Related Posts with Thumbnails
அனைவருக்கும் வணக்கம், இது எனது இந்த ஆண்டின் கடைசிப்பதிவு. எனவே எல்லாருக்கும் விருது கொடுத்து டாட்டா சொல்லிக்கொள்கிறேன்.

ம.தி.சுதா – சுடுசோறு போட்ட சொக்கத்தங்கம் விருது

Mathisutha

பதிவர் வந்தியண்ணா – மிஸ்டர் கலைஞர் விருது


Vanthi anna

லோஷன் அண்ணா – ஒக்டாபஸ்சானந்தா விருது

Loshan

கன்கொன் – கூகிள் வேட்டைக்காரன் விருது

Kangon

ஆதிரை (எ) சிறீகரன் அண்ணா– பாஸ்வேர்ட் பறிகொடுத்த பாண்டியன் விருது

Aathirai

சதீஷ் – அலகிய டமில்க் காவலன் விருது (எழுத்துப்பிழை இல்லை)

Sathish

மதுயிசம் மது அண்ணா– தீராத விளையாட்டுப்பிள்ளை விருது

Mathu

சுபாங்கன் அண்ணா – சிறுகதை சொல்லும் சின்னமாமா விருது

Subankan

புல்லட் அண்ணே – லீவைத் தாண்டி வருவாயா விருது

Bullet

ஜனா அண்ணா – மாத்தியோசி விருது

Jana

தலைவர் நிரூஜா – அதிகாரமையத் தலைவர் விருது

Niruja

வதீஸ் அண்ணே – எதையும் தாங்கும் இதயம் விருது

Vathees

கூல்போய் கிருத்திகன் அண்ணே – மொக்கை மன்னன் விருது

 Coolboy

யோ அண்ணே – 2010ம் ஆண்டின் சாதனையாளர் விருது (இவருக்கு இவ்விருது கொடுக்கப்படக் காரணம் பதிவர் அனுதினனுக்கு 4 சிக்ஸ் அடித்ததுதான் என்று நீங்கள் கருதினால் அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது..:P )

Yo

அனுதினன் – 205க்கு ஒருவன் விருது (205 விடயத்தை பின்னூட்டத்தில் யாரும் சொல்ல வேண்டாம்)

Anuthinan

டாக்டர் பாலவாசகன் அண்ணே – ஊசி போடு உசிர எடு விருது

Balavasakan

சிதறல்கள் றமேஸ் சேர் – வாத்தியார் விருது

Ramesh

டிஸ்கி - வழக்கம் போல இதுவும் நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்ட பதிவு எனவே சீரியஸாக எடுக்க வேண்டாம். மீறி சீரியசாக எடுத்தால் சீரியஸ் சிங்கமுத்து விருது வழங்கப்படும்..:P

நத்தார் பண்டிகை வாழ்த்து

merry-christmas
நேற்றைய தினம் நத்தார் பண்டிகையை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்கள். எனவே அனைவருக்கும் என் மனமார்ந்த, உளம்நிறைந்த நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த நத்தாரும் மலரப்போகும் 2011ம் உங்கள் வாழ்வில் அமைதியையும் சந்தோஷத்தையும் தரட்டும்.

சுனாமி

tsunami
கடல் வருதாம், ஊருக்குள்ள தண்ணி வருகுதாம், ஓடுங்கோ பனை உயரத்துக்கு அலை வருதாம், இவைதான் இந்த வருடத்தல் 26ம் திகதி மக்களின் மகுடவாசகமாக இருந்தது. அதன்பின்னர் எத்தனை சோகக்கதைகள் கேள்விப்பட்டிருப்போம். சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு 6 வருடங்கள் ஆகிறது. 6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

சுனாமியில் உயிர்நீத்த இலட்சக்கணக்கான உயிர்களுக்கு எனது அஞ்சலிகள்.

