Related Posts with Thumbnails


பரீட்சை நாடகத்துக்கு
ஒத்திகை பார்க்கும்
கடைசி நாள்
விடிய விடிய விழித்திருப்பேன்


தன்னைப் படிக்க ஆளில்லையென்று
ஃபான் காற்றில் மோதித்தினமும்
அழுகிறது புத்தகம்


தூரத்தில் அலறும் நாய்
காற்றில் அசையும் ஆடையைப் பார்த்து
மனம் உருவகித்துக் கொண்ட பேய்
எங்கேயோ பசித்து அழும் ஒரு சேய்
நானூறு பக்கங்களை நடுநிசிக்குள்
முடிக்க முயன்று
தோற்றுக்கொண்டிருக்கும் நான்


கோடி நட்சத்திரங்களின் குவியல் வானம்
கோடி எழுத்துக்களின் குவியல் புத்தகம்
உடுக்களை எண்ணமுயன்று
தினமும் தோற்கிறது முகில்
பாடங்களைப் படிக்க முயன்று
இன்றும் தோற்கிறேன் நான்


காற்றின் கொட்டாவியையும்
மரக்கிளைகளின் இரைச்சலையும்
நாயின் காலடி அரவத்தையும்
சருகுகளின் சலசலப்பையும்

காதோரம் கதறும்
நுளம்பின் கானத்தையும்
சந்தத்தைப்பேணும்
கடிகாரத்தின் டிக்டிக்கையும்

எழுதும் போது ஏற்படும்
உராய்வின் ஓசையையும்
அவ்வப்போது செத்துவிழும்
நீர்க்குமிழியின் சிதறலையும்

இன்றுதான் கேட்கிறேன்
முதன்முதலாக

எத்தனை நிசப்தம் இந்த இரவு?
எத்தனை சப்தம் இந்த இரவு?
எத்தனை குரூரம் இந்த இரவு?
எத்தனை அழகு இந்த இரவு?
எத்தனை பயங்கரம் இந்த இரவு?
எத்தனை வசீகரம் இந்த இரவு?

வியந்து முடிப்பதற்குள்
தீர்ந்து போகிறது இரவு,
படித்து முடிப்பதற்குள்
சோர்ந்து போகிறது மனது

படிப்பதற்காக இரவா?
இரவுக்காக படிப்பா?

ஏ ஆசிரியனே!
என் ஒவ்வொரு இரவும்
பரீட்சைக்கு முதல்நாளாய்
மாற்றியமைக்கமாட்டாயா?

-பப்புமுத்து


நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. அண்ணா நாளைக்கு exam?

  1. Bavan Says:

    இல்லை அடுத்த மாதம்தான்..:P

  1. Subankan Says:

    நீ நடத்து ராசா ;-)

  1. ”காற்றே... நீயும் எங்ளை போல்தானா???? படிக்காமலேயே புத்தகம் புறட்டுகிறாய்”
    எங்கயோ சுட்டது.....
    கவிதை அருமை. பாடசாலை கால நினைவுகளை கண் முன் கொண்டு வந்தது...

  1. தம்பி வாழ்க்கையிலே முதற்றடவையா தூக்கம் முழிச்சு படிக்கிறாரு போல ஓஹ் இரவுன்னா இப்படித்தான் இருக்குமான்னு அப்படியே ஷாக்காயிட்டாரு....... :-)

  1. துாக்கம் முழிச்சது எப்படி இருக்கு....


    அதுசரி கவிதை அருமையாகதானே இருக்கு..பிறகேன் பப்புமுத்துவை உரிமையாளனாக்கினீர்கள்..???

  1. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி. சோதனைக்கு முன்னர் இந்த கவிதையை வாசித்துவிட்டுப் போறவன் இதை விட பெரிய ரோதனை சொறி சோதனை வருமா என்ற எண்ணத்தில் சோதனையை ஒழுங்காக எழுதுவான். அந்த வகையில் குஞ்சுவின் இந்தக் கவிதை ஒரு மோட்டிவேசன் கவிதையாகவே நான் பார்க்கின்றேன்.

  1. ஃஃஃஃஃகாற்றின் கொட்டாவியையும்
    மரக்கிளைகளின் இரைச்சலையும்
    நாயின் காலடி அரவத்தையும்
    சருகுகளின் சலசலப்பையும்ஃஃஃஃஃ

    ஏதோ காட்டுக்கள்ள விட்ட மாதிரி ஒரு பீலிங்கப்பா ஹ..ஹ..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என் மலர் விழியை கண்டிங்களா ?

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (28) poet (34) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (64) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்