Related Posts with Thumbnails

Untitled! Motivation song!

பதிவிட்டவர் Bavan | நேரம் 4:47 PM | 0 பின்னூட்டங்கள்

புது மேகம் தாண்டி நாம்
புதிய கரை காண்போமே
வலி கொண்ட வாழ்க்கை தாங்கி
விடியல் தேடிச் செல்வோமே!

கனம் கொண்ட நெஞ்சம் தான்
கண்ணீரில் கரைகிறதே அதன்
கவலைகள் தேங்கிட வீழ்ந்திட
விதையாய் மோதி வெல்வோமே!

வாழ்க்கை ஒற்றைக் கோடு
பல தடைகள் முட்டி மோது!
விழி ஈரம் காயும் போது
நீ காற்றின் மீது ஏறு!

உன் வேட்கை தாங்கி ஓடு
வரும் நரிகள் வேட்டையாடு!
பழி தீர்க்கும் நேரம் பார்த்து
நீ பாதை நீங்கி தாக்கு!

வானோடு மழை நீங்கிப் போகலாம்
வேரோடு மரம் மாண்டு போகலாம்
நெஞ்சோடு கதை மோதி வீழலாம்
போராடு தினம் மீண்டு மோதலாம்
-Bavananthan

Music: Vidushan
Lyrics: Bavananthan


மோதுடா மோதுடா
துணிவிருந்தா மோதுடா!
பாருடா பாருடா
Trinco Hindu பாருடா

துணிவிருந்தா மோது
இல்லை தொடை நடுங்கி ஓடு
படை பலத்தை பாரு
இங்கு பாயும் புலி நூறு

எழுந்து ஆடு
விரைந்து ஓடு 
நிமிர்ந்து மோதி
விண்ணைத் தொட்டு விடு

வலிகள் வாங்கு
விழியில் தாங்கு
வழிகள் தேடி
வேரோடு அறுதிசைகள் பாரு
தெறிக்க ஆடு
அறைந்து மோதி
அச்சம் கொடுத்து விடு

அடிச்சு ஆடு
ஆறு நாலு
முறைச்சுப் பாத்தா
மோட்சம் கொடு

சோதனை எல்லாம்
வேதனை இல்லை
சாதனை என்று
விண்ணைத் தொடு!

வலி தொடும் தூரம்
விழிகளில் ஈரம்
விலகிட நீயும்
வாளை எடு!

விதை போல்
முட்டி மோதி
முளைத்துவிடு
அடியைப் பாரு இடியைப் பாரு
Trinco Hindu மோதிப் பாரு
வெறித்தனமா வேட்டையாடும்
வேங்கை நாங்க வேற யாரு

பாரு கண்ணுல வெறியை பாரு
போடப் போட அடியைப் பாரு
பேரைச் சொன்னா குலை நடுங்கும்

Trinco Hindu தாறுமாறு!
-BavananthanMusic: Arunprasath
Vocal: Suthan , Erik Deoul Raj , Keerthi
Mixing & Mastering: Honey Niagara
Cinematography, Editing & Lyrics: Bavananthan
Creative Consultancy: Vivek Shan,Manoshanthan

உண்மை!

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:07 PM | 0 பின்னூட்டங்கள்

உண்மை சுடும்
குளிர்வது போலிருக்கும்
ஆனால் சுடும்

மெதுமெதுவாகச் சுடும்
பொய் எனும் தோலினை
உரிக்கும் வரை சுடும்

எத்தனை பட்டைகள்
நீ பொய் சேர்த்து வைத்தாயோ!
அத்தனை கவசங்களையும்
எரிக்கும் வரை சுடும்

சுடமுன் சிரித்த
சிரிப்புபையெல்லாம்
கதறிக் கதறி
அழவைக்கும் வரை சுடும்

சுட முன் நடித்த
நடிப்பையெல்லாம்
பதறப் பதற
துகிலுரிக்கும் வரை சுடும்

உண்மை சுடும்
ஆமையாகவே
நகர்ந்து சுடும்

உண்மை சுடும்
ஊமையாகவே
இருந்து சுடும்
-Bavananthan

மஞ்சள் கோடு!

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:00 PM | 0 பின்னூட்டங்கள்


நேற்றைய இரவு கொஞ்சம்
நேரத்துக்கு படுத்திருந்தால்..
ஒவ்வொரு காலையிலும்
அங்கலாய்க்கும் விடயம் இது

சங்கரங்கள் களைக்காமல்
வேக எல்லை குலைக்காமல்
சிகப்புக் கோட்டை முந்துவது
சிரமான காரியந்தான்

கண்களை மூடாமல்
காற்றைக் கிழித்தபடி
சுட்டெரிக்கும் சூரியனை
முகத்தில் சுமந்தபடி

காவல் ஐயாவை
கடந்து ஓடவேண்டும்
வீதி விதிகளை
தெரிந்தே மீறவேண்டும்

ஓவர்டேக் எனும் பெயரில்
எதிர் வீதி கடப்பவனை
முட்டாமல் தவிர்ப்பதற்கு
மூலைக்குள் ஒதுங்கவேண்டும்

அவுடி வைத்திருந்தும்
அமரர் ஊர்தியாய் அதைச் செலுத்தும்
ஆசாமியை திட்டித் திட்டி
முந்தி முறுக்க வேண்டும்

காதல் காந்த அலைகளையும்
கிடப்பிலே போட்டு விட்டு
சில அழகிய கவிதைகளை
கடைக்கண்ணோடு கடக்க வேண்டும்

அவசரம் என்றாலே
ஆயிரம் பிரச்சனைகள்
அதனால் என் வாயில்
பொன்மொழி அர்ச்சனைகள்

இன்றும் அப்படித்தான்
இயல்பாய் இன்னொரு நாள்
வேகமுள் ஓடிச் சென்று
எழுபதைத் தொட்டிருக்கும்

காலபகவானும் தன்
சுற்றைக் குறைக்கவில்லை
எனது சக்கரமும்
அவனுக்கு சளைத்ததில்லை

சடுதியாய் ஏதோ ஒன்று
என்னில் மோதியது
நிலை குலைந்து
என் ஆடை பற்றித் தொங்கியது

வேகமாய் போகும் என்னை
மெதுவாகச் சொன்னது போல்
போ போ என்றாலும்
போகாமல் தங்கியது

தட்டிவிடக் கை எடுத்தால்
வேகம் குறைந்து விடும்
சிகப்புக் கோடு வந்து - என்
சம்பளத்தை வெட்டி விடும்

எழுபது நாற்பதாச்சு
இன்னும் அது இரங்கவில்லை
என்னதான் வேணும் என்று
சத்தமிட எத்தனித்தேன்

அழகாய் கண் உருட்டி
மெதுவாய் பார்த்துவிட்டு
கைகளால் காற்றுக்கு
கவசம் பூட்டியது

என்னவென்று கேட்டிடலாம்
இனியும் பொறுமையில்லை
இடது பக்க சமிஞ்ஞையுடன்
மெதுவாய் நிறுத்திவிட்டேன்

அசுரக்காற்றின் அழுத்தமில்லை
என்று அது அறிந்ததுமே
மெல்லிய தன் கவசத்தை
மெல்ல இறக்கியது

எட்டிப் பார்த்துவிட்டு
ஏதோ சொல்லி விட்டு
வண்ணச்சிறகடித்து பறந்தது - அந்த
மஞ்சள் கோட்டு வண்ணாத்திப்பூச்சி!
-Bavananthan

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்