Related Posts with Thumbnails

தாத்தா சொன்ன கதை

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:38 PM | 1 பின்னூட்டங்கள்


ஐயையோ ஐயையோ என்று
ஓடிவந்தார் பெருமான் அங்கிள்
என்னப்பா என்ன என்று
கேட்டு முடிப்பதற்குள்...

ஆயிரம் மத்தளங்கள்
அடம்பிடித்து மிரண்டாற்போல்
அத்தனை பொருட்களையும்
உதைந்தே நொருக்கி விட்டார்

மெதுவாய் நூல் பிடித்து எரிய எத்தனித்த
டியூப்லைட் இயக்கியையும்
என்னதான் செய்தாரோ
எரிந்து எரிந்து அணைகிறது

ஏனிந்த அவசரம் அங்கிள்
என்னதான் பிரச்சனை என்றேன்
அடேயப்பா அதையேன் கேட்டாய்
என்று எரிந்து கொண்டார்

சொல்லி முடிப்பதற்குள் - உம்
சோலி முடிஞ்சிடுமோ?
விளங்கிற மாதிரிக் கொஞ்சம்
விவரமாய்ச் சொல்லித் தொலையும் என்றேன் 

மைனல் டிகிரியில பனிபடர்ந்த ஊர் இருக்கு
அந்த ஊருக்குள்ள என்னோட வீடு இருக்கு
அந்தக் குளிருக்குள்ள அன்றாடம் குளிக்கணுமாம்
அந்தக் குளிருக்குள்ள உறைஞ்சு கிடக்கணுமாம்

வேர்க்காத ஊருக்குள்ள
வாழுகின்ற நீரெல்லாம்
குளித்தால்தான் என்ன
குளிக்காட்டித்தான் என்ன என்றேன்! 

அடேய் சின்னப் பொடியா
உனக்கு விளங்கியென்ன பயன்
என்ற மனிசி என் தலையில் ஏறி நிக்கிறாளே!
சந்தன சோப்பையும் போடென்று கத்துறாளே!

திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன்
இடிமுழங்கி முடியவில்லை
மழை கொஞ்சம் ஓய்ந்தாலும்
நீரோடி வடியவில்லை!

எந்த ஏரியாவில் குளித்துக்
கொண்டு இருக்கிறாரோ!
என்னென்ன பொருளெல்லாம் - அங்கே
உடைந்து நொருங்கியதோ!

மத்தளங்கள் இடி முழங்க
சிவபெருமான் குளிக்கிறாராம்
தாத்தா சொன்ன கதை

புனைவு என்று தெரிந்த பின்னும்
நினைவில் நிற்கும் கதை
தாழமுக்கம் இருக்கும் மட்டும்
வாழும் இந்தக் கதை!

-Bavananthanபுத்தாண்டு பிறந்தாச்சு
புது ராகம் மலர்ந்தாச்சு
காற்றோடு கலந்தாடு
சூரியண்டா

சித்திரை புத்தாண்டு
சிறப்பாய் நீ கொண்டாடு
என்றென்றும் உன் சொந்தம்
சூரியண்டா!

இதயம் நிறைந்து
இனிமை விருந்து
புதிதாய் மலரும்
சூரியண்டா

(மலையின்) சிகரம் உயர்ந்து
காற்று அலையில் நுழைந்து
வானின் எல்லை தொட்ட
சூரியண்டா!
-Bavananthan

Music: Honey Niagara
Lyrics: Bavananthan

வீரம்

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:49 PM | 0 பின்னூட்டங்கள்

சிரமத்தை தானமும் செய் - சில
கலோரிகள் பொசுங்கிட வை
பல நோய்களை வருமுன்னே கா
உன் உடலின் வியர்வை களை

சேற்றாடும் மூடரினம்
வம்புக்கு உனை அழைத்தால்
உன் ஆடை கறைபட முன்
அதை விட்டு விலகியே செல்

அறிவினை வளர்த்திடவே
ஆயிரம் வழியிருந்தும்
புத்தியை கூர்விக்கும்
சொல்லாயுதம் துணை இருந்தும்

மூளையை மூத்திரமாய்
எங்கோ பெய்தொழித்த மூடரிடம்
வேடிக்கை வசைகளும் கேள்
வெக்கமின்றி சிரித்தும் வை!