பதிவர் சந்திப்பு – 03

156341_10150354003040368_844450367_16276236_6724509_n
கடந்த 18ம் திகதி பதிவர்கள் கிறிக்கட் மற்றும் பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. நான் கலந்து கொண்ட முதலாவது பதிவர் சந்திப்பு அது. அனைத்துப் பதிவர்களையும் சந்தித்தது விளையாடியது என அந்த இரண்டு நாட்களும் மகிழ்வான நாட்களாகக் கழிந்தது. அன்னாசிப்பானம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட இந்தப் பதிவர் சந்திப்பை மறக்க முடியாமல் இருக்க அது ஒரு வழியாக அமைந்திருக்குமோ..:P

சுஜாதா

sujatha
நேற்றும் நேற்று முன்தினமும் சுஜாதாவின் “ஜேகே” மற்றும் “மறுபடியும் கணேஷ்” ஆகிய இரு புத்தகங்களும் வாசித்து முடித்தேன். ஜேகே ஒரு பைலட்டின் கதை படிக்கப் படிக்க விறுவிறுப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. விமானத்தை வைத்து சுஜாதா எழுதிய மற்றுமொரு அருமயான கதை. கடைசிவரை எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே சென்று கடைசியில் லாவகமாக எதிர்பார்க்காத விதத்தில் கூறுவதில் சுஜாதாக்கு நிகர் சுஜாதாதான்.

மறுபடியும் கணேஷின் கடைசி வரியைப் படித்துவிட்டு “அடிங்கொய்யால” என்று சொல்லிக்கொண்டேன். சுஜாதாவின் கணேஸ் – வசந்த் வரும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலும் இது  சுஜாதாவின் சிறந்த ஒரு துப்பறியும் கதை. “குருப்பிரசாத்தின் கடைசி தினம்” என்ற நாவல் இன்னும் மிஞ்சியுள்ளது. படிக்கவேண்டும். வேறு சுஜாதாவின் புத்தகங்கள் ஏதாவது எனக்கு பரிந்துரை செய்யுங்களேன்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்..:P

(null)
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது என்றும் சொல்லலாம். ஆவுஸ்திரேலியா இன்று ஆரம்பித்த போட்டியில் இந்தப்பதிவை இட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் 9 விக்கெட்டுகள இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது.
அன்டர்சன் 4 விக்கெட்டுகள், ட்ரம்லெட் 3, மற்றும் பிரஸ்னன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள். ஆனால் அவுஸ்ரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் Mr.Cricketடும், ஹடினும் ஆட்டமிழ்நதது அவுஸ்ரேலியாக்கு கவலைக்குரிய விடயம்.
மறுபடியும் பொன்டிங்க்குக்கு ஆப்பா? விக்கிரமாதித்தன் எங்கபோய்ட்டாரோ..:P

நெஞ்சில் நெஞ்சில்

அண்மைக்காலமாக தினமும் என் காதுகளில் தொடர்ந்து ஒலிக்கும் பாடல் இது. எங்கேயும் காதல் படத்தில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், ஹரிஸ் ராவேந்திரா – சின்மயி ஆகியோரின் இனிமையான குரல்களில், மதன் கார்க்கியின் அற்புதமான வரிகளில் காதுவழியாக உடலுக்குள் சென்று ஏதோ செய்கிறது.

no comments

126228
என்னைத் தொடர் பதிவுக்கு அழைத்த லோஷன் அண்ணாவுக்கு நன்றிகள். ரஜனியின் எனக்குப்பிடித்த பலபடங்களில் ஒரு 10 படங்களை மாத்திரம் தத்திருக்கிறேன். இந்தத் தொடர் பதிவை ஏற்கனவே பலர் எழுதிவிட்டதால் யாரை அழைப்பதென்று தெரியவில்லை. இன்னும் எழுதாதவர்கள் எழுதிக்கொள்ளுங்க.

