Related Posts with Thumbnails

என்றாய்...

பதிவிட்டவர் Bavan Thursday, July 15, 2010 15 பின்னூட்டங்கள்


பிறக்கும் போது BORN என்றாய்
பெற்ற தாயை MOM என்றாய்
அப்பாவைப்பார்த்து DAD என்றாய்
விளையாட்டைப் PLAY என்றாய்


புத்தகத்தை BOOK என்றாய்
எழுதுகோலை PEN என்றாய்
பாடசாலை SCHOOL என்றாய்
பேரூந்தை பஸ் என்றாய்


ஆசானை சேர் என்றாய்
சந்தியை JUNCTION என்றாய்
பாட்டை SONG என்றாய்
வீட்டை HOME என்றாய்


படத்தை FILM என்றாய்
குடத்தை POT என்றாய்
படுக்கையை BED என்றாய்
நித்திரையை SLEEP என்றாய்


இருமலைக் COUGH என்றாய்
காய்ச்சலை FEVER என்றாய்
கதைப்பதை CHAT என்றாய்
குளிப்பதை BATH என்றாய்


மழையை RAIN என்றாய்
காற்றை WIND என்றாய்
கடிதத்தை LETTER என்றாய்
எழுத்துக்களை LETTERS என்றாய்


பெண்ணை GIRL என்றாய்
ஆணை BOY என்றாய்
காதலை LOVE என்றாய்
கல்யாணத்தை MARRIAGE என்றாய்


நண்பனை FRIEND என்றாய்
பணத்தை MONEY என்றாய்
மகிழ்ச்சியை HAPPY என்றாய்
சோகத்தை SAD என்றாய்


சொர்க்கத்தை HEAVEN என்றாய்
நரகத்தை HELL என்றாய்
சாவை DEATH என்றாய்
பெயரைக்கேட்டேன் ட(த)மிலரசு என்றாய்

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. இது 'பா'வா? (கவிதை என்பது திசைச்சொல்லாம். ) :P

  என்றாலும் நாங்கள் கதைத்துப் பழகிவிட்ட சொற்கள்.
  தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும், தவிர்த்தல் அவ்வளவு கடினமும் இல்லை....

  முடிந்தால் முடியும்.

  வாழ்த்துக்கள் பவன்... :)

 1. VELU.G Says:

  ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

  என்றாய் super

 1. நல்ல பாடல்.
  கீழே உள்ள வரியையும் செர்த்துக்கொளவும்.

  தமிழை TAMIL என்றாய்

 1. பீட்டர் விடுரமோ பீலா விடுரமோ அது முக்கியமில்ல.. நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்க பண்ணனும்.

  இப்படி பப்பிளிக்கில் சொல்லி காட்டபடாது பவன்

 1. ”இது ஒரு கவிதையா, நெனச்சா நான் கூட இப்படி எழுதிவிடுவேன்” என்று முதல் பார்வையில் தோன்றினாலும், நான் “நெனைக்க”வில்லை, நெனைப்பதும் எளிதில்லை என்பதே உண்மை! கவிதை படித்துச் செல்ல செல்ல அலுப்புதட்டவில்லை, மாறாய் வேகமெடுக்கிறது, அதுவே தங்களின் வெற்றி என்று நினைக்கிறேன்...

  கொஞ்சம் பொறாமையுடன், நிறைய வாழ்த்துக்கள்...
  விஜய் :)

 1. கொன்றுவிட்டயடா..
  இன்னும் சிலதை நீ விட்டாய்..

  வலையை NET என்றாய்
  பதிவை bLOG POST என்றாய்
  பெயரிலியை ANONYMOUS என்றாய்
  பின்னூட்டங்களை COMMENTS என்றாய்.
  மொத்தத்தில் தமிழைக் கொன்றாய்..

  அதுசரி தம்பி நீர் தானே அடிக்கடி hai,bye,good morning,good evening, see you,good night சொல்லுவீர்?

  என் திடீர் செம்மொழிப் பாசம்? ;)

  அந்தப் பெண்ணின் பெயர் தமிழரசி? ;)
  நன்றி தகவலுக்கு :p

 1. // அதுசரி தம்பி நீர் தானே அடிக்கடி hai,bye,good morning,good evening, see you,good night சொல்லுவீர்? //

  அதுதான்.
  நாங்கள் தமிழில கதைச்சுக் கொண்டிருக்கேக்க இவர் வந்து பீற்றர் விடுறவர்.

  கூடக்கதைத்தால் ஆதாரங்கள் வெளியிடப்படும். :P

 1. அருமை!

  இதைவிட சொல்வதற்கு வேறென்ன வார்த்தையுண்டு?

  (நான் awesome என்று சொன்னால் - அது முரண்பட்டுவிடாதா ;-) )

  தமிழரிடம் டமிலில் பேசவேண்டாம், தமிழில் பேசுங்கள் - என்று சொல்லிவிட்டீர்கள் - வாழ்த்துக்கள்!

 1. இதுதான் ஃபன்னித் தமிழா?
  தமிழில் பெயர் வைப்ப்பதற்க்கும் தமிழில் கதைப்பதற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை உதாரணம் ரெட் ஜெஜின்ட் மூவி.
  உங்கள் Poem நல்லா இருந்தது

 1. "என்றாய்" என்று தப்பித்துக் கொள்ளாதீர்கள்.

  "என்கிறோம்" என்பது தான் உண்மை.

 1. Unknown Says:

  நச்..

  பாடசாலை, கல்யாணம் - இவை கூட தமிழ் வார்த்தைகள் அல்ல. :)

 1. சூப்பர் பவன் !!

  சாரி சாரி...

  நாங்க திருந்தமாட்டம் பாஸ்...

  ஆங்..மறுபடியுமா..

 1. பவன் பவன் பவன் என்ன இது....ஆமா என்ன இது விட்டா ஓவராய் போறிங்க. ஆனால் பாருங்கோ நீங்கள் ஓவருக்குள்ள சிக்ஸ் அடிச்சு உண்மையை சொல்லிட்டிங்க. சபாஷ். அப்புறம் லோஷன் அண்ணா தமிழரசி என்று பெயரை பப்ளிக்கில் போட்டு உடைத்ததுக்கு கண்டனங்கள். ஆனால் தகவலுக்கு நன்றி

 1. ராவில எங்கயாவது போதிமரத்து கீழ தூங்குவீரோ பவன்:))

 1. வட் எ நைஸ் பொயம் யா? வொன்டர்புல்

  என வாழ்த்தினால் ஏற்று கொள்வீரா பவன், கவலை வேண்டாம் இலங்கையில் செந்தமிழ் (செம்மொழி அல்ல) நன்றாகவே இருக்கிறது

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்