Related Posts with Thumbnails

என்னமோ ஏதோ...

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:07 AM | 7 பின்னூட்டங்கள்
என்னமோ ஏதோ...
எண்ணம் திரளுது கனவில்!
வண்ணம் பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!
என்னமோ ஏதோ..
முட்டி முளைக்குது மனதில்!
வெட்டி எறிந்திடும் நொடியில்!
மொட்டு அவிழுது கொடியில்!

 கோ படத்தின் என்னமோ ஏதோ - இந்தப்பாடலைக் கேட்டுக்கும் போது இவை மட்டுமல்ல இன்னும் என்னமோ ஏதோ எல்லாம் செய்கிறது இதன் இசை. ஹாரிஸ் ஜெயராஜ் அப்படியே மனதில் தேனைப் பிழிந்து ஊற்றி என்னமோ ஏதோ செய்துவிட்டார். எனது மொபைல் ரிங்டோன், அலாரமிலிருந்து, நீங்கள் அழைப்பெடுக்கும் போது போகும் Caller tune வரை அனைத்தையும் என்னமோ ஏதோ ஆட்கொண்டுவிட்டது. தினமும் ஆலாப் ராஜுவின் குரல் என்னைச்சுற்றி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை,
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை,
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...

இரண்டாவது விடயம் இப்பாடலின் வரிகள். மதன் கார்க்கியின் இந்த வரிகளுக்கு சல்யூட். என்ன ஒரு நவீனத்துவமான கற்பனை. படத்தில் போட்டோகிராபராக வரும் ஹீரோவுக்கு காதல் வந்தால் மனதில் Out of focus ஆக விம்பம் தோன்றுவதாக கூறுவது போல் எழுதிய வரிகள் மனதைச் சிலிர்க்க வைக்கிறது.

Let’s Go..
Wow.. Wow..
உங்களின் தமிழச்சி .. என்னமோ ஏதோ You’re looking too Black,
மறக்க முடியலையே என் மனம் அன்று..
உன் மனசோ Lovely,
இப்படியே இப்போ
உன் அருகில் நான் வந்து சேரவா இன்று
Lady Looking Like a Cindrella Cindrella,
Naughty look-u vita தென்றலா
Lady Looking Like a cindrella cindrella,
என்னை வட்டம் இடும் வெண்ணிலா
Lady Looking Like a Cinderella Cinderella,
Naughty look-u vita தென்றலா..
Lady Looking Like a Cinderella Cinderella,
என்னை வட்டம் இடும் வெண்ணிலா

பாடலில் அடுத்து பிடித்தது என்னமோ எம்சிஜாஸ், ஸ்ரீசரணின் இந்த RAPதான், அமைதியாக பெருவிரலையும் தலையையும் ஆட்டியபடி கண்ணைமூடி ரசித்துக் கொண்டிருக்கும் போது வரும் பாடலில் இந்த இடம் பவர்பிளேயில் சிக்ஸர்கள் பறக்கும் போது ஏற்படும் உணர்வைக் கொடுக்கிறது.

 என்னமோ ஏதோ... இப்பாடல் சிக்கி தவிக்குது மனதில், ரெக்கை விரிக்குது கனவில், விட்டுப் பறக்க மட்டும் மாட்டேன் என்கிறது தொலைவில். என்னமோ ஏதோ நீங்களும் இன்னொருமுறை கேளுங்களேன்.


சித்ரா மகள் மரணம்
பாடகி சித்ராவின் 8 வயது மகள் நந்தனா துபாயில் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து இயற்கையெய்திய செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எமக்கு ஏதாவது ஒரு வகையில் பிடித்த ஒருவருக்கு வரும் துன்பம் அல்லது இழப்பு எம்மையும் அதிர்ச்சியில் உறைய வைத்துவிடுகிறது. எம்மை எத்தனையோ பாடல்கள் பாடி மகிழ்வித்த பாடகி சித்ராவின் மகள் நந்தனாவின் இழப்பால் துயருரும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.***

சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்


எனது அனைத்துப் நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமலையில் அனலடிக்கும் வெயிலுக்கு மத்தியில் சித்திரைப்புத்தாண்டு இனிதே கொண்டாடப்பட்டது. சித்திரைக்குப் பின்னால் வெயில் அதிகரிக்குமாம், ங்கொய்யால இப்பவே வெயில் தாங்க முடியல..:-o

***

சார்ளி சாப்ளின்

நகைச்சுவை என்றால் உடனே எமக்கு ஞாபகம் வரும் பெயர்களில் சார்ளி சாப்ளினும் ஒருவர். அண்மையில் இவரது வாழ்க்கை வரலாறு படித்தேன், எல்லாரையும் சிரிக்க வைப்பவர்களின் வாழ்க்கை எவ்வளவு சோகமானது என்று அதைப் படித்த பின்னர் புரிந்து கொள்ள முடிந்தது. எத்தனை சோதனைகள் வந்த போதும் அதையும் தாண்டி சாதனைகள் படைந்த சாதனை நாயகன் சார்ளி சாப்ளினுக்கு நாளை 122வது பிறந்த நாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலிவா..சிரிப்பு இல்லாத நாள், வாழ்நாளில் வீணாகக்கப்பட்ட நாளாகும் என்று சார்ளி சாப்ளின் சொல்லியிருக்கிறார், எனவே கீழே உள்ள வீடியோவைப் பார்த்து சிரிங்க..:P

***

DamnItsTrue


அண்மையில் TWITTERரின் கண்ணில் பட்ட @DamnItsTrue  என்ற ருவிட்டர் கணக்குக்கில் TWEET செய்யப்படும் விடயங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. “Facts that are relevant to your daily life” என்று தன்னைப் பற்றி கூறியிருக்கும் இத்தளம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சில விடங்களை tweet செய்யும் போது அது எமது எண்ணங்களோடு ஒத்துப்போகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை தவிர்க்க முடியவில்லை.

http://twitter.com/DamnItsTrue


***

CJ7அண்மையில் CJ7 என்ற ஒரு சீனத்திரைப்படம் ஒன்று பார்த்தேன். வறுமையான குடும்பத்தில் பிறந்த தாயில்லாத ஒரு சிறுவனை படிக்க வைக்கப் போராடி கடுமையாக உழைக்கும் கட்டிட நிர்மாணப் பணி செய்யும் அவனது தந்தை ஆகியோரை மையமாக் கொண்டு கதை நகர்கிறது. இவர்களுக்கு குப்பைத் தொட்டியிலிருந்து கிடைக்கும் ஒரு ஏலியன் நாய்க்குட்டியின் சாகசங்களும் பின்னர் அந்த CJ7 இவர்களுக்குச் செய்யும் உதவிகளும்தான் கதை. கதை சலிப்புத்தட்டாமல் அருமையாக நகர்கிறது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.***

இரசித்த குறும்படம் - 5ருபா

காலண்டர் கவிதை

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:36 AM | 11 பின்னூட்டங்கள்

istockphoto_9106775-mother-s-day-calendar

நீ கண்விழிப்பதே

என்னைக் கொல்லத்தானா

கதறுகிறது தினக்காலண்டர்

 

***

 

சன்டேயில்கூட எனக்கு

விடுமுறையில்லை

கிழிக்கமறந்த சனிக்கிழமை

 

***

 

பலன் பார்த்த பாலகன்

அம்மா பாக்கெட்மணி தருவியா

துலாம் - பணக்கஷ்டம்

 

***

 

செத்தவீடு

பலித்த பலன்

விருச்சிகம் – விடுதலை

 

***

 

அடித்த அலாரம்

விழித்த நான்

கிளாஸ் ஓவர்

 

***

 

உலகமே பாட்டுக்கு

பிழையாய் வாயசைக்கிறது

காதில் ஹெட்செட்

 

***

 

நினைக்க முயன்று தோற்றுப்போகிறேன்

விழித்தபடி குருட்டை உணர்ந்த கும்மிருட்டில்

காதோரம் ஒலித்த கடைசிப்பாடல்

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்