Related Posts with Thumbnails
Ponting-and-Strauss-in-Ad-004
ஸ்ரோஸ்:
சுவிங்குடன், யோக்கரைக் கலந்தானாயின்
விக்கட் புடுங்கப் போகுது எச்சரிக்கை.
அவுட் ஸ்விங் மட்டும் போட்டானாயின்!
மெய்டின் ஓவர் எச்சரிக்கை
பந்தைத் பிடித்ததும் முறைத்துக் கதை பேசினால்
டென்சன் ஆக்கிறான் எச்சரிக்கை
கட்சை விட்டதும் கத்திப் பேசினால்
பயபுள்ள காண்டாகிட்டான் எச்சரிக்கை
புல்டாசாக முகத்துக்கு வீசினால்
மூஞ்சிய உடைக்கபோறான் எச்சரிக்கை

பட்டிங் வரும்முன்னே எல்லா கார்ட்டையும்
கவனமாய்ப் போடுதல் அதுவே பழக்கமாகக் கொள்
ரன் எடுப்பதொன்றே குறியான பின்
பவுண்டரி அடிப்பது ஒன்றே உறுதியாகக் கொள்
உனக்கு பந்து போடுறவன் பயங்கரமா பவுன்ஸ் அடிப்பான்
யோசிக்காமல் குனிந்து விளையாடாமல் விட்டுக்கொள்
அவுட் ஸ்விங் பவுன்சர் இரண்டும்
உன் பட்டில் படவே படாது என்றே கொள்
Short ballக்கு ஹீக் சொட் அடித்தல்
என்ற பண்டைச் செயல்
உன்னால் செய்ய முடியாது ஒத்துக்கொள்
இந்தப் பந்துகளுக்கெதிராய் உயிரை விடாமல்
சீக்கிரம அவுட்டாகி ஓடும் பணி செய்துகொள்

பொன்டிங்:
ஆஹா… அவுட்டாகி ஓடும் பணி சேர்த்துக்கணுமா?
பணியே அவுட்டாகி ஓடுவதென்னானபின் பட்டிங் எதற்கு? தனியே வருவேன்
ஸ்ரோஸ்:அப்பிடி வாங்க வழிக்கு, சோ நீங்க பாட்மன்தானே
பொன்டிங்: புவர்லி ஆஸ் அக்கியூஸ்ட்
ஸ்ரோஸ்: அப்ப ஜஜ்மென்ட் சொல்றன்
பொன்டிங்: சொல்லுங்க..
ஸ்ரோஸ்: பதிலுக்கு ஒரு கவிதை சொல்லணும் அதுதான் தண்டனை
பொன்டிங்: யாருக்கு?
ஸ்ரோஸ்: அது கவிதையக் கேட்டாத்தானே தெரியும்
பொன்டிங்: அதுவும் சரிதான். ஆனால்…நீங்க கோவிச்சுக்க கூடாது!
ஸ்ரோஸ்: ஏன் இங்கிலாந்தைப் பற்றிக் கேலியா?
பொன்டிங்: சாச்சா…இது ஒரு அணித்தலைவரின் வேண்டுதல் மாதிரி
ஒரு அணித்தலைவர் தெய்வத்துக்கிட்ட பாடுற தோத்திர பாடல்!
ஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா?
பொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு
ஸ்ரோஸ்:கவிதையை கேட்டால் கேள்விக்குறி? ரோதனைக்குறியா மாறலாம்
இல்லையா?
பொன்டிங்: ங்கொய்யால மே பி… மே ஐ..
ஸ்ரோஸ்: பிளீஸ்..

பொன்டிங்:
பல ஸ்விங் வீசிப் பந்து வீசுகையில் – அதை
சிக்ஸராய் பவுண்டரியா மாற்ற முடியாத
சப்பையான பாட்ஸ்மன் வேண்டும்

சின்னப்பசங்களும் சிக்ஸ் அடிக்கக்கூடிய
பந்து வீசவே தெரியாத எதிரணியும் வேண்டும்
பாட்னசிப்புகள் போடும் வேளையில்
பவுண்டரி கொடுத்தவன் உதவிட வேண்டும்

போலிங்கின் போதும் உதவிட வேண்டும்
அடித்து நெகிழ்ந்திட அரைச்சதம் வேண்டும்
முழுச்சதம் அடிக்க வசதியாய்
பாறை பதத்தில் பட்டும் வேண்டும்

அதற்குப்பின்னால் கிடைக்கும் ரன்னும்
அது சிங்கிள் பாய்ச்சி கூட்டிய அவரேஜீம்
சதக்குவிப்புகள் அதிகமுள்ள
மேதாவிலாச கரியரும்(career) வேண்டும்

Onedayயில் நூறு டெஸ்டில் இருநூறென
டீமில் நிலைத்திட ரன்னும் வேண்டும்
பவுண்டரி வேண்டும் சிக்சும் வேண்டும்
எனக்கென வீரரை கேட்கும் வேளையில்
கொடுத்துதவும் நல்ல தேர்வுக் குழுவும் வேண்டும்

இப்படி அணியொன்று வரவேண்டும் என நான்
ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்
வந்தருவார் நம் விக்கிரமாதியெனக்
கடும் நோன்பு புரிந்ததும் தேடிப்போனேன்