வசை கொட்டி வம்பிழுத்து - உன்
தன்மானந்தனை உசுப்பி
வீரனின் நிலை உயர - அது
அக்கோழை செய்யும் இழிவு நிலை!

அமைதியாய் இருப்பதுவும்
ஆத்திரம் மறைப்பதுவும்
கோழையின் குணங்களில்லை
அது வீரனின் விவேக நிலை!

அதனுடன் கறைபுரண்டால்
ஆடையில் கறை படிந்தால்
ஆனந்தமே அதற்கு மட்டும்
ஆகவே உன் நிலையறிந்து
வீரனாய் அமைதியை பேண்!
-Bavananthan


அடி உதை அறுவடை செய்
அனைவர்க்கும் அறிமுகம் செய்
மிருகத்தை விதைச்சலும் செய்
பயிற்சியில் பலரையும் கொய்!

முதலையின் வாய் தொட முன்
அதை கண்களால் கழுவியே வை
காரியம் முடியும் வரை - அதன்
கல் மனம் கரைந்திடச் செய்

தலைமைகள் தவறிழைத்தால்
தாடைகள் தகருமென்றால்
குருத்துகள் வதை புரிந்தால்  - இரு
விரல்களே சிதைக்குமன்றோ!

ஆலமாய் வளர்ந்திட்ட வேர் - இன்று
அழித்திட முளை விடுமே!
ஆழமாய் புதைத்து விட்டாய் - இனி
நீ விதைத்தை அறுவடை செய்!
-Bavananthan

Malare Premam song Tamil Version Lyrics

பதிவிட்டவர் Bavan | நேரம் 7:25 PM | 0 பின்னூட்டங்கள்


வானெங்கும் ஒளி அலையில் வண்ணங்கள் ஏனோ!
அழகிய ஒரு வண்ணக்கனவு என்னுள்ளே தானோ!
ஆற்றோரம் கீற்றொன்று என்மீது மோதும்
குழலூடு பரவும் இசை புது ரத்தம் பாய்ச்சும்

குளிர்கின்ற கனவென்னில் கரை மோதிய நேரம்
இளவேனில் இதயத்தில் துளிராடிய காலம்
மயில்இணைகள் என் இமைகள் மலர்விக்கும் பொழுது
என்னுள்ளே காதல் கொடி பூப்பூக்கும் தருணம்

அழகே!
அழகில் வழிந்த சிலை அழகே!
மலரே!
என் உயிரில் மலரும் பனிமலரே!

மலரே உன்னைக் காணாதிருந்தால்
விழி காணும் நிறமெல்லாம் காணாமல் போகும்
அன்போடு நீ என்னை அணைக்காதிருந்தால்
அழகான கனவெல்லாம் கலைந்தேதான் போகும்

நான் எந்தன் ஆத்மாவின் ஆழத்தின் உள்ளே
எவரெனும் அறியாமல் வரைகின்ற என் காதல்
இசையாகி மொழியாகி கவிதைகளாகி
ஒவ்வொரு வண்ணங்களாகும்!

உடைகின்ற போதே உள் நெஞ்சின் உள்ளே
மழை போல வந்தென்னில் வழிகின்ற ஊற்றே!
தளர்கின்ற போதே துணையாக நின்றே
தாய் போல எனை என்றும் தாங்கும் மலரே!

அழகே!

குளிர்கின்ற கனவென்னில் கரை மோதிய நேரம்
இளவேனில் இதயத்தில் துளிராடிய காலம்
மயில்இணைகள் என் இமைகள் மலர்விக்கும் பொழுது
என்னுள்ளே காதல் கொடி பூப்பூக்கும் தருணம்

அழகே!
அழகில் வழிந்த சிலை அழகே!
மலரே!
என் உயிரில் மலரும் பனிமலரே!
-Bavananthan 

Music (Re-Composed) - Arunprasath
Tamil Lyrics: Bavananthan


நீயும் நானும்
இமை தீண்டும் நேரம்
வாழும் காலம்
அழகாகும்...

