக் ஓபராய் கதைத்தால் அவர்கள் பட்ட கஷ்டம் எல்லாம் பறந்துவிட்டதா ...
  #.யுத்தம் நடந்த காலத்தில் தீக் குளித்து இறந்து போன முத்துக்குமாரும் இந்திய தமிழன் தானே. தீக்குளித்து இறந்ததால் ஒரு முன்னேற்றமும் இல்லை என தெரிந்தும் அவரை நாம் போற்ற வில்லையா... ஏன்...........முத்துக்குமாரும் என் favourite நடிகை அசின் ....இந்த மட்சில் இந்தியா சொதப்பி விட்டது. மோடி என்ன செய்கிறார் அதனை விட விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவிற்காக இப்பவும் பீல் பண்ணி கொண்டு இருந்திருக்கலாமே...............
  எனவே தான் சொல்கிறேன்
  எங்களுக்காக( போலியாகவோ உண்மையாகவோ )கண்ணீர்விடும், கதைக்கும் எங்களையும் ஒரு கணமாவது நினைக்கும் ஒவ்வொரு இந்திய தமிழன் இற்கும் மரியாதையை செய்வோம்.
  உணர்வுகளை மதிக்க கற்றுகொள்வோம். அவர்களை விட அறிவில் நீங்கள் சிறந்தவர்களாக இருந்தால் ஆலோசனை வழங்குங்கள். அதற்காக காமடி பண்ணாதீர்கள்.

 1. thamilan Says:

  ஒன்று தமிழகத்தில் இருக்கும் மக்கள் சில பேர் ஈழ பிரச்சனையை புரிந்து வைத்திருக்கும் அளவுகூட பவன் மாதிரி ஈழத்தில் இருந்துகொண்டு நாங்களும் ஈழதமிழர் தான் என்று புரிந்தோ புரியாமலோ புரிந்தும் புரியாமல் மாதிரி நடித்துக் கொண்டு இருப்பதால் தான் ஈழம் முள்ளிவாய்கால் வரை பின்னகர்தப்பட்டது. ஆமா அசின் தடை விதிப்பதுதான் உங்களின் நிகழ்கால பிரச்சனையா. உங்களுக்கு எல்லாம் நல்ல கிடைக்கு என்றதற்காக எல்லாருக்கும் கிடைக்குது என்று நீங்கள் சொல்லமுடியா. அப்ப நீங்கள் முத்துக்குமார் தியாகத்தையும் குறை கூறுகிறிர்களா.

  தமிழனுக்கு எதிரியும் துரோகியும் தமிழன் தான்

 1. Anonymous Says:

  //இலங்கைக்குள்ளிருந்தும் உங்கள் மனநிலைகளை அறிந்து கொள்ளும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.//
  ராஜ நடராஜன், இலங்கைக்குள் வாழும் மக்களின் மனநிலைகளை பொருட்படுத்தாமல் இலங்கை தமிழர்களை வைத்து அரசியலே தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து கருத்து எழுதபவர்கள் பலர் தங்களுடைய கனவுகளை இலங்கை தமிழர்களின் தலையில் பரிட்சித்து பார்க்கவே விரும்புகின்றனர். இலங்கை தமிழரின் கருத்தை கேட்ட தமிழகத்தை சேர்ந்த ஒருவர் நீங்கள் தான் என்று நினைக்கிறேன்.-BC

 1. Unknown Says:

  இலங்கை அரசுக்கு அது மரியாதை குறைவை மட்டும்தான் ஏற்ப்படுத்தியது , சர்வதேச ரீதியில் எந்ததாக்கத்தையும் இந்த போராட்டம் ஏற்ப்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை,
  //

  இதுவே ஒரு முதல் கட்ட வெற்றி அல்லவா? உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று இறுமாப்புடன் இருந்த ராஜ பக்சே சகோதரர்களுக்கு விழுந்த முதல் அடிதானே?

  //
  இறுதியில் விலைவாசி ஏற்றம் என்னும் பெயரில் மக்களின் வயிற்றில் அடிவிழுந்துள்ளது என்பதுதான் யதார்த்தமான உண்மை..."
  //
  அப்படித்தான் நடக்கும். அடுத்து பொருளாதாரத் தடை இலங்கை மீது விழுந்தால் இன்னும் கூட விலை வாசி உயரும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையை நீங்கள் உங்கள் வாக்குகளின் மூலம் கொடுக்காத பட்சத்தில் குற்றவாளிகளோடு சேர்ந்து நீங்களும் தண்டிக்கப் படத்தான் வேண்டியிருக்கும்.

  //
  சினிமா மற்றும் விழாக்களை தடை செய்வதால் மட்டும் இங்குள்ள அவதியுறும் மக்கள் சுபீட்சமடைவார்கள் என்று எண்ணுவதோ / போராடுவதா உங்களுக்கே காமடியாக இல்லையா..?//

  யாரும் சினிமா விழாக்களை தடை செய்வதால் ஈழத் தமிழர்கள் சுபிட்சமடைவார்கள் என்று போராடவில்லை. சர்வதேச நாடுகளின் கவனம் இலங்கைப் பிரச்சனையின் மீது படும், முள் வேலியில் அவதிப் படும் எம் இன மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிட்டும் என்ற எண்ணத்தில் தான் அந்தப் போராட்டம்.

  ஒரு போரோ போராட்டமோ நடக்கும் போது எல்லாப் பக்கங்களில் இருந்தும் பாதிக்கப் படத்தான் செய்வார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் நிரந்தரத் தீர்வு எப்படி கிடைக்கும்?

  ஆனால் நீங்களே எங்களுக்கு உதவி செய்ய நீங்க யாருடா என்று கேட்ட பின், நான் இங்கே விவாதம் செய்து கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை என்று நினைக்கிறேன்.

 1. Unknown Says:

  //ஐஃபா எதிர்ப்பு போராட்டம் மூலம் இலங்கைக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்ப்படுத்தியது போராட்ட குழுவினருக்கு கிடைத்த வெற்றிதான், பார்க்கப்போனால் இலங்கை அரசுக்கு அது மரியாதை குறைவை மட்டும்தான் ஏற்ப்படுத்தியது , சர்வதேச ரீதியில் எந்ததாக்கத்தையும் இந்த போராட்டம் ஏற்ப்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை,
  //

  இதுவே ஒரு முதல் கட்ட வெற்றி அல்லவா? உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று இறுமாப்புடன் இருந்த ராஜ பக்சே சகோதரர்களுக்கு விழுந்த முதல் அடிதானே?

  //
  இறுதியில் விலைவாசி ஏற்றம் என்னும் பெயரில் மக்களின் வயிற்றில் அடிவிழுந்துள்ளது என்பதுதான் யதார்த்தமான உண்மை..."
  //
  அப்படித்தான் நடக்கும். அடுத்து பொருளாதாரத் தடை இலங்கை மீது விழுந்தால் இன்னும் கூட விலை வாசி உயரும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையை நீங்கள் உங்கள் வாக்குகளின் மூலம் கொடுக்காத பட்சத்தில் குற்றவாளிகளோடு சேர்ந்து நீங்களும் தண்டிக்கப் படத்தான் வேண்டியிருக்கும்.

  //
  சினிமா மற்றும் விழாக்களை தடை செய்வதால் மட்டும் இங்குள்ள அவதியுறும் மக்கள் சுபீட்சமடைவார்கள் என்று எண்ணுவதோ / போராடுவதா உங்களுக்கே காமடியாக இல்லையா..?//

  யாரும் சினிமா விழாக்களை தடை செய்வதால் ஈழத் தமிழர்கள் சுபிட்சமடைவார்கள் என்று போராடவில்லை. சர்வதேச நாடுகளின் கவனம் இலங்கைப் பிரச்சனையின் மீது படும், முள் வேலியில் அவதிப் படும் எம் இன மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிட்டும் என்ற எண்ணத்தில் தான் அந்தப் போராட்டம்.

  ஒரு போரோ போராட்டமோ நடக்கும் போது எல்லாப் பக்கங்களில் இருந்தும் பாதிக்கப் படத்தான் செய்வார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் நிரந்தரத் தீர்வு எப்படி கிடைக்கும்?

  ஆனால் நீங்களே எங்களுக்கு உதவி செய்ய நீங்க யாருடா என்று கேட்ட பின், நான் இங்கே விவாதம் செய்து கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை என்று நினைக்கிறேன்.

 1. Bavan Says:

  //உணர்வுகளை மதிக்க கற்றுகொள்வோம். அவர்களை விட அறிவில் நீங்கள் சிறந்தவர்களாக இருந்தால் ஆலோசனை வழங்குங்கள். அதற்காக காமடி பண்ணாதீர்கள்.//

  ஆம் அதைத்தான் நானும் சொல்கிறேன் உணர்வுகளை மதிக்க க்ற்றுக்கொள்ளுங்கள், எமக்கும் உணர்வுகள் உண்டு, எம்மை அரசியல் நாடகங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்றுதான் சொல்கிறேன், இந்த விடயம் தொடர்பாக இதற்குமேல் உங்களுக்கு விளக்கமளிக்க முடியாது.

  எம்மை ஏணியாய் வைத்து ஒருவன் மிதித்துக்கொண்டு போகும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..:)

 1. Bavan Says:

  // thamilan said...

  ஒன்று தமிழகத்தில் இருக்கும் மக்கள் சில பேர் ஈழ பிரச்சனையை புரிந்து வைத்திருக்கும் அளவுகூட பவன் மாதிரி ஈழத்தில் இருந்துகொண்டு நாங்களும் ஈழதமிழர் தான் என்று புரிந்தோ புரியாமலோ புரிந்தும் புரியாமல் மாதிரி நடித்துக் கொண்டு இருப்பதால்//

  எம்மை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்களா இதென்ன வேடிக்கை, இந்திய அரசியலுக்கு எம்மை பகடையாகப் பயன்படுத்துகிறார்கள், எங்களை அடித்தது காணும் மேலும் மேலும் அடிக்க வேண்டாம்.

  //ஆமா அசின் தடை விதிப்பதுதான் உங்களின் நிகழ்கால பிரச்சனையா.//

  நான் எனது பழைய பின்னூட்ங்களை பார்க்கவும், அசினுக்கு தடை விதித்ததால் பதிவெழுதவில்லை, உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று ஒருத்தன் வெளியே சொல்லிக்கொண்டு தான் முன்னேறிப்போனால் தெரியும் அந்த வலி

  //ஒருவன் உங்களுக்கு எல்லாம் நல்ல கிடைக்கு என்றதற்காக எல்லாருக்கும் கிடைக்குது என்று நீங்கள் சொல்லமுடியா. அப்ப நீங்கள் முத்துக்குமார் தியாகத்தையும் குறை கூறுகிறிர்களா.//

  நான் தியாகிகளை கிண்டல் செய்யவில்லை அரசியல் நடிகர்களைத்தான் கிண்டலடித்தேன்..:)

  //தமிழனுக்கு எதிரியும் துரோகியும் தமிழன் தான்//

  அது உண்மைதான்.. விளங்கினாச்சரி..

 1. Bavan Says:

  //ஆனால் நீங்களே எங்களுக்கு உதவி செய்ய நீங்க யாருடா என்று கேட்ட பின், நான் இங்கே விவாதம் செய்து கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை என்று நினைக்கிறேன்.//

  ஆமா ஆமா செய்தார்கள் உதவி, இலங்கையை தீண்டத்தகாத நாடாக்க எடுக்கும் சிறந்த முயற்சி மூலம்.

  உதவி என்ற பெயரில் செய்யும் உபத்திரவத்துக்கு உதவி செய்யாமல் இருப்பதே மேல்,

  இது தொடர்பாக விவாதம் செய்து வேலையில்லைத்தான், நான் பதிவெழுதினால் மட்டும் அரசியல் நடக்காமலா போகப்போகிறது

  நடத்துங்கள் நடத்துங்கள்..

  //யாரும் சினிமா விழாக்களை தடை செய்வதால் ஈழத் தமிழர்கள் சுபிட்சமடைவார்கள் என்று போராடவில்லை. //

  அதைத்தானே நானும் சொல்கிறேன், பிறகு ஏன் அதைத்தடைசெய்கிறேன் என்ற பெயரில் போலி நாடகத்தை அரங்கேற்றுகிறீர்கள்.

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. கே.பி Says:

  இந்தியாவில் இந்தித் திணிப்பு இருக்கிறது.
  தமிழ்நாட்டில் கூட இந்தியை பலவந்தமாகத் திணிக்கிறார்கள்.

  எனவே ஈழத்தமிழர்கள் அனைவரும் இந்தியாவைப் புறக்கணிப்போம்.
  இந்தியாவிலிருந்து வரும் உற்பத்திகளை வாங்காமல் இருப்போம்.

