Related Posts with Thumbnails

நத்தார் பண்டிகை வாழ்த்து

merry-christmas
நேற்றைய தினம் நத்தார் பண்டிகையை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்கள். எனவே அனைவருக்கும் என் மனமார்ந்த, உளம்நிறைந்த நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த நத்தாரும் மலரப்போகும் 2011ம் உங்கள் வாழ்வில் அமைதியையும் சந்தோஷத்தையும் தரட்டும்.

சுனாமி

tsunami
கடல் வருதாம், ஊருக்குள்ள தண்ணி வருகுதாம், ஓடுங்கோ பனை உயரத்துக்கு அலை வருதாம், இவைதான் இந்த வருடத்தல் 26ம் திகதி மக்களின் மகுடவாசகமாக இருந்தது. அதன்பின்னர் எத்தனை சோகக்கதைகள் கேள்விப்பட்டிருப்போம். சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு 6 வருடங்கள் ஆகிறது. 6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

சுனாமியில் உயிர்நீத்த இலட்சக்கணக்கான உயிர்களுக்கு எனது அஞ்சலிகள்.

பதிவர் சந்திப்பு – 03

156341_10150354003040368_844450367_16276236_6724509_n
கடந்த 18ம் திகதி பதிவர்கள் கிறிக்கட் மற்றும் பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. நான் கலந்து கொண்ட முதலாவது பதிவர் சந்திப்பு அது. அனைத்துப் பதிவர்களையும் சந்தித்தது விளையாடியது என அந்த இரண்டு நாட்களும் மகிழ்வான நாட்களாகக் கழிந்தது. அன்னாசிப்பானம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட இந்தப் பதிவர் சந்திப்பை மறக்க முடியாமல் இருக்க அது ஒரு வழியாக அமைந்திருக்குமோ..:P

சுஜாதா

sujatha
நேற்றும் நேற்று முன்தினமும் சுஜாதாவின் “ஜேகே” மற்றும் “மறுபடியும் கணேஷ்” ஆகிய இரு புத்தகங்களும் வாசித்து முடித்தேன். ஜேகே ஒரு பைலட்டின் கதை படிக்கப் படிக்க விறுவிறுப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. விமானத்தை வைத்து சுஜாதா எழுதிய மற்றுமொரு அருமயான கதை. கடைசிவரை எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே சென்று கடைசியில் லாவகமாக எதிர்பார்க்காத விதத்தில் கூறுவதில் சுஜாதாக்கு நிகர் சுஜாதாதான்.

மறுபடியும் கணேஷின் கடைசி வரியைப் படித்துவிட்டு “அடிங்கொய்யால” என்று சொல்லிக்கொண்டேன். சுஜாதாவின் கணேஸ் – வசந்த் வரும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலும் இது  சுஜாதாவின் சிறந்த ஒரு துப்பறியும் கதை. “குருப்பிரசாத்தின் கடைசி தினம்” என்ற நாவல் இன்னும் மிஞ்சியுள்ளது. படிக்கவேண்டும். வேறு சுஜாதாவின் புத்தகங்கள் ஏதாவது எனக்கு பரிந்துரை செய்யுங்களேன்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்..:P

(null)
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது என்றும் சொல்லலாம். ஆவுஸ்திரேலியா இன்று ஆரம்பித்த போட்டியில் இந்தப்பதிவை இட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் 9 விக்கெட்டுகள இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது.
அன்டர்சன் 4 விக்கெட்டுகள், ட்ரம்லெட் 3, மற்றும் பிரஸ்னன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள். ஆனால் அவுஸ்ரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் Mr.Cricketடும், ஹடினும் ஆட்டமிழ்நதது அவுஸ்ரேலியாக்கு கவலைக்குரிய விடயம்.
மறுபடியும் பொன்டிங்க்குக்கு ஆப்பா? விக்கிரமாதித்தன் எங்கபோய்ட்டாரோ..:P

நெஞ்சில் நெஞ்சில்

அண்மைக்காலமாக தினமும் என் காதுகளில் தொடர்ந்து ஒலிக்கும் பாடல் இது. எங்கேயும் காதல் படத்தில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், ஹரிஸ் ராவேந்திரா – சின்மயி ஆகியோரின் இனிமையான குரல்களில், மதன் கார்க்கியின் அற்புதமான வரிகளில் காதுவழியாக உடலுக்குள் சென்று ஏதோ செய்கிறது.

no comments

126228

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. Unknown Says:

  பதிவு அருமை...
  சுஜாதாவின் நாவல்கள் எனக்கும் பிடித்தன..
  அவுஸ்திரேலியா-ஹிஹிஹி

 1. நத்தார்: நான் கொண்டாடேல. நீ பார்ட்டி வைத்தால் இன்று கொண்டாடவும் தயார்.

