Related Posts with Thumbnails

குடி

பதிவிட்டவர் Bavan | நேரம் 4:31 PM | 17 பின்னூட்டங்கள்
“போடா போய் எடுத்துக்கொண்டு வா, இல்லாட்டி உனக்கு அட்மிசன் தரமுடியாது, டிரக்டரின் குரல் ஓங்கிஒலித்து கட்டிடம் முழுவதும் அதிர்ந்துகொண்டிருந்தது. நூற்றுக்கணக்காணவர்கள் கட்டடத்திற்குள் இருந்தாலும் அவரின் குணமறிந்து யாரும் சத்தமாக பேசவில்லை. அவர் கண்ணாடி அறைக்குள் வைத்துத் திட்டியபோது யாரோ கதவைத் லேசாகத்திறந்திருக்க வேண்டும். நான் திட்டுவாங்கியதை அனைவரும் கேட்டுவிட்டிருந்தார்கள்.
puppy-box
ச்சா.. முதல்நாளே இப்பிடியா, அவமானம் அனைவரின் முன்னிலையிலும், அதுசரி அட்மிசன் வழங்கும் தினத்தன்று ரிசல்ட் சீட்டை கொண்டுவராமல் வந்தால் யாருக்குத்தான் கோபம் வராது.
கல்லூரி, பிரதான வீதியிலிருந்து 4 கிலோமீட்டர் உள்ளே காட்டுப்பகுதியில் இருக்கிறது, வழியில் ஆங்காங்கே ஓரிரு வீடுகள், தண்ணீர் வழிந்தோடும் கான், இரண்டு ஏற்ற இறங்கங்களுடன் கூடிய குண்டுகுழியான பாதை, பாதையோரங்களில் ஓங்கி வளர்ந்த மரங்கள், பஸ் எப்பவாவது வரும் வராவிட்டால் நடந்துதான் செல்லவேண்டும்; நடக்கத் தொடங்கினேன். மழை தூற ஆரம்பித்திருந்தது. ஓடிப்போய் பஸ்தரிப்பிடத்துக்குள் நிற்பதற்குள் மழை எனது நீல சேர்ட்டில் புள்ளிகள் வைத்து விளையாடியிருந்தது.

முழங்கையை தரிப்பிடமதிலில் ஊன்றியபடி அந்த இடத்தை சற்று உற்று நோக்கிக்கொண்டிருந்தேன், எதிரில் ஒரு சிறு சாப்பாட்டுக்கடை, அதற்கு அருகில் போகும் மண்தரையுடன் கூடிய வீதி, “கள்ளுத்தவறணை” என்று பெயர் பொறித்து வீதியின் உள்ளே என அம்புக்குறியிடப்பட்டிருந்த விளம்பரப்பலகை, அதற்கு அருகில் குறுகிய எழுத்தில் என் பார்வைப் பரப்புக்குள் உட்படாமல் வீதியின் பெயர்ப்பலகை, தூரத்தில் மடக்கிய கறுப்புக் குடையுடன் மழையில் நனைந்து தள்ளாடியபடி இருவர்.

எனது கையிலிருந்த ஆவணங்கள் நிறைந்த  பைலை மதில் சுவரில் வைத்து விட்டு கைகளால் தலையைத் துவட்டிவிட்டு, கண்களை இறுக்கி மூடி தலையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு இமைகளைத் திறக்க, பஸ் தரிப்பிடத்துக்குள் இருப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த சீமெந்துக் கட்டுக்குக்கீழே இரண்டு நாய்க்குட்டிகள் ஒன்றன்மேல் ஒன்று ஏறி குளிரில் நடுங்கியபடி படுத்திருந்தன. பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அந்த தரிப்பிடத்துக்குள் யாரோ கடதாசிப் பெட்டியை பாயாகப் பாவித்து நித்திரை கொண்டிருப்பார்கள் போலும் நன்றாக அழுத்தத்துக்கு உட்பட்டு அயன் பண்ணிய சட்டைபோல் கடதாசிப்பெட்டி ஒன்று தரிப்பிடத்துக்குள் கிடந்தது. அதை எடுத்து விரித்து பெட்டி போல ஆக்கி ஒரு பக்க வாயிலை மூடி மறுபக்க வாயிலை நாய்க்குட்டிகளுக்குக் காட்ட நன்றியுடன் உள்ளே ஏறி வாலாட்டின. எனக்குள் சிரித்துக் கொண்டு பெட்டியை மூடி மழைச்சாறல் படாமல் சீமெந்துக் கட்டுக்குக் கீழே வைத்துவிட்டு நிமிர அந்த இருவரும் உள்ளே வந்துவிட்டிருந்தனர்.