பில்லா
billa1980
ரஜனி இரு வேடங்கள் தாங்கி நடித்த ஒரு படம். எத்தனை ரீமேக்குகள் வந்தாலும் அசல் இதுதானே. எனக்குப்பிடித்த ரஜனியின் படங்களிலும் ஒன்று.
தீ
1029ded822
தொழிலாளிகளுக்கு வரும் பிரச்சினைகளை காட்டியிருக்கும் ஒரு படம். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது குறிப்பிடப்பட வேண்டிய விடயம். தவிர குடும்பத்தைக் காப்பாற்ற படிக்காமல் வேலைக்குப் போகும் ரஜனி கடைசியில் தனது தம்பியாலேயே கைது செய்யப்படுவது போன்ற பாசப்பிணைப்புகள் நிறைந்த ரஜனியின் சற்று வித்தியாசமான நடிப்பை எமக்குக் காட்டிய படம். “சுப்பண்ணா சொன்னாருண்ணா சுதந்திரம் வந்ததுண்ணு” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.
முத்து
muthu
ஆரம்பத்தில் நகைச்சுவையான ஒரு மனிதராக எஜமானுக்கு விசுவாசமான ஒரு வேலைக்காரனாக வரும் ரஜனிக்கு வரும் கஷ்டங்கள், போன்ற திருப்பங்கள் உள்ள படம். அவற்றையும் தாண்டி நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். ரஜனியின் நகைச்சுவை யாருக்குத்தான் பிடிக்காது.

MR.பாரத்
Mr-Bharath
என்னம்மா கண்ணு செளக்கியமா? என்ற பாடல் வரும் படம். தனது தாயை ஏமாற்றிய தந்தையை தனது தாய்க்காக தந்தை சத்யராஜுடன் போராடும் படம். தந்தைக்கும் தனயனுக்கம் நடக்கும் போராட்டத்தைப் படமாகக் காட்டியிருப்பார்கள். தனுஷ் அந்தப்படத்தின் ரீமேக்கை பண்ணியிருந்தாலும்கூட ரஜனியின் நடிப்புக்கும் ஸ்டைலுக்கும் முன்னால் நிற்க முடியுமா.

தில்லுமுல்லு
images
ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் இந்திரன்
ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் சந்திரன்
ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் இரட்டைவேடம் போடுவது போன்ற மரணநகைச்சுவைப் படம். இதை டீவியில் எப்போது போட்டாலும் நான் பார்க்கத் தவறியதில்லை.

தளபதி
thalapathi
இப்போது இந்தப்படத்தைப் பற்றிச் ஒரு வரியில் சொல்வதென்றால் நண்பேன்டா என்று சொல்லலாம். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட ஒரு படம். இதில் சின்னத்தாயவள் மற்றும் காட்டுக்குயிலு ஆகிய பாடல்கள் தினமும் கேட்கும் playlistக்குள் இடம்பிடித்திருக்கிறது.

பாட்சா
Badsha
ரஜனியின் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம், நான் முதலாவதாகப் பார்த்த ரஜனி படம் என்பதால் இன்னும் பிடிக்கும். இப்படத்தில் ரஜனி ரகுவரன் சந்திக்கும் இடம், அந்த நேரத்தில் அவரை ரகுவரன் ஆட்கள் சூழ்ந்து இருப்பதை காட்ட சிரித்துவிட்டு கொஞ்சம் அங்கே பாரு கண்ணா என்பார். வாவ் அருமை. அந்த ஸ்டைல் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

அருணாச்சலம்
Arunachalam
சின்ன வயதில் இரசித்த இன்னுமொரு படம், இப்பொழுதும் கூட.
ரஜனி வீட்டை விட்டு வெளியேறி உருத்திராட்சத்தை குரங்கு எடுத்துச் செல்லுதல், ரஜனி கதிரையில் இருந்து ஆடி விழுதல் போன் நகைச்சுவைக் காட்சிகள் தொடக்கம், ரஜனி குறிப்பிட்ட சொத்தை குறிப்பிட்ட காலஅவகாசத்தில் செலவழித்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அதை செலவழிக்கும் காட்சிகள் வரை அற்புதமாக இருக்கும். ரஜனியின் ஸ்டைஸ்+ஆக்சன்+காமடி நிறைந்த ஒரு படம்.