  சுனாமி: சோகமான நாள். :-(

  ப.ச.3: :-)))

  வேதாளம்: உவங்கள் அவுஸ்ரேலியாவுக்கு யாரும் ஆதரவளிப்பாங்களே?
  சொங்கி அணி...
  ஏதோ குருட்டு அதிர்ஷ்ரத்தில பேர்த்தில வெண்டு போட்டு போட்ட ஆட்டம்... கடவுளே கடவுளே....

  (SLS தரப்படுத்தப்பட்ட கன்கொன்னின் உண்மைப் பின்னூட்டம்)

 1. Jana Says:

  நத்தார் வாழ்த்துக்கள்..
  சுனாமி... மறக்கமுடியுமா என்ன? இழந்த சொந்தங்கள் அனைவருக்கும் பிரார்த்தனைகள்.
  பதிவர் சந்திப்பு - ஸ்வீட் மெமரீஸ்;.
  சுஜாதா - அந்த இரண்டு புத்தகங்களைப்பற்றியும் எழுதியுள்ளேன். என் ஹொக்ரெயில்களில்
  வேதாளம்...அதே..
  நெஞ்சில் நெஞ்சில் - ஹரிஸின் முத்திரை
  நோ...காமன்ட் - ஐயோ..ஐயோ...

 1. நத்தார் வாழ்த்துக்கள்..

  சுனாமி - கவலையுடன் நினைவு கூறுகிறேன்.

  பதிவர் சந்திப்பு - மறக்க முடியாத நாள்

  சுஜாதா - நான் வாசிக்கவில்லை.

  வேதாளம் - இன்னிக்கு மட்ச் என்கிறதை மறந்தே போனேன்.

  நெஞ்சில் நெஞ்சில் - இன்னும் கேட்கவில்லை.

  பொன்டிங் - ஐயோ பாவம்!

 1. நத்தார்: இந்தமுறை சூடாக என்ன இருக்கிறது எண்ட உண்மைக்கதையுடன் அருமையாகவே களிந்தது.

  சுஜாதா: இன்னும் வாசிக்கவில்லை. வாசிக்க வேணும்.

  சுனாமி: :|

  பதிவர்சந்திப்பு 3: அன்னாசிப்பழத்தை விடுங்க சார்.

  விக்கிரமாதித்தன்: அவர் இண்டைக்கு விளையாட கூட வரவில்லையாம்.

 1. நத்தார்: நாளை கொண்டாடலாம் என்று இருக்கிறேன்

  சுனாமி: மறக்க முடியாத ஒரு நாள்

  வேதாளம்: நடாபது எல்லாம் ஆஸ்திரேலியாவின் நன்மைக்கே :P

  பதிவர் சந்திப்பு : இனிமையான நாள்

  :))

 1. sinmajan Says:

  சுஜாதா: வாசிக்கவேண்டும்
  பதிவர் சந்திப்பும் கிறிக்கெற்: நானும் முதல்தடவை..
  மகிழ்வானதோர் அனுபவம்

 1. sinmajan Says:

  பவன் பார்த்துக்கங்க.. இனிமேல் நாமளும் மொக்கைப் பதிவர் தான்..
  http://nizal-sinmajan.blogspot.com/2010/12/blog-post_23.html ;)

 1. நல்ல தொகுப்பு :)

  சுஜாதா - நிகர் யார் :)
  சுஜாதாவின் நூல்கள் பற்றி சின்ன மாமாவிடம் பரிந்துரை கேட்கவும்.

  கிரிக்கெட் - ஆஸ்திரேலியா - அப்பிடின்னா? ;)
  விக்கிரமாதித்தன் - அவர் யாரு?

 1. :)

 1. வருகை பிந்திவிட்டது.. எரிந்தும் எரியாமலும்... அருமை..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்