Related Posts with Thumbnails
நமது பதிவர்கள் அதிகாரமையத்தலைவர் பதவிக்கு தேர்தல் ஒன்று இடம் பெறுகிறது. அவர்கள் போட்டியிட்டிருந்தால் எப்படி பிரசாரம் செய்திருப்பார்கள் ஒரு சின்னக்கற்பனை..:P

முதலாவதாக மிஸ்டர் பூமி

தினந்தோறும் லட்சங்களில் புரளும் அன்புப்பிச்சைக்காரலட்சாதிபதிகளே, என்னில் ஏறிவிளையாடி என்னை உருட்டியெடுக்கும் எனதருமைப் பாசப்பசுங்கிளிகளே, எனக்குப் பெரிய பெரிய கான்களில் தண்ணீர் தந்து எனது தாகத்தை அடக்கும் தண்ணிலாறிகளே! பிள்ளைகளே, குட்டிகளே, கீரைப்புட்டுச் சட்டிகளே! அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

இதுவரை காலமும் எனது ஆட்சியில் பசுமையாக இருந்த அனைவரையும் எதிர்க்கட்சித்தலைமை தன்பக்கம் ஈர்க்க முற்படுவது கேவலமான செயலாகும். எனது ஆட்சிக்காலத்தில்தான் பதிவர்கள் காத்திரமான , தொக்கையான ச்சா.. மொக்கையான, அழகான பதிவுகளை எழுதிவந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே உங்கள் பொன்னான வாக்குகளை பூமிச்சின்னத்தில் குத்தி எதிர்க்கட்சியின் கனவுக் கோட்டையை தகர்த்தெறியுங்கள்.

"எங்க தல பூமி, வேற ஆளிருந்தாக் காமி" என்ற கோசத்துடன் பூமி உருண்டோடுகிறது.

வந்தி மாமா

ஆ... இஆ... ஆ... பேசணும்னு நினைக்கும்போது வார்த்தை அருவியா கொட்டுது.. ஆனா.. இந்த மைக்கு முன்னாடி வந்து நின்னதும் அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல தொண்டைவரைக்கும் வந்த வார்த்தை எல்லாம் அப்பிடியே காணாமப்போயிருது..ஆ...இஆ...

யோவ் அந்த மைக்கை எடுங்கையா பேசிட்டு போகட்டும்(கீழிருந்து ஒரு குரல்) மைக் அகற்றப்பட்டதும்.

அலைகடலென திரண்டிருக்கும் வாக்காளப்பெருமக்களே, எதிர்கட்சிக்காரர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்?
முன்னபின்ன சொந்த செலவில சூனியம் வைத்திருக்கிறார்களா?
எவ்வளவு அடித்தாலும் தனியா நின்று வாங்கிக் கொள்ளும் தாங்குதிறன் அவர்களுக்கு இருக்கிறதா?
அல்லது ஹாட் அண்ட் சவர் சூப்பில் படம்தான் போட்டிருக்கிறார்களா? எனவே உங்கள் வாக்குகளைக் வேறு யாருக்கும் போடமுதல் ஒன்றைச் சொல்லி விடைபெறுகிறேன்

"சாம தான பேத தண்டம் நாலும் தோத்துப் போகும் போது, தகிடதத்தோம், செய் தகிடதத்தோம்"

அதாவது சாமத்தில் என்றால் இரவில கூட தானம் செய்ய பேதம் பார்க்கும் தண்டங்களுக்கு வாக்குப் போடாம இரவில் தகிடதத்தோம் எண்டு இளையராஜா பாட்டுக் கேட்கும் என் போன்ற நல்லுள்ளங்களுக்கு வாக்குகளைப் போடவும். நன்றி..

உலகநாயகனே.. கண்டங்கள் கண்டு வியக்கும், இனி ஐ.நாவே உன்னை அழைக்கும் என்று பாடல் ஒலிக்க மாமா கோயிங்கு.