படையப்பா
rajini5
“ஏனுங்க அந்தப் பாம்புப்புத்துக்குள்ள கைய வுட்டீங்களே கடிக்கலைங்களா” என்ற சந்தேகத்துக்கு எப்படா பதில் சொல்லுவார் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்..:P
இந்தப் படத்தில் நீலாம்பரி சொல்லுவது போல வரும்
“வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னைய விட்டுப் போகல படையப்பா”
என்ற வார்த்தையை இன்றும் ரஜனி மெய்யாக்கிக்கொண்டிருப்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

எந்திரன்
enthiran21
எந்திரன் ரஜனியின் படங்களில் முற்றிலும் வேறுபட்ட படம், ஷங்கர் என்ற இயக்குனர் ரஜனியை சிறப்பாகக் கையாண்டிருப்பார். Making of Enthiranனில் ரஜனியின் கஷ்டங்கள் நன்றாகத் தெரிந்தது. ஆனால் ரஜனியின் வழக்கமான ஸ்டையிலை காணமுடியாதது ரஜனியின் தீவிர ரசிகர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் ரோபோ ரஜனி தனது பேட்டைக்குள் புகுந்த மனித ரஜனியைக் கண்டுபிடிக்கும் காட்சியில் ரஜனியின் பழைய ஸ்டைலைக் கண்டேன்.

ரஜனி இமயத்திற்குப் போனாலும் நடிப்பிலும் ஸ்டைலிலும் அதைவிட இமயம்தான்.
இந்த வருடத்தில் நான் இரசித்த மொக்கை/நகைச்சுவைப் பதிவுகளைப் பதிவிட்டுள்ளேன்.

பதிவர் லோஷன்
இவரை உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும், கிறிக்கட் பதிவுகளை அதிகம் இட்டு வந்தவர் தற்போது எமக்கு(நகைச்சுப் பதிவர்களுக்கு) போட்டியாக மொக்கை போட்ட ஒரு மொக்கைப் பதிவு. 

பதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்

பதிவர் கன்கொன்
முன்பு நகைச்சவைப் பதிவராக இருந்து பின்னர், கிறிக்கட் அனலிஸ்ட்டாக உருவெடுத்ததிருக்கும் இவரின் இவ்வருட ஆரம்ப நகைச்சவைப் பதிவுகளில் இரசித்த ஒன்று. ஏனோ இவர் இப்போது நகைச்சுவைப் பதிவுகள் .இடுவதில்லை.

காதலர்கள் தொலைபேசியில் இப்பிடித்தானோ?

பதிவர் வந்தியத்தேவன்
பதிவுலகின் மூத்த பச்சிளம் பாலகனை அறியாதவர்கள் யார்? இவர் பதிவுலகில் மட்டுமல்ல நகைச்சுவைப் பதிவர்களின் குரு. எங்களின் குருவின் பெஸ்ட் இதோ.

சுறா - குறியீட்டு அரசியல்

பதிவர் யோ வொய்ஸ் யோகா
பதிவர்களுக்கு நூடுல்ஸ் வழங்கும் யோ அண்ணா, அடிக்கடி நகைச்சுவை நூடுல்சும் வழங்குவார். அவரின் அனுபவத்தில் உதித்த ஒரு நகைச்சுவைப் பதிவு.

காதலித்துப்பார் ரீமிக்ஸ்

பதிவர் சதீஷ்
முன்னாள் இலங்கைப்பதிவரும், தற்கால லண்டன் பதிவருமான பதிவர் சதீஷின் நகைச்சுவைப் பதிவு.

ப்ளீஸ் ப்ளீஸ் வாங்கோ வாங்கோ - 20வருடங்களின் பின் நம் பதிவர்கள்

பதிவர் பாலவாசகன்
இவரை இப்போது பதிவுலகில் பாணமுடியவில்லை, இவரும் லீவில இருக்கிறாரோ?..:P  இவரும் ஒரு பதிவர்தான் (ங்கொய்யால யாரங்க சிரிக்கிறது) இவர் தனக்கு யாரும் மொக்கை போட முடியாது, தானே போட்டுக்கிட்டாத்தான் உண்டு என்று ஒருமுறை தனக்குத்தானே போட்ட அசத்தலான மொக்கை.