ஸ்ரோஸ்: தேடி எங்க போனீங்க?
பொன்டிங்: கிரவுண்டுக்குத்தான்

பொடி நடை போட்டே பந்து பிடிக்கவென
காலை முதல் மாலை வரை போலி வீரர்கள் திரிவது கண்டேன்
வேகமேயற்ற ஸ்விங்கற்ற பந்துக்கும் அடிக்க முடியாது அவுட்டானது கண்டேன்!
எக்ட்ரா பிளேயருக்கு எல்லாத்தகுதியும் இருந்தும் கூட அணியில் இடம்கிடைக்கா அரசியல் கண்டேன்
பட்டிங்கில்லா வேளையில் மட்டும் அவன் எக்ட்ராபிளேயர் வேண்டும் என்றான்
எவ்வணியானால் என்னவென்று எல்லா அணியிலும் தேடிப்பார்த்தேன்
வரவர ஒழுங்காய் கிறிக்கட் விளையாடும் வீரனைக் காண்பது மிகமிகக் குறைவு
வரந்தரக் கேட்டதால் ஸ்ரோசண்ணே உனக்கு வீரமான வீரன் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
பறந்துகொண்டே காட்ச் பிடிக்கும் இங்கிலாந்து அணியின் வீரர்கள் எப்படி?
ஆஷஸ் சொல்லும் வரலாறு அத்தனையும் வாஸ்தவமாக நடந்தது உண்டோ?
இதுவும்(batting) உதுவும்(bowling) அதுவும்(fielding) செய்யும் இனிய வீரர் யார்க்கும் முண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
விக்கிரமாதித்தா நமஸ்துதே!

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. பொன்டிங் & ஸ்ரோஸ்
  டொக்கின்ங் சூப்பர்

 1. ஏன்டா ஏன்டா ஏன்டா....

  பொன்ரிங்கை வறுத்தெடுத்தாலும் நிறையவே இரசித்தேன்...

  கலக்கல் பவன்.
  பின்னிப் பெடலெடுத்துவிட்டாய்.

 1. Unknown Says:

  என்னத்தச் சொல்றது.. கமல் சார் call எடுப்பாரோ?????????

 1. //////வந்தருவார் நம் விக்கிரமாதியெனக்
  கடும் நோன்பு புரிந்ததும் தேடிப்போனேன்////

  ஞாயிறு தெரியும் தானே பார்ப்போம்...

  கலக்கல் தான் பவன்.... ரொம்பவே நல்லாயிருக்கு...

 1. ஹி.. ஹி..ஹீ...! பொண்டிங்கின் கவிதை பிரமாதம். அதை விட பிரமாதம் கடைசியில் வந்த விக்கிரமாதித்தன் :)

 1. அபாரம். அற்புதம். ரசித்து சிரித்தேன்.. சிரித்து ரசித்தேன்

 1. அவ்வ்.. பொன்டிங் இப்போ இருக்கும் நிலையில் விக்கிரமாதித்தன் அருளும் கை கொடுக்காது

 1. Subankan Says:

  அடேய் அறுவை மன்னா
  கலக்கல் :)

 1. Unknown Says:

  நல்லாயிருக்கு சூப்பர்

 1. Unknown Says:

  Fantastic bavan!!! Your sense of humour is awesome!!!

 1. சூப்பர்... நல்லா யோசிக்குரீங்க..கலக்கல்.. பாண்டிங்க வச்சே நம்ம பதிவுகள் போகுது...

 1. super :)

 1. மரண மொக்கை :)

 1. ஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா?
  பொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு

 1. பவன் கலக்கல்டா

  ஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா?
  பொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு

  இந்த வரிகளுக்காக உன்னை அணைத்து கைகொடுக்கலாம். சபாஷ்டா.

 1. க்ர்ர்ர்ர்ர்ர்

  எங்க பொன்டிங்கையா கலாய்க்கிறீங்க, சிங்கம் என்னிக்குமே சிங்கம்தான்...

  கலக்கல் பவன்

 1. வழமை போல் அருமை பவன்

 1. Jana Says:

  நான் சொன்னேன்தானே... இப்போ விஜய் பாவம்டா எவ்வளவு எழுதினாலும் தாங்குறான்டா..எண்டுவிட்டு இப்போ பொன்டிங்கை வறுக்க ஆரம்பித்துட்டாங்க... நடக்கட்டும், நடக்கட்டும்.

 1. Madhav Says:

  மிகவும் அருமை

 1. ஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா?
  பொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு
  ////

  HA HA

 1. சுப்பர்!

 1. அருமை பவன்....
  மன்மதன் அம்பு போய் ஆஷஸ் ஆப்பு....  ஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா?
  பொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு

  என்ன ஒரு பதில்...இதயல்லவா எதிர்பாத்தம்......

 1. Bavan Says:


  டிலீப்,
  கன்கொன்,
  அஸ்பர்-இ-சீக்,
  ம.தி.சுதா,
  நிரூஜா,
  லோஷன் அண்ணா,
  சுபா அண்ணா,
  சிவதர்ஷன்,
  சஞ்சீவன்,
  அஷ்வின்,
  இராமசாமி,
  philosophy prabhakaran,
  வந்தியண்ணா,
  யோ அண்ணா,
  தர்ஷன்,
  ஜனா அண்ணா,
  Madav,
  பிரியமுடன் பிரபு,
  கார்த்தி,
  ஜனகன்,


  அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்..:D

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்