Related Posts with Thumbnails

நிலாக்காதல் - 2

பதிவிட்டவர் Bavan Saturday, August 21, 2010 14 பின்னூட்டங்கள்
வந்தியண்ணாவின் கதையைத் தொடர்ந்து அக்கதையை எழுத என்னை அழைத்திருந்தார். வந்தியண்ணாக்கு நன்றிகள்.
பகுதி –1 ஐப்படிக்க இங்கே சொடுக்குங்கள்
 
ஹரீசுக்கு மாவட்ட மட்ட கிறிக்கட் அணியில் இடம் கிடைத்தது. முதல் நாள் பயிற்சி. மைதானத்தில் வோர்ம் அப்புக்காக மற்ற அண்ணன்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு விசில் சத்தம்,
“கமோன் காய்ஸ்…”  தேவா மாஸ்டர்.

ஒரு குற்ற உணர்ச்சியுடனேயே அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். அவள் அந்த சம்பவத்துக்குப்பிறகு இவனுடன் பேசியதே இல்லை. ஒரு வேளை இவரிடம் சொல்லியிருப்பாளோ? இவர் ஏன் என்னிடம் ஒன்றுமே கேட்கவில்லை? மனதுக்குள் பல ஊகிப்பு முட்கள் குத்திக் குடைந்துகொண்டிருந்தன. புல்டொஸ் பந்துக்கே மூன்று முறை விக்கெட்டைப் பறிகொடுத்தான்.

பயிற்சி முடிந்தது. தேவா மாஸ்டர் “தம்பி ஹரீஸ்…
நான்கு காலடிகளை வைப்பதற்குள் நாற்பது ஊகிப்பு முட்கள் மீண்டும் குடையத் தொடங்கின. “சேர்?”
“நாளைக்கு காலம வரேக்க வீட்டை வந்து பந்தை எடுத்துக்கொண்டு போக முடியுமோ”
“ஓம் சேர்”

மறுநாள் காலை, பழக்கப்படாத முகத்தைக்கண்ட லைக்கா குரைத்துத்தள்ளிக்கொண்டிருந்தது. ஹேய்..ஸ்ஸ்சு.. “தம்பி ஒரு நிமிசம் நிக்கட்டாம் வாறாராம்” தேவா மாஸ்டரின் மனைவி.
“சரி அன்ரி”
அவள் உள்ளே சென்றாள், இப்போது லைக்கா குரைப்பதை நிறுத்தியிருந்தது. லைக்காவைப்பார்த்து முறைத்தான், வவ் வவ் என்று குரைத்தான்.. அப்படிப்பல பகீரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டான் அவள் வீட்டில் இருக்கிறாளா என்று அறிய. லைக்கா எஜமானுக்குக் கட்டுப்பட்டு வாலை ஆட்டிக்விட்டு வீட்டுக்குள் பாய்ந்து ஓடியது.

பீட்டர்சன் லேனால் திரும்பிய போது குறுக்கே பாய்ந்த நாயைக் காப்பாற்ற போட்ட சடுன் பிரேக்கில் நிகழ்காலத்துக்குத்திரும்பியவனின் பைக் என்ஜின் நின்று போயிருந்தது. இரண்டு உதையில் மீண்டும் பைக் மைதானத்துக்கு பறந்தது.
“மச்சான் நீ பட்டிங்”  என்றான் சந்தோஷ்.
சந்தோஷ் இவன்தான் பாடசாலைக்காலத்தில் இவனது எதிரணியில் விளையாடியவன். நல்ல பெளலர், பல்கலைக்கழக அணியில் ஒரே அணியில் விளையாடியவர்கள். இன்னும் சொல்லப்போனால் லாவண்யாவின் எதிர் வீட்டுக்காரன். லாவண்யாவின் வகுப்பு நேரங்கள் தொடக்கம் அவள் வீட்டுக்கு வெளியே வரும் நேரம் உள்ளே போகும் நேரம் என அனைத்தையும் அறிந்து சொல்லும் ஸ்பை இவன்தான். இப்போது தேவா மாஸ்டரின் மகள் யாழில் மெடிசின் முடிச்சு ஏதோ வெளிநாட்டுக்கு ட்ரெயினிங் போயிருக்கிறாளாம் என்று சந்தோஷின் அம்மா சொன்னதாக சந்தோஷ் அவனிடம் சொல்லியிருந்தான்.

கருமுகில்கள் சூழ்ந்து மைதானத்தில் மழையாக குதித்து விளையாட ஆரம்பித்திருந்தன. மைதானத்தில் கிடந்த அனைவரின் செல்பேசிகளை எடுத்துக்கொண்டு ஹரீஸ் பவிலியனுக்கு ஓடினான்.
“அடடா மழைடா அடை மழைடா..” ஹரீசின் கையிலிருந்த சந்தோஷின் அலைபேசி அடிக்கத் தொடங்கியது…
தொலைபேசி ஸ்கிரீனில்…
Lavanya calling..
+44 020 7xxx xxxx


சுபாங்கன் அண்ணாவின் நிலாக்காதல் பகுதி-3
கன்கொனின் நிலாக்காதல் பகுதி- 4
ஆதிரை அண்ணாவின் நிலாக்காதல் பகுதி-5 
லோஷன் அண்ணாவின் நிலாக்காதல் பகுதி-6 

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. ம்ம் நல்லாயிருக்கு, கொஞ்சம் குறைவாக எழுதிவிட்டீர்களோ?

