Related Posts with Thumbnails

சூரியன் மறைந்து சில நிமிடங்கள் தாண்டியிருந்தது. அமாவாசை தினம் வானில் நட்சத்திரங்கள் மட்டும் இராஜாங்கம் செய்து கொண்டிருந்தது. கிறிக்கட் விளையாடிவிட்டு களைப்புடன் வீட்டுக்கு வந்த கன்கொனை தனது மெல்லிசையால் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் சத்தமாகக் குளிர்விக்கத் தொடங்கினர். கதவை பூட்டிவிட்டு வரவேண்டும் என்று நினைத்தவர் கடைசியின் இளையராஜாவின் இசைமயக்கத்துக்கு அடிமையாகி அதை மறந்தே போனார்.

kick

அதே நேரம் பப்பரப்பா எனத் திறந்திருந்த இவரது வீட்டுக்குள் ஒரு 3அடி கூட வளராத குள்ள உருவம் நுழைந்துகொண்டிருந்தது. முதலில் வீட்டு சோபாவில் இடது பக்க ஓரத்தால் ஏறி மற்றப்பக்கமாகக் குதித்து இறங்கியது. அப்படியே கன்கொனின் கணனிஅறையைத் தாண்டிச்சென்றது. மீண்டும் ஹாலுக்கு வந்தது. இப்போது எதையோ பார்த்து பிறீசாகி நின்றது. வீட்டு ஹாலில் வைக்கப்பட்டிருந்த மேசை மீது வைக்கப்பட்டிருந்த டென்னில் பந்துகள் அடங்கிய டின் கண்முன்னே தெரிய கன்கொனின் கணனியில் பாடிக்கொண்டிருந்த “தெய்வமே.. தெய்வம…” என்ற பாட்டின் “கண்டுகொண்டேன் அன்னையை… கண்டுகொண்டேன் அன்னையை” என்ற வரியும் ஒலிக்க சரியாக இருந்தது..:P

 

மேசைமீது தட்டுத்தடுமாறி ஏறிய உருவம், பந்துடின்னைப்பற்றி அதை ஏறி நின்ற நிலையிலேயே திறக்கமுயல நிலைதடுமாறி கிழே விழ தொபுக்கடீர் என்ற சத்தமும் கேட்க கன்கொன் ஓடி வந்து பார்க்க ஒரு பச்சிளம் பாலகன் பந்தைப் பற்றியபடி சோபாவுக்குள் தலைகுப்புறக் கிடந்துகொண்டிருந்தான். கன்கொனின் பாட்டும் நிறைவடைந்து அடித்த பாட்டு ஒலிக்க ஆரம்பிக்கும் அந்த காப்பில் இவ்வளவும் நடந்துமுடிந்திருந்தது.

 

“தம்பி, நீ யார்? எங்கயிருந்து வாறாய்? என்று கன்கொன் கேவிக்கணைகளை அடுக்கத் தொடங்கினார்.

“அங்கிள்,(கன்கொனின் கண்கள் விஜகாந்தின் கண்போல சிவத்து, விஜயின் கண்போல கைகள் முறுக்கேளிக்கொண்டிருந்தது..) நான் மந்தி என்றான் சிறுவன்.

 

“ங்கொய்யால சரியாத்தாண்டா பெயர் வச்சிருக்கிறாங்க உனக்கு? சரி எங்க இருந்து வாற?

“அங்கிள் நான் நான் மேல் மாடியைக் காட்டினான், ஓ.. சிறீ அங்கிள் வீட்டுக்கு வந்த பொடியனா?

“ஆமாங்க, அவர் என் சித்தப்பா என்றவன் தாமதிக்காது விடயத்துக்கு வந்தான்,

“அண்ணே உங்களிட்ட 3 பந்து இருக்கு எனக்கு ஒரு பந்து தாங்களேன்? என்றான்.

“முடியாது, இது டீம் போல் தம்பி, பந்தைத்தா..-கன்கொன்

“பிளீஸ் அங்கிள் பிளீஸ்… பிளீஸ்.. என்று கெஞ்சிக் கெஞ்சி.. இப்பொது அழ ஆரம்பித்துவிட்டான்.

 

விஜய், விஜயகாந்த் ரேஞ்சில் கோபத்தின் உச்சியில் இருந்த கன்கொன் இப்பொது “அழகு குட்டிச்செல்லம்” பாட்டில் வரும் பிருத்விராஜின் அழவுக்கு மனமிரங்கி.

“சரி தாறன் பட் வன் கண்டிசன், நாளைக்கு காலம திருப்பித்தருவதாக உறுதிமொழி கொடு என்றார்.

“ஓகே.. அங்கிள் நாளைக்கு காலமயே தந்திடுவன் டோன்ட் வொர்றி.. என்று பந்துடன் எஸ்கேப் ஆனான்.

