Related Posts with Thumbnails


ஆயிரந்தான் மொக்கை போட்டேன்
அழகழகாப் படம் போட்டேன்
செத்தவனே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலயே


நேத்தெல்லாம் மொக்க போஸ்ட்டு
போட்டோவுக்கும் கமண்ட்ஸ் போட்டும்
ஆரூடம் சொல்லி வந்த 
ஆக்டோபர்ச மறந்தேனே


எழும்பவோ நிக்கவோ
ஏலாத PAUL பத்தி
எழுதியென்ன லாமமுன்னு
எழுதாமப் போனேனோ?


போல்பாதர் பெத்தெடுத்த
பொன்னே குலமகனே
கோல் போட்ட கணக்குச் சொல்லி
கோமகனாய் ஆனீரே!


பப்புமுத்து பிறப்பான்னு
மனசில நீ நெனச்சதில்ல
மொக்கை போட்டுத் திரிஞ்ச ஒண்ணு
பப்புமுத்து ஆகிரிச்சு


ஒன்லைனில் உக்காந்து
ஒல்லியாய் ஒரு பிண்டம்
ஆரூடம் கேக்கயில என்னென்ன 
நினைச்சிருப்ப


கும்மி அடிப்பவனோ
குலம் ஆழப்பிறந்தவனோ
பதிவுபோட வந்திருக்கும்
பயபுள்ள இவன்தானோ


இந்த வெவரங்க 
ஏதோண்ணும் அறியாம
ஜெயிக்க வச்ச உன்ன
நெனச்சா அழுக வரும்


அடுத்த டீமு எதுவென்று
ஆரூடம் சொன்னீரே
ஆண்டு வந்த லோஷனையும்
அடிச்சுத் துவைச்சீரே


புட்போலே தெரியாம 
நீ சொன்ன ஆரூடம்
பொய்யாகிப் போகும் என்று
பொங்கியோர் பலரிருக்க


அத்தனையும் மெய்யாக்கி
அகிலத்தைக் கவர்ந்தீரே
அடுத்த ஃபீபாவுக்குள் 
ஆவியாகிப் போனீரே


இந்தியத் தொடரினிலே
இழந்த போர்மை லோஷன் பெற
இரவுத்தூக்கத்திலே 
இல்லாமல் போனீரோ


எனக்கொண்ணு ஆனதுன்னா
மொக்கை போட ஆளிருக்கா
நீர் செத்துப் போய்ட்டீரே
ஆரூடம் சொல்ல யாரிருக்கா?

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

 1. ஃஃஃஃஎனக்கொண்ணு ஆனதுன்னா
  மொக்கை போட ஆளிருக்கா
  நீர் செத்துப் போய்ட்டீரே
  ஆரூடம் சொல்ல யாரிருக்கா?ஃஃஃஃ
  ஆயிரம் மொக்கை படிச்சிரக்கேன் அழகழகாய் கொமண்டடிச்சேன்....
  மொக்கையனெ உன்பெருமை உலகறிய செய்வெனே..
  இதையும் ஒரு முறை பாருங்க..
  ஒக்டோபஸ் சாத்திரம் உண்மைதானா? ஆய்வாளர் பார்வையில்...
  http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_27.html

 1. =)). முடியல சாமி.

 1. //இந்தியத் தொடரினிலே
  இழந்த போர்மை லோஷன் பெற
  இரவுத்தூக்கத்திலே
  இல்லாமல் போனீரோ//

  இதில் ஒரு உள்குத்துமே இல்லையா???

  இது இரங்கல் பாவா??? நக்கல் பாடா???

  விளக்கம் சொல்லவும் பதிவர்ரே??!!!

 1. தம்பி நீங்க ரூம் போட்டு யோசீப்பீங்களோ?

  லோசனை வம்புக்கு இழுப்பதை கடுமையாக கண்டிக்கிறோம்

 1. சப்பா முடியல.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சு போச்சு...!

 1. ஈழத்து வைரமுத்து என பட்டம் தர பரிந்துரைக்கிறேன் அருமை பவன்

 1. ஸ்ஸ்ஸ்ஸபா... :))

 1. அழகான கவிதை!! அருமையான வரிகள்! அற்புதம்!!!!!!!!!!!!

 1. Unknown Says:

  என்னாதிது???? உனது வார்த்தைகள் சூப்பர்!!!

 1. அவ்வ்வ்வ்வ்வ்.....

  என்ன கொடுமை பவன் இது...

  எண்டாலும் லோஷன் அண்ணாவைப் போட்டுத்தாக்கியதை விழுந்து விழுந்து வரவேற்கிறேன். :D

 1. paulக்கு 'பால்' ஊத்திடாங்கலாமே ? ..