லட்சத்தில் ஒருவன்…


பதிவர் ஜனா
பதிவுலகின் குட்டி சனத்ஜயசூர்ய (இன்னா சிரிப்பு 1996களில் இருத்த சனத் என்று சொல்ல வந்தேன்) அடிக்கடி ஹொக்ரயிலில் அழைத்துக் கொண்டு போய் விடுவார், அண்மையில் இவர் மரக்கறிக்கடைக்ககாரனை வைத்து டாக்டர் வாசகனுக்குப் போட்ட இந்த மொக்கைக்கப் பிறகு டாக்டர் "ங்கொய்யால ஆஸ்பத்திரிப் பக்கம் வந்துடாத எண்டு சொல்லியபடி "பெரிய ஊசியுடன் அலைகிறாராம்

வாசகன் வம்பு!!

 பதிவர் அனுதினன்
இவரின் பாடசாலைகட கால நகைச்சுவை அனுபவம் ஒன்றைப் பதிவாகச் சொல்லியிருந்தார். இரசிக்கம் படி இருந்தது.

வீட்ட போய் பண்ணிவிடுடா

பதிவர் கூல்போய்
இவர் எதைக்கேட்டாலும் சிரிப்பார், அதைப்போலவே எதைப்பதிவில் போட்டாலும் சிரிக்கவைப்பார். அவர் எடுத்தார் பாருங்கள் ஒரு குறும்படம்...

குறும்பட வைபோகமே..!!!

 பதிவர் சுபாங்கன்
ங்கொய்யால தில்லிருந்தா என்னைய இனி எவனாவது தொடர் பதிவுக்குக் கூப்பிடுங்கடா பாக்கலாம் என்றமாதிரி நான் அழைப்பு விடுத்த ஒரு கிறிக்கட் பதிவுக்கு மொக்கை போட்டார் பாருங்கள்.

ஹி ஹி ஹி கிரிக்கெட்

கீழே உள்ள பதிவுர் கிறிக்கட் பற்றிய காணொலியில் உள்ள பின்னணி இசையையும் படங்களையும் நீங்கள் சம்பந்தப்படுத்திப்பார்த்தால் அதற்கு சங்கம் பொறுப்பேற்காது...:P

Ponting-and-Strauss-in-Ad-004
ஸ்ரோஸ்:
சுவிங்குடன், யோக்கரைக் கலந்தானாயின்
விக்கட் புடுங்கப் போகுது எச்சரிக்கை.
அவுட் ஸ்விங் மட்டும் போட்டானாயின்!
மெய்டின் ஓவர் எச்சரிக்கை
பந்தைத் பிடித்ததும் முறைத்துக் கதை பேசினால்
டென்சன் ஆக்கிறான் எச்சரிக்கை
கட்சை விட்டதும் கத்திப் பேசினால்
பயபுள்ள காண்டாகிட்டான் எச்சரிக்கை
புல்டாசாக முகத்துக்கு வீசினால்
மூஞ்சிய உடைக்கபோறான் எச்சரிக்கை

பட்டிங் வரும்முன்னே எல்லா கார்ட்டையும்
கவனமாய்ப் போடுதல் அதுவே பழக்கமாகக் கொள்
ரன் எடுப்பதொன்றே குறியான பின்
பவுண்டரி அடிப்பது ஒன்றே உறுதியாகக் கொள்
உனக்கு பந்து போடுறவன் பயங்கரமா பவுன்ஸ் அடிப்பான்
யோசிக்காமல் குனிந்து விளையாடாமல் விட்டுக்கொள்
அவுட் ஸ்விங் பவுன்சர் இரண்டும்
உன் பட்டில் படவே படாது என்றே கொள்
Short ballக்கு ஹீக் சொட் அடித்தல்
என்ற பண்டைச் செயல்
உன்னால் செய்ய முடியாது ஒத்துக்கொள்
இந்தப் பந்துகளுக்கெதிராய் உயிரை விடாமல்
சீக்கிரம அவுட்டாகி ஓடும் பணி செய்துகொள்

