Related Posts with Thumbnails

அனைவருக்கும் வணக்கம்,

இது உண்மையில் நேற்று பதிவேற்ற வேண்டும் என்று திட்டமிடப்பட்ட பதிவு, ஆனால் அவசர ஆணிகள் காரணமாக இன்று பதிவிடும்படி ஆகிவிட்டது. நேற்று செப்டெம்பர் 26ம் திகதி 2010 உடன் எரியாத சுவடிகள் தனது 1வது வயதைப் பூர்த்தி செய்துள்ளது. அது மட்டுமன்றி இது இந்த வருடத்தின் 100வது பதிவாகும்..:P

bday

இதுவரை காலமும் எனது பதிவுகளை வாசித்து ஊக்கமளி்த்த, கொலைவெறியைத்தாங்கிக்கொண்ட, மொக்கையை சகித்துக்கொண்ட, சில நேரங்களில் விவாதங்களிலும் ஈடுபட்ட, தவறுகளைச்சுட்டிக்காட்டிய, பலவேளைகளில் பல உதவிகள் புரிந்த, அனைத்து நண்பர்கள், சக பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இதுவரை காலமும் எனது பதிவுகள் யாருடைய மனம் நோகும்படி இருந்திருந்தால் என்னைத் தயவுகூர்ந்து மன்னிக்கும்படியும் சிரம்தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன்.

 

இந்த ஒரு வருடத்தில் பல புதிக நண்பர்கள், பல சந்தோஷங்கள், சண்டைகள், சலசலப்புகள், மற்றும் பல விடயங்களை மாறிமாறிக் காண்பித்துள்ளது. அது மட்டுமன்றி ஆரம்ப காலத்தில் ஆனந்த விகடன், குமுதம் போன்ற புத்தகங்களிலிருந்தும் வெளிவரும் ஜோக்குகளை, மொக்கைகளை படித்து உக்காந்து யோசிப்பாய்ங்களோ என்று யோசித்ததுண்டு. நமக்கும் அப்படியெல்லாம் முடியாது என்றும் மனச்சாட்சி அங்கலாய்த்ததுண்டு. ஆனால் இன்று பாரபட்சமின்றி எனக்கும் மொக்கை வரும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறது.

 

மீண்டும் மீண்டும் எனக்கு ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமதார்ந்த நன்றிகள்.

 

அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தி – எரியாத சுவடிகளின் 1வது பிறந்த தினத்தின் ட்ரீட் வேண்டியவர்கள் பக்கத்தில் உள்ள ஹோட்டலில் எனது பெயரைச் சொல்லிச் சாப்பிடலாம்..:P

 

பி.கு - ஸ்ஸப்பா.. ரொம்ப கஷ்டப்பட்டு எழுதிய பதிவு இது..:P

1 2 3 4 5 6 7

9  8

எந்திரன் இந்தப்படத்திற்கு விளம்பரம், விழாக்கள், ஏன் ட்ரெயிலருக்குக்கூட டிக்கெட் என்று எதிர்பார்ப்புகளை அள்ளிக்குவித்திருக்கிறது. ஆனால் எந்திரன் கற்பனை விழா அட்டவணையும் அந்த விழாவில் என்ன பஞ்ச் டயலாக் போடுவார்கள் என்றும் சின்ன கற்பனை வருமாறு..:P

Endhiran-Movie-Latest-Unseen-Photo-Gallery-Stills-01

எந்திரன் படபூஜை AND படபூஜை உருவான விதம்- ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்

எந்திரன் போஸ்டர் வெளியீடு AND போஸ்டர் உருவான விதம்- போஸ்டருங்கதான்டா கூட்டமா வரும் படம் சிங்கிளாத்தான் வரும்

எந்திரன் போஸ்டர் ஒட்டும் தினம் - கஷ்டப்படாம எதுவுமே ஒட்டாது கஷ்டப்படாமக் ஒட்டுப்படுறது என்னைக்குமே நிலைக்காது

எந்திரன் இசை வெளியீடு AND இசை வெளியீடு உருவான விதம் - நான் ஒரு தடவை பாடினா நூறு தடவை பாடின மாதிரி