“டேய் நாயே நான் அவ்வளவு சொல்லியும் அவள் எப்படியடா அப்பிடிச் சொல்லலாம்?, முதலாமவர்.
“அவள் செய்தது பிழையே இல்லையடா, நீ குடிகாரப் பயல்தானே பரதேசி, இரண்டாமவர்.
“டேய் உன்னைக் கொல்லாம விடமாட்டன்டா, என்றபடி முதலாமவன் மற்றவன் மேல் பாய அவன் போதையில் தடுமாறு என்மீது விழமுயல இலாவகமாக நழுவி என் பைலை எடுத்துக் கொண்டு வெளியே வர பஸ் என் முன்னாலேயே வந்து நிற்க, ஓடிப்போய் பஸ்சில் பின்பக்கக் கதவின் கம்பியை ஓடிப்பிடித்து ஏறிக்கொண்டேன்,

“சலாக்சுளிங்டொங்…” பின்னால் போத்தல் உடையும் சத்தம் பலமாக் கேட்டது.

****
மறுநாள் கல்லூரியின் முதல்நாள் பாடங்கள் முடிய வழக்கபோல பஸ்சைக் காணவில்லை, நடக்கத் தொடங்கினேன். மீண்டும் மழை, ஓட்டம், ஆனால் இம்முறை பஸ்த்தரிப்பிடவாயில் வரை மட்டுமே சென்ற கால்களுக்கு தடாலடியாக மூளை அனுப்பிய கட்டளையை நடைமுறைப்படுத்த முயன்று இரண்டு துள்ளல்களுடன் கட்டளை நிறைவேற்றிக் கால்கள் நிற்க. உள்ளே கண்ணாடிப்போத்தல் உடைக்கப்பட்ட துகள்கள், பிரவுண் கலரில் சாக்கைப் பிய்த்துப் போட்டாற்போல தும்புதும்பாக ஏதோ ஊகிக்க முடியாத ஒன்று, அத்துடன் வெள்ளை நிறக்கற்கள் மாதிரியும் ஏதோ, கிழித்தெறியப்பட்ட கடதாசிப் பெட்டி, என்ன இது என்று ஊகிப்பதற்குள் மறுபுறம் பற்றைக்குள் நனைந்தபடி தலையிலிருந்து இரத்தம், வடிந்து தசைகள் பிய்ந்து உள்ளே மண்டையோடு தெரிய செத்துக் கிடந்தன நாய்க்குட்டிகள்.

குளிர், மழை, வெள்ளம்

163740_1804971489108_1384525971_2985937_2400337_n

தற்போது இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் பலத்த சேதங்களையும் அழிவையும் சந்தித்து தற்போது பாடசாலைகளையும் முகாம்களையும் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்யவேண்டியது எமது கடமை. எனவே எம்மால் இயன்ற உதவிகளை முடிந்தளவு துரிதமாகச் செய்வோம். மீண்டும் காலநிலை பழைய நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை வைப்போம்.

 

பொங்கலோ பொங்கல்

f23dadb6-1f22-47bb-bad0-9041d706fac5_S_secvpf.gif

அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். மலரப்போகும் பொங்கல் தினத்திலாவது சூரியன் எட்டிப்பார்க்குமா?

 

சிறுத்தை

siruthai-movie-stills-029

இன்று சிறுத்தை முதற்காட்சி பார்க்கப் போயிருந்தேன். குடுத்த காசுக்கு திருப்தியாக படம் பார்த்துவிட்டு வெளியே வந்த கார்த்தியின் மற்றுமொரு படம். கார்த்தி இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கும் படம். ஆரம்பத்தில் கலகலப்பாக நகைச்சுவையாக ஆரம்பிக்கும் படத்தில் முதற்பாதியின் இறுதியில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பை அப்படியே இரண்டாம்பாதியின் முதல் அரைவாசி வரை கூட்டிச்சென்று கடைசிப் பாதியை கார்த்திக்கே உரிய குறும்பு, நகைச்சுவையுடன் அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

சந்தானமும் வழக்கம் போல கலக்கியிருக்கிறார். தமன்னா இடுப்பு படத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தாலும் குஷி ஜோதிகாவுடன் போட்டிபோடும் அளவுக்கு இல்லை..:P

இவை தவிர படத்தில் திவ்யா என்ற பெயரில் வரும் பேபி ரக்சனா கலக்கியிருக்கிறார். கார்த்தி கோபமாக நடந்து கொள்ளும் ஒரு காட்சியில் குழந்தையின் மழலை மனதை உருகவைத்தது. மொத்தத்தில் சிறுத்தை சீரியஸ் பதிவில் கும்மியது போன்ற கலகலப்பான உணர்வைத்தந்தது.