  தமிழ் வாழ்க.

 1. வசந்த் Says:

  //அப்படித்தான் நடக்கும். அடுத்து பொருளாதாரத் தடை இலங்கை மீது விழுந்தால் இன்னும் கூட விலை வாசி உயரும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையை நீங்கள் உங்கள் வாக்குகளின் மூலம் கொடுக்காத பட்சத்தில் குற்றவாளிகளோடு சேர்ந்து நீங்களும் தண்டிக்கப் படத்தான் வேண்டியிருக்கும்.
  //

  காமெடி பண்ணாதீங்க சார், எங்களுக்கெதிரா யுத்தத்தை நடாத்திய இந்திய அரசாங்கத்தை குறைந்தபட்சம் தமிழகத்தில் கூட உங்களால் தோற்கடிக்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் சிறுபாண்மையான நாங்கள் அவர்களைத் தோற்படிப்பதா?

  சொந்தத் தாய்க்கு சோறு போடாதவன் பக்கத்து வீட்டுக்குப் பால்பாயாசம் கொடுத்தானாம்

 1. கணேஷ் Says:

  I totally agree with Vasanth

 1. /*..
  அப்படித்தான் நடக்கும். அடுத்து பொருளாதாரத் தடை இலங்கை மீது விழுந்தால் இன்னும் கூட விலை வாசி உயரும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையை நீங்கள் உங்கள் வாக்குகளின் மூலம் கொடுக்காத பட்சத்தில் குற்றவாளிகளோடு சேர்ந்து நீங்களும் தண்டிக்கப் படத்தான் வேண்டியிருக்கும்.
  ..*/

  முகிலன் சார் நீங்க ரொம்ப காமடி பண்ணுறீங்க... எதுக்கு போராட்டம் என்பதில ஒரு முடிவுக்கு வருவம்.. முகாம்களில் மக்களை காப்பாற்றுவதற்கா இல்லாவிட்டால் MR டீமை எதிர்ப்பதற்கா..? மக்களை காப்பாற்றுவதற்கு என்றால் நிச்சயம் உங்கள் போராட்டங்களால் மேலும் வதைக்குள்ளாக்கிறீர்கள் என்பதே யதார்த்தமான உண்மை.. மற்றதுக்கு என்றா என்றால் நீங்கள் போற வழி சரியானது.. நாங்க கேள்வியே கேட்க வரல... ஆனால் நாங்க காப்பாத்த தான் போராடுறம் என்ற பேர்ல அங்குள்ள மக்களுக்கு இன்னும் அவதிக்குள்ளாகிற யதார்த்தம் கூட புரியாமல் போராடி எனர்ஜி வேஸ்ட் பண்ண வேணாம் என்று தான் நான் சொல்கிறேன்...


  /*..
  ஆனால் நீங்களே எங்களுக்கு உதவி செய்ய நீங்க யாருடா என்று கேட்ட பின், நான் இங்கே விவாதம் செய்து கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை என்று நினைக்கிறேன்.
  ..*/

  நாங்க அப்படி சொல்லவேயில்ல சார்.. சொல்லபோனால் உங்களையும் உடன் பிறவாத சகோதரர்களாய் தான் பார்க்கிறோம்.. செய்கிற விஷயம் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவியா இல்லாம உபத்திரவமா மாறுது என்கிற அடிப்படை உண்மையை தான் விளங்க படுத்த முயற்சிக்கிறோம்.. புரியலனா விட்டுறுங்க சார்...

 1. அர்ச்சனா மாடம் வணக்கம்..

  /*யுத்தத்திற்காக இவ்வளவு செலவழித்து ஒவ்வொரு தனிநபரையும் கடனாளியாக்கி விலைவாசி அப்படி உயர்ந்ததே அப்ப என்ன செய்தீர்கள். */

  என்னவோ எங்களிடம் அனுமதி வாங்கி தான் யுத்தம் நடந்தது போல் அல்லவா உங்கள் கருத்து உள்ளது...
  எதிரி செய்யுறதுக்கும், ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்று சொல்லுகிறவர்கள் செய்யுறதுக்கும் வித்தியாசம் இல்லையா!!

  /*
  இத்தனைக்கும் மேலால் இதில் விவேக் ஒப்ரயிற்கும் அசினிற்கும் அதரவாக கருத்துக் கூறியவர்கள்*/

  அவர்களுக்கு ஆதரவா யாருப்பா இங்க கதைச்சது.. உண்மையை சொல்ல வேண்டுமாயின் அவர்களை எல்லாம் இங்கே யாரும் பெரிதாக கணக்கெடுக்கிறதே இல்லை..

  /*
  எங்களுக்காக( போலியாகவோ உண்மையாகவோ )கண்ணீர்விடும், கதைக்கும் எங்களையும் ஒரு கணமாவது நினைக்கும் ஒவ்வொரு இந்திய தமிழன் இற்கும் மரியாதையை செய்வோம்.
  */
  நிச்சயமாய்.. அப்படி என்றால் கலைஞருக்கும் கட் அவுட் வைச்சு கால்ல விழுந்து கும்பிடுவோம்.. ஏனென்றால் அவரும் "எங்களுக்காக( போலியாகவோ உண்மையாகவோ )கண்ணீர்" விடுகிறார்.. கடிதம் எல்லாம் எழுதுகிறார்..

 1. // நிச்சயமாய்.. அப்படி என்றால் கலைஞருக்கும் கட் அவுட் வைச்சு கால்ல விழுந்து கும்பிடுவோம்.. ஏனென்றால் அவரும் "எங்களுக்காக( போலியாகவோ உண்மையாகவோ )கண்ணீர்" விடுகிறார்.. கடிதம் எல்லாம் எழுதுகிறார்.. //

  ஐயா 4 மணிநேரத்தில் மனைவிமார், குடும்பம், ஏசீ, மின்விசிறி சூழ உண்ணாவிரதமிருந்து இலங்கை யுத்தத்தை நிறுத்தியமையைக் குறிப்பிடாமைக்கு திங் வை நொட் இற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

 1. வசந்த் Says:

  திங்க் வை நாட் அண்ணே,அவங்கள் பிடிச்ச முயலுக்கு மூன்று கால். நாங்கள் எவ்வளவு சொன்னாலும் அவங்களுக்குப் புரியாது. வெளிநாட்டில இருந்துகொண்டு என்ன வேணுமானாலும் சொல்லலாம். இங்க இருக்கிறவங்களுக்குத்தானே கஸ்டம், அவங்களுக்கு அரசியல் நடந்தாச் சரி

 1. இலங்கைக்கு நடிகர்கள், நடிகைகள் போகக் கூடாது என முழக்கமிடுவது நீங்கள் நினைப்பது போல் சும்மா முடாள் தனமான வேலை இல்ல. எங்கெல்லாம் அரசியல் வாதிகளின் குட்டுகள் வெளிப்படும் நேரம் வருகிறதோ அப்போதெல்லாம் இது போன்ற கேளிக்கைக் கூத்துக்கள், மாராட்டங்கள் காட்டி மக்கள் திசைத் திருப்பப் படுவர். இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இந்த பதிவிற்கு நா என் முழுக் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.

 1. // வதீஸ்-Vathees said...
  `ஹி...`ஹி... பதிவை ரசித்தேன். சிந்திக்ககூடிய பதிவாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் பவ// இது போல் சிந்தித்து முட்டாளாகி விடாதீர்கள்.

 1. Bavan Says:

  புலவன் புலிகேசி,

  //பதிவிற்கு நா என் முழுக் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.//

  நல்லது,இலங்கையின் பெயரைப்பாவித்து நன்றாக அரசியல் நடத்துங்கள், அதை இலங்கையன் என்ற ரீதியில் கேட்கும் சொல்லும் உரிமை எனக்குண்டு..

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் கண்டனத்துக்கும்..:)

 1. எல்லாம் விவாதிக்கும்போது நன்றாக இருக்கும் ஆனால் யாதார்த்தமாக அவை எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பதை சற்று சிந்திக்கவேண்டும் நண்பர்களே!. வெளிநாடுகளில் இருந்து எதிர்ப்பு போராட்டங்களை நடத்தலாம் . உலக நாடுகளை இலங்கையின் பக்கம் திருப்பலாம் தவறென்று நாங்கள் கூறவில்லை ஆனாலும் அதனால் தொடர்ந்து பாதிக்கப்படப்போவது பாதிக்கப்பட்ட அந்த மக்களே! பனையாலை விழுந்தவனை மாடேறி மிதிச்ச கதையாகத்தான் போய்விடும். இந்த அதீத கவனத்தை/எதிர்ப்பை யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் மேற்கொண்டு உலகநாடுகளை இலங்கை பக்கம் திருப்பியிருந்தால் பல ஆயிரக்ககணக்கா உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருக்காது தடுத்திருக்கலாம். அதற்காக அந்த காலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று நான் கூறவரவிவ்லை ஆனால் இன்னும் மும்முரமாக எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கலாம். தமிழனுக்கு நீதியும் தமிழீழமும் வேண்டும் என்றால் அதை யார் தற்போது முன்னெடுப்படு அடிக்குமேல் அடிவாங்கி பல இழப்புக்களை சந்தித்து திராணியற்ற நிலையிலே தங்களுடைய நாளாந்த வாழ்க்கையினையே முன்னெக்க கஷ்ட்டப்படும் அந்த மக்களா? அல்லது வெளிநாடுகளில் இருந்து குரலெழுப்பிவரும் மக்களா? முதலில் தற்போதைய இலங்கையின் யதார்த்தத்தை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் என்கருத்து

 1. //நல்லது,இலங்கையின் பெயரைப்பாவித்து நன்றாக அரசியல் நடத்துங்கள், அதை இலங்கையன் என்ற ரீதியில் கேட்கும் சொல்லும் உரிமை எனக்குண்டு..

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் கண்டனத்துக்கும்..:// நண்பரே இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள நீங்கள் நிறைய உலக அரசியல் படிக்க வேண்டும். அரசியலின் தந்திரங்களில் இது இல்லை என சொன்னால் நிச்சயம் இறந்து போன ஆத்மாக்கள் உங்களை மன்னிக்காது. நீங்க இலங்கையனாவோ, நான் இந்தியனாவோ இருக்கத் தேவையில்லை இதை விமர்சனம் செய்ய. நல்ல மனிதம் இருந்தால் போதும். இலங்கைப் பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடும், திருமா, வை.கோ மற்றும் சீமானை வைத்து நீங்கள் பிரச்சினையின் ஆழத்திலிருந்து திசைத் திருப்பப் பட்டிருக்கிறீர்கள். இந்த அரசியல் வியாதிகளை விட்டுத் தள்ளுங்கள். அவர்கள் மீது மட்டும் உங்கள் பார்வையை வைக்காதீர்கள். பிரச்சினையின் மீது முழுப் பார்வையைக் கொடுங்கள். அப்போது புரியும் இது ஏன் இப்படி எதிர்க்கப் பட்டது என்று. நன்றி.

 1. //வதீஸ்-Vathees Says:
  July 4, 2010 11:16 AM
  எல்லாம் விவாதிக்கும்போது நன்றாக இருக்கும் ஆனால் யாதார்த்தமாக அவை எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பதை சற்று சிந்திக்கவேண்டும் நண்பர்களே!. வெளிநாடுகளில் இருந்து எதிர்ப்பு போராட்டங்களை நடத்தலாம் . உலக நாடுகளை இலங்கையின் பக்கம் திருப்பலாம் தவறென்று நாங்கள் கூறவில்லை ஆனாலும் அதனால் தொடர்ந்து பாதிக்கப்படப்போவது பாதிக்கப்பட்ட அந்த மக்களே! பனையாலை விழுந்தவனை மாடேறி மிதிச்ச கதையாகத்தான் போய்விடும். இந்த அதீத கவனத்தை/எதிர்ப்பை யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் மேற்கொண்டு உலகநாடுகளை இலங்கை பக்கம் திருப்பியிருந்தால் பல ஆயிரக்ககணக்கா உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருக்காது தடுத்திருக்கலாம். அதற்காக அந்த காலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று நான் கூறவரவிவ்லை ஆனால் இன்னும் மும்முரமாக எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கலாம். தமிழனுக்கு நீதியும் தமிழீழமும் வேண்டும் என்றால் அதை யார் தற்போது முன்னெடுப்படு அடிக்குமேல் அடிவாங்கி பல இழப்புக்களை சந்தித்து திராணியற்ற நிலையிலே தங்களுடைய நாளாந்த வாழ்க்கையினையே முன்னெக்க கஷ்ட்டப்படும் அந்த மக்களா? அல்லது வெளிநாடுகளில் இருந்து குரலெழுப்பிவரும் மக்களா? முதலில் தற்போதைய இலங்கையின் யதார்த்தத்தை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் என்கருத்து

  Post a Comment// அவர்களின் இன்றைய கொடூர நிலைக்கும், போர்க்காலத்தில் முழுமையான எதிர்ப்புகள் வராததற்கும் உங்களைப் போன்ற பலரின் சிந்தனைக்க் குறைவுதான் காரணம். பிரச்சினையை செய்தியாகப் படித்து விட்டு போய் விட்டிருக்கிறீர்கள். ஒரு இனம் அழிக்கப் படும் போது குரல் கொடுக்க வேண்டிய அரசியலாளர்களுக்கு எதிராக தலைத் தூக்க எத்தனைப் பேர் தயாராக இருந்தீர்கள். நமக்கேன் வம்பு என எண்ணி மூன்று வேலை உணவும், உறைவிடமும் சொகுசு வாழ்க்கையும் எனக்கிருக்கு. நான் ஏன் அடுத்தவங்களப் பத்திக் கவலைப்படனும்னு நடுத்தர வர்க்க சிந்தனையோடயும், மேட்டுக்குடி சிந்தனையோடயும் இருந்துட்டீங்க. அரசியல் சூட்சமங்கள் அந்த மக்களுக்கு புரிய வைக்கப் படாமல் தடுத்தவர்களில் இது போன்று குறைபாட்டு சிந்தனையாளர்களுக்கும் பங்குண்டு.