எந்திரன் ட்ரெயிலர் டிக்கெட் வெளியீடு AND ட்ரெயிலர் டிக்கெட் உருவான விதம்– அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி அசராம அடிக்கிறது என் பாலிசி(டிக்கெட்)

endhiran-music-review

ட்ரெயிலர் வெளியீடு AND ட்ரெயிலர் உருவான விதம்- கண்ணா இது ச்சும்மா ட்ரெயிலர்தாம்மா மெயின் பிச்ச நீ இன்னும் பாக்கல

எந்திரன் கட்டவுட் வெளியீடு AND கட்டவுட் உருவான விதம்–  கட்டவுட் பாத்தாலே சும்மா அதிருதில்ல…

எந்திரன் கட்டவுட் திறப்புவிழா - நான் ஒரு கட்டவுட் தொறந்தா 100 கட்டவுட் திறந்த மாதிரி

எந்திரன் திரைப்படம் வெளியிடும் திகதி அறிவிப்பு விழா – ஒக்டோபர் ஒண்ணாந்தேதி படம் வராமப் போச்சு இந்தப்படையப்பன் மூச்சு நின்னு போச்சு.

எந்திரன் திரைப்படம் வெளியீடு AND திரைப்படம் உருவான விதம்- நான் எப்ப வருவேன் எப்டி வருவேன்னு யாருக்குமே தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்தில கரக்டா வருவேன்

press-bg11

இந்த எல்லா நிகழ்ச்சிகளும் மறு ஒளிபரப்பு – கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு..:P

கூல்போய் கிருத்திகன் அண்ணா ஆரம்பித்து வைத்த குறும்படவைபோகமே ஏற்படுத்திய தாக்கத்தால்(அல்லது மொக்கையால்) இந்தப்பதிவு.

குறும்பட வைபோகமே-1

***

run-finalist-rialto-channe

Yamaha SZ பைக் ஒன்று சீறிப்பாய்ந்து வந்து பதிவர்கள் அனைவரும் கூடியிருந்த இடத்துக்கு பத்தடி தள்ளி நின்றது. தனது தொலைபேசியில் பில்லா தீம் மியூசிக்கைப் போட்டபடி கையில் கமரா பாக்குடன் ஒரு கறுப்பு ஆடையணிந்த உருவம் பைக்குக்கு பின்னாலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கியது. திடீரென..

 

“குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்….” பில்லா மியூசிக் நின்று அவரின் அலைபேசி அடிக்கத் தொடங்கியது, “கட் கட் கட்…. அடேய் சுபாங்கன் போஃனை ஓஃப் பண்ணிவைக்கச்சொன்னா ஏன்டா இப்பிடிப்பண்ணுறீங்க.. ஜனா அண்ணாவின் குரல் பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

 

உங்களுக்கு இந்த சீன் பத்தாதுடா.. வேற.. வேற… சதீஸ் அண்ணா பக்கத்திலிருந்த மரத்தில் ஏறி வீஜய் ஸ்டைலில் ஏஏஏஏஏய்ய்ய்ய்… என்று குதித்துக்கொண்டிருந்தார்..:P

 

சரி இப்பிடிச் செய்யலாம் ஆளுக்கு ஒரு சீன் சொல்லுங்க எல்லாத்தையும் சேர்த்து ஒரு படமாக்கலாம். முதல்ல கன்கொன் நீ சொல்லப்பா.. –ஜனா அண்ணா

 

ஹிஹிஹிஹி… 5 நிமிட சிரிப்புக்குப்பிறகு ஹீரோ வந்து ஒரு கிறிக்கட் வீரன் பின்தங்கிய கிராமத்தில இருந்து வசதி குறைந்த குடும்பத்தில பிறந்து நசனல் டீம் செல்க்ட் ஆகிறான். ஆனா கொழும்பில வந்து தங்கியிருக்க இடமில்ல, அப்ப…

 

லோஷன் அண்ணா – டேய் டேய் நிப்பாட்டு இது சனத்ஜயசூர்யவின்ட கதை மாதிரிக்கிடக்கு.. சரி இனி நான் சொல்லுறன். அவனுக்கு இரவு தங்க இடமில்ல அவன் வீதியால் நடந்து போய்க்கொண்டே இருக்கிறான். இதையே ஒரு 5 நிமிசம் காட்டலாம்தானே..