பொன்டிங்:
ஆஹா… அவுட்டாகி ஓடும் பணி சேர்த்துக்கணுமா?
பணியே அவுட்டாகி ஓடுவதென்னானபின் பட்டிங் எதற்கு? தனியே வருவேன்
ஸ்ரோஸ்:அப்பிடி வாங்க வழிக்கு, சோ நீங்க பாட்மன்தானே
பொன்டிங்: புவர்லி ஆஸ் அக்கியூஸ்ட்
ஸ்ரோஸ்: அப்ப ஜஜ்மென்ட் சொல்றன்
பொன்டிங்: சொல்லுங்க..
ஸ்ரோஸ்: பதிலுக்கு ஒரு கவிதை சொல்லணும் அதுதான் தண்டனை
பொன்டிங்: யாருக்கு?
ஸ்ரோஸ்: அது கவிதையக் கேட்டாத்தானே தெரியும்
பொன்டிங்: அதுவும் சரிதான். ஆனால்…நீங்க கோவிச்சுக்க கூடாது!
ஸ்ரோஸ்: ஏன் இங்கிலாந்தைப் பற்றிக் கேலியா?
பொன்டிங்: சாச்சா…இது ஒரு அணித்தலைவரின் வேண்டுதல் மாதிரி
ஒரு அணித்தலைவர் தெய்வத்துக்கிட்ட பாடுற தோத்திர பாடல்!
ஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா?
பொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு
ஸ்ரோஸ்:கவிதையை கேட்டால் கேள்விக்குறி? ரோதனைக்குறியா மாறலாம்
இல்லையா?
பொன்டிங்: ங்கொய்யால மே பி… மே ஐ..
ஸ்ரோஸ்: பிளீஸ்..

பொன்டிங்:
பல ஸ்விங் வீசிப் பந்து வீசுகையில் – அதை
சிக்ஸராய் பவுண்டரியா மாற்ற முடியாத
சப்பையான பாட்ஸ்மன் வேண்டும்

சின்னப்பசங்களும் சிக்ஸ் அடிக்கக்கூடிய
பந்து வீசவே தெரியாத எதிரணியும் வேண்டும்
பாட்னசிப்புகள் போடும் வேளையில்
பவுண்டரி கொடுத்தவன் உதவிட வேண்டும்

போலிங்கின் போதும் உதவிட வேண்டும்
அடித்து நெகிழ்ந்திட அரைச்சதம் வேண்டும்
முழுச்சதம் அடிக்க வசதியாய்
பாறை பதத்தில் பட்டும் வேண்டும்

அதற்குப்பின்னால் கிடைக்கும் ரன்னும்
அது சிங்கிள் பாய்ச்சி கூட்டிய அவரேஜீம்
சதக்குவிப்புகள் அதிகமுள்ள
மேதாவிலாச கரியரும்(career) வேண்டும்

Onedayயில் நூறு டெஸ்டில் இருநூறென
டீமில் நிலைத்திட ரன்னும் வேண்டும்
பவுண்டரி வேண்டும் சிக்சும் வேண்டும்
எனக்கென வீரரை கேட்கும் வேளையில்
கொடுத்துதவும் நல்ல தேர்வுக் குழுவும் வேண்டும்

இப்படி அணியொன்று வரவேண்டும் என நான்
ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்
வந்தருவார் நம் விக்கிரமாதியெனக்
கடும் நோன்பு புரிந்ததும் தேடிப்போனேன்

