Related Posts with Thumbnails

 உள்நாட்டுச் செய்திகள்
ஆடுகளத்தில் அனுதினமும் விளையாடிவந்த இவர் தற்போது விளையாடவே மறந்துவிட்டார். படிக்கும் இடத்தில் ஏதோ வரலாற்றுச்சிறப்பு மிக்க கட்டுரை ஒன்றை, அதுவும் எதிர்கால வாழ்க்கைக்கு துணையான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அது அங்குள்ள புரோபசர்கள் முதல் புள்ளப்பூச்சிவரை அனைவரின் கபாலத்தில் உள்ள முடியையும் கம்பிபோல் எழுந்து நிற்க வைத்திருப்பதால். அதை புத்தகமாக வெளியிட அவரின் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. எனவே இந்த எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கைக்கு துணையாக அமையவிருக்கும் இந்த மாபெரும் காப்பிய நூலை நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம்.
 
அண்மையில் இலக்கியப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கும் இவர் தனது வலைப்பூவின் பெயரையும் அண்மையில் அழகு தமிழில் மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் இவர் நண்பர்களுக்காக எழுதிய கவிதையைப் பாராட்டி வைரமுத்து முதல் பப்புமுத்து வரை பலர் பாராட்டியதாகவும், அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது. மேலும் இவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் பஸ்சில் பயணிகளோடு பயணிகளாக மாறுவேடத்தில் பயணித்தபோது இவரின் புலமை அறியாத ஒரு பித்தன் இவரின் இலக்கிய கவிதை நூல்கள் அடங்கிய பையை காலால் உதைந்ததாகவும், ஆனால் இரக்க குணம் படைத்த இவர் தனது இருக்கையைவிட்டு எழுந்து தனது இலக்கியச்சுமையை தோளில் சுமந்தபடி அரிசி மூட்டைன் வந்த மனிதனுக்கு இடம் கொடுத்ததாகவும், அந்த மனிதன் கொண்டுவந்த நாய்க்குட்டிக்கு தனது 350 ருபா புக்கிங் இருக்கையை தானம் செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட உடல்வலி காரணமாக பதிவுலகில் சஞ்சரிக்க முடியாமல் இருப்பதாகவும் ஸ்கொட்லான்ட் யார்ட் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
 
வெளிநாட்டுச் செய்திகள்
இலங்கையில் இருக்கும் போது அடிக்கடி சூப் வாங்கித்தந்த இவர் இப்பொது சின்ன டொபி கூடத்தருவதில்லை, அதற்குக் காரணம் இவரது முகத்தை மூடி வளர்ந்திருக்கும் அந்நியன் முடிதான் என்று சொல்லி சமாளித்து வந்த இவர் கடந்தவாரம் இலங்கை ருபா 3000க்கு முகத்தை மூடிய முடியை குணா கமல் ஸ்டைலில் வெட்டியதாகவும் அதை தனது சமூக வலைத்தளங்களில் புரொபைஃல் படமாகப் போட்ட மறுநோடி பலர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

விளையாட்டுச் செய்திகள்
கிறிக்கட் அனலைசுக்கு கோனாக, அரசனாக, பிதாமகனாக, குட்டி கிறிக் இன்போவாக, கிறிக்கட்டின் தேயாத நிலாவாக விளங்குகின்ற இவர் இந்திய அவுஸ் தொடரில் இந்தியா வெல்லக் காரணமான விக்கிரமாதித்தனை பழி தீர்க்கும் நோக்கில், அவரின் அணியை வெற்றிபெறச் செய்யாமல் இருக்கும் நோக்கில் தற்போது அவரின் அணியில் விளையாடி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இது பற்றிச் செய்தி கேள்விப்பட்ட விக்கிரமாதித்தன் களத்தில் வைத்து இவரிடம் விளக்கம் கோரியதாகவும் அதற்கு தனது அனலைஸ் ரிப்போர்ட்டை சமர்ப்பித்து இதன்படி நீங்கள் போட்டி ஆரம்பிக்க முன்னர் நீங்கள் சொன்ன “We will win” என்ற வாக்கியமே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
வானிலை அறிக்கை
அண்மையில் தான் படித்த பல்கலைக் கழகத்தில் யாரும் எதிர்பாராத வகையில்நீல வானத்திலேயே கருமுகில்களில்லாமல் கவி மழையை அடித்து ஊற்றிய கடவுச் சொல் காவலனுக்கு யாழ்ப்பாணத்தில் விளைந்த ”கறுப்புத்தங்கம்” என்று பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டதாக பதிவர்கள் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
 
 

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. errrrrrrrrrrrrr! ஏனிந்த கொலைவெறி...!

 1. very nice....

 1. அவ்வ்வ்வவ்

  பின்னிணைப்பு - சற்று முன் கிடைத்த செய்தி.

  பதிவுலக செய்திகளைப் பரபரப்பாக வழங்கிவந்த துடிப்பான திருமலை செய்தியாளர் பப்புமுத்து இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
  இவரது கடத்தலுக்கான காரணங்கள் தெளிவாகத் தெரியாத போதும் கடைசிப் பதிவு ஏற்படுத்திய சலசலப்பே சந்தேகிக்கப்படுகிறது.

  இறுதியாக இவர் ராமராஜன் கலரில் ஒரு ஷேர்ட்டும்,இவரது பெண் நண்பி வாங்கிக் கொடுத்த பட்டாப்பட்டி ஜட்டியும் அணிந்து இருந்ததாக பேஸ் புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1. :D

  தங்களுக்கெதிராக செயற்பட மாபெரும் அணியொன்று தயாராவதாக அறிந்தோம், ரவுசரைக் காப்பாற்றிக் கொள்ளவும். :P

 1. மாபெரும் அணி? ம்ம்ம்ம் புரிகிறது..
  ஒரு மா மலை இருந்தாலே அது பெரும் அணி ஆகிவிடும் தானே?

  பட்டி மன்றம் நடத்தலாமா? யாருக்குக் கூட Damage என்று? ;)

 1. only for comments

 1. ஆஹா கலக்கீட்டிங்க.. வேறெதுவும் சொல்லமாட்டேன். பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்தாலும் ஏன் தேவையில்லாத வேலை...

 1. இப்போ பதிவுலகையும் பதிவர்களையும் கலாய்த்து எழுதுவதுதான் ட்ரென்ட் போல...

 1. Subankan Says:

  தகவலுக்கு நன்றி ;)

 1. //தகவலுக்கு நன்றி ;)//

  போட்டுக் கொடுத்தவன் ஒருத்தன் அப்பாவியாக நடிக்கிறான்.

  பவனுடன் இணைந்து சேதாரங்களைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்.

 1. வெறி வெறி வெறி கொலை வெறி. நடத்து ராஜா நடத்து.

 1. விரைவில் பழைய ஓலைகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒருவருக்கு காதல் திருமணம் நடக்கலாம் என லேட்டஸ்ட் உடைக்கும் செய்தி (Breaking News)சொல்கின்றது.

 1. // SShathiesh-சதீஷ். said...

  வெறி வெறி வெறி //

  எலுமிச்சங்காயை தலையில் தேய்க்கவும். #அனுபவமில்லை.

 1. தலைப்புச்செய்தி ஒன்னும் புரியல சார். எப்போ விரிவான செய்திகள்?

 1. சூப்பர்!
  (ஆனா யாரை சொல்றீங்கன்னு தெரியலையே!)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்