 

சரி அடுத்தது புல்லட் சொல்லுங்கோ என்றார் ஜனா அண்ணா,

வெல்.. அவன் போகிறான் போற வழியில ஒரு போஸ்டரைப்பாக்கிறான் அப்பிடியே வாயப்பிளந்து பாத்துக்கொண்டு நிக்கிறான்.. எதிரிலிருக்கிற போஸ்டரில ககூனமடாட்டா எண்டு எழுதிக்கிடக்கு, உடனே பிளாஸ்பக்கிக்கு போறான் அதில இவனுக்கு 7 வயசு, அருள்பிரகாசத்திண்ட அஞ்சு வயசு மகள் அஞ்சலிய மடக்க அவை வீட்டுக்கு லயன்கிங் பாக்கப்போன ஞாபகங்கள் தாலாட்டுது.

 

ஓகே இன்டர்ஸ்டிங், நெக்ஸ்ட் அனுதினன்,

ஆங்.. அப்பிடியே இன்னும் ரெண்டு வருசம் பின்னால போறான், அப்ப அஞ்சலிக்கு 3 வயசு இவனுக்கு 5 வயசு ரெயினில கண்டிக்கு போறான் ரெண்டு பேரின்ட அம்மா அப்பா எல்லாரும் நித்திரை கொண்டுட்டாங்கள், அப்ப ஒரு பாட்டு பக்கிரவுண்டில போகுது.. ம்ம்.. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையப் போடலாம்..

 

அடேய் ஐயா சாமி ஆள விடுபோதும் அடுத்து…. ஆதிரை அண்ணா கையை உயர்த்தி நான் நான் எண்டார், சரி சொல்லுங்கோ அண்ணே..

அவன் போஸ்டரைப்பாத்து ஆ எண்டு வாயப்பிளந்து கொண்டிருக்க பக்கத்துக்குக்கானுக்குள் பாய்த்தோடிய எலி சிறு கிலியை ஏற்படுத்தி மறைந்தது. தற்போது மீ்ண்டும் நடக்கத் தொடங்கிறான் கோல்ரோட்டால் போகிறான் போகிறான் போய்க்கொண்டே இருக்கிறான்.

 

அட.. போய்க்கொண்டே இருந்தா கதையில ஒரு டேர்னிங் பொயின்டே இல்லையே.. என பவன் சொல்ல..

இப்ப உனக்கென்ன டேர்னிங் பொயின்ட்தானே வேணும் போற வழியில பிளீஸ் டேக் டைவர்சன் எண்டு ஒரு போர்ட் வச்சிடுவோம் எப்பிடி – கிருத்திகன்

 

ம.தி.சுதா – அப்ப அண்ணே இவன் போர்ட்டைப்பார்த்து திரும்பிப் போக முயல அடித்த காற்றில் ஒரு பேப்பர் கையில் வந்து மாட்டுப்படுகிறது. அதில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் இலட்சினையுடன் கூடிய ஒரு ரிப்போட், சூதாட்டம் விளையாடிய கிறிக்கட் விரர்களின் பட்டியல் காணப்படுகிறது. உடனே கிறிக்கட் விளையாடுறதை விட இதை வச்சு காசு சம்பாதிக்கலாம் சம்பாதிச்சு அஞ்சலியையும் கைப்பிடிக்கலாம் என்று கனவுக்கோட்டையைக் கட்டுறான். அப்ப இந்தக் கவிதையப்போடிறம்.