 1. Bavan Says:

  //இலங்கைப் பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடும், திருமா, வை.கோ மற்றும் சீமானை வைத்து நீங்கள் பிரச்சினையின் ஆழத்திலிருந்து திசைத் திருப்பப் பட்டிருக்கிறீர்கள்.//

  அவர்கள் செய்வது பிழை என்பதுதான் என் கருத்து.. அதனால்தான் இந்தப்பதிவே..

  //இந்த அரசியல் வியாதிகளை விட்டுத் தள்ளுங்கள். அவர்கள் மீது மட்டும் உங்கள் பார்வையை வைக்காதீர்கள். பிரச்சினையின் மீது முழுப் பார்வையைக் கொடுங்கள். அப்போது புரியும் இது ஏன் இப்படி எதிர்க்கப் பட்டது என்று. நன்றி.//

  பிரச்சினை பாரதூரமானதுதான் ஆனால் அதற்காக இலங்கைத் தமிழர் பெயரைப்பாவித்து அவர்கள் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் எனது வருத்தம், ஆதங்கம் எல்லாம்.

  இதைக்கூறப்போனால் அசினுக்கும், விவேக் ஓபராய்க்கும் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறேன் என்று பின்னூட்டங்கள் வேறு.

  தங்களுக்கு இலங்கைப்பிரச்சினை விளங்கியிருந்தால் சந்தோஷம்..:)

 1. பொது சனம் Says:

  // அவர்களின் இன்றைய கொடூர நிலைக்கும், போர்க்காலத்தில் முழுமையான எதிர்ப்புகள் வராததற்கும் உங்களைப் போன்ற பலரின் சிந்தனைக்க் குறைவுதான் காரணம். பிரச்சினையை செய்தியாகப் படித்து விட்டு போய் விட்டிருக்கிறீர்கள். ஒரு இனம் அழிக்கப் படும் போது குரல் கொடுக்க வேண்டிய அரசியலாளர்களுக்கு எதிராக தலைத் தூக்க எத்தனைப் பேர் தயாராக இருந்தீர்கள். நமக்கேன் வம்பு என எண்ணி மூன்று வேலை உணவும், உறைவிடமும் சொகுசு வாழ்க்கையும் எனக்கிருக்கு. நான் ஏன் அடுத்தவங்களப் பத்திக் கவலைப்படனும்னு நடுத்தர வர்க்க சிந்தனையோடயும், மேட்டுக்குடி சிந்தனையோடயும் இருந்துட்டீங்க. அரசியல் சூட்சமங்கள் அந்த மக்களுக்கு புரிய வைக்கப் படாமல் தடுத்தவர்களில் இது போன்று குறைபாட்டு சிந்தனையாளர்களுக்கும் பங்குண்டு. //

  யார் குறைபாட்டு சிந்தனையாளர்கள் என்பதை காலம் ஏற்கனவே சொல்லிவிட்டது.
  கடைசிக்காலத்தில் அவர்கள் தோற்கிறார்கள் என்று சொன்னவர்களை துரோகிகள், குறைபாட்டு சிந்தனையாளர்கள் என்று சொல்லிவிட்டு தொடர்ந்து உசுப்பேற்றியது யார் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

  போராட்டத்தின் காரணம் சரியானது, பிழையானது ஒருபுறமிருக்கட்டும், களநிலைவரங்களை களத்தில் இல்லாதவர்கள் அறிக்கைகள் மூலம் மாற்றி மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது யார் என்று யோசித்துப் பாருங்கள்.

  இன்றுவரை 'அவர்' வருவார் என்று சொல்லிக்கொண்டு திரியும் அரைவேக்காடுகளையும், அவர்களை நம்பும் குறை வேக்காடுகளையும் கேளுங்கள் எதிர்த்துக் கேள்வி கேட்க.
  எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்?

  யதார்த்தங்களை உணருங்கள்.
  நாங்கள் போர் நடக்கும் நாட்டில் உள்ள குளிரூட்டிய அறைக்குள் தான் இருக்கிறோம், ஆனால் தீர்வுகளை அள்ளிவீசுபவர்கள் பல நூறு மைல்கள் தாண்டிய இடங்களிலல்லவா இருக்கிறார்கள்?

  குறிப்பு: எமக்கான தீர்வுகளை திணிக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம், தீர்வுக்கு உதவ வேண்டாம் என்று சொல்லவில்லை.

 1. //பிரச்சினை பாரதூரமானதுதான் ஆனால் அதற்காக இலங்கைத் தமிழர் பெயரைப்பாவித்து அவர்கள் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் எனது வருத்தம், ஆதங்கம் எல்லாம்.
  //

  அந்த வருத்தத்தையும், ஆதங்கத்தையும் இப்ப்டித் தெரிவித்திருப்பதால்தான் நீங்கள் திசைத் திருப்பப் பட்டிருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கிறேன். இது மக்களுக்கு தவறானப் புரிதலைத்தான் கொடுக்கும். இதனால் உண்மை நிலைத் தெரியப் போவதில்லை. இது வெறும் கேலிக் கூத்தாகவும், சினிமாத்ஹ்டுறை ஆதராவகவுமே பாதிக்கப் படும். காரணம் சித்தரிப்பு அப்படி. இந்த அரசியல்வியாதிகளை எதிர்க்கிறேன் என்ற எண்ணத்தில் தவறான முடிவெடுத்து பதிவிட்டிருக்கிறீர்கள். நன்றி

 1. ஒன்றை முதலில் புரிந்துகொள்ளுங்கள். பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வரும் செய்திகளைப் படித்துவிட்டு எங்களைப் பகடைக்காய்களாக்காதீர்கள். பிரச்சினைகளை அனுபவித்து உணர்ந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு வராத உணர்வுகள் உங்களுக்கு வந்துவிட்டதாக்க் காண்பிக்காதீர்கள். செம்மொழி மாநாட்டில் உங்கள் அரசியலுக்கு கடிதம் எழுதியும், ரயில்பாதைக்குக் குண்டுவைத்தும் நீங்கள் நடாத்திய அரசியலால் இங்கே இப்போது அதிகமாகச் சொதனைக்குள்ளாக்கப்படுகிறோம். புறக்கணிப்புக்களும் போராட்டங்களும் சரிதான், ஆனால் இப்போது இருக்கும் எங்கள் பிரச்சினை வேறு. குறைந்தபட்சம் எங்களை உயிரோடாவது இருக்கவிடுங்கள்.

 1. @ புலிக்கேசி
  // அவர்களின் இன்றைய கொடூர நிலைக்கும், போர்க்காலத்தில் முழுமையான எதிர்ப்புகள் வராததற்கும் உங்களைப் போன்ற பலரின் சிந்தனைக்க் குறைவுதான் காரணம். பிரச்சினையை செய்தியாகப் படித்து விட்டு போய் விட்டிருக்கிறீர்கள். ஒரு இனம் அழிக்கப் படும் போது குரல் கொடுக்க வேண்டிய அரசியலாளர்களுக்கு எதிராக தலைத் தூக்க எத்தனைப் பேர் தயாராக இருந்தீர்கள். நமக்கேன் வம்பு என எண்ணி மூன்று வேலை உணவும், உறைவிடமும் சொகுசு வாழ்க்கையும் எனக்கிருக்கு. நான் ஏன் அடுத்தவங்களப் பத்திக் கவலைப்படனும்னு நடுத்தர வர்க்க சிந்தனையோடயும், மேட்டுக்குடி சிந்தனையோடயும் இருந்துட்டீங்க. அரசியல் சூட்சமங்கள் அந்த மக்களுக்கு புரிய வைக்கப் படாமல் தடுத்தவர்களில் இது போன்று குறைபாட்டு சிந்தனையாளர்களுக்கும் பங்குண்டு. ///

  நண்பர் புலிக்கேசி அவர்களே நான் 5 வயதிலிருந்து இந்த யுத்தத்தை அனுபவித்தவன் பல உயிர்கள் செல்களினாலும் விமான குண்டுவீச்சுகளினாலும் துப்பாக்கி சன்னங்களினாலும் துடிதுடித்து இறந்துபோனதை பார்த்தவன். யுத்தத்தின் வலி இழப்புக்கள் என்பதுபற்றி எனக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ஒன்றும் செய்யவில்லையென்று கூறுகிறீர்களே ஆனாலும் அதற்கு என்ன காரணம் என்று நீர் சற்று சிந்தித்தீரா? நான் ஒன்றும் இந்தியாவில் வசிக்கவில்லை. இலங்கையில் வசித்து வருகிறேன் முதலில் நீங்கள யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள். போர்காலத்தில் இலங்கையில் நடைபெற்றது உங்களுக்கு தெரியாதா என்ன?

 1. //அனாமிகா Says:
  July 4, 2010 11:46 AM
  ஒன்றை முதலில் புரிந்துகொள்ளுங்கள். பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வரும் செய்திகளைப் படித்துவிட்டு எங்களைப் பகடைக்காய்களாக்காதீர்கள். பிரச்சினைகளை அனுபவித்து உணர்ந்தவர்கள் நாங்கள். //

  இந்த அரசியல் உங்களுக்குப் புரிகிறது அல்லவா? அதை உங்கள் மக்களுக்கு எடுத்ஹ்டுச் சொல்லி விழிப்புணர்வு கொடுங்கள். அதுதான் வேண்டும். அரசியலின் தந்திரங்களும், சூழ்ச்சிகளும் மக்களுக்கு தெளிவு பட எடுத்து சொல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

 1. //எத்தனை பேருக்கு இதிலுள்ள அரசியலை விளங்கப்படுத்தி பதிவிட்டால் புரியப் போகிறது, புரிய மனமிருக்கிறது?

  இங்கு பின்னூட்டமிட்ட இலங்கையில் தற்போது வாழுகின்றவர்களைப் பாருங்கள்.
  அவர்கள் இந்த விடயத்தில் இருக்கும் தெளிவை உணருங்கள்.
  களத்திலிருக்கும் நிலைமைகளை உணருங்கள்// ஏன் அவங்களுக்கு புரிய வைக்க முடியாதுன்னு நெனைக்கிறீங்க? எதையுமே முடியாது, நடக்காதுன்னு நெனச்சா எல்லாருமே அழிஞ்சிப் போக வேண்டியதுதான். அவர்கள் நிச்சயம் தெளிவாக இல்லை. துவண்டு போயிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களை மட்டும் வைத்துக் கொண்டு இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. அனைத்து தமிழர்களுக்கும் இந்த அரசியல் சூட்சமங்கள் புரியவைக்கப் பட வேண்டும்.

