Related Posts with Thumbnails
இரண்டாவது பதிவர் சந்திப்பு நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகின்றது. இந்த கால எல்லைக்குள் நம்மிடையே குட்டி சந்திப்புகள் அவ்வப்போது நடந்திருந்தாலும் அனைத்துப் பதிவர்களும் சந்திக்கும் பாரிய சந்திப்புகள் ஒன்றும் நடைபெறாதது கவலைக்குரியதே. இக்குறையை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யும் பொருட்டு பதிவர் சந்திப்பொன்றை நடாத்த முன்வந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பதிவர் சந்திப்பு
பதிவர்கள், புதிய பதிவர்கள், பதிவுலகத்தை உற்றுநோக்குபவர்கள்(வாசகர்கள்) ஆகிய அனைவரும் கலந்து கொள்ளலாம். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு

இடம்: கைலாசபதி அரங்கு,
            தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
            காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06
காலம்: 19ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.31 மணி

நிகழ்ச்சி நிரல்

 • அறிமுகவுரை

 • பதிவர்கள் அறிமுகம்

 • கலந்துரையாடல் 1 - கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்.

 • கலந்துரையாடல் 2 - தமிழ் தட்டச்சு கருவிகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்.

 • இடைவேளையில் இன்னிசை.

 • கலந்துரையாடல் 3 - பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.

 • கலந்துரையாடல் 4 - பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.

 • பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.

 • நன்றியுரை.

பதிவர்கள், சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பும் பதிவுல வாசகர்கள் அனைவரும் உங்கள் வருகையை முற்கூட்டியே ஏற்பாட்டுக்குழுவினரிடம் மின்னஞ்சல் முலம் தெரிவிக்கவும்.
இம்முறை ஏற்பாட்டுக்குழுவினர்
நிரூஜா, வதீஸ், அனுதினன், அஷ்வின், பவன்.

பி.கு – வெளியிடங்களிலிருந்து வருவோர் தங்குமிட வசதிகள் தேவைப்படின் பதிவர் அஷ்வினை 13ம் திகதிக்கு முதல் தொடர்புகொண்டால் உரிய வசதிகளைச் செய்து தரமுடியும்.


இது பதிவர்களால் பதிவர்களுக்கு நடாத்தப்படும் சந்திப்பு எனவே சந்திப்புத் தொடர்பான தட்டிகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது, அவற்றை உங்கள் வலைப்பூக்களில் இட்டு சந்திப்புக்கு ஆதரவு வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..:)
தட்டிகளைப்பெற இங்கே சொடுக்குங்கள்

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. நிகழ்வு சிறப்புற வாழ்த்துக்கள்..

 1. Subankan Says:

  சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துகள் :)

  தட்டி இணைத்தாயிற்று

 1. Jana Says:

  இடைவேளை இன்னிசையில் தாங்கள் "றப்" பாடவுள்ளதாக தகவல்கள் அடிபடுகுதே உண்மையா?
  சந்திப்பு இனிதே இடம்பெற வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
  அப்புறம்..ஜெஸ். நான் வருவேன்.

 1. பீப்பீ ரசிகர் மன்றம் Says:

  ஏற்பாட்டுக் குழுவினரின் பெயரில் பதிவர்களின் விடிவெள்ளி, பிரபல கிரிக்கெட் அனலிஸ்ட், முன்னாள் பிரபல பதிவர், பிரபல பின்னூட்டவாதி கிரிக் இன்போ புகழ் கன்கோனை இணைக்காகதற்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  - பீப்பீ ரசிகர் மன்றம்

 1. சந்திப்போம்.

  தட்டி இணைத்தாயிற்று

 1. சந்திப்போம் சிந்திப்போம்.

  தட்டிகள் இணைத்தாயிற்று

 1. சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

 1. இந்த முறை மிக முக்கியமான VIP ஒருவர் வருவதற்கு பிளான் பண்ணுவதாக செய்தி அடிபடுகிறது. கொஞ்சம் இந்த ரிப்போட்டர் தொல்லை எல்லாம் இல்லாமல் வசதி செய்ய முடியுமா? ஹி ஹி ஹி.....
  அது வேறு யாருமல்ல நான்தேன்.

 1. @இனந்தெரியாத நபர்:
  ஏற்பாட்டுக்குழுவில் நான் இல்லை.


  சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள்.
  சந்திப்போம்.
  ஆவலாயுள்ளேன்.

 1. சீப்பீ ரசிகர்கள் Says:

  ஆங்கிலத்தில் பதிவு எழுதும் தமிழர்கள் வரமுடியாதா

 1. சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

 1. சின்ன மாமா Says:

  சந்திப்பை சாவகச்சேரியில் வைக்க முடியாதா?

 1. ஒரே அலைவரிசை உடையவர்கள் ஏற்பாட்டுக்குழுவில் இருப்பதனால் சுவாரசியங்களுக்கு குறைவிருக்காது என நினைக்கின்றேன். வாழ்த்துக்கள். பப்புமுத்துவின் கவியரங்கம் இருக்கா?

 1. Bavan Says:

  ம.தி.சுதா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  சுபா அண்ணா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  ஜனா அண்ணா,

  றப் அல்ல கானாப்பாட்டு..:P
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  பீப்பீ ரசிகர் மன்றம்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  யோ அண்ணா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  அனு,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  வானம்பாடிகள்,

  நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  துமிழ்,

  அவ்வ்வ்...
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
  ***

  கன்கொன்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
  ***

  சீப்பீ ரசிகர் மன்றம்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  டிலீப்,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***

  சின்ன மாமா,

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  ***
  வந்தியண்ணா

  நிகழ்வு முடிய யாராவது போகமாட்டன் எண்டு அடம்பிடிச்சா கட்டாயம் கவியரங்கம் இருக்கும்..:P
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

 1. வாழ்த்துக்கள்.
  துடிப்போடு கூடிய ஏற்பாட்டுக் குழு கடந்த இரு முறைகளை விஞ்சுவார்கள் என் நம்புகிறோம்.

 1. ஏற்பாட்டுக்குழுவில் அங்கம் வகிக்கம் புண்ணிய ஆத்மாக்களுக்கு எனது பிரார்த்தனைகள்.
  தட்டிகள்க்கு நன்றி

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்