 

நீயும் நானும்

தண்டவாளம் போல் தான்

அன்று சந்தித்துக்கொண்டோம்

விபத்து என்று சொன்னார்கள்

எமக்கா எம் எதிர்காலத்துக்கா

தெரியவில்லை

 

சதீஸ் அண்ணா - உடனே அவன் தன்ட மொபைல எடுத்து பேஸ்புக்கில ஸ்டட்டஸ் போடுறான், “I’m going to be rich soon, அமேரிக்கா சிட்டிசனாகப்போறேன், நியூயோர்க்கில் வீடு கட்டப்போறேன்” இதையும் சேர்த்துக்கொள்ளுங்க அண்ணே…

 

பவன் - பிறகு அணியில் இடம்கிடைத்து விளையாடி வருகிறான், பெரிதாகப் பிரகாசிக்காவிட்டாலும் அவனை அணியிலிருந்து தூக்க முடியாமல் மூத்தவீரர்களை புலனாய்வு அறிக்கையைக் குடுத்து செட்டாக்கி வைத்திருந்தான். போட்டியில் நோபோல் போட்டு அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸ் இவனுக்கு வலைவிரித்து அறிக்கை சமர்ப்பிக்கிறது. அதில் முக்கிய ஆதாரம் பேஸ்புக்கில் இவன் போட்ட இந்த ஸ்டேட்டஸ்…

ஓவருக்கு பணம் தருகிறது SLC உதிரிகளுக்கு பணக்கொடுக்கிறாய் நீ

 P

 

வந்தியண்ணா – பிறகென்ன தான் ஊரிலிருந்து வரும் போது கொண்டு வந்த அன்புக்காதலி ஆசையாய் பரிசளித்த சிரட்டையில் செய்த வயலினில் எங்கே செல்லும் இந்தப்பாதை யாரோ யாரோ அறிவாரோ… என்று வாசித்துக்கொண்டு மீண்டும் நடையைக்கட்டினான் ஊருக்கு.

 

ஜனா அண்ணா - வாவ் கலக்கல் கதை பிரன்ட்ஸ்.. கடைசியில் நான் சொல்லிறதையும் போடோணும் அது ரைரக்டர் டச்சு ஓகே..

 

பந்தும் போடாது விக்கட்னினுள்ளும் படாது
நல் ஆன் தீம் பால்(BALL) வைட்கோட் உக்கா

செல்வதுவோ

என்ற இலக்கியப்பாடலுக்கு மதுயிசவிளக்கத்துடன் கதை முடிவடைகிறது.

 

அப்பாடா ஒரு மாதிரிக் கதையெழுதியாச்சு தயாரிப்பாளர் யாரு? என்றமாதிரி அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க கையில் கூலிங் கிளாசை சுத்தியபடி வந்து சேர்ந்தார் வதீஸ் அண்ணா…:P

 

பி.கு – முற்றிலும் மொக்கை, நகைச்சுவையாக மட்டுமே கருதுங்கள்…:D

சிலரை இணைக்க (கும்ம) முடியவில்லை என்பதால் அடுத்த குறும்படத்தில் அவர்களுக்கு ஸ்பெசஸ் பாத்திரம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்..:P

41484_688536366_939_n

தூக்கம் தொலைந்த பின்

தேடப்படும் கனவுகள் போல

வார்த்தை தொலைத்த பின்னர்

வருகின்றன கவிதைகள்

***

கடைசிவரை துரத்தினேன்

போன இடமெல்லாம் பின்தொடர்ந்தேன்

அகப்படவேயில்லை

புட்போல்

***

அவள் கூறியது பொய்யென்று தெரிந்தும்

கேட்டுக்கொண்டிருந்தேன்

இப்போது உங்களைப்போல

***

கவிதைக்குப் பொய்யழகு

என்றாய் - நீ

உன் பேச்சே கவிதை

என்றேன் நான்

***

நீ நகம் கடிக்கும்

அழகிலேயே புரியவைத்தாய்

உன் வீட்டில்

நெயில்கட்டர் இல்லை என்று

***

vetti

காலையில் 9, 10 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும்ப வேண்டியது. கணிணியின் திரை பேஸ்புக், ருவிட்டர், ஜிமெயிலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது. இடையில் டாய்லெட்டுக்கு மட்டும் அடித்துப்புரண்டு ஓடவேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு. அதுமட்டுமன்றி இடையிடையே 5-10 நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு. கூடவே  மாலையில் உறங்க 2மணிநேரம். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. கணனி பிழைத்துவிட்டால் மட்டும் ஆறாவது அறிவுக்கு வேலை. கேட்டால் வெட்டி ஒபீசர் என்று பீத்திக்கொள்வது.