அடுத்து நம்ம லோசன் அண்ணே

அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய காலை வணக்கங்கள், மலர்ந்திருக்கும் இந்த நாள் சிறப்பான நாளாக அமையட்டும். சரி நாங்கள் விடயத்துக்க வருவோம். இதுவரை நடந்த தேர்தல்களில் நாம் 3181 தடவைகள் வாக்களித்திருக்கிறோம், ஆனால் அதில் 698 நல்லவோட்டு, 1291 செல்லாத வோட்டு, மிகுதி வாக்குகளுக்க என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இதெல்லாம் எதிர்கட்சியின் சதி, அவர்கள் தேர்தல் ஆணையாளருக்கு சூப் வைத்துக் குடுத்து அவர்கள் சாக் கான நேரத்தில் வாக்குகளை சோக்காக அள்ளிவிட்டார்கள். எனவே உங்கள் வாக்குகளை எஸ்.எம்.எஸ் ஊடாகவோ, தொலைபேசியூடாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம் என்பதை தெரிவித்துக் கொண்டு, விடைபெறும் முன்னர் தேர்தலுக்கு அனுசரணை வழங்கும் அனுசரணையாளர்களையும் ஒரு தடவை ஞாகப்படுத்திக் கொள்கிறேன். என்று எஸ்கேப்பாகிறார்.


அடுத்து எங்கள் தன்மானச்சிங்கம், கறுப்பு நமீதா, பிரச்சார சூறாவளி, கன்கோன் கோபி அவர்கள் மேடை ஏறுகிறார்,

எனதருமை வாக்காள ருவிட்டர்களே...ச்சீ... பெருமக்களே.. உங்கள் வாக்குகளை எனக்கு அளிப்பது மட்டுமல்லாது மற்றவர்கள் போடும் வாக்குகளையும் எனக்கு ரீ-ருவிட் செய்யுங்கள். நான் உங்களுக்க இலவசமாக ருவிட்டர் காலனியில் குடியிருக்கும் வசதியை அளிக்கிறேன். இதுவரை 21121 ருவிட்டுகளை கடந்திருக்கும் என்னைத்தவிர வேறு யாரையும் நீங்கள் தெரிவு செய்யவோ, ஏன் அப்படி நினைக்கக்கூட முடியாது, இறுதியாக ஒன்று கூறி விடை பெறுகிறேன், அனைவரும் கூட்டம் முடிந்ததும் கட்சி அலுவலகத்தில் வந்து லெமன்பப்பை வாங்கிக்கொள்ளவும். #விடைபெறல்#நன்றி#வணக்கம்#பிரச்சாரம்#அதிகாரமையம்


அடுத்து புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... என்று ஒரு சத்தம் கேட்க எல்லோரும் அலேர்ட் ஆகிறார்கள். கார்க்கண்ணாடி அளவு கூலிங் கிளாசுடன் (PAYMENTல் வாங்கியது) கையில் கமராவோடு ஒருத்தர் வருகிறார். சனக்கூட்டமே இல்லாத மேடையில் பின்வரிசையில் உட்கார்ந்திருந்த சில சல்வார் போட்ட பாட்டிகளுக்கு ஸ்டைல் காட்டப்போய் கால் தடக்கிவிழுந்தவர், படக்கென எழும்பி ஒன்றுமே நடக்காதது போல கோட்டுப்போட்ட ஓட்டாண்டிகளுக்கும், பாட்டுப்போட்ட பரதேசிகளுக்கும், வேட்டு வைக்க வந்துட்டாண்டா இந்த சுப்பு...இஹாஹாஹாஹா... தரங்கம் சுப்பு என்று பஞ்ச் டயலாகைப் பேசி கண்ணா, வீ மீட்டு, யு வோட்டு, ஐ நோட்டு, நவ் அப்பீட்டு என்று விடைபெறுகிறார்.