 1. //நண்பர் புலிக்கேசி அவர்களே நான் 5 வயதிலிருந்து இந்த யுத்தத்தை அனுபவித்தவன் பல உயிர்கள் செல்களினாலும் விமான குண்டுவீச்சுகளினாலும் துப்பாக்கி சன்னங்களினாலும் துடிதுடித்து இறந்துபோனதை பார்த்தவன். யுத்தத்தின் வலி இழப்புக்கள் என்பதுபற்றி எனக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ஒன்றும் செய்யவில்லையென்று கூறுகிறீர்களே ஆனாலும் அதற்கு என்ன காரணம் என்று நீர் சற்று சிந்தித்தீரா? நான் ஒன்றும் இந்தியாவில் வசிக்கவில்லை. இலங்கையில் வசித்து வருகிறேன் முதலில் நீங்கள யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள். போர்காலத்தில் இலங்கையில் நடைபெற்றது உங்களுக்கு தெரியாதா என்ன?
  // எல்லாம் சரிதான் நண்பரே அதற்காக அரசியல் சூட்சமங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பதை தவறு என்று சொல்லாதீர்கள். உங்கள் மனம் தொட்டு சொல்லுங்கள் அந்த அரசியல்வாதிகள் மீது எதிர்ப்புத் தெரிவிக்க இப்பதிவு சரியானதா? நேரடியாக விமர்சனம் செய்யுங்கள். அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் எனத் திறம்பட எழுதிப் புரிய வையுங்கள். அதை விடுத்து கேலிச் சித்திரங்கள் வடித்துக் கொச்சைப் படுத்துவது கண்டனத்திற்குரிய செயல் இல்லை என வாதிடுவது சரியல்ல. நன்றி.

 1. தமிழீழம் என்று எண்ணக்கருவே அரசியல் நோக்கங்களுக்காக உருவானதுதான். இலங்கைத் தமிழர்களின் ஆரம்பக்கோரிக்கை தமிழீழம் என்ற தனிநாடல்ல. இலங்கைக்குள் சம-உரிமைகளோடு தமிழன் வாழ்க்கூடிய நிலையைத்தான் தமிழர்கள் கேட்டார்கள். இந்தப் பிரச்சினை மிக நீண்டது, பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் மட்டும் மையப்படுத்தி இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பேசுவது பொருத்தமானதல்ல. மேலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஆராய உலக அரசியல் படிப்பதிலும், இலங்கை இனப் பிரச்சினையின் வரலாறு தெரிய வேண்டும். இலங்கைியலுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்த கசப்பான உண்மை, தமிழன் தனக்குள்தானே காலைவாரிக்கொண்ட கறுப்பு சரித்திரங்கள், ஆக இங்கே கருத்துச் சொல்பவர்கள் முதலில் இந்தப் பிரச்சினையின் வரலாற்றை நன்கு தெரிந்துவிட்டுப் பேச வேண்டும். இன்றைக்கும் இலங்கைத் தமிழர்கள் ஒன்று பட்ட இலங்கையில் சம-உரிமைகளோடு வாழவே விரும்புகிறார்கள். தனிநாடு என்பதைவிட ஒரு இலங்கையில் சம-உரிமைகளோடு வாழ்வதற்கான தீர்வுதான் சிறந்தது என்பதை நான் உட்பட இலங்கையில் வாழும் தமிழர்கள் எல்லாம் உணர்கிறோம். சிங்கள மக்கள் எல்லாரையும் துரோகிகள் என்ற ரீதியில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சித்தரிப்பதை நான் கண்டிக்கிறேன். உண்மை நிலையை அறியாது பேசக்கூடாது. இந்தப் பிரச்சினை சிக்கலானது ஆனால் தீர்க்கமுடியாததல்ல. 1956ல் தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாராளுமன்றில் கலாநிதி.என்.எம்.பெரேரா அவர்கள் தமிழும் தேசிய மொழியாக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். அதே வேளை கலாநிதி கொல்வின்.ஆர்.டி.சில்வா அவர்கள் “ஒரு நாடு, இருமொழி, அல்லது ஒரு மொழி, இரு நாடு - எது வேண்டும்” - என்று கேள்வியெழுப்பியிருந்தார். ஆக அக்காலத்தில் ஆட்சிக்குவந்தவர்கள் தமது சுயநல அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தை மக்களிடத்தே திணித்தார்களேயன்றி அது மக்களிடமிருந்து பிறக்கவில்லை. இதே கொல்வின்.ஆர்.டி.சில்வா 1972 அரசியல் அமைப்புக்குழுத் தலைவராக இருந்த போது அந்த அரசியல் அமைப்பின் குறைநிலைகண்டு இது எனது அரசியல் அமைப்பல்ல ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் அரசியல் அமைப்பு என்று சொன்னார். ஏனெனில் அதிலிருந்த குறைகள் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. இன்றும் நடைமுறையில் எனக்குத் தெரியும், மக்களிடம் இனவாதம் இல்லை, இந்தச் சுயநல அரசியல்வாதிகள் தான் இனவாதத்தைத் திணிக்கிறார்கள். இந்த உண்மை புலம் பெயர்ந்த தமிழர்களுக்குத் தெரியாமால் இருக்கலாம், இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழர்களுக்குத் தெரியும். இன்று இலங்கையில் நாம் மாற்ற வேண்டியதில் முதன்மையானது இந்தத் திணிக்கப்பட்ட இனவாதத்தை. அடுத்த சந்ததியாவது இனவெறி துறந்த ஒன்றாக அமைவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இனபேதம் கடந்து இலங்கையர்கள் என்ற குடையின் கீழ் நாம் ஒன்று பட வேண்டும்.

  தயவுசெய்து இனியும் இனத்தை மையப்படுத்தி உணர்வுகளைத்தூண்டி இரத்தம் வழிந்து ஒடிய காயத்தை மீண்டு கிண்டி விடாதீாகள் - அதை ஆற்ற முயலுங்கள்.

  இன அழிப்பு - யுத்தக் குற்றம் - அது வேறு, அது தொடர்பாக ஐ.நா.வின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும். இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகளெல்லாம் அதை வலியுறுத்துகிறது - அதை இதனுடன் சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.

  தமிழ்நாட்டில் தமிழ் இருப்பதை விட, இங்கு தமிழ் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு இலங்கைத் தமிழ்ப்பிள்ளையும் கட்டாயம் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையைப் பெறுகிறான். தாய்மொழிக்கல்வியும் சாதாரணதரம் வரை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தமிழில் பல பாடங்களைத் தொடரக்கூடிய பல்கலைக்கழகமாக யாழ் பல்கலைக்கழகம் காணப்படுகிறது. இங்கு கருணாநிதி இல்லாவிட்டாலும் தமிழ் வாழ்கிறது :-p

 1. தமிழீழம் என்று எண்ணக்கருவே அரசியல் நோக்கங்களுக்காக உருவானதுதான். இலங்கைத் தமிழர்களின் ஆரம்பக்கோரிக்கை தமிழீழம் என்ற தனிநாடல்ல. இலங்கைக்குள் சம-உரிமைகளோடு தமிழன் வாழ்க்கூடிய நிலையைத்தான் தமிழர்கள் கேட்டார்கள். இந்தப் பிரச்சினை மிக நீண்டது, பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் மட்டும் மையப்படுத்தி இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பேசுவது பொருத்தமானதல்ல. மேலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஆராய உலக அரசியல் படிப்பதிலும், இலங்கை இனப் பிரச்சினையின் வரலாறு தெரிய வேண்டும். இலங்கைியலுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்த கசப்பான உண்மை, தமிழன் தனக்குள்தானே காலைவாரிக்கொண்ட கறுப்பு சரித்திரங்கள், ஆக இங்கே கருத்துச் சொல்பவர்கள் முதலில் இந்தப் பிரச்சினையின் வரலாற்றை நன்கு தெரிந்துவிட்டுப் பேச வேண்டும். இன்றைக்கும் இலங்கைத் தமிழர்கள் ஒன்று பட்ட இலங்கையில் சம-உரிமைகளோடு வாழவே விரும்புகிறார்கள். தனிநாடு என்பதைவிட ஒரு இலங்கையில் சம-உரிமைகளோடு வாழ்வதற்கான தீர்வுதான் சிறந்தது என்பதை நான் உட்பட இலங்கையில் வாழும் தமிழர்கள் எல்லாம் உணர்கிறோம். சிங்கள மக்கள் எல்லாரையும் துரோகிகள் என்ற ரீதியில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சித்தரிப்பதை நான் கண்டிக்கிறேன். உண்மை நிலையை அறியாது பேசக்கூடாது. இந்தப் பிரச்சினை சிக்கலானது ஆனால் தீர்க்கமுடியாததல்ல. 1956ல் தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாராளுமன்றில் கலாநிதி.என்.எம்.பெரேரா அவர்கள் தமிழும் தேசிய மொழியாக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். அதே வேளை கலாநிதி கொல்வின்.ஆர்.டி.சில்வா அவர்கள் “ஒரு நாடு, இருமொழி, அல்லது ஒரு மொழி, இரு நாடு - எது வேண்டும்” - என்று கேள்வியெழுப்பியிருந்தார். ஆக அக்காலத்தில் ஆட்சிக்குவந்தவர்கள் தமது சுயநல அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தை மக்களிடத்தே திணித்தார்களேயன்றி அது மக்களிடமிருந்து பிறக்கவில்லை. இதே கொல்வின்.ஆர்.டி.சில்வா 1972 அரசியல் அமைப்புக்குழுத் தலைவராக இருந்த போது அந்த அரசியல் அமைப்பின் குறைநிலைகண்டு இது எனது அரசியல் அமைப்பல்ல ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் அரசியல் அமைப்பு என்று சொன்னார். ஏனெனில் அதிலிருந்த குறைகள் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. இன்றும் நடைமுறையில் எனக்குத் தெரியும், மக்களிடம் இனவாதம் இல்லை, இந்தச் சுயநல அரசியல்வாதிகள் தான் இனவாதத்தைத் திணிக்கிறார்கள். இந்த உண்மை புலம் பெயர்ந்த தமிழர்களுக்குத் தெரியாமால் இருக்கலாம், இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழர்களுக்குத் தெரியும். இன்று இலங்கையில் நாம் மாற்ற வேண்டியதில் முதன்மையானது இந்தத் திணிக்கப்பட்ட இனவாதத்தை. அடுத்த சந்ததியாவது இனவெறி துறந்த ஒன்றாக அமைவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இனபேதம் கடந்து இலங்கையர்கள் என்ற குடையின் கீழ் நாம் ஒன்று பட வேண்டும்.

 1. தயவுசெய்து இனியும் இனத்தை மையப்படுத்தி உணர்வுகளைத்தூண்டி இரத்தம் வழிந்து ஒடிய காயத்தை மீண்டு கிண்டி விடாதீாகள் - அதை ஆற்ற முயலுங்கள்.

  இன அழிப்பு - யுத்தக் குற்றம் - அது வேறு, அது தொடர்பாக ஐ.நா.வின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும். இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகளெல்லாம் அதை வலியுறுத்துகிறது - அதை இதனுடன் சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.

  தமிழ்நாட்டில் தமிழ் இருப்பதை விட, இங்கு தமிழ் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு இலங்கைத் தமிழ்ப்பிள்ளையும் கட்டாயம் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையைப் பெறுகிறான். தாய்மொழிக்கல்வியும் சாதாரணதரம் வரை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தமிழில் பல பாடங்களைத் தொடரக்கூடிய பல்கலைக்கழகமாக யாழ் பல்கலைக்கழகம் காணப்படுகிறது. இங்கு கருணாநிதி இல்லாவிட்டாலும் தமிழ் வாழ்கிறது :-p

 1. இந்தப் பிரச்சினை சிக்கலானது ஆனால் தீர்க்கமுடியாததல்ல. 1956ல் தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாராளுமன்றில் கலாநிதி.என்.எம்.பெரேரா அவர்கள் தமிழும் தேசிய மொழியாக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். அதே வேளை கலாநிதி கொல்வின்.ஆர்.டி.சில்வா அவர்கள் “ஒரு நாடு, இருமொழி, அல்லது ஒரு மொழி, இரு நாடு - எது வேண்டும்” - என்று கேள்வியெழுப்பியிருந்தார். ஆக அக்காலத்தில் ஆட்சிக்குவந்தவர்கள் தமது சுயநல அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தை மக்களிடத்தே திணித்தார்களேயன்றி அது மக்களிடமிருந்து பிறக்கவில்லை. இதே கொல்வின்.ஆர்.டி.சில்வா 1972 அரசியல் அமைப்புக்குழுத் தலைவராக இருந்த போது அந்த அரசியல் அமைப்பின் குறைநிலைகண்டு இது எனது அரசியல் அமைப்பல்ல ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் அரசியல் அமைப்பு என்று சொன்னார். ஏனெனில் அதிலிருந்த குறைகள் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. இன்றும் நடைமுறையில் எனக்குத் தெரியும், மக்களிடம் இனவாதம் இல்லை, இந்தச் சுயநல அரசியல்வாதிகள் தான் இனவாதத்தைத் திணிக்கிறார்கள். இந்த உண்மை புலம் பெயர்ந்த தமிழர்களுக்குத் தெரியாமால் இருக்கலாம், இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழர்களுக்குத் தெரியும். இன்று இலங்கையில் நாம் மாற்ற வேண்டியதில் முதன்மையானது இந்தத் திணிக்கப்பட்ட இனவாதத்தை. அடுத்த சந்ததியாவது இனவெறி துறந்த ஒன்றாக அமைவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இனபேதம் கடந்து இலங்கையர்கள் என்ற குடையின் கீழ் நாம் ஒன்று பட வேண்டும்.