 1. கங்கோனை விழுந்து விழுந்து வழிமொழிகின்றேன். பலரையும் போட்டுத் தாக்கும்(பதிவில்) லோஷனை கலாய்த்த பவனுக்கு பாராட்டுகள். விரைவில் திருமலையில் பாராட்டு விழா நடக்க எல்லாம் வல்ல பெருமாளை வேண்டுகின்றேன்.

 1. ஆகா.. வைரமுத்துவின் கவிதையை அதே பாணியில் உல்டா அப்ன்னிக் கலக்கியிருக்கிராய் என்று வாழ்த்தலாம் என்று வாசித்துக் கொண்டுவர, கவிழ்த்தாயே பாவி..
  ஆனாலும்

  //இந்தியத் தொடரினிலே
  இழந்த போர்மை லோஷன் பெற
  இரவுத்தூக்கத்திலே
  இல்லாமல் போனீரோ//
  காதால் வழியும்ரத்தத்துடனும் ரசித்தேன் ;)


  //பப்புமுத்து பிறப்பான்னு
  மனசில நீ நெனச்சதில்ல
  மொக்கை போட்டுத் திரிஞ்ச ஒண்ணு
  பப்புமுத்து ஆகிரிச்சு
  //
  நான் வச்ச பெயர் உனக்கே பிடித்து நீயே வச்சதால் பெருமை அடைகிறேன் :)
  வாழ்க இலங்கை கண்ட பப்புமுத்து

  பி.கு - தம்பி பப்புமுத்து தயாராகிக் கொள்..
  டார்கெட் மாறுகிறது ;)

 1. எண்டாலும் லோஷன் அண்ணாவைப் போட்டுத்தாக்கியதை விழுந்து விழுந்து வரவேற்கிறேன். :D

  //

  அன்பின் அனலிஸ்ட் நீர் சும்மா வரவேற்றால் போதும்.. விழுந்து விழுந்து வரவேற்றாள் கிருலப்பனை என்ன கொழும்பே தாங்குமா? ;)

 1. Subankan Says:

  முடியல

 1. ஆக்டோபசுக்கு மூக்குறுஞ்ச நானும் வந்து உட்கார்ந்துக்குறேன்.

 1. //LOSHAN said...

  காதால் வழியும்ரத்தத்துடனும் ரசித்தேன் ;)//

  காதல் என மாறிவாசித்துவிட்டேன், ஹிஹிஹி. பப்புமுத்து ரொக்ஸ்.

 1. Bavan Says:

  ம.தி.சுதா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  வானம்பாடிகள் ஐயா,

  நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  அனு,

  ங்கொய்யால எவ்வளவு பீலிங்கோட எழதினது தெரியுமா..:P

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  யோ அண்ணா,

  ஹிஹி... நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  நிரூஜா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  தர்ஷன்,

  ஆங்.. இது வைரமுத்து இரசிகர்களால் என்னைப் போட்டத்தள்ள நீங்கள் எடுக்கும் முயற்சி...:P

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  கலகலப்ரியா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. Bavan Says:

  எஸ்.கே,

  எனி உள்க்குத்து..:-o
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  navarathinarajah,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  கன்கொன்,

  அண்ணே நீங்க ரொம்ப நல்லவருண்ணே.. நம்ம கட்சி #லோஷன்_அண்ணாவிடம்_அடிவாங்க_ஆள்ச்சேர்த்தல்..:P

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  Madhavan,

  ஆமாங்கோ, நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  வந்தியண்ணா,

  நன்றி நன்றி நன்றி மாம்ஸ்,நன்றி மாம்ஸ் வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. Bavan Says:

  லோஷன் அண்ணா,

  //காதால் வழியும்ரத்தத்துடனும் ரசித்தேன் ;)//

  why blood?..:P

  //பி.கு - தம்பி பப்புமுத்து தயாராகிக் கொள்..
  டார்கெட் மாறுகிறது ;)//

  அவ்வ்வ்வ்...
  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  சுபா அண்ணா,

  அவ்வளவுதான் கவிதை முடிசு்சிரிச்சு..:P

  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  ***

  ராஜ நடராஜன்,

  கர்ச்சிப் இலவசமாக வழங்கப்படும்..:P
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

 1. நள்ளிரவில் இதை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்.....

  நண்பா...நீங்க உட்காந்து யோசிக்கும் ரூம் நாலு நாளைக்கு எனக்கு வேணும்.....


  பி.கு- வைரமுத்து உங்க மேல வழக்கு போட போறாறாம்....பாட்டைதான் சுர்றாங்க எண்டா இப்போ கவிதையையுமல்ல சுடுறாங்க.....எண்டு புலம்புறாறாம்...(தன்ன விட நீங்க நல்லா எழுதீட்டீங்க எண்ட பொறாமையோ...???)

  விக்கிரமாதித்தன் (புதிய அக்டோபஸ்)வாழ்க..........

 1. நல்லா இருக்கு கவிதை. காலம் கடந்த வாழ்ததுகள்.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்