 

இப்படியெல்லாம் திட்டு வாங்கியிருக்கீங்களா? கவலை வேண்டாம். வெட்டியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

 

காலை 9, 10 மணிக்கு எழுந்து காபி கூட குடிக்காம கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து கலைஞர் என்ன சொன்னாரு, கமல் என்ன சொன்னாரு, டாக்டர்(விஜய்..:P) என்ன சொன்னாரு, டாட்டா ஓனர் என்ன சொன்னாரு, ஏன் பில்கேட்ஸ் என்ன சொன்னாரு வரைக்கும் அத்தனையையும் பிங்கர் டிப்ஸ்ல வச்சுக்கிட்டு, அப்பிடியே கிறிக்கட் பக்கம் போய் யாருக்காவது மொக்கை போடலாமானடனு பாத்து சூதாட்டத்தில மாட்டிக்கிட்வனை தூக்கு மாட்டிக்கிற அளவுக்கு கமண்ட் அடிச்சு எல்லாரையும் சிரிக்க வச்சு, கஷ்டப்பட்டு யோசிச்சு மூளைய முழுசாப் பாவிச்சு மொக்கையா பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டச போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு பாத்தா எவனாச்சும் வந்து கமண்ட் அடிப்பான். உடனே அவன் மனசு நோகக்கூடாதுன்னு அவனுக்கும் ரிப்ளை பண்ணிட்டு ஆஃப்லைன்ன ஒன்லைன் போனா பத்து வருசத்துக்கு முன்னாடி படிச்ச பால்பாண்டி படக்குன்னு வந்து ஹாய் சொல்லுவான். சரி அவனையும் போர்மாலிட்டிக்கு விசாரிச்சு பழைய கதையெல்லாம் பேசி முடிச்சுப்பார்த்தா மணி 1.30 ஆகிரும்.

 

எல்லாத்தையும் அப்பிடியே போட்டு 5 நிமிசம் செலவழிச்சு அரைகுறையா சாப்பிட்டு அடிச்சுப்புடிச்சு ஓடோடி வந்தா பால்பாண்டி பாசாகிப் போயிருப்பான். சரி என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது எவனாச்சும் வந்து

 

“பன்றிக்கு நன்றிசொல்லி குன்றின்மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை அது என்ன?..:P”

 

அப்பிடின்னு ஒரு கேள்வியக்கேக்க கூகிள்ல தேடுதேடுன்னு தேடி விடையே கிடைக்காம இருக்கும் போது மறுபடியும் நம்ம அறிவைப் பாவிச்சு(நம்புங்கப்பா) கேள்விக்கு விடையக் கண்டுபிடிச்சுக்கொடுத்தா, THANKSன்னு சொல்லிட்டு ஒரு ஸ்மைலி போடுவான் பாருங்க அதுதாங்க சந்தோஷம்.:P

 

இம்புட்டு வேலையையும் முடிச்சுட்டு பார்த்தா நேரம் 5 மணி ஆத்தாடி 5 மணியாகிரிச்சேன்னு ஒரு TEAயக்குடிச்சிட்டு மல்லாக்கபடுத்தா வரும் பாருங்க ஒரு தூக்கம். அதுக்கப்புறம் 9 மணிக்கு ஒன்லைன் வந்து 2, 3 மணிவரைக்கும் அதே வேலைய செய்திட்டு ஒண்ணுமெ செய்யாத வெட்டிப்பயன்னு தன்னைத்தானே சொல்லிக்கிறான் பாருங்க, அந்தப்பெருந்தன்மை யாருக்கு வரும்.