 1. தமிழீழம் என்று எண்ணக்கருவே அரசியல் நோக்கங்களுக்காக உருவானதுதான். இலங்கைத் தமிழர்களின் ஆரம்பக்கோரிக்கை தமிழீழம் என்ற தனிநாடல்ல. இலங்கைக்குள் சம-உரிமைகளோடு தமிழன் வாழ்க்கூடிய நிலையைத்தான் தமிழர்கள் கேட்டார்கள். இந்தப் பிரச்சினை மிக நீண்டது, பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் மட்டும் மையப்படுத்தி இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பேசுவது பொருத்தமானதல்ல. மேலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஆராய உலக அரசியல் படிப்பதிலும், இலங்கை இனப் பிரச்சினையின் வரலாறு தெரிய வேண்டும். இலங்கைியலுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்த கசப்பான உண்மை, தமிழன் தனக்குள்தானே காலைவாரிக்கொண்ட கறுப்பு சரித்திரங்கள், ஆக இங்கே கருத்துச் சொல்பவர்கள் முதலில் இந்தப் பிரச்சினையின் வரலாற்றை நன்கு தெரிந்துவிட்டுப் பேச வேண்டும். இன்றைக்கும் இலங்கைத் தமிழர்கள் ஒன்று பட்ட இலங்கையில் சம-உரிமைகளோடு வாழவே விரும்புகிறார்கள். தனிநாடு என்பதைவிட ஒரு இலங்கையில் சம-உரிமைகளோடு வாழ்வதற்கான தீர்வுதான் சிறந்தது என்பதை நான் உட்பட இலங்கையில் வாழும் தமிழர்கள் எல்லாம் உணர்கிறோம். சிங்கள மக்கள் எல்லாரையும் துரோகிகள் என்ற ரீதியில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சித்தரிப்பதை நான் கண்டிக்கிறேன். உண்மை நிலையை அறியாது பேசக்கூடாது.

 1. //ஏன் அவங்களுக்கு புரிய வைக்க முடியாதுன்னு நெனைக்கிறீங்க? எதையுமே முடியாது, நடக்காதுன்னு நெனச்சா எல்லாருமே அழிஞ்சிப் போக வேண்டியதுதான். அவர்கள் நிச்சயம் தெளிவாக இல்லை. துவண்டு போயிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களை மட்டும் வைத்துக் கொண்டு இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. அனைத்து தமிழர்களுக்கும் இந்த அரசியல் சூட்சமங்கள் புரியவைக்கப் பட வேண்டும்.//

  புரியவைத்து? இப்போது எங்களுக்குள்ள பிரதான பிரச்சனை இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேர்த்துவதும், அவர்களின் அடுத்தவேளை உணவுக்கு வழிசெய்வதும்தான். உச்சகட்ட யுத்தம் நடைபெறும்போதே உலகுக்கு நன்றாக எடுத்துக்காட்டி சாதித்ததெல்லாம் போதும். உங்கள் அரசியல்கள் எங்களை வைத்து வேண்டாம். எங்களை உயிரோடாவது இருக்கவிடுங்கள்.

 1. //இன அழிப்பு - யுத்தக் குற்றம் - அது வேறு, அது தொடர்பாக ஐ.நா.வின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும். இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகளெல்லாம் அதை வலியுறுத்துகிறது - அதை இதனுடன் சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.

  தமிழ்நாட்டில் தமிழ் இருப்பதை விட, இங்கு தமிழ் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு இலங்கைத் தமிழ்ப்பிள்ளையும் கட்டாயம் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையைப் பெறுகிறான். தாய்மொழிக்கல்வியும் சாதாரணதரம் வரை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தமிழில் பல பாடங்களைத் தொடரக்கூடிய பல்கலைக்கழகமாக யாழ் பல்கலைக்கழகம் காணப்படுகிறது. இங்கு கருணாநிதி இல்லாவிட்டாலும் தமிழ் வாழ்கிறது :-p// நண்பரே சிங்களவர்களை எல்லாம் குற்றவாளிகள் என சித்தரிக்கும் அரசியல்வியாதிகளை நானும் கண்டிக்கிறேன். ஆனால் இந்த ஐ.நா. விசாரணைகள, எதிர்க் கட்சிகளின் வலியுறுத்தல்கள் இவற்றையெல்லாம் மக்களுக்குப் புரிய வையுங்கள். எதிர்க் கட்சி ஏன் வலியுறுத்துகிறான் என ஆழ்ந்து பாருங்கள். மக்கள் எல்லோரையும் மீண்டும் போராடச் சொல்லி வலியுறுத்தவில்லை. ஆனால் மக்களுக்கு அரசியலின் புரிதல்கள் வர வேண்டும். சிங்களவர்களுக்கும் இது பற்றியப் புரிதல்களை ஏற்படுத்துங்கள். அது போன்ற புரிதல்களும், விழிப்புணர்வுகளையும் மக்களுக்கு ஏற்படுத்தினால் தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆட்சி பீடத்தில் ஒரு பயத்துடன் அமர்ந்து வேலை செய்வர். இதி மேம்போக்காக ஐ.நா பார்த்துக் கொள்ளும். அது வேறு இது வேறு என இருக்க வேண்டாம். மற்றபடி நான் முன்னமே சொன்னது போல் அரசியல் ஆதாயம் தேடுபவர்களை எதிர்க்க இப்பதிவு சரியானதல்ல. அவ்வளவே.

 1. //தமிழ்நாட்டில் தமிழ் இருப்பதை விட, இங்கு தமிழ் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு இலங்கைத் தமிழ்ப்பிள்ளையும் கட்டாயம் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையைப் பெறுகிறான். தாய்மொழிக்கல்வியும் சாதாரணதரம் வரை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தமிழில் பல பாடங்களைத் தொடரக்கூடிய பல்கலைக்கழகமாக யாழ் பல்கலைக்கழகம் காணப்படுகிறது. இங்கு கருணாநிதி இல்லாவிட்டாலும் தமிழ் வாழ்கிறது :-p// நண்பரே தமிழ் என்பது ஒரு மொழி அவ்வளவே. மொழி உணர்வு மிக முக்கியம் இல்லை என மறுக்கவில்லை. அதைத் தாண்டிய மனித உணர்வு வேண்டும். இங்கு இந்தக் கருணாநிதி ஒன்றும் தமிழை வளர்க்கவில்லை. தமிழை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகிறார்.

 1. //புரியவைத்து? இப்போது எங்களுக்குள்ள பிரதான பிரச்சனை இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேர்த்துவதும், அவர்களின் அடுத்தவேளை உணவுக்கு வழிசெய்வதும்தான். உச்சகட்ட யுத்தம் நடைபெறும்போதே உலகுக்கு நன்றாக எடுத்துக்காட்டி சாதித்ததெல்லாம் போதும். உங்கள் அரசியல்கள் எங்களை வைத்து வேண்டாம். எங்களை உயிரோடாவது இருக்கவிடுங்கள்// ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் நான் எந்த அரசியல்வியாதிகளுக்காகவோ, ஹிட்சுக்காக இலங்கைப் பிரச்சினையை கையிலெடுக்கும் கேவலமான பதிவரசியலுக்கு ஆதரவாகவோ பேசவில்லை. என் கவலை எல்லாம் மக்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே அவர்களுக்கு நியாயம் கிடைக்கும். இப்போது மக்கள் துவண்டு போயிருக்கிறார்கள், மீள் குடியேர்றப் பட வேண்டும். எல்லாம் சரிதான் இப்போது எடுத்துச் சொன்னால் கேட்கும் நிலையிலும் அவர்கள் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் இவற்றையெல்லாம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய காலம் வரும். அப்போதும் இதுபோல் சும்மா இருந்து விடாதீர்கள்.

 1. தயவுசெய்து இங்கு என்ன நடக்கிறது. இலங்கை அரசியலின் போக்கு என்ன என்று சரியாகத் தெரியாமல் பொழுதுபோக்கு ஊடகங்களின் செய்தித்துளிகளை நம்பி கருத்துச்சொல்ல வேண்டாம்.

  தமிழ் மொழிதான் ஆனால் அந்தமொழியைப் புறக்கணித்ததன் அடிப்படைதான் இலங்கை இனப்பிரச்சினையே, அதனால்தான் சொன்னேன், ஒரு விஷயம் பற்றித்தெரியாமல் அதுபற்றி வாதிட வேண்டாம் என்று. இலங்கை இனப்பிரச்சினையின் மூலம் தமிழ் மொழியுரிமைகள் முடக்கப்பட்டது, தமிழ் மாணவர்களின் கல்வி வாய்ப்புக்கள் குறைக்கப்பட்டதும் தான். மேலும் தமிழ், தமிழர் என்று பிரிக்கும் சிறுபிள்ளைத்தளமான செயலை நான் செய்யமாட்டேன், ஏனென்றால் வெளிப்படையாக தமிழர் எனபவர்கள் தமிழைப் பேசுபவர்கள், இன்று அதன் அடுத்த பரிணாமமாக வெளிநாடுகளின் தமிழ் பேசாத தமிழர் சந்ததி உருவாகிவருவது வேறு விடயம், இலங்கையைப் பொருத்தமட்டில் தமிழர், தமிழ் இரண்டும் சார்ந்து வருவது.

  இந்தப் பதிவுக்கு நான் பின்னூட்டுகிறேன் என்பதல்ல மாறாக உங்கள் தவறான கருத்தக்களை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அவ்வளவே.

 1. நண்பர் புலிகேசி அவர்களே, முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தப் பதிவு எழுதுவது, அதன்மூலம் விழிப்புணர்வு எல்லாம் உங்களுக்கு சிரிப்பாகப் படவில்லையா? பதிவுலகம் என்பது ஒரு சிறிய வட்டம். அதன் வாசக வட்டமும் குறிப்பிட்ட ஒரு குழுவினரோடு மட்டுப்படுத்தப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு நீங்கள் விடும் மேதாவித்தனங்கள் பல இடங்களில் என்னைச் சிரிக்கவைத்திருக்கிறது. நீங்கள் பதிவெழுதி ஒரு புல்லை அசைத்தாலே அது பெரிய வெற்றிஎன்பேன். இலங்கை, இந்திய நாடுகளில் பலம்வாய்ந்த பத்திரிகைத்துறையே ஒன்றையும் அசைக்கமுடியாத நிலையில் இருக்கும்போது பதிவுலகம் செய்துவிடுமா? உங்கள் பதிவுலகம் பல இடங்களில் மக்களின் எண்ண ஓட்டத்திலிருந்து விலகி இருந்ததையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு உதாரணம் - உங்கள் இந்தியத் தேர்தல். இனியும் பதிவு எழுதுவதை வைத்துக் காமெடி பண்ணவேண்டாம்.

 1. //தயவுசெய்து இங்கு என்ன நடக்கிறது. இலங்கை அரசியலின் போக்கு என்ன என்று சரியாகத் தெரியாமல் பொழுதுபோக்கு ஊடகங்களின் செய்தித்துளிகளை நம்பி கருத்துச்சொல்ல வேண்டாம். //

  அவற்றை நம்பி நான் கருத்து சொல்லவில்லை. தமிழ் புறக்கணிக்கப் பட்டதால் வந்த போராட்டம், தமிழன் ஒடுக்கப் பட்டதால் வந்த போராட்டம் என்பது எனக்கும் தெரியும். நான் தமிழ் பற்றியோ, சிங்களம் பற்றியோ பேசித் திசைத் திருப்ப விரும்பவில்லை. என்னுடைய கேள்வியெல்லாம் அரசியல் பற்றிய புரிதல்கள் மக்களுக்குத் தேவையா? இல்லையா?

