Related Posts with Thumbnails
சின்ன வயதில் நாம் அனைவரும் SEESAW, ஊஞ்சல், சறுக்கு(SLIDE)ஆகிய மூன்று விளையாட்டுக்களை கட்டாயம் விளையாடியிரும்போம். ஆனால் காலாகாலமாக இந்த விளையாட்டுக்களை விளையாடி வந்தாலும் இதற்குள் ஒளிந்து கிடக்கும் உலகமகா வரலாற்றுத் தத்துவங்களை அறிந்துகொள்ள மறந்தவிட்டோம். அதை நேற்று இரவு தூக்கம் வராமல் சீலிங் ஃபான் கழன்று மண்டையில் விழுமா விழாதா என்று பயந்துகொண்டிருந்த வேளையில் என் சிந்தையில் உதயமானது இது.

 • ஊஞ்சல்முதலாவதாக ஊஞ்சலுக்கு வருவோம். ஊஞ்சலில் ஆடும் போது காலால் நிலத்தில் விசையைப் பிரயோகித்து எவ்வளவு தூரம் பின்னால் போகிறோமோ அதே அளவு மேலே போக முடியும். விசையை தொடர்ந்து பிரயோகித்துக் கொண்டிருந்தாதல்தான் மேலே போக முடியும் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் குறைந்து ஊஞ்சல் ஓய்ந்து விடும், ஆட்டம் நின்றுவிடும்.

இதிலிருந்து விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் சொல்லவருவது என்ன என்றால் வாழ்க்கையில் எதையும் முயற்சித்தால் தான் கிடைக்கும். ஒரு விடயத்தை தொடந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும் அதாவது உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். களைப்பாய் இருக்கிறது என்று விட்டால் ஆட்டம் நின்று ஓய்வெடுக்கவேண்டியதுதான் என்ற உலகமகா தத்துவத்தை சொல்லவருகிறார்கள்.

 • சறுக்கு/சறுக்குமரம்

அடுத்ததாக சறுக்குமரம் (SLIDE) பார்த்தோமென்றால் அதில் ஒரு பக்கம் ஏணி இருக்கும், அதில் ஏறி சறுக்கிக் கொண்டு வந்து கீழே விழவேண்டும். அதாவது இதிலிருந்து அந்த விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் வாழ்க்கையில் உயரத்துக்கு வருவது, சாதிப்பது, நல்லபெயர் எடுப்பது மிகவும் கஷ்டமான காரியம். இது அந்த ஏணியில் ஏறுவதைப் போன்றது. ஆனால் கெட்டபெயர் எடுப்பது, வாழ்க்கையில் அடிமட்டத்துக்க வருவது மிகவும் இலகுவானது. அது சறுக்கிக் கீழே வருவதைக் குறிக்கிறது.

எனவே இங்கு அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் வாழ்க்கையில் உயரத்துக்குச் செல்வது பெரிய விடையமல்ல, ஆனால் வாழ்க்கையில் உயரத்துக்குப் போன பின்னர் சந்திக்கும் சரிவுகளை சறுக்குமரம் விளையாடும் போது சறுக்கிவிழுந்தவுடன் மறுபடியும் சளைக்காமல் ஏணியால் ஏறுவதைப் போல் மீண்டும் மீண்டும் மேலெ செல்ல முயற்சிக்க வேண்டும்.

 • SEESAW
கடைசியாக SEESAWவைப் பார்த்தோமென்றால் இது வாழ்க்கையின் சமநிலை, எமது பலம் என்ன என்பவற்றைச் கருத்தில் கொண்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதாவது எம் பலத்தை விட அதிகமாக எதையாவது செய்ய முயற்சித்தால் மேலேயே போய் இருக்க வேண்டியதுதான் கீழே வரமுடியாமல் சிக்கிக்கொண்டு தவிக்க வேண்டியிருக்கும். அதுவே எமது பலத்துக்கு குறைவாக எந்த முடிவுகளை எடுத்தாலும் கீழேயே இருக்க வேண்டியதுதான். வாழ்க்கையை சமநிலையாகப் பேணவேண்டுமாயின் நமது பலம் பலவீனத்தை அறிந்து எம்மால் செய்ய முடிந்தவற்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.
அப்போதுதான் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் சந்தத்திற்கேற்ப அழகாக இருக்கும்.


அந்தக்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் குரு அதை தனது முதன்மைச்சீடனுக்கு மட்டும் சில புதிர்கள் அல்லது குறிப்புகளாக விட்டுவிட்டுப் போவார்களாம். அதை எதிர்கால சந்ததியினர் கண்டுபிடித்தால் பயனுள்ளதாக இருக்குமாம். இதுவும் அதுபோலதானோ என்னமோ! =P


பி.கு - சறுக்கீஸ் என்று நாமெல்லாம் குத்து மதிப்பா ஒரு பெயர் வைத்து விளையாடிய Sliding விளையாட்டுக்கு சறுக்கு மரம் என்று தமிழாக்கம் வழங்கிய கா.சேது ஐயாவுக்கு நன்றிகள் =))

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. நல்ல தொகுப்பு...
  நன்றி..

 1. பாருடா! தத்துவம் எல்லாம் சொல்லுற!!! அப்போ நீயும் ரஞ்சிதாவ வச்சுக்க போறியா?? இல்ல இல்ல ரஞ்சிதாவ ஆன்மீக சேவைக்கு வைத்து கொள்ள போகிறாயா? என்று கேட்க வந்தேன்!

 1. Bavan Says:

  @திண்டுக்கல் தனபாலன்

  நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும் =))

  ***

  @அனு

  அவ்வ்வ்வ்...
  டேய் வை ரஞ்சிதா? ஐ வாச் ஒன்லி இங்கிலீஸ் பிலிம்ஸ் யு நோ? ஒன்லி புரோம் ஹொலிவூட் =P
  நன்றி வருகைக்கும் கருத்துக்கும் =))

 1. See-Saw க்கு ஊசற்கட்டை, சாய்ந்தாடி மரம் உட்பட சில தமிழ் சொற்கள் / விவரிப்புகள் :

  http://tamilagarathi.our24x7i.com/tamil-english-dictionary-search-word1_%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_.jws#pages

  "ஏற்ற, இறக்க விசை" மற்றும் "ஏற்ற, இறக்க விசை அசைவு" - இவை அகரமுதலிகளில் காணப்படும் சற்று முறைசார் (formal) வரையறைகள்.

  //பி.கு - சறுக்கீஸ் என்று நாமெல்லாம் குத்து மதிப்பா ஒரு பெயர் வைத்து விளையாடிய Sliding விளையாட்டுக்கு சறுக்கு மரம் என்று தமிழாக்கம் வழங்கிய கா.சேது ஐயாவுக்கு நன்றிகள் =))//

  சறுக்கு என சிறுவயதிலிருந்து அறிந்திருந்தேன். "சறுக்கு மரம்" கூகிள் வழி தேடலில்தான் கண்டறிந்தேன். எனவே அத் தமிழாக்கம் எனது என யாரும் கருதிவிட வேண்டாம். ;>)

 1. Anonymous Says:

  விளையாட்டின் உண்மைத் தத்துவங்கள். சரியே .
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

 1. நல்ல பதிவு
  என் மகனிடம் சொல்ல வேண்டும்


  நன்றி,
  ஜோசப்
  --- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்