 

நோ.. நோ.. என்னைப்பார்த்து நீங்க இந்தப்பாட்ட பாடுறது புரியுது.. பட் இதுக்கெல்லாம் அழக்கூடாது..:P

எயார்டெல்லில் 1000 மசேஸ் freeயா குடுத்தாலும் குடுத்தாங்க இந்த மசேஸ் தொல்லை தாங்க முடியல அப்பிடின்னு போன் பண்ணி எனக்குத்திட்டாதவங்களே இல்ல..:P அதான் எனக்கு வந்த மசேஜ்களில் சிறந்தவற்றை மட்டும் (inboxல 500+ மசேஜ் இருக்குன்னா நம்பவா போறீங்க..:P) தெரிவு செய்து இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

sms2

அப்பா – டேய் நேத்து நைட் புல்லா படிச்சேன்னு சொன்னியே BUT உன் ரூம்ல லைட்டே எரியலயே?

மகன் – SORRYபா, படிக்கிற INTERESTல அதைக் கவனிக்கல..:P

 

***

காதலன் – நம்ம காதல மெதுவா வீட்டி சொல்லிட்டேன்

காதலி – அப்பிடியா!.. வீட்ல என்ன சொன்னாங்க?

காதலன் – மெதுவா சொன்னதால யாருக்குமே கேக்கல..:P

 

***

 

கண்கள் பேசினால் காதல்,

கண்ணீர் பேசினால் நட்பு,

பணம் பேசினால் சொந்தம்,

எல்லாரும் பேசினால் உலகம்,

நீ மட்டும் பேசினால்

.

.

LOOSU..:P

 

***

 

JOB OFFER IN AIRTEL

SALARY – 67500

QUA – O/L PASS

PLACE – Colombo

JOB – AIRTEL டவர் மேல ஏறி நின்னுகிட்டு DIALOG சிக்னல் வந்தா குச்சியால விரட்டி விடணும்..:P

Are you ready???

 

***

 

என்ன ஒரு கொசு கடிச்சிடிச்சு..

நானும் அதைப்புடிச்சிட்டேன்..

ஆனா மனசு கேக்கல அதை பொழைச்சுப் போன்னு போக விட்டுட்டேன்

ஏன்னா..

அது என்னோட ரத்தமில்லயா?…:P

 

***

 

உங்களிடம் எனக்குப்பிடிச்ச விடயம் என்ன தெரியுமா?

.

.

உங்க அன்பு

பாசம்

அழகு

நடை

உடை

ஸ்டைல்

.

.

.

இதெல்லாம் இல்லைங்க

நான் இவ்வளவு ரீல் விட்டும்தொடர்ந்து படிச்சு ஒரு சிரிப்பு சிரிக்கிறீங்க பாத்தீங்களா?

அட.. அட.. அட.. அந்த சிரிப்புத்தாங்க..:P

 

***

 

டைரக்டர் சங்கருக்கும்,  நமக்கும் என்ன வித்தியாசம்?

அவர் 99 கோடி செலவழிச்சு 1 மசேஜ் சொல்லுவாரு,

நாங்க 99ருபா செலவழிச்சு 1000 மசேஜ் சொல்லுவம்..:P

 

***

 

EXAM HALL

Boy – All the best

Girl – All the best

 

Result

Boy FAIL, Girl PASS

 

நிதி – நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்.

 

***

 

நீங்க தூங்கும் போது என்ன வேணும்னாலும் நடக்கலாம்.

FAN கழண்டு தலைல விழலாம்,

உங்க பெட் சீட்ல பாம்பு படுத்திருக்கலாம்,

தலகாணில தேள் இருக்கலாம்,

ஜன்னல் வழியா திருடன் வரலாம்,

SO

நிம்மதியா தூங்குங்க

GOOD NIGHT..:P

 

***

சிங்கத்தில் அழகு.....ஆண் சிங்கம்

யானைஇல் அழகு..... ஆண் யானை

மயிலில் அழகு..... ஆண் மயில்

மனித இனத்தில் மட்டும் ஏன் பெண்கள் அழகு?

ஆண்கள் வர்ணிப்பதால்..:P

 

பி.கு - SMS அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றிகள்..:D

ஐயோ படிக்கலயே..