அடுத்து மிஸ்டர்.ஹாட்

அடேய் அடேய் என்னடா நடக்குதிங்க என்னடா நடக்குதிங்க.. டேய் டேய் டேய்.. உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள் அதிகாரமையத்தலைமை மாற்றத்தை நீங்கள் எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் ஆனந்தமாகக இருக்கின்றது ஆனால் இங்கு வாக்குக் கேட்டவர்கள் தங்களின் வாக்குறுதிகளை நடாத்த முன்வரவில்லை, எனவே எனக்கு வோட்டுப்போட்டு என்னுடன் இணைந்து சூடாட பதிவுலகைப் பேணுவதற்கு யாரும் முன்வராத பட்சத்தில் என்னால் மட்டும்  தனியே வோட்டுப் போட்டு தல ஆகமுடியாது எனவே யாரெல்லாம் என்னோடு இணைந்து எனக்கு வோட்டுப்போட்டு என்னைத் தலயாக்க முன்வருகிறீர்கள் என்று சொன்னால் அவர்களுடன் இணைந்து அடுத்த கட்டத்திற்கு நாங்கள் நகரலாம் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

"ஐ ஆம் ஆல்வேய்ஸ் ஒன்லைன், Using 24 hours mobile internet But எவனாச்சும் Disturb பண்ணினிங்க பிச்சுப்புடுவன்... நான் பிஸி with Cricket"  என்று சொல்லிச் சூடு பறக்கிறது.


(தொடரும்)

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

 1. ஓட்டும் போட்டுடன்.. கமெண்டும் பண்ணிட்டேன்.. பதிவுலக தர்மத்தை காப்பாற்றும் நானே என்றும் எதிர்கட்சி தலைவரா வர எனக்கு ஓட்டளிக்கவும்.

 1. நண்பரே!!! எப்படி உங்களால் மட்டும்!!!

  அதிலும், லோசன் அண்ணா!!!, கோபி அண்ணா!!! தேர்தல் பிரச்சாரம் கலக்கலோ கலக்கல்!!!!

  //தொடரும்///

  எனது குருவை (சதீஸ்) ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

 1. Unknown Says:

  நீங்கல்தான் ஊடகப்பிரிவா

 1. Bavan Says:

  @Aswin - மக்கள் தீ்ர்ப்பே இறுதியானது..:P

  @Anu - நீங்களும் தப்ப முடியாது தம்பி..:P

  @Shanmugan - ஊடகப்பிரிவு எண்டும் சொல்லலாம்..:P #அரசியலில்_எந்தப்பதவியும்_நிலையல்ல..:P

 1. sinmajan Says:

  பாரபட்சம் இல்லாமல் போட்டுத் தாக்கிற உங்க நேர்மை.. எனக்கு புடிச்சிருக்கு ;-)

 1. ஹா ஹா ஹா..கலக்கல் பவன்.


  வந்தியண்ணாவின் பிரச்சாரத்தின் தகிடதத்தோம் விளக்கம் சூப்பர்..

  லோஷன் அண்ணாவை நன்றாகவே அவதானித்துள்ளீர்கள்.. அப்படியே எனக்கு நீங்கள் வாக்களித்தால் ஒரு அழகிய பாடல் ஒன்று உங்களுக்காகவும் பெரிய பிட்ஷா ஒன்று ச்சா பல எனக்கும் கிடைக்கும்.. என்றும் குறிப்பிட்டிருந்தால் கலக்கலாக இருந்திருக்கும்..

  கோபி மற்றும் சுபாங்கன் இருவரின் பிரச்சாரமும் கலக்கல்.. செம காமடி

  கண்ணா, வீ மீட்டு, யு வோட்டு, ஐ நோட்டு, நவ் அப்பீட்டு

 1. அனைத்துலக தலைமைச் செயலகத்தின் அனுமதி பெறாத இந்த தேர்தலைப் புறக்கணிக்கும் படு பதிவர்களை வேண்டிக்கொள்கின்றேன். அத்துடன் சர்வதேச தேர்தல்களில் நான் பங்குபெற இருப்பதால் உள்ளூர் தேர்தலில் நிற்கமாட்டேன் எனவும் கூறிக்கொள்கின்றேன்.

 1. sinmajan Says:

  அனைத்துல தலைமைச் செயலர் இப்படிப் புறக்கணிப்பு என முரண்டு பிடித்தால் அனைத்துலகத் தலைமைச் செயலகத்தையே உள்ளூரிற்கு மாற்றி பவனையே தலைவராக்கிவிடும் அபாயமுமுள்ளதாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன ;-)

 1. //புறக்கணிக்கும் படு பதிவர்களை வேண்டிக்கொள்கின்றேன்//

  படு பதிவர்கள் யார்?? அப்படியானவர்கள் யார்??? என்று விளக்கம் தரவும் வந்தியரே!!!