படத்தின் கிளைமாக்ஸ் எம்மை அந்தக்கால படங்களுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. மற்றும்படி சிறுத்தை  -  சிரித்தபடி பொழுதுபோக்க விரும்புபவர்களுக்கு மட்டும்

மனிதாபிமானம்

167560170_4bc4e59e0d

போன வாரம் ஒரு வெள்ளிக்கிழமை குடி குடியைக் கெடுக்கும் என்பதை முதன்முதலாகக் கண்கூடாகப் பார்த்தேன். அன்று நாங்கள் வகுப்பு முடிந்து பஸ் ஏறுவதற்காக வழக்கமாக பஸ் ஏறும் தரிப்பிடத்திற்கு வந்தோம். அங்கே இரண்டு நாய்க்குட்டிகள் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே வருவதைக் கண்டதும் பயந்து பயந்து ஒரு ஓரத்தில் ஒதுங்கி ஒளிந்து கொள்ள முற்பட்டது.

 

அவதானித்துப் பார்த்ததில் ஒரு நாய்க்குட்டியின் கண்ணுக்கு சற்று மேலே காயம் வந்து குருதி வழிந்திருந்தது. பஸ்தரிப்பிடத்துக்குள் உடைந்த போத்தல்த்துண்டுகள் கிடந்தது. முதல்நாள் யாரோ பஸ் தரிப்பிடத்துக்குள் இருந்து மது அருந்திவிட்டு போதையில் கண்மண் தெரியாமல் நாய்க்குட்டிகளுக்கு அருகில் போத்தலை உடைத்திருக்கவேண்டும் அதன் காரணமாக தலையில் அடிபட்டிருக்கலாம் என்று ஊகிக்கமுடிந்தது. அருகில் உள்ள கடையில் கார்ட் போர்ட் பெட்டி வாங்கி நாய்க் குட்டிகளை உள்ளே பத்திரமாக வைத்து மழை சாரல் படாமல் பஸ் தரிப்பிடத்துக்குள் வைத்துவிட்டு வந்தோம்.

அடுத்த இரண்டு நாட்கள் எமக்கு வகுப்பு இல்லை திங்கட்கிழமை சென்று பார்த்த போது பெட்டி கிழித்து எறியப்பட்டிருந்தது. ஒரு நாய் தரிப்பிடத்துக்குள்ளும், மற்றது தரிப்பிடத்துக்கு வெளியில் மழையில் நனைந்தபடி இறந்துகிடந்தது..:(

 

Lolita

4950153006_3be5cd804e

லோலிட்டா இந்தப்பாடலைக் கேட்டதிலிருந்து திரும்பத் திரும்பக் கேட்கவேண்டும் போன்ற உணர்வு ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனது ரிங்டோன்கூட அந்தப்பாட்டுத்தான் போட்டிருக்கிறேன், யாரும் அழைப்பெடுத்தாலும் சற்றுத்தாமதமாகத்தான் அழைப்புக்கு பதிலளிக்கிறேன் (சிலர் நான் நித்திரை என்று நினைத்துப் பொறுமையிழந்து அழைப்பை அரைவாசியில் துண்டித்தும் விடுகிறார்கள்..:P) அந்த அளவுக்கு இப்பாடல் எனக்குப் பிடித்துவிட்டது. முதலாவது ஹரிஸ் ஜெயராஜின் இசை + கார்த்திக்கின் குரல் என்றால் அடுத்து தாமரையின் அழகான வரிகள்.

 

நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா

யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா

நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா

என் ஆகாயமதில்கூட பல வெண்ணிலா..

 

NO COMMENTS

real_meaning_words_Funzug.org_08

1 2 3 4 5 6 no

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (28) poet (34) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (64) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்