 1. //இந்தப் பதிவு எழுதுவது, அதன்மூலம் விழிப்புணர்வு எல்லாம் உங்களுக்கு சிரிப்பாகப் படவில்லையா? பதிவுலகம் என்பது ஒரு சிறிய வட்டம். அதன் வாசக வட்டமும் குறிப்பிட்ட ஒரு குழுவினரோடு மட்டுப்படுத்தப்படுகிறது.// பதிவுலகைத் தாண்டிய உலகம் வெளியில் இருக்கிறது. இது ஒரு குறிகிய வட்டம் தான். இந்தக் குறுகிய வட்டத்திற்குள் குழுக்கள் அமைத்து கூத்தடிப்பதை விட்டொழித்தால் இதை ஒரு பெரிய ஊடகமாக மாற்ற முடியும். அமெரிக்க அரசியலையேத் திருப்பி போட்டது இப்பதிவுலகம். இப்பட்திவுலகிலாவது தவறான புரிதல்கள் ஏற்படுத்தாமல், சரியான நோக்கில் கொண்டு சென்றால், சிலருக்காவது புரிய வைத்தால் அதன் மூலம் அவர்கள் சக மனிதர்களுக்கு எடுத்துக் கூறினால் நிச்சயம் மாற்றங்கள் நிகழ்த்த முடியும். அதெல்லாம் முடியாது என நினைத்தால் அது கோழைத் தனம் அல்லது தன்னம்பிக்கையின்மை என்றே சொல்ல முடியும்.

 1. /*இந்த அரசியல் உங்களுக்குப் புரிகிறது அல்லவா? அதை உங்கள் மக்களுக்கு எடுத்ஹ்டுச் சொல்லி விழிப்புணர்வு கொடுங்கள். அதுதான் வேண்டும். அரசியலின் தந்திரங்களும், சூழ்ச்சிகளும் மக்களுக்கு தெளிவு பட எடுத்து சொல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.
  */
  ஆக்கபூர்வமான திசையில் இக் கருத்து பரிமாற்றத்தை கொண்டு செல்ல முயற்சிக்கும் புலவன் புலிகேசிக்கு எனது நன்றிகள்...
  வரலாறை பற்றியும் நடந்து முடிந்ததை பற்றியும் எது நிரந்தர தீர்வு என்பதை பற்றியும் சண்டையிடுவதை விடுத்து ஆக்கபூர்வமாய் என்ன செய்யலாம் என்று யோசிப்பதும்(எவ்வளவு காலம் தான் யோசிப்பீங்க) செயல்படுவதுவும் முக்கியம்..
  முதலில் இதில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகளும் அன்றாட சமூக தேவைகளும் பூர்த்தி செய்வது முக்கியமானது...

  அதற்கு பின்னர் தீர்வை பற்றி கலந்தாலோசிப்போம்.. ஒருமித்த குரலில் எல்லா பதிவுகளும் (பதிவர்களும்) முழுமையான தீர்வை எழுதட்டும்.. பதிவுலகம் நன்றாகவே கவனிக்கப்படுகிறது... எல்லாரும் ஒற்றுமையாக ஒரு விடயத்தை(தீர்வை) முன்னெடுத்தால் அது நிச்சயம் எதிரொலிக்க வேண்டிய இடத்தில் சென்று சேரும்...

 1. //அதற்கு பின்னர் தீர்வை பற்றி கலந்தாலோசிப்போம்.. ஒருமித்த குரலில் எல்லா பதிவுகளும் (பதிவர்களும்) முழுமையான தீர்வை எழுதட்டும்//

  Good joke, சூரியன் மேற்கில உதுத்தாலும் உதிக்கும்

 1. பதிவுலகம் சிறியதாக இருக்கலாம்.. முதலில் தமிழ்ப் பதிவர்கள் எல்லாம்(பெரும்பாலானோராவது) முழுமையாக இதற்கு சிறந்த தீர்வெனக் கருதும் ஒன்றில் முடிவுக்கு வருவோம்..

  அது குறித்து எழுதுங்கள்.. பின்னர் இருக்கவே இருக்கின்றன சமூக வலைத்தளங்களும் மின்னஞசல்களும்.. பொறுப்புள்ள இள வயதினரிடமும் மின்னஞ்சல் பாவிக்கும் எல்லோரிடமும் சென்று சேர்க்க முயற்சிப்போம்...

  மேலும் அப்பதிவுகளை ஆங்கிலத்திலும் (சிங்களத்திலும் கூட) மொழிபெயர்த்து வெளியிடுவோம்.. நிரந்தர தீர்வொன்று அம்மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்று கருத்துடைய நியாயத்தை செவிமடுக்க கூடிய பல சிங்களவரகளை (பதிவர்களை) கண்டிருக்கிறேன்.. நிச்சயம் அவை சென்றடையும்...

  பழசுதான் என்றாலும் திரும்ப சொல்கிறேன்.. "முயற்சி திருவினையாக்கும்"

 1. Think Why Not,

  நீங்கள் சொல்வதெல்லாம் சரி. ஒத்துப்போகிறேன். நிச்சயமாக சிங்களமக்கள் இந்தக் கருத்துடன் ஒத்துப்போகிறார்கள். நானும் அவர்களுடன் பழகுபவன் என்ற வகையில் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அரசியல் நடாத்த (இலங்கையிலும்தான்) நாம் தேவைப்பட்டுக்கொண்டிருக்கும்வரை கடினம்தான். இது ஆட்சியில் இருப்பது யார் என்பதிலும் தங்கியிருக்கவில்லை. ஆனால் நீங்கள் இலங்கையிர்தான் இருக்கிறீர்களா தெரியவில்லை.இங்கு எழுதும் ஊடகவியலாளர்களின் நிலைமை தெரியும்தானே? அவர்களால் முடியாதது பதிவர்களால் முடியுமா?

 1. Subankan Says:

  அஷோக்பரனின் கருத்துக்களோடு பல இடங்களில் ஒத்துப்போகிறேன். இலங்கையின் யுத்தத்தால் தழிழர்கள் மாத்திரமல்ல, சிங்களவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் (குறைவு - கூட பிரச்சினை வேண்டாமே). மொழி, நாடு வேறுபாடின்றி அரசியல்வாதிகளுக்குத்தான் இந்தப் பிரச்சினை தேவைப்பட்டது, தேவைப்படுகிறது. மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்படுத்தப்படவேண்டியதே. ஆனால் அது இலகுவானதும் அல்ல. நீண்ட நாட்களுக்குப்பிறகு பதிவொன்றில் விவாதம் கொஞ்சம் ஆக்கபூர்வமாக நகர்வதைக் காண்கிறேன். மகிழ்ச்சி.

  // புலவன் புலிகேசி said...
  பதிவுலகைத் தாண்டிய உலகம் வெளியில் இருக்கிறது. இது ஒரு குறிகிய வட்டம் தான். இந்தக் குறுகிய வட்டத்திற்குள் குழுக்கள் அமைத்து கூத்தடிப்பதை விட்டொழித்தால் இதை ஒரு பெரிய ஊடகமாக மாற்ற முடியும்//

  அதே!, குழுவாக இயங்குதல் என்பது மனங்களோடு சம்பந்தப்பட்டது. அதைத் தவிர்க்க இயலாது. ஆனால் தேவையில்லாத அரசியல் வளர்க்காமல் கொஞ்சம் ஆக்கபூர்வமாக செயற்பட முயல்லாம்.

 1. //அனாமிகா Says:
  July 4, 2010 12:57 PM
  //அதற்கு பின்னர் தீர்வை பற்றி கலந்தாலோசிப்போம்.. ஒருமித்த குரலில் எல்லா பதிவுகளும் (பதிவர்களும்) முழுமையான தீர்வை எழுதட்டும்//

  Good joke, சூரியன் மேற்கில உதுத்தாலும் உதிக்கும்//

  இது போன்று கேலி கிண்டல்களை விட்டொழியுங்கள். ஏன் நடக்காது என நினைக்கிறீர்கள். ஒருவர் பிறந்ததும் அவரின் ஆசைகள் நிறைவேறி விடுகிறதா? படிக்கும் போது வேலை கிடைக்கும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் உத்தரவாதம் இருக்கிறதா? அது போலத்தான் இதுவும். ஆனால் அந்த அளவுக்கு எளிதல்ல. பொறுமைதான் அவசியம். விழிப்புணர்வை எல்லோர்க்கும் ஒரே சமயத்தில் கொடுத்து விட முடியும் என்றால் என்றோ இந்த அரசியல் சாம்ராஜ்யங்கள் எல்லாம் ஒழிந்து போயிருக்கும். முடியும் என்று நினைத்து முனைப்போடிருங்கள். உங்கள் சந்ததிகளுக்காவது நல் வாழ்க்கைக் கிடைக்கக் கூடும்.

 1. ஆட்சியிலிருப்பவர்களை ஆட்சியை தாக்கி எழுதி உங்களை காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கும் எண்ணம் எனக்கில்லை... இருந்தாலும் யதார்த்தமாய் எழுதி முயலலாம் இல்லையா..?  "I'm not saying I'm gonna change the world, but I guarantee that I will spark the brain
  that will change the world." - Tupac Amaru Shakur, June 16, 1971 to September 13, 1996

 1. //நீங்கள் சொல்வதெல்லாம் சரி. ஒத்துப்போகிறேன். நிச்சயமாக சிங்களமக்கள் இந்தக் கருத்துடன் ஒத்துப்போகிறார்கள். நானும் அவர்களுடன் பழகுபவன் என்ற வகையில் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அரசியல் நடாத்த (இலங்கையிலும்தான்) நாம் தேவைப்பட்டுக்கொண்டிருக்கும்வரை கடினம்தான். இது ஆட்சியில் இருப்பது யார் என்பதிலும் தங்கியிருக்கவில்லை. ஆனால் நீங்கள் இலங்கையிர்தான் இருக்கிறீர்களா தெரியவில்லை.இங்கு எழுதும் ஊடகவியலாளர்களின் நிலைமை தெரியும்தானே? அவர்களால் முடியாதது பதிவர்களால் முடியுமா?
  //

  அனாமிகா உங்கள் ஒவ்வொரு கருத்திலும் முடியாது, முடியுமா? இயலாது போன்ற எண்ணங்களே வெளிப் பட்டிருக்கின்றன. பதிவுலகம் இன்று பலரால் கவனிக்கப் பட்டு வருகிறது. தொலைக்காட்சி வந்த காலத்தில் எல்லோருக்கும் சென்றடைவது கேள்விக் குறியாகத்தான் இருந்தது. ஆனால் இன்று நடக்கவில்லையா? அது போலத்தானிதுவும். எதுவும் உடனுக்குடன் கிடைத்ஹ்டு விடாது. காலம் நிறையத் தேவைபடும். அது போன்ற காலம் வரும் போது இதை விட்டு விட்டோமே என எண்ணக் கூடாது. இந்த பதிவுலகமும் மக்களை மடையர்களாக்கும் வெறும் பொழுது போக்கு உலகமாக இருக்கக் கூடாது. இதுவே என் எண்ணம். நன்றி.

 1. //"I'm not saying I'm gonna change the world, but I guarantee that I will spark the brain
  that will change the world." - Tupac Amaru Shakur, June 16, 1971 to September 13, 1996//

  அதேதான் தோழரே! இங்கு யாருக்கும் என்னால் இந்த உலகை மாற்ற முடியும் என்ற எண்ணமில்லை. ஆனால் அது மக்களின் அறிவால் மாற்றப்படக் கூடும். அதற்கு மக்களுக்கு முக்கியத் தேவை அரசியல் சார்ந்த அறிவுகள். அதற்கான விழிப்புணர்வைத்தான் அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என சொல்கிறேன்.

 1. அனாமிகா வெறும் பதிவுலகை வைத்துக் கொண்டு மாற்றம் நிகழ்த்தி விட முடியாது. ஆனால் மாற்றத்தில் ஒரு முக்கிய பங்காக பதிவுலகமும் இருக்கிறது.

 1. உங்களால் உருவாக்கப்பட்ட பொறியில் பற்றிக்கொண்ட நெருப்பாக இருக்க முயல்கிறேன். இந்தப் பின்னூட்டங்களிலிருந்து பெரும்பாலான இலங்கைத் தமிழர்களின் எண்ண ஓட்டத்தை இங்கு கருத்துரையிட்ட இந்திய நண்பர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

 1. //அவர்களுக்கு ஆதரவா யாருப்பா இங்க கதைச்சது.. உண்மையை சொல்ல வேண்டுமாயின் அவர்களை எல்லாம் இங்கே யாரும் பெரிதாக கணக்கெடுக்கிறதே இல்லை..//

  தயவு செய்து நீர் மேலுள்ள ஏனையோர் இட்ட பின்னூட்டங்களை வாசிக்கவும்.அதனை விட சக பதிவர்களின் ஏனைய பதிவுகளிற்கும் சென்று பார்க்கவும்.