 1. ஆவ்வ்வ்வ்........ எப்படி இப்படி எல்லாம் முடியல

 1. சூப்பர் பவன்...

  உந்த தொடரும் என்றதுதான் எங்கோ இடிக்குது.

  //பதிவுலக தர்மத்தை காப்பாற்றும் நானே என்றும் எதிர்கட்சி தலைவரா வர எனக்கு ஓட்டளிக்கவும்.//

  ஹலோ... உங்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எதிர்க்கட்சி ஆக ஏலாது. ஆகவே, உங்கள் பிரச்சாரம் ஆளுங்கட்சிக்கு வாக்கை அள்ளிக் குவிக்கட்டும்.

 1. கிக்கி கிக்கி ..
  தொடரும்// ம்ம்ம் தொடரட்டும் :)

 1. ;)

 1. படங்களைப் பார்க்கவே சிரிப்பு சிரிப்பாக வருகின்றது, அதிலும் பூமி, வதீஸ் படங்கள் சிரிப்பின் உச்சக்கட்டம்.

  படி என்பதுதான் படுவாக மாறிவிட்டது #ஸ்பெலிங் மிஸ்டேக்

 1. படங்களைப் பார்க்கவே சிரிப்பு சிரிப்பாக வருகின்றது, அதிலும் பூமி, வதீஸ் படங்கள் சிரிப்பின் உச்சக்கட்டம்.

  படி என்பதுதான் படுவாக மாறிவிட்டது #ஸ்பெலிங் மிஸ்டேக்

 1. ஹா ஹா ஹா..... செம கிரியேட்டிவிட்டி! வாழ்த்துக்கள்!!

 1. //ஹா ஹா ஹா..... செம கிரியேட்டிவிட்டி!//


  ஓ... அதுவா இது!!!

  வாழ்த்துக்கள் கிரியேட்டிவிட்டி பவன்!

 1. அருமை!

 1. ஆதிரை Says:
  June 4, 2011 2:21 PM
  //ஹா ஹா ஹா..... செம கிரியேட்டிவிட்டி!//


  ஓ... அதுவா இது!!!


  இதுவும்!

 1. பிரச்சார வேலைகளில் கொஞ்சம் பிஸியாக இருந்ததன் காரணமாக உடனடியாக பின்னு+ட்ட முடியவில்லை என்பதை பதிவுலக வாக்காள பெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன் இதையே காரணமாக வைத்து ஏனைய வேட்பாளர் பிரச்சாரம் செய்வார்கள் அதையெல்லாம் தாண்டி பதிவுலகின் அதிகாரமைய தலைமைப் பொறுப்பு உங்கள் ஆதரவுடன் எனக்கே கிடைக்கும் என்பதை தெரிவித்து விடைபெறுகின்றேன் பதிவு Superda பவன்

 1. :) for follow up Comments!

 1. முதலில் இலங்கையின் தரமான கிரியேட்டி விட்டி பதிவு எழுதிய எங்கள் தானை தம்பிக்கு வாழ்த்துக்கள்(நக்கல் என நினைச்சா நான் பொறுப்பில்லை~)

  எங்கள் தலைவி நிரூஜா ஆண்டியை இப்படி படம்போட்டு உள்வீட்டு ரகசியத்தை வெளியே காட்டியமைக்கு கண்டனங்கள்.

  எங்கள் நாடுகடந்த பதிவுலக அனைத்துலக செயலர் திருவாளர் வந்தியத்தேவன் அவர்கள் சுருதி ஓடிய கவலையில் இருக்கும் போது அவர் மாமாவையும் இவரையும் சேர்த்து வாட்டி எடுத்த குஞ்சுவே இவர் அவ்விடம் வந்தால் நீ பஞ்சு. இருப்பினும் உன்னிடம் இருக்கும் தில்லு அதனால நீ பலருடன் கட்டுகின்றாய் மல்லு.