  இனி என்ன நடக்க போகிறது என்பது சுபாங்கனிடம்தான் இருக்கிறது

 1. Subankan Says:

  கொஞ்சமே இருந்தாலும் நல்லா இருக்கு. அடுத்தது நானா? ஆகா

 1. குறைவாக இருந்தாலும் நல்லா இருக்கு பாவம் கடைசியா முடிக்கபோறவர் எப்படி எல்லாம் கஸ்டப்போகின்றாரோ..
  ஆமாம் லாவண்யா லண்டனிலா இருக்கின்றார்?

 1. // நாளைக்கு காலம வரேக்க வீட்டை வந்து பந்தை எடுத்துக்கொண்டு போக முடியுமோ //

  என்ன பந்து தம்பி?
  ஹா ஹா ஹா....
  இப்பவும் சதீஷ் அண்ணா வீட்ட குடுக்கிற டண்லப் ரின் நினைவிலேயே இருக்கிறீர் என?
  ஹா ஹா ஹா.... :D


  நல்ல திருப்பங்களுடன் வருகிறது பவன்....
  சுபா அண்ணாவின் பதிவுக்காய்க் காத்திருக்கிறேன்...

  // Lavanya calling..
  020 7xxx xxxx

  என்னைத் தொடர்ந்து சுபாங்கன் அண்ணா கதையைத் தொடருவார். //

  இத விட சுபா அண்ணாவுக்கு நல்ல தொடக்கம் அமையாது.
  கலக்குவார் என்று நம்புவோம்.

 1. புளொக்கர் ஒழிக....

  நான் அனுப்பிய பின்னூட்டத்தை அனுப்பாமல் error காட்டியிருக்கிறது, நான் இப்போது தான் கவனித்தேன்.

  நல்ல காலத்துக்கு பிரதிசெய்து வைத்திருந்தேன்... :(

 1. Jana Says:

  சின்னதாக ஆனால் மிக ரசனையாக எழுதியுள்ளீர்கள் பவன். திடீர் என்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஒரு ஜம்ப் ..ஓகே அடுத்தது சுபாங்கனா? லாவண்யாவைத்தேடி கணேஸ் வஸந்த் போகப்போகின்றார்ளோ என்னவோ???

 1. ஆகாகா.. சிறிதா சுவாரஸ்யமா முடிச்சிருக்கிறீர்கள்
  அம்மா தாயே லாவண்யா.. யாருக்கெல்லாம் எப்பிடியெல்லாம் போக்குக் காட்டுறாய்?

  ஹரிஸ் தான் பாவம்.. யாராவது அவனுக்கு ஆறுதல் சொல்லுங்கப்பா.. இல்லாவிட்டால் கூகிள் ச்டேட்டசில் ஏதாவது சோகக் காதல் வரிகளை எழுதி கொட்டக் கொட்ட அண்ணாந்து நிலா பார்க்கப் போறான்..

  சுபாங்கன் நல்ல படியா தொடரப்பா..

 1. அருமை!!!

 1. கதை சிறிசு என்றாலும், காரம் பெரிசு!!

  ஆனாலும், கூரே பார்க்குக்கு விளையாட வ் ஆறும பீற்றசன் வீதி பயண படுத்த பட்டிருப்பது கவனிக்கக் வேண்டியதே!!!

  இது பதிவர் எவரதும் உண்மை சம்ம்பவமோ???

 1. Bavan Says:

  யோ அண்ணா,

  பார்க்கலாம் நிலாக்காதல் பிறையா முழுநிலவா என்று, நானுமு் வெயிட்டிங்..;)
  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  சுபா அண்ணா,

  ஆமாங்கோ.. வெயிட்டிங்..;)

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  வந்தியண்ணா,

  ஹிஹி.. நல்ல காலம் நான் இரண்டாவது..;)

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  கன்கொன்,

  பார்க்கலாம், நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  ஜனா அண்ணா,

  கணேஷ் வசந்த் வந்தாலும் வரலாம்..ஹிஹி

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..)

  ***

  லோஷன் அண்ணா,

  ஹாஹா.. எனி உள்க்குத்து?..:P

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  ஆதிரை அண்ணா,

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  அனு,

  அடிங்.. காதல் கதை என்றால் உண்மையாத்தான் இருக்கணுமோ..

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

 1. நல்லாருக்கு பவன்:)

 1. //பீட்டர்சன் லேனால் திரும்பிய போது குறுக்கே பாய்ந்த நாயைக் காப்பாற்ற போட்ட சடுன் பிரேக்கில் நிகழ்காலத்துக்குத்திரும்பியவனின் பைக் என்ஜின் நின்று போயிருந்தது. இரண்டு உதையில் மீண்டும் பைக் மைதானத்துக்கு பறந்தது.//

  இந்தக் கற்பனை அழகு

 1. Bavan Says:

  வானம்பாடிகள் சார்,

  நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  தர்ஷன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

 1. சின்னதா இருந்தாலும் அடுத்தவர் எப்படிக் கொண்டு போவாரோ என்று அங்கலாய்க்கும்படி முடிக்காமல் விட்டிருக்கு.. நல்லாயிருக்கு

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்