மறுநாள் மாலைவரை பொறுத்திருந்த கன்கொன் விளையாட நேரமானதால் சிறீ அங்கிள் வீட்டுக்குப் போய்

“ அங்கிள் மந்தி இல்லையா?

“இல்லைத்தம்பி அவங்க நேற்றே இங்கிலண்டுக்கு போய்ட்டாங்களே…

பாக்ரவுண்டில் சீறும் பாம்பை நம்பு… சிரிக்கும் பொடியனை நம்பாதே என்று பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது.

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. அடப்பாவியளா......!

 1. Subankan Says:

  நம்ம கன்கோன் பச்ச மண்ணுப்பா, சூது வாது தெரியாது. இதை வாசிக்கிறப்ப வடிவேலு சின்னப் பசங்ககிட்ட அடிவாக்கற சீன் எல்லாம் எனக்கு சம்பந்தா சம்பந்தமில்லாம ஞாபகம் வருது :P

 1. // நம்ம கன்கோன் பச்ச மண்ணுப்பா, சூது வாது தெரியாது. //

  இவ்வளவும் நல்லாத்தானே போய்க்கொண்டிருந்தது?


  // வடிவேலு சின்னப் பசங்ககிட்ட அடிவாக்கற சீன் எல்லாம் எனக்கு சம்பந்தா சம்பந்தமில்லாம ஞாபகம் வருது :P //

  அடப்பாவியளா.....!
  ஏன் ஏன் ஏன் ஏன்?

 1. புதிய பந்து வாங்க சொன்னதுக்கு இது ஒரு காரணமா??? கோபி அண்ணே!!

  ஆனாலும், டெரர் கடைசியில் காமெடியாக மாறியது சூப்பர்!!!

 1. Subankan Says:

  //ஆனாலும், டெரர் கடைசியில் காமெடியாக மாறியது சூப்பர்!!!
  //

  ஹி ஹி, கன்கொன் பாக்கறதுக்குத்தான் டெரர், பழகிப்பாத்தா பக்கா காமெடியன்தான் :P

 1. // ஹி ஹி, கன்கொன் பாக்கறதுக்குத்தான் டெரர், பழகிப்பாத்தா பக்கா காமெடியன்தான் :P //

  என்னய்யா இப்பிடி அவமானப்படுத்திறியள்? :-(

 1. Subankan Says:

  //என்னய்யா இப்பிடி அவமானப்படுத்திறியள்? :-(
  //

  ஓ சாரி கன்கோன். நீங்கள் ரெரர்தான் ;)

 1. :))

 1. Eeva Says:

  நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

 1. ஐயோ பாவம் நம்ம கன்கொன். சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு

 1. செல்லாது செல்லாது..
  முக்கியமான விஷயம் சொல்லப்படவில்லை. ;)

 1. ஓ சாரி கன்கோன். நீங்கள் ரெரர்தான் ;)

  //

  இது ரொம்பவே நக்கல்.. ;)

 1. // செல்லாது செல்லாது..
  முக்கியமான விஷயம் சொல்லப்படவில்லை. ;) //

  அவ்வ்வ்வ்வ்வ்.....!

 1. அந்தக் கள்ளப்பொடியன் நானில்லை என்பதை உலக மக்களுக்கு தெரியப்படுத்துகின்றேன். நான் பச்சிளம் பாலகன் எனக்கு களவெடுக்கத் தெரியாது. சிலவேளைகளில் அந்தப் பொடியன் தீஸ் என்ற எழுத்துக்களில் முடியும் பொடியனாக இருக்கலாம்.

  கங்கோனையே ஏமாற்றியதால் அந்தப் பொடியன் ஜகக்ஜாலக் கில்லாடிதான். பவன் உண்மைச் சம்பவத்தை அப்படியே எழுதியமைக்கு வாழ்த்துக்கள்,. ஸ்ரீச் சித்தப்புபூவின் பாஸ்வேர்ட் கிடைத்த கதையையும் இடையில் சொல்லி இருக்கலாம்.

 1. அனுபவப்பகிர்வு போல இருக்கே...

 1. எவண்டா இங்கே கான்கொன் என்னடா இங்கே நடத்துரியல் உங்களுக்குள்ளேயே பதிவு போடுவியலா? உங்களை தட்டிக்கேட்க ஆளில்லையா? மனசில என்ன பெரிய .....நினைப்போ. மவனே இனி இப்பிடி பதிவை பார்த்தேன் அழுதிடுவேன். பாவம்டா அந்த பயல .அடேய் பவன் நீ என்னிடம் சிக்காமலா விட போறாய்.

  இப்பிடி ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லையே ஏன் அதுதான் நான் போட்டேன். தொட்ட டோடிய்ங்

 1. நல்ல காமெடி!

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்