  //என்னவோ எங்களிடம் அனுமதி வாங்கி தான் யுத்தம் நடந்தது போல் அல்லவா உங்கள் கருத்து உள்ளது...
  எதிரி செய்யுறதுக்கும், ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்று சொல்லுகிறவர்கள் செய்யுறதுக்கும் வித்தியாசம் இல்லையா!!//

  எதனையுமே அனுமதி பெற்று யாருமே செய்யவில்லை. அமிதாப் வரக்கூடாது என ஆர்ப்பாட்டம் செய்யும் பொது உங்களிடம் அனுமதி பெற்றார்களா...
  அதே தான் அந்த நேரத்தில் யுத்தத்தினால் ஏற்படும் பொருளாதார சிக்கல் பற்றி எழுதியவர்கள் யாரென சொல்லவும்...நீங்கள் எந்தளவு கையாலாகாத தன்மையுடன் இங்கு இருக்கிறீர்களோ அதே போல்தான் தமிழ்நாட்டிலும். ...எமக்காக குரல் கொடுப்பவர்களெல்லாம் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை. எதோ தங்களால் முடிந்தளவு செய்கிறார்கள் அதை ஏன் உங்களிற்கு பொறுக்க முடியவில்லை.
  //நிச்சயமாய்.. அப்படி என்றால் கலைஞருக்கும் கட் அவுட் வைச்சு கால்ல விழுந்து கும்பிடுவோம்.. ஏனென்றால் அவரும் "எங்களுக்காக( போலியாகவோ உண்மையாகவோ )கண்ணீர்" விடுகிறார்.. கடிதம் எல்லாம் எழுதுகிறார்.//
  இதில் ஏன் தடம் மாறுகிறீர் .நான் இதி கலைஞர் நல்லவர் என்று சொல்லவில்லை. கலைஞர் ,ஏனைய ஆட்சியிலுள்ளவர்களை பற்றி எனக்கு தெரியும். அந்த போலிகளை பற்றி நான் குறிப்பிடவில்லை.
  தங்களிற்கு நான் முன்னைய பின்னூட்டத்தில்குறிப்பிட்டுள்ள ஏனைய வரிகள் கண்ணுக்கு புலப்படவில்லையா .அல்லது அவற்றில் பதில் சொல்ல முடியவில்லையா. வன்னியில் உள்ள எங்களை வைத்து வன்னிக்கு வெளியே இருக்கும் நீங்கள் எங்கள் சார்பாக குரல் கொடுக்காதீர்கள். யாராவது எங்களுக்காக கதைக்கட்டும் விட்டு விடுங்கள்.

 1. Anonymous Says:

  //முகிலன் - அப்படித்தான் நடக்கும். அடுத்து பொருளாதாரத் தடை இலங்கை மீது விழுந்தால் இன்னும் கூட விலை வாசி உயரும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையை நீங்கள் உங்கள் வாக்குகளின் மூலம் கொடுக்காத பட்சத்தில் குற்றவாளிகளோடு சேர்ந்து நீங்களும் தண்டிக்கப் படத்தான் வேண்டியிருக்கும்.//
  நன்றாக தான் மிரட்டியுள்ளீர்கள். மிகவும் பயந்துவிட்டோம். உங்கள் உள்நோக்கங்களை தெரியப்படுத்தியதற்க்கு நன்றி.

 1. Bavan Says:

  @புலிகேசி,
  @Think Why Not,
  @அனாமிகா,
  @சுபா அண்ணா,

  தற்போது பதிவுலகம் பாலரால் உற்றுநோக்கப்படுகிறது என்பது உண்மை.
  ஆனால் ஒரு விடயத்தை முயச்சிக்காமல் எதையும் செய்துவிட முடியாது சகோதரர்களே எனவே முயற்சிப்போம் பலனளிக்கும் என்ற நம்பிக்கையில்..:)))

 1. முகிலன் புலவன் புலிகேசி தமிழன் ஆகியோரிற்கு பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டுகொண்டு இருக்கிற மக்கள் சார்பில் நன்றிகள். இலங்கையில் இருந்து கொண்டு வசதிகளினை அனுபவித்து கொண்டிருப்பவர்களின் புரிதல்களைவிட தங்களின் புர்தல்களிற்கும் ஆதரவுகளிற்கு நாம் நன்றி கூறுகிறோம்.

 1. //ஆனால் ஒரு விடயத்தை முயச்சிக்காமல் எதையும் செய்துவிட முடியாது சகோதரர்களே எனவே முயற்சிப்போம் பலனளிக்கும் என்ற நம்பிக்கையில்..://

  அதே தான் தற்போது போர்குற்ற விசாரணை தொடர்பாக மின் அஞ்சல் அனுப்புமாறு ஒவ்வொரு இணைய ஊடகங்களும் கோரிக்கை விடுகின்றனவே .இதிலாவது எல்லோரும் இணைந்து மின் அஞ்சல்களை அனுப்புவீர்களென எதிர்பார்க்கிறோம்.

 1. // archchana said...

  முகிலன் புலவன் புலிகேசி தமிழன் ஆகியோரிற்கு பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டுகொண்டு இருக்கிற மக்கள் சார்பில் நன்றிகள். இலங்கையில் இருந்து கொண்டு வசதிகளினை அனுபவித்து கொண்டிருப்பவர்களின் புரிதல்களைவிட தங்களின் புர்தல்களிற்கும் ஆதரவுகளிற்கு நாம் நன்றி கூறுகிறோம்.//


  வெளிநாட்டில் இருந்துகொண்டு இங்குள்ள நிலைமைபற்றிப் பேசுபவர்களை விட நாங்கள் ஒன்றும் வசதியாக இருந்துவிடவில்லை. மற்றும் நாங்கள் பேசிக்கொண்டிருப்பது முகாம்களில் கஸ்டப்படும் மக்கள் இவர்களால் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப்பற்றித்தான். அடுத்தவேளைச் சாப்பாட்டுக்கு ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு நடிகர்கள் இங்கு வருவதைப்பற்றிக் கவலையில்லை. அதனால் இலங்கையை சர்வதேசம் எப்படித் திரும்பிப்பார்க்கிறது எனபதைப்பற்றியும் கவலையில்லை. அவர்களின் கவலை உணவு, உடை உறையுள். குழந்தைப்பிள்ளைத்தனமாகப் போராட்டங்களை விட்டுவிட்டு, அவர்களுக்காகப் பேசுங்கள். இதைச் சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறதா? யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளுங்கள்

 1. கணேஷ் Says:

  // அதே தான் தற்போது போர்குற்ற விசாரணை தொடர்பாக மின் அஞ்சல் அனுப்புமாறு ஒவ்வொரு இணைய ஊடகங்களும் கோரிக்கை விடுகின்றனவே .இதிலாவது எல்லோரும் இணைந்து மின் அஞ்சல்களை அனுப்புவீர்களென எதிர்பார்க்கிறோம். //

  இதன் மூலம் அடிப்படையில் சாமானியனுக்கு என்ன கிடைக்கும் என்று நம்புகிறீர்கள்?
  அதை அரசியல்வாதிகளும், அமைப்புக்களும் செய்து கொள்ளட்டும்.
  முதலில் எஞ்சியவர்களை காப்பாற்ற முயற்சியுங்கள், பிறகு பழிக்கு பழி வாங்கல்களையும், உங்கள் கோபங்களையும் தீர்த்துக் கொள்ளுங்கள்.

 1. /// வெளிநாட்டில் இருந்துகொண்டு இங்குள்ள நிலைமைபற்றிப் பேசுபவர்களை விட நாங்கள் ஒன்றும் வசதியாக இருந்துவிடவில்லை. மற்றும் நாங்கள் பேசிக்கொண்டிருப்பது முகாம்களில் கஸ்டப்படும் மக்கள் இவர்களால் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப்பற்றித்தான். அடுத்தவேளைச் சாப்பாட்டுக்கு ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு நடிகர்கள் இங்கு வருவதைப்பற்றிக் கவலையில்லை. அதனால் இலங்கையை சர்வதேசம் எப்படித் திரும்பிப்பார்க்கிறது எனபதைப்பற்றியும் கவலையில்லை. அவர்களின் கவலைஉணவு, உடை உறையுள். குழந்தைப்பிள்ளைத்தனமாகப் போராட்டங்களை விட்டுவிட்டு, அவர்களுக்காகப் பேசுங்கள். இதைச் சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறதா? யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளுங்கள்///

  அனாமிகா....

  அடடா.........அப்படியா........இவர்களால் முகாமில் இருப்பவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். விளங்கவில்லை.(ஏதாவது நடிகர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு போவிட்டது என்றா) எங்களை சொல்லி சொல்லி அரசாங்கம் எடுக்கும் பிச்சையில் பத்தில் ஒரு பங்கை தான் எமக்கு தெளிக்கிரார்களே.....அதனைவிட வ்ப்ப்,உன்ஹ்ச்ர்.இச்ர்க்.பொருட் போச்டோ என பல அரச சார்பற்ற நிறுவனங்கள் தான் கையை கட்டியபடி இருங்கோ உமக்கு நாம் சாப்பாடு போடுகிறார்களே...சோ ஏக்கமில்லை...சாப்பாடு பொருட்கள் வராவிட்டால் உடனடியாக அரசாதிபரிட்கு முறையிடலாமே....இதுகள் பற்றி நீங்கள் அறிந்து இருக்கவில்லையா..........

  என்னது...நடிகர்கள் வருவது பற்றி கவலை இல்லையா.....சர்வதேசம் எப்படி பார்க்கிறது என்றும் கவலை இல்லையா......இது அதைவிட காமடியாக இருக்கிறதே.....நடிகர் முகாமை பார்வையிட வருகிறார் என்றவுடன் முள்ளு கம்பிகள் சற்று தள்ளிவைப்பதையும் சோதனை என்ற பேரில் முகாமில் உள்ளவர்கள் தோண்டி துருவப்படுவதையும் எந்த இன்னல் வந்தாலும் சிரிப்பதற்கு தயங்கமாட்டோம் என இருக்கும் சிலரை தெரிவுசெய்து அவர்களுடன் கதைக்கவிட்டு படங்கள் எடுப்பதையும்...அதைவிட நாங்களென்ன zoo ila அடைபட்டுயருக்கிறோம் நீ வந்து பார்க்க என் மனதில் நினைத்தாலும் வெளியில் மவுனமாக இருக்கும் எங்களையும் உமக்கு தெரியாதா.......

  சர்வதேசம் எப்படி பார்த்தாலும் கவலை இல்லையா....................வெளியில் பெரிதாக சொல்லவேண்டாம். உம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள்...

  யதார்த்தம் எதுவென நீர் முதலில் புரிந்து கொள்ளும்.

 1. சபாஷ், இங்கே எஞ்சியிருப்பவர்களையும் கொன்றுவிடுங்கள். எந்தப் பிரச்சினையை முதல் அணுகுவது, எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற சிந்தனை அற்ற உங்களைப்போன்றவர்களால்தான் இன்று எமக்கு இந்த நிலை. காயத்தை மருந்திடவேண்டுமே தவிர நோட்டிக்கொண்டிருந்தால் இன்னும் பெரிதாகத்தான் ஆகும். இதனால் இன்று நாங்கள் இழந்துவிட்டு நிற்பது எத்தனையை என்பது தெரியுமா உங்களுக்கு? காலத்தோடான சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத்தால்தான் இன்றய நிலை. இனியும் புரிந்துகொள்ள மறுத்தால் உங்களுடன் பேசிப் பயனில்லை.

 1. //அனாமிகா Says:
  July 4, 2010 4:24 PM
  சபாஷ், இங்கே எஞ்சியிருப்பவர்களையும் கொன்றுவிடுங்கள். எந்தப் பிரச்சினையை முதல் அணுகுவது, எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற சிந்தனை அற்ற உங்களைப்போன்றவர்களால்தான் இன்று எமக்கு இந்த நிலை. //

  அனாமிகா உங்களுக்கு மீண்டும் ஒன்று சொல்கிறேன். கால மாற்றம் என்பது இயற்கை நிகழ்வு. நீங்கள் அரசிய்லாளர்களின் மாற்றங்களையும் கால மாற்றம் என எடுத்துக் கொண்டு அதன் பின்னால் போகாதீர்கள். மக்கள் முள்வேலிகளுக்குள்ளிருந்து வெளி வர வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசையும். ஆனால் வெளிவரும் மக்கள் மீண்டும் வேலிக்குள் அடைக்கப் படும் நிலை வரக்கூடாது. அதற்கு அவர்களுக்கான விழிப்புணர்வு புகுத்தப் பட வேண்டும். அதற்கு முயல்கிறேன் என ஒரு வார்த்தையும் உங்களிடம் வராதது எனக்கு வருத்தமளிக்கிறது. எங்க சனம் இப்படி ஆயிருச்சேன்னு வருத்தம் மட்டும் பட்டுக் கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை. எஞ்சியிருக்கும் மக்களாவது நன்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் செய்து கொண்டே இருப்போம். அரசியல் பார்க்கும் ஆதாய மிருகங்களை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம். அடுத்தவரை நம்பியிருக்காமல் எல்லா மக்களுக்கும் தன்னம்பிக்கையையும், உண்மை நிலை அரசியலையும் புகட்ட வேண்டிய கடமை இருக்கிறது என நினைக்கிறீர்களா? இல்லையா? அது யதார்த்தம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் மனித வாழ்க்கையில் எதுவும் எதார்த்தம் இல்லை. நன்றி.

