Related Posts with Thumbnails

களை

பதிவிட்டவர் Bavan | நேரம் 1:45 PM | 0 பின்னூட்டங்கள்

தாழமுக்கம் தந்த மழை
பருவக் காற்றால் வந்த மழை
சூறாவளி தந்த மழை
மண்வாசனை தந்த மழை

இப்படிப் பல மழை கண்டு
துளிர்த்தன பல மரங்கள்
அதனிடம் அடித்துப் பறிக்க
முளைத்தன சில களைகள்

மழைவிட்ட பின்னர் அங்கே
முளைவிட்ட களைகளை - தன்
கையடங்கும் கத்தியுடன்
கச்சிதமாய் பிடுங்கிடுவார்

முனை வளைந்த வில்லுக் கத்திப்
பிடியதனை அவர் பிடித்து
மண்ணைத் துளாவிக் கொண்டே
களை வேர் பிடித்து அறுத்தெறிவார்

களை பிடுங்கி கந்தையா
வந்து விட்டார் என்று சொன்னால்
தலை தூக்கும் களைகள் எல்லாம்
தரைக்குள்ளே சிரம் புதைக்கும்

"மெனக்கட்டு நீ பிடுங்கியென்ன
நாலு நாளில் வளந்திடுமே
அப்ப நீ என்ன செய்வாய்"
எண்டு நான் அவரைக் கேட்க

இறுக்கமான முகத்துடனே
மெதுவாய் எனைப் பார்த்தார்
புன்னகையாய் இருக்கும் - என்று
மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்

"களை பிடுங்கத் தொடங்கி விட்டால்
தொடர்ந்து பிடுங்க வேணும்
எடுத்த எடுப்பில எல்லாம்
ஒழிச்சு அழிக்க ஏலாது

வெட்ட வெட்டத் தளைக்கும் களை
பிடுங்கப் பிடுங்க வளரும் களை
தொடர்ந்து வளர விட்டால்
முட்காடாய் கிழிக்கும் களை
வளர்வது அதன் இயல்பு
அதுவாய் வளர்கிறது
அழிப்பது என் கடமை
அதை நான் செய்கின்றேன்" என்றார்

பாகுபாடு இல்லாமல்
கொட்டித் தீர்க்கும் மேகம் போல
அன்பை அனைவருக்கும்
அள்ளிக் கொடுத்திடுவோம்

சாதி மத பேதக் களை
சகுன மூட நம்பிக்கைக் களை
ஏழை பணக்காரக் களை - இந்தப்
பாகுபாட்டுக் களைகளெல்லாம்
சட்டென்று களைந்தெறிய
பட்டென்று அழியாது

களைகள் வரும் போது
களைந்து எறிந்திடுவோம்
நியாயமான கோபங்களுக்கு
ரெளத்திரத்தை காட்டிடுவோம்

ஏதோ ஒரு புள்ளியில் போய்
முற்றாய் அழியும் வரை
களைகள் களைவதை
இயல்பாய் வளர்த்தெடுப்போம்

அரிய தத்துவத்தை
அழகாய் சொல்லி - எந்தன்
மனக்களைகள் பிடுங்கி விட்டார்
களை பிடுங்கிக் கந்தையா!
-Bavananthan

அந்த ஒரு நாள்...!

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:19 PM | 0 பின்னூட்டங்கள்

அந்த நாளுக்காக
நாம் அனைவரும்
காத்துக்கொண்டிருந்தோம்

அது கறுப்பு சரித்திரத்தில்
எழுதப்பட்ட வெள்ளை வரலாறு
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
வழங்கப்படும் ஒரே வாய்ப்பு

மரணத்தின் வாயில் வரை
வரையப்பட்ட அடிமை சாசனத்தில்
விடுதலையை சுவாசிக்கக் கிடைத்த
ஒரேயொரு சந்தர்ப்பம்

பச்சை பச்சையாய் வார்க்கப்பட்ட
வயல் வெளிகள் - அதன்
இடைவெளிகளில் ஊடுருவும்
சூரியக் கதிர்கள்

காக்கையின் கூட்டில்
முட்டையிடக் காத்திருக்கும் குயில்
அந்நிய ஊடுருவலை அறிவிக்க
விடாது கானம் இசைக்கும் அணில்கள்

காற்றில் ஆடிக்கொண்டிருக்கும்
தென்னங்கீற்றோடு கீற்றாக
உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு
வித்தை காட்டும் கிளிகள்

எறும்புகளின் ஊர்வலம்
சிலந்தியின் கட்டுமானம்
தும்பிகளின் சாகசம்
தேன்சொட்டின் இறகசையும் ஒலி

இயந்திரச் சிறையில்
அடைக்கப்பட்ட மூளைக்கு
சிறகடித்து பிரபஞ்சத்தை
பற்றக் கிடைத்த ஒற்றை வாய்ப்பு

நீரால் அணைத்து அழிக்கப்பட்ட ஞாயிறு
உயிர்த்து நீரை விட்டு இடறி
வெளியேறுவதைக் காணக் கிடைத்த
ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை அது

அதிகாலையிலேயே எழுந்து
அத்தனை சுதந்திர நீரையும்
திகட்டத் திகட்டப் பருக வேண்டுமென நினைத்து திடுக்கிட்டு எழுந்து பார்த்தால்

மணி பகல் பன்னிரெண்டைத் தாண்டியொருந்தது...!

விஞ்ஞானத்தின் துணை கொண்டு
காலம் கடக்க வழி செய்வோம்
அதுவரை ஒவ்வொரு நொடிகளையும்
வாழ்ந்து வாழ்ந்து இரசித்திருப்போம்.

-Bavananthan 

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (29) poet (35) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (65) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்