Related Posts with Thumbnails

ஸ்டைல்னா அது நீதாய்யா..

பதிவிட்டவர் Bavan Saturday, December 25, 2010 13 பின்னூட்டங்கள்
என்னைத் தொடர் பதிவுக்கு அழைத்த லோஷன் அண்ணாவுக்கு நன்றிகள். ரஜனியின் எனக்குப்பிடித்த பலபடங்களில் ஒரு 10 படங்களை மாத்திரம் தத்திருக்கிறேன். இந்தத் தொடர் பதிவை ஏற்கனவே பலர் எழுதிவிட்டதால் யாரை அழைப்பதென்று தெரியவில்லை. இன்னும் எழுதாதவர்கள் எழுதிக்கொள்ளுங்க.

பில்லா
billa1980
ரஜனி இரு வேடங்கள் தாங்கி நடித்த ஒரு படம். எத்தனை ரீமேக்குகள் வந்தாலும் அசல் இதுதானே. எனக்குப்பிடித்த ரஜனியின் படங்களிலும் ஒன்று.
தீ
1029ded822
தொழிலாளிகளுக்கு வரும் பிரச்சினைகளை காட்டியிருக்கும் ஒரு படம். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது குறிப்பிடப்பட வேண்டிய விடயம். தவிர குடும்பத்தைக் காப்பாற்ற படிக்காமல் வேலைக்குப் போகும் ரஜனி கடைசியில் தனது தம்பியாலேயே கைது செய்யப்படுவது போன்ற பாசப்பிணைப்புகள் நிறைந்த ரஜனியின் சற்று வித்தியாசமான நடிப்பை எமக்குக் காட்டிய படம். “சுப்பண்ணா சொன்னாருண்ணா சுதந்திரம் வந்ததுண்ணு” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.
முத்து
muthu
ஆரம்பத்தில் நகைச்சுவையான ஒரு மனிதராக எஜமானுக்கு விசுவாசமான ஒரு வேலைக்காரனாக வரும் ரஜனிக்கு வரும் கஷ்டங்கள், போன்ற திருப்பங்கள் உள்ள படம். அவற்றையும் தாண்டி நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். ரஜனியின் நகைச்சுவை யாருக்குத்தான் பிடிக்காது.

MR.பாரத்
Mr-Bharath
என்னம்மா கண்ணு செளக்கியமா? என்ற பாடல் வரும் படம். தனது தாயை ஏமாற்றிய தந்தையை தனது தாய்க்காக தந்தை சத்யராஜுடன் போராடும் படம். தந்தைக்கும் தனயனுக்கம் நடக்கும் போராட்டத்தைப் படமாகக் காட்டியிருப்பார்கள். தனுஷ் அந்தப்படத்தின் ரீமேக்கை பண்ணியிருந்தாலும்கூட ரஜனியின் நடிப்புக்கும் ஸ்டைலுக்கும் முன்னால் நிற்க முடியுமா.

தில்லுமுல்லு
images
ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் இந்திரன்
ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் சந்திரன்
ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் இரட்டைவேடம் போடுவது போன்ற மரணநகைச்சுவைப் படம். இதை டீவியில் எப்போது போட்டாலும் நான் பார்க்கத் தவறியதில்லை.

தளபதி
thalapathi
இப்போது இந்தப்படத்தைப் பற்றிச் ஒரு வரியில் சொல்வதென்றால் நண்பேன்டா என்று சொல்லலாம். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட ஒரு படம். இதில் சின்னத்தாயவள் மற்றும் காட்டுக்குயிலு ஆகிய பாடல்கள் தினமும் கேட்கும் playlistக்குள் இடம்பிடித்திருக்கிறது.

பாட்சா
Badsha
ரஜனியின் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம், நான் முதலாவதாகப் பார்த்த ரஜனி படம் என்பதால் இன்னும் பிடிக்கும். இப்படத்தில் ரஜனி ரகுவரன் சந்திக்கும் இடம், அந்த நேரத்தில் அவரை ரகுவரன் ஆட்கள் சூழ்ந்து இருப்பதை காட்ட சிரித்துவிட்டு கொஞ்சம் அங்கே பாரு கண்ணா என்பார். வாவ் அருமை. அந்த ஸ்டைல் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