 1. //இதன் மூலம் அடிப்படையில் சாமானியனுக்கு என்ன கிடைக்கும் என்று நம்புகிறீர்கள்?
  அதை அரசியல்வாதிகளும், அமைப்புக்களும் செய்து கொள்ளட்டும்.
  முதலில் எஞ்சியவர்களை காப்பாற்ற முயற்சியுங்கள், பிறகு பழிக்கு பழி வாங்கல்களையும், உங்கள் கோபங்களையும் தீர்த்துக் கொள்ளுங்கள்//

  இங்கு பழிக்குப் பழி வாங்கல் கொள்கையே இருத்தல் கூடாது. மக்க்ளுக்கு அரசியல் சார்ந்த அறிவு தேவை. அதற்கு உதவுங்கள் பல பிரச்சினைகள் தீரும்.

 1. //தற்போது பதிவுலகம் பாலரால் உற்றுநோக்கப்படுகிறது என்பது உண்மை.
  ஆனால் ஒரு விடயத்தை முயச்சிக்காமல் எதையும் செய்துவிட முடியாது சகோதரர்களே எனவே முயற்சிப்போம் பலனளிக்கும் என்ற நம்பிக்கையில்..:)))
  // பவன் நிச்சயம் ஒரு நாள் பலன் கிடைக்கும். அதுவரை நம்மால் இயன்ற நம் அறிவுக்கு எட்டிய அரசியல்கள் எந்தத் துறையில் நிகழ்ந்தாலும் அது குறித்து விவாதம் செய்வோம். விவாதங்களால் தான் மக்களுக்கு ஒரு உண்மை நிலையை எடுத்துக் கூற முடியும். நன்றி.

 1. Unknown Says:

  எல்லோரும் நல்லாத்தான் வாதாடினம். ஆனால் இடையில முகிலன் அடிச்ச பம்பல் அளவுக்கு ஒண்டுமேயில்லை.
  ///அப்படித்தான் நடக்கும். அடுத்து பொருளாதாரத் தடை இலங்கை மீது விழுந்தால் இன்னும் கூட விலை வாசி உயரும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையை நீங்கள் உங்கள் வாக்குகளின் மூலம் கொடுக்காத பட்சத்தில் குற்றவாளிகளோடு சேர்ந்து நீங்களும் தண்டிக்கப் படத்தான் வேண்டியிருக்கும். ///

  எந்த ஊரிலை இருக்கிறியள் முகிலன். Quota system கொண்டுவந்து ஒரு தமிழ்ப் பிள்ளையைவிடக் குறைந்த மதிப்பெண் எடுத்த சிங்களப்பிள்ளை சும்மா கம்பீரமாய் பல்கலைக்கழகம் போற ஒரு நாட்டிலை, மிஞ்சி மிஞ்சிப் போனா 22 பா.உ. க்களை பாராளுமன்றம் அனுப்பிற ஒரு இனம் எப்பிடி ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியும்? (ஒரு வழிகாட்டி இருந்த போது King Maker களாக நாங்கள் இருந்தது ஒரு காலம்)

 1. Anonymous Says:

  அனாமிகா -காலத்தோடான சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத்தால்தான் இன்றய நிலை. இனியும் புரிந்துகொள்ள மறுத்தால்...
  அவர்கள் ஏன் புரிந்துகொள்ள போகிறார்கள்?எபபடி புரிந்துகொள்ள போகிறார்கள்?அவர்கள் இருப்பது வெளிநாட்டில் வசதியாக. அவர்களுக்கு பொழுது போக்குவற்கு பல விடயங்கள் உண்டு.ஒரு ஆசையும் உண்டு.அதை நிறைவேற்ற இலங்கையில் உள்ளவர்கள் துன்பபடத்தான் வேண்டும்.அவர்களா துன்பபடபோகிறார்கள்!

 1. // சபாஷ், இங்கே எஞ்சியிருப்பவர்களையும் கொன்றுவிடுங்கள். எந்தப் பிரச்சினையை முதல் அணுகுவது, எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற சிந்த......//

  அதே தான் அனாமிகா.....நாங்களும் கேட்கின்றோம் எங்கள் சொந்தங்களை இழந்து உறவுகள் எல்லாம் எங்கென்று தெரியாமல் சின்னாபினமாக்கப்பட்டு நித்தமும் செத்தபடியே வாழ்வதைவிட ஏதாவது செய்து எங்கள் எல்லோரையும் கொன்றுவிடுங்கள். அது போதும்.

 1. //இதன் மூலம் அடிப்படையில் சாமானியனுக்கு என்ன கிடைக்கும் என்று நம்புகிறீர்கள்?
  அதை அரசியல்வாதிகளும், அமைப்புக்களும் செய்து கொள்ளட்டும்.
  முதலில் எஞ்சியவர்களை காப்பாற்ற முயற்சியுங்கள், பிறகு பழிக்கு பழி வாங்கல்களையும், உங்கள் கோபங்களையும் தீர்த்துக் கொள்ளுங்கள்//

  ஏன் ஒவ்வொரு சாமானியனின் வாழ்வியல் உமக்கு தெரியாதா.ஒவ்வொரு அரசியல்வாதிகளினதும் அமைப்புகளினதும் வீட்டிலா ஒவ்வொரு சாவும் நடந்தது ....நீங்கள் அனைவரும் உங்களை பாதுகாத்துகொள்ளுங்கள். ஏனையோர் எப்படியாவது இருக்கட்டும். பவனின் பதிவில் உணர்வுகளை காமடி பண்ணியதனை தான் இப்படியான பதிவுகள் வேண்டாம் என்றோம். மற்றும்படி............எல்லாமே உங்களின் கையில் தானே அது எமக்கு புரிகிறது...............................

 1. Anonymous Says:

  Pressure is necessary, no matter how it comes, u may propose better ways rather critisize others..

 1. Anonymous Says:

  நன்றாக இருக்கிறது உங்கள் நியாயங்கள். செம்மொழி மாநாட்டை நிறுத்துவதற்கும் எமது பெயர வேண்டும், அதை தடாத்த‍வும் கலைஞருக்கு எங்கள் கடிதம் வேண்டும். உங்கள் அரசியல் நடாத்த‍ நாங்கள் வேண்டும், ஆனால் கேள்வி மட்டும் கேட்க்க‍கூடாது அப்ப‍டித்தானே? மருத்துவத்திற்கு உதவிகேட்டால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு செத்த‍வீட்டுக்குப் பணம் தர முயல்கிறீர்களா?

 1. Anonymous Says:

  please don't make fun.This is serious
  issue,and they are our brothers and sisters.
  Thanks
  Sangamithra

 1. Unknown Says:

  //எந்த ஊரிலை இருக்கிறியள் முகிலன். Quota system கொண்டுவந்து ஒரு தமிழ்ப் பிள்ளையைவிடக் குறைந்த மதிப்பெண் எடுத்த சிங்களப்பிள்ளை சும்மா கம்பீரமாய் பல்கலைக்கழகம் போற ஒரு நாட்டிலை, மிஞ்சி மிஞ்சிப் போனா 22 பா.உ. க்களை பாராளுமன்றம் அனுப்பிற ஒரு இனம் எப்பிடி ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியும்? (ஒரு வழிகாட்டி இருந்த போது King Maker களாக நாங்கள் இருந்தது ஒரு காலம்//

  கிருத்திகன்,

  நான் உங்களை என்று சொன்னதில் இலங்கையில் வசிக்கும் அனைவரும் - தமிழனும், சிங்களனும். போரால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போது சும்மா இருந்து விட்டு, போர் முடிந்ததும் அந்தப் போரை நடாத்தியவர்களுக்கே வாக்கைப் போட்டு மீண்டும் பதவிக்கு வர வைத்து விட்டு, இப்போது ஐ.ஐ.எப்.ஏ விழா நடக்காததால் பொருளாதாரம் போய் விட்டது சாமானியர்கள் பாதிக்கப் படுகிறோம் என்று கூக்குரல் எழுப்புபவர்களை.

 1. மவனே இலங்கையில் இருந்து இப்பிடி பதிவு போட்டால் உன் காலை வெட்டிடுவேன்....ஹீ ஹீ

  தாக நேரம் தண்ணீர் கிடுக்காமல் இப்போது கூல் டிரிங்க்ஸ் கொடுப்பதில் பலனில்லை. இலங்கை போகாதே போகாதே என்று சொல்வத விட போய் அங்கே உள்ள மக்களின் துன்பத்தை துடைப்பதே என்னை பொறுத்தவரை சரி.

 1. பொதுசனம் Says:

  நாங்கள் முன்னேற வேணும். கடந்த காலத்தில இருந்து பாடம் படிக்கோணும். நிறையப் பேர் உணர்ச்சி மேலிட்டால என்ன கதைக்கிறம் எண்டு விளங்காம நிக்கினம்.
  இங்க யாருமே தமிழகத்திற்கு எதிராகவோ யாரும் சாமானியனுக்கு எதிராகவோ கதைக்கேல.
  போலி அரசியல்வாதிகளுக்கு எதிராகவே கதைக்கிறார்கள்.

  அதைப்புரிந்து கொள்ள எங்களுக்கு எங்களுக்குள்ள இருக்கிற தமிழ் இனவாதம் விடுகுதில்ல.
  தமிழ் இனவாதத்தை முதலில குறையுங்கோ.

  இங்க கருத்துத் தெரிவிச்ச எல்லாரும் http://www.agiilan.com/?p=610 இந்தச் சுட்டிக்குப் போய் வாசியுங்கோ.

  அதில இருக்கிற கடைசிப் பந்திய வாசிச்சு உங்களுக்கு நீங்களே கேள்வி கேளுங்கோ.

  தமிழக நண்பர்களுக்கு தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் எண்டு நீங்கள் படிக்கிற ஊடகங்கள் சொல்லுவத நம்பி வாழாதயுங்கோ.

  வாழ்க.

 1. பவன் இந்தப் பதிவைப் படித்தீர்களா அவருக்கு எப்படி புரியவைப்பது

  http://pithatralkal.blogspot.com/2010/07/blog-post.html

 1. Anonymous Says:

  Why don't you condemn the Srilanka Govt for having spent so much money in conducting IIFA, rather than using that for the tamilians in camps?

  Is it necessary at this point of time to invite the Indian stars and conduct the film festival while so many are starving there??

 1. // Anonymous said...

  Why don't you condemn the Srilanka Govt for having spent so much money in conducting IIFA, rather than using that for the tamilians in camps?

  Is it necessary at this point of time to invite the Indian stars and conduct the film festival while so many are starving there?? //

  நாங்கள் யாருமே அரசாங்கத்திற்கு வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு வழங்கவில்லை. அப்படியானால் பல கோடிகள் செலவழித்து தமிழ்நாட்டில் நடத்தப்படும் பாராட்டு விழாக்களுக்கும், கேலிக்கூத்துகளுக்கும் பதிலாக அப்பணத்தை இலங்கையில் அடிப்படை வசதிகளின்றி வாழும் தமிழ் மக்களுக்கும் (ஒரேஇனம், இனவுணர்வு? ) வழங்கலாமே?

  நீங்கள் தான் சொல்கிறீர்களே தமிழக அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் இனவுணர்வு அதிகம், இலங்கை மக்களுக்காக போராடுகிறார்கள் என்று?

  கேட்க முடியுமா?

 1. Bavan Says:

  // தர்ஷன் said...
  பவன் இந்தப் பதிவைப் படித்தீர்களா அவருக்கு எப்படி புரியவைப்பது

  http://pithatralkal.blogspot.com/2010/07/blog-post.html//

  சிலரைத்திருத்த முடியாது..
  விளையாட்டுப் போட்டியை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் இப்படி விளையாடலாம் அப்படி விளையாடலாம் என்று கருத்துக்கூறலாம், ஆனால் அதன் கஸ்டமும் களைப்பும் விளையாடுபவனுக்குத்தான் தெரியும்..

  அது போலதான் அவரை நான் கணக்கில் எடுக்கப்போவதில்லை இவ்வளவு விளக்கங்கள் எங்களால் வழங்கப்பட்ட பின்னர் அவர் புரிந்து கொள்ளவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

  JUST IGNORE HIM..:D

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்