ஸ்ரோஸ்: தேடி எங்க போனீங்க?
பொன்டிங்: கிரவுண்டுக்குத்தான்

பொடி நடை போட்டே பந்து பிடிக்கவென
காலை முதல் மாலை வரை போலி வீரர்கள் திரிவது கண்டேன்
வேகமேயற்ற ஸ்விங்கற்ற பந்துக்கும் அடிக்க முடியாது அவுட்டானது கண்டேன்!
எக்ட்ரா பிளேயருக்கு எல்லாத்தகுதியும் இருந்தும் கூட அணியில் இடம்கிடைக்கா அரசியல் கண்டேன்
பட்டிங்கில்லா வேளையில் மட்டும் அவன் எக்ட்ராபிளேயர் வேண்டும் என்றான்
எவ்வணியானால் என்னவென்று எல்லா அணியிலும் தேடிப்பார்த்தேன்
வரவர ஒழுங்காய் கிறிக்கட் விளையாடும் வீரனைக் காண்பது மிகமிகக் குறைவு
வரந்தரக் கேட்டதால் ஸ்ரோசண்ணே உனக்கு வீரமான வீரன் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
பறந்துகொண்டே காட்ச் பிடிக்கும் இங்கிலாந்து அணியின் வீரர்கள் எப்படி?
ஆஷஸ் சொல்லும் வரலாறு அத்தனையும் வாஸ்தவமாக நடந்தது உண்டோ?
இதுவும்(batting) உதுவும்(bowling) அதுவும்(fielding) செய்யும் இனிய வீரர் யார்க்கும் முண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
விக்கிரமாதித்தா நமஸ்துதே!

Notepad விளையாட்டு

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:27 PM | 14 பின்னூட்டங்கள்
devil-on-computer1
-1-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் .LOG என்று தட்டச்சி அதை விரும்பிய பெயரைக் கொடுத்து Save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் அந்த Fileஐ close பண்ணிவிட்டு மீட்டும் open பண்ணுங்கள். அதில் நீங்கள் open பண்ணிய திகதி, நேரம் என்பனவற்றைக் காணலாம்.

-2-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் bush hid the facts என்று type பண்ணி save பண்ணி save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் close பண்ணிவிட்டு மீள open பண்ணுங்கள், ஆச்சரியமாக இருக்கும்.

-3-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் this app can break என்று type பண்ணி save பண்ணி save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் close பண்ணிவிட்டு மீள open பண்ணுங்கள், ஆச்சரியமாக இருக்கும்.

-4-Notepadடில் நான்கு எழுத்துக்கள் கொண்ட சொல்(space) இரண்டு எழுத்துக்கள் கொண்ட சொல்(space) இரண்டு எழுத்துக்கள் கொண்ட சொல்(space) 5எழுத்துக்கள் கொண்ட சொல்.
உ+ம்: Siva can bat badly
(தட்டச்சிய பிறகு enter விசையைப் பிரயோகித்து விடாதீர்கள்)
பின்னர் save பண்ணிவிட்டு மீள open பண்ணிப்பாருங்கள்.

(2,3,4 ஆகியவற்றைச் செய்துவிட்டு வடிவேலு கிணத்தைக் காணோம் என்று கம்ளைன்ட் பண்ணியது போல பிறகு கம்ளைன்ட் பண்ணக்கூடாது..:P)

-5-Notepadடில் பின்னவருவனவற்றைக் copy பண்ணி
@echo off
color 2
:start
echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%
goto start
.bat என்ற extensionனுடன்(உ+ம்: Matrix.bat)  save பண்ணிக்கொள்ளுங்கள். notepadஐக் close பண்ணி விட்டு மீண்டும் open பண்ணிப்பாருங்கள்

-6-உங்கள் கணனியின் Anti-virus சரியாக இயங்குகிறதா என்று அறிய பின்வருவனவற்றைக்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
copy செய்து save பண்ணிக்கொள்ளுங்கள். பி்ன்னர் அந்த fileஐ virus scan பண்ணுங்கள். (சிறந்த anti-virusசாக இருந்தால் save பண்ணிய உடனேயே alert வரும்..;))

டிஸ்கி 1 – எல்லாம் இணையத்தில் தேடி, கிடைத்த பதில்களின் தமிழாக்கம்.
டிஸ்கி 2 – பலருக்குத் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தெரிந்திருக்கலாம், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்க..:D

டண்டணக்கா - ஆஷஸ்

பதிவிட்டவர் Bavan | நேரம் 1:10 PM | 16 பின்னூட்டங்கள்

1 2 3 4 6 5 no

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (35) poet (41) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (71) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்