புல் மீது வழியும் பனித்துளியே
பூவிலே உறங்கும் தேன் சுனையே
கனவிலே நுழையும் குளிர் நிலவே

அலை மோதி தோற்கும் கரைமணலே
முகில் தேடி அலையும் வானவில்லே
மழை வீழத் துடிக்கும் மலர் குடையே

விழி இரண்டில் விழுகிற பொழுது
மொழி மறந்து தவிக்குது மனசு
கண் இரண்டின் காந்தங்கள் கண்டு
கனவினிலே நான் மிதக்கின்றேன் சென்று

எனை சாய்த்து விடு
உனை ஊற்றி விடு
உன் வெட்கம் வேரறு!
எனை தூக்கிலிடு
இதழ் மோதி விடு
உன் முத்த வாளெடு!

நீயும் நானும்
இமை தீண்டும் நேரம்
வாழும் காலம்
அழகாகும்...

வானின் நீளம்
நம் காதல் வாழும்
எந்தன் வாழ்வும்
நிறமாகும்

புல் மீது வழியும் பனித்துளியே
பூவிலே உறங்கும் தேன் சுனையே
கனவிலே நுழையும் குளிர் நிலவே

அலை மோதி தோற்கும் கரைமணலே
முகில் தேடி அலையும் வானவில்லே
மழை வீழத் துடிக்கும் மலர் குடையே!

-Bavananthan

Music & Vocal: Honey Niagara
Lyrics: Bavananthan

போராடு நண்பா!
புது விதிகளை மாற்றி போராடு
வலி தாங்கு தோழா!
வரும் தடைகள் தாக்கு வேரோடு

வலி தந்த வாழ்க்கை முடியட்டும்
விழி கொண்ட நீரும் வடியட்டும்
கதை கொண்டு மோது
கரை தேடு
கலங்காதே!

திசை தோறும் உன் பேர் ஒலிக்கட்டும்
வசை ஊறும் நாக்கள் அடங்கட்டும்
கால் கொண்டு ஆடு
விடை தேடு
விதி மாற்றவே!

(போராடு நண்பா!)

விண்ணோடு மோது
புயல் காற்றைப் போல நீயாடு
தரை மோதி வீழு
கண்ணீரை உந்தன் உரமாக்கு

விழி தூக்கம் கொன்று
வலி ஏக்கம் கொண்டு
வழிகின்ற வாழ்க்கை
உன் காலில் மோதி வீழ்கிறதே!

எதிர்க்கின்ற களைகள்
தடுக்கின்ற சதிகள்
எதிர் கொண்டு மோதி
உன் எரியும் விழியில் கருகியதே!

(வலி தந்த வாழ்க்கை..)

-Bavananthan

Music: Vidushan 
Lyrics: Bavananthan

WELLS Sports Club Anthem Lyrics

பதிவிட்டவர் Bavan | நேரம் 7:00 PM | 0 பின்னூட்டங்கள்

நாம்
போராடலாம்
ஒன்றாகவே!
பார் மீதிலே!

நாம்
வென்றாடலாம்
நட்பாகவே!
தோள் சேரலாம்!

----

விளையாடலாம்
வெற்றி தான்
நம் கண்ணோடு

போராடலாம்
வேகம் தான்
எம் நெஞ்சோடு

தன்னம்பிக்கை
தைரியம்
கொள் உன் மனதில்

தாகங்களை
தாங்கிச் செல்
வெல்லும் வரையில்

எல்லைகளை
நீ எட்டும்
வரை ஓடு

காலம் வரும்
என்றும் உன்
கண்களோடு

திருமலை மண்
எங்கும் விண்
தொடும் கழுகு

மஞ்சள் வெள்ளை
நீலம் கலந்திட
(நாம்) வேஸ்சு

(Interlude)

ஏய் நண்பா
நீ வா தெம்பா
ஒன்றே பலம் - நாம்
வென்று காட்டலாம்

இன்றே நன்று
என்றே கொண்டு
தடைகள் வென்று - நாம்
வெற்றி சூடலாம்

வேகம் வேகம் கொண்டு
வானின் எல்லை கண்டு
கனவு தேடிச் சென்று
நனவாக்கு!

தாகம் தாகம் கொண்டு
யாக்கை வேகம் உண்டு
வேற்றி தோல்விகளை
உரமாக்கு!


தினம் போராடி
நாம் ஜெயிக்கலாம்
விதை மண் மோதி
வேகம் கொள்!

கணம் முன்னேறி
நாம் பறக்கலாம்
கார் மேகம் மோதி
தாகம் வெல்!

-Bavananthan

Music & Vocal: Honey Niagara
Lyrics: Bavananthan

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (35) poet (41) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (71) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்