  லோஷன் அண்ணாவின் வசனங்களை மாற்றி இட்டமைக்கு அவரின் கொட்டனா கொடி ரசிகர்கள் சார்பாக கண்டனங்கள். இனிய காலை வணக்கம் அன்பு நெஞ்சங்களே விடிந்திருக்கும் இந்த நாள் பொழுது உங்கள் அனைவருக்கும் சந்தோசம் தரும் நாளாக அமைவதோடு இன்றும் பிரசாரத்து அனுசரணை வழங்க வளன்கிகொண்டிருக்கின்றார்கள்....................

  கான்கொன் இப்போது பிரசாரம் செய்யும் நிலையில் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் அவரின் பெரும்பாலான பிரச்சாரங்களில் போனால் போகட்டும் போடா, வாழ்க பல்லாண்டு என்று பாடி பாடியே வாக்கு கேட்கும் எண்ணம் இருப்பதாக அறியக்கிடைத்தது நமிதா கொஞ்சம் வெளிய வாம்மா

  சாவகச்சேரியின் தவப்புதல்வன் பெய்மேன்டில கண்ணாடி வாங்குவதா? ஐயகோ என்ன கொடுமை இது. ஆனால் அந்த கண்ணாடி போடும் ரகசியம் உங்களுக்கு தெரியாதோ?

  மிஸ்டர் ஹாட் உள்வீட்டுக்க தான் சண்டை போடுறார் எண்டா இப்போ ஐயா லண்டனிலும் சண்டைக்கு வாரார் எனவே வடிவேலுக்கு போட்டியாக சிங்கமுத்து வந்தது போல மிஸ்டர் ஹாட்க்கு பதிலாக மிஸ்டர் கூல் அவர்களை பிரச்சாரத்தில் இறக்க அவரது எதிரணி வேட்பாளர் தயாராவதாக செய்தி கிடைத்துள்ளது.....

 1. //எனது குருவை (சதீஸ்) ஆவலோடு எதிர்பார்க்கிறேன்//

  சிஷ்யா இப்படி எல்லா இருக்கோணும் என்ன எடுத்து குடுக்கிறியா மவனே பின்னிபுடுவன் பின்னி. நான் தான் எப்பவோ நாடு கடந்த பதிவுலக தலைவராக பொறுப்பேற்று விட்டேன். எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது.

 1. //வந்தியத்தேவன் said...
  அனைத்துலக தலைமைச் செயலகத்தின் அனுமதி பெறாத இந்த தேர்தலைப் புறக்கணிக்கும் படு பதிவர்களை வேண்டிக்கொள்கின்றேன். அத்துடன் சர்வதேச தேர்தல்களில் நான் பங்குபெற இருப்பதால் உள்ளூர் தேர்தலில் நிற்கமாட்டேன் எனவும் கூறிக்கொள்கின்றேன்.//

  திருவாளர் வந்தியத்தேவன் அவர்களே, தலைவரிடமோ செயலரிடமோ அனுமதி பெறாத இந்த தேர்தலை புறக்கணிப்போம்.

 1. தொடரை எதிர்பார்க்கிறேன்....

 1. Bavan Says:

  @Ashwin-WIN - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

  ***

  @Anuthinan - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

  ***************

  @sinmajan - அவ்வ்வ் ஐ ஆம் எஸ்கேப்பு..:P நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

  ***************

  @ஜனகன் - டாங்யூ.. டாங்யூ..:-) நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

  ***

  @வந்தியண்ணா - நன்றி மாம்ஸ் வருகைக்கும் கருத்துக்கும்..:-))

  ***

  @யோ அண்ணா - LOL நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

  ***

  @ஆதிரை அண்ணா - வாவ் அனைத்து அரசியலி நெளிவு சுளிவுகள் தெரிந்த ஆதிரை அண்ணாவையு தலைவராக்குவோம்..:P

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

  ***

  @லோஷன் அண்ணா - இக்கி.. இக்கி..:P
  நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:-))

 1. Bavan Says:

  @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி -

  "வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி"
  என் பதிவுலக வாழ்க்கையில் நோபல் பரிசு பெற்றதாக உணர்கிறேன்..:P

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

  ***

  @கன்கொன் - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

  ***

  @வதீஸ் அண்ணா - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

  ***


  @SShathiesh - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

  ***

  @Coolboy - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்