பதிவிட்டவர் Bavan | நேரம் 1:19 PM | 15 பின்னூட்டங்கள்

wake-up-its-exam-time

பரீட்சை

எனக்கு

லீவு நாட்களைத்தான்

அதிகம் பிடித்திருக்கிறது

அந்த நாட்களில்தான்

உன் தொல்லையிலிருந்து

ஓய்வெடுக்கலாம்

 

கேள்வி

நீ எந்தப் பேப்பரிலும்

கஷ்டமாகத்தான் இருக்கிறாய்

தவணையில் வரும் போது

இன்டெக்ஸ் நம்பருடன்

கூடிய கஷ்டமாகிறாய்

 

பிட்டு

எனக்கு மட்டும் என்று நினைத்து

இதுவரை எழுதிவந்தேன்

நீ கேட்டதும் கேட்காமலேயே

ஓடுகிறதே பிட்டு பேப்பர்

 

பரீட்சை நேரசூசி

சொல்லிவிட்டுத்தான்

நீ வருகிறாய் என்றாலும்

நீ வந்த பிறகே

நினைக்கிறது அந்த மனது

ஐயோ படிக்கலயே

 

புத்தகம்

படிப்பதைவிட

என்னுடம் உறங்கவே

நேரம் சரியாக இருக்கிறது

என் புத்தகத்துக்கு

 

விடைத்தாள்

உன்னில் கிறுக்குபவருக்கெல்லாம்

வாரி வழங்குகிறாய்

உன்னை ஒன்றுமே செய்யாத

எனக்கு அப்பாவின்

அடியை மட்டும் பரிசளிக்கிறாயே!

 

பி.கு –ஆங்.. யாருய்யா அது கத்தி எடுக்கிறது #எஸ்கேப்

இரசித்தவை & போ.க

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:39 PM | 8 பின்னூட்டங்கள்
கவிதை
சில நேரங்களில் அவள்
உள்ளங்கையில்உயிர் வாழ்கிறாய்.
சில நேரம் அவள் கன்னத்தை வருடுகிறாய்.
அப்புறம்அவள் உதட்டையே ஒத்திப் பார்க்கிறாய்.
கடைசியில்அவள்
இடையில் ஊஞ்சலாடிஓய்வெடுக்கிறாய்
கைகுட்டையே...
நீ குட்டியூண்டு துணி என்றாலும்
கொடுத்து வைத்த துணி.
-தபு சங்கர்

***

GOOGLE BUZZசில் கண்ட ஒரு கதை(:P)
நீதிக்கதை:
நேற்று மாலை
நான் ரோட்டில்
நடந்து கொண்டிருந்த நேரம்.
சாலையில் யாரும்
இல்லை.
திடீரென மழை
சோ என்று பெய்ய ஆரம்பித்தது.
அப்போது,
ஒரு இளம்பெண்
என்னருகில் வந்து சொன்னாள்.
"வா...
என் குடைக்குள் வா
என்னுடன்...!".
நான் மிகுந்த கனிவுடன்
அவளைப் பார்த்துச் சொன்னேன்.
"பரவாயில்லை சகோதரி...
நான் நனைந்து கொண்டே செல்கிறேன்...!".

நீதி:  'நீதியெல்லாம் ஒண்ணுமில்லை... அது ஒரு சப்ப ஃபிகரு...!

***

வீடியோ
http://www.youtube.com/tippexperience
இந்த வீடியோவில் குறிப்பிடப்படுவது போல செய்து பாருங்கள்.
அதில் அழிக்கப்பட்ட இடத்தில் எமக்கு விரும்பிய வார்த்தையை டைப் செய்ய அதே செயலைச்செய்யும் வீடியோ ஒளிபரப்பாகும். செய்துதான் பாருங்களேன்.

***
போட்டோ மண்ட்டு
4 1 இந்தப்படத்துக்கு உங்க எது சரியா வருது, OPTIONகளிலிருந்து தெரிவு செய்யுங்க பார்க்கலாம்?
2
0

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்