அருணாச்சலம்
Arunachalam
சின்ன வயதில் இரசித்த இன்னுமொரு படம், இப்பொழுதும் கூட.
ரஜனி வீட்டை விட்டு வெளியேறி உருத்திராட்சத்தை குரங்கு எடுத்துச் செல்லுதல், ரஜனி கதிரையில் இருந்து ஆடி விழுதல் போன் நகைச்சுவைக் காட்சிகள் தொடக்கம், ரஜனி குறிப்பிட்ட சொத்தை குறிப்பிட்ட காலஅவகாசத்தில் செலவழித்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அதை செலவழிக்கும் காட்சிகள் வரை அற்புதமாக இருக்கும். ரஜனியின் ஸ்டைஸ்+ஆக்சன்+காமடி நிறைந்த ஒரு படம்.

படையப்பா
rajini5
“ஏனுங்க அந்தப் பாம்புப்புத்துக்குள்ள கைய வுட்டீங்களே கடிக்கலைங்களா” என்ற சந்தேகத்துக்கு எப்படா பதில் சொல்லுவார் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்..:P
இந்தப் படத்தில் நீலாம்பரி சொல்லுவது போல வரும்
“வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னைய விட்டுப் போகல படையப்பா”
என்ற வார்த்தையை இன்றும் ரஜனி மெய்யாக்கிக்கொண்டிருப்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

எந்திரன்
enthiran21
எந்திரன் ரஜனியின் படங்களில் முற்றிலும் வேறுபட்ட படம், ஷங்கர் என்ற இயக்குனர் ரஜனியை சிறப்பாகக் கையாண்டிருப்பார். Making of Enthiranனில் ரஜனியின் கஷ்டங்கள் நன்றாகத் தெரிந்தது. ஆனால் ரஜனியின் வழக்கமான ஸ்டையிலை காணமுடியாதது ரஜனியின் தீவிர ரசிகர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் ரோபோ ரஜனி தனது பேட்டைக்குள் புகுந்த மனித ரஜனியைக் கண்டுபிடிக்கும் காட்சியில் ரஜனியின் பழைய ஸ்டைலைக் கண்டேன்.

ரஜனி இமயத்திற்குப் போனாலும் நடிப்பிலும் ஸ்டைலிலும் அதைவிட இமயம்தான்.

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. :-)))

  (SLS standardized original Kangon smiley)

 1. :-)))

  (SLS standardized original shathiesh smiley)

 1. /*... எத்தனை ரீமேக்குகள் வந்தாலும் அசல் இதுதானே.
  ..*/
  ரஜினிக்கு முதலே அமிதாப் பச்சன் நடிச்சிட்டார் என்று நினைக்கிறேன்... ரஜினியின் பில்லா கூட ரீமேக் தான்..

 1. // ரஜினிக்கு முதலே அமிதாப் பச்சன் நடிச்சிட்டார் என்று நினைக்கிறேன்... ரஜினியின் பில்லா கூட ரீமேக் தான்.. //

  பவன்,
  டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
  ஹி ஹி ஹி....

  http://en.wikipedia.org/wiki/Don_%281978_film%29

 1. ம்..என்னத்தை சொல்ல...

 1. Unknown Says:

  சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்.

 1. :)))))

 1. :-)))

 1. Jana Says:

  ///இனியவன் said...
  சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்///

  முன்பு இது ஒரு அதிகபிரசங்கித்தனமான விசனம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போ...ஒத்துக்கின்றேன்.
  அன்று பிறந்த, நேற்றுப்பிறந்த,இன்று பிறந்த, ஏன் நாளை பிறக்கும் குழந்தைகளின் விருப்ப நாயகன் ரஜினிதான்.

 1. நல்ல தெரிவுப்படங்கள்...
  அருமையான குட்டிக்குட்டி விமர்சனங்கள்..

 1. :)

 1. good boy தொடர் பதிவை ஏற்று எழுதியதற்கு..

  பில்லா - டொன் தொடர்பு பற்றி சொல்வர முதல் நண்பர் முந்திக்கொண்டு விட்டார் :)
  தனுஷ் மிஸ்டர் பாரத் படத்தை உல்டா செய்யவில்லை. அந்தப் பாடலை மட்டுமே :)

  வித்தியாசமான தெரிவுகள்..

 1. நீங்க சொன்னதுல ஆறு படம் ரீமேக் படம்.. :-)
  இருந்தாலும், தலைவர் அவரு ஸ்டைல்ல வித்தியாசப்படுத்